மறைந்த பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத முக்கியத்
தலைவர்களில் ஒருவரும், இரும்புப் பெண்மணி என்று உலகத் தலைவர்களால்
புகழப்பட்டுவருமான இந்திரா காந்தியின் பிறந்த நாள் கூட சரியாக தெரியாமல்
மக்கள் மத்தியில் கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கட்சி. இந்திரா
காந்தியின் 94வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழக
காங்கிரஸ் கட்சியினரோ 105வது பிறந்தநாள் என்று செய்திக்குறிப்பில்
குறிப்பிட்டு கேவலப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் இந்திரா காந்தி. அமெரிக்காவுக்கு பெரும் மிரட்டலாக விளங்கியவர். பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர். வங்கதேசம் என்ற ஒரு புது நாடு பிறக்க காரணமாக அமைந்தவர். சீனாவைக் கண்டு அஞ்சாமல் செயல்பட்டவர். தனது துணிச்சல் மற்றும் தைரியமான, அதிரடி போக்கால் உலகத் தலைவர்களால் பாராட்டப்பட்டவர். அனைவரின் மதிப்பையும் பெற்றவர். ஆனால் தலைவரின் பிறந்த நாளைக் கூட சரிவரத் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் தங்கள் இஷ்டத்திற்கு 105வது பிறந்த நாள் என்று செய்திக்குறிப்பு வெளியிட்டு கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரை இப்படியா அவமதிப்பது என்று மூத்த காங்கிரஸார் மனம் ஒடிந்து போய் நிற்கின்றனர். இந்த லட்சணத்தில் காமராஜ் ஆட்சியை அமைப்போம் என்று வாய் கூசாமல் பேசிக் கொள்கின்றனர் காங்கிரஸார். புதிய தலைவராக ஞானதேசிகன் பதவிக்கு வந்தவுடனேயே நடந்துள்ள இந்த குழப்பம் தமிழக காங்கிரஸாருக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது.

No comments:
Post a Comment