ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
பத்ம ஸ்ரீ பெற்றிருக்கும் ந.முத்துசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
1936ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள புஞ்சை என்ற கிராமத்தில்
பிறந்தவர். தமிழில் நவீன நாடகங்கள் உருவானதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக
இருந்தவர் ந.முத்துசாமி. இதற்காக இவர் சங்கீத நாடக அகாதமியின் விருது
பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய
அடையாளமாக்கியவர்களில் முத்துசாமி முக்கியமானவர். இவரது "கூத்துப்பட்டறை"
என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக
இருந்துவருகிறது. நவீன தமிழ் நாடகங்களை உலகமெங்கும் நடத்திக் காட்டிய
பெருமை ந.முத்துசாமிக்கு உண்டு. "கசடதபற", "நடை" போன்ற இலக்கிய இதழ்களில்
தொடர்ந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.
No comments:
Post a Comment