ஏ மேரே ஹம்சஃபர்' என்று நேற்றுதான் ஆமிர்கான் பாடியது போல இருக்கிறது. ஆனால் 30 ஆண்டுகள் ஓடி விட்டது பாலிவுட்டில் ஆமிர்கான் அறிமுகமாகி. யாதோன் கி பாரத் படம்தான் ஆமிர்கானின் முதல் படம். அதில் குட்டிப் பையனாக நடித்திருப்பார் ஆமிர்.
அவர் ஹீரோவாக அறிமுகமான படம் ஹோலி. ஆனால் லைம் லைட்டுக்கு போய், சூப்பர் ஸ்டாராக அவரை அடையாளம் காட்டிய படம் கயாமத் சே கயாமத் தக். அன்று தொடங்கிய அவரது பாலிவுட் ஆட்டம், ஒவ்வொரு படத்திலும் ஆமிர்கானுக்கு தனி முத்திரையைப் பதித்து தனித்துவம் வாய்ந்த நாயகனாக அவரை மாற்றியிருக்கிறது.
தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப் மட்டுமின்றி சமுதாயத்திற்கு தேவையான கருத்தையும் மக்களுக்கு பிடித்தபடி கொடுக்கும் நடிகர் அவர்.
ஆமிர் நடிக்கும் ஸ்டைலை மட்டுமல்லாமல், படம் எடுக்கும் ஸ்டைலையும் பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டும் பாராட்டுகின்றது. ஆஸ்கர் விருதுக்கு அவரது லகான், தாரே ஜமீன் பர் ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
'அரைச்ச மாவை அரைப்போமா' என்று மற்றவர்கள் பாடிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், லகான், ரங் தே பசந்தி, தாரே ஜமீன் பர், தோபி காட் போன்ற வித்தியாசமான படங்களைத் தந்துள்ளார் ஆமிர்.
அவருக்கு நாளுக்கு நாள் வயதாகிக் கொண்டு போனாலும், நடிப்பிலும், இயக்கத்திலும், இளமை கூடிக் கொண்டே போகிறது என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment