|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 November, 2011

தமிழகத்தில் அரிசி பயன்பாடு அதிகரிப்பு!

தமிழகத்தில் தானிய உணவு பயன்பாடு குறைந்து அரிசி பயன்பாடு அதிகரித்துள்ளது என ஜெர்மனி பல்கலைக்கழக பேராசிரியர் டெட்லெப் ப்ரைசன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் சார்பில் "காட்சிசார் மானிடவியல், உணவு பண்பாடு' சிறப்பு கருத்தரங்கம், ஆவணப்படம் திரையிடுதல் நடந்தது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் அல்போன்ஸ் மாணிக்கம் தலைமை வகித்தார். பிரிட்டோ வின்சென்ட் வரவேற்புரையாற்றினார்.

தொலைக்காட்சி பத்திரிகையாளரின் பார்வையில் 'காட்சிசார் மானிடவியல்' என்ற தலைப்பில் ஜெர்மனி ஆவணப்பட தயாரிப்பாளர் அன்னி ப்ரைசன் உரையாற்றினார். டார்ஜிலிங் தேயிலை உற்பத்தி, டான்சானியா காபி உற்பத்தி முறைகள், இந்திய பண்பாடு குறித்து அவர் விளக்கினார்.

ஜெர்மனி ஜஸ்டஸ் லெய்பிக் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் டெட்லெப் ப்ரைசன் பேசும்போது 16ம் நூற்றாண்டு ஜெர்மனி மக்களின் உணவு பழக்க, வழக்கங்கள், தற்போதைய உணவு முறைகள், மேல்தட்டு, உழைக்கும் வர்க்கத்தின் உணவு பழக்க, வழக்க முறைகள் குறித்து விளக்கினார். தற்போது ஜெர்மனியில் உள்ள மேல்தட்டு மக்கள் தங்களின் உணவுப் பழக்க, வழக்கத்தின் காரணமாக ஒல்லியான உடல் வாகுடன் உள்ளனர் என்றும், உழைக்கும் மக்கள் வர்க்கம் அதிக எடையுடன் காணப்படுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். தமிழகத்தில் உணவு பழக்கங்கள் மாறியுள்ளது. தானிய உணவு வகைகளின் பயன்பாடு குறைந்து அரிசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...