|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 January, 2012

தேசிய இளைஞர் தினம் ...


விவகானந்தர் 1863 ஜன., 12ம் தேதி கோல்கட்டாவில் பிறந்தார். இன்று இவரது 150வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவரது இயற்பெயர் நரேந்திரநாத். இளம் வயதில் பிரம்மசமாஜத்தில் உறுப்பினரானார். தட்சணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணரை சந்தித்த விவேகானந்தர், அவரது தலைமை சீடரானார். 1893ல், அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த சர்வதேச அனைத்து சமய மாநாட்டில் "சகோதர, சகோதரிகளே' என அழைத்து அவர் பேசியது, இந்தியர்களின் இறை உணர்வையும், ஒழுக்க வாழ்க்கை முறைகளையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது. இதனால் உலகம் போற்றும் உன்னத ஆன்மீக நெறியாளராக விவேகானந்தர் கருதப்படுகிறார்.

விவேகானந்தரின் பார்வையில்: "ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்' என்று விவேகானந்தர் கூறினார். மேலும் "நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள்... இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்' என்றார். இதிலிருந்து விவேகானந்தர் எந்த அளவிற்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

எதிர்பார்ப்பு: இளைஞர்கள் சிலர் மது, புகையிலை மற்றும் போதை பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இதிலிருந்து விடுபடுவதற்கு அரசு தகுந்த விழிப்புணர்வு, வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் தேசப்பற்று, அர்ப்பணிப்பு, விளையாட்டு, கல்வி போன்றவற்றில் திறமையானவர்களாக உள்ளனர். திசைகாட்டியாக இருக்க வேண்டிய இளைஞர்கள், திசை மாறாமல் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட்டு, நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என, இத்தினத்தில் உறுதிமொழி எடுப்போம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...