முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகி 50 நாட்கள் அல்லது 100 நாட்கள் ஓடிய பிறகுதான் அந்த படத்தின் வெற்றியை கொண்டாடுவார்கள். ஆனால், இப்போதோ படம் வெளியாகி இரண்டு மூன்று நாட்களில் சக்சஸ் மீட் வைக்கிறார்கள். ஆனால், இது படங்களின் வெற்றிக்காக அவர்கள் வைப்பதில்லை. அப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தி பப்ளிசிட்டி செய்து படத்தை ஓடவைப்பதற்காக எடுக்கும் முயற்சிதான் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் என்பதால், திரையுலகினரே இந்த சக்சஸ் மீட்டை கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மற்ற இயக்குனர்களின் படங்கள் வெளியாகும்போது அதுபற்றி நீங்கள் யாரிடமாவது உண்மையான விமர்சனங்களை சொன்னதுணடா? என்று இயக்குனர் சசிகுமாரிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, இப்போதெல்லாம் விமர்சனங்களை கேட்க யாருமே தயாராக இல்லை. காரணம், படம் வெளியான சில நாட்களிலேயே சக்சஸ் மீட் நடத்தும் வேலைகளில் பரபரப்பாகி விடுகிறார்கள். அதுமட்டுமின்றி, படம் வசூலித்ததோ இல்லையோ அவர்களே பாக்ஸ் ஆபீசில் வசூலில் முதலிடம் என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறர்கள். அந்த அளவுக்கு எதையாவது சொல்லி படத்தை ஓட வைக்க வேண்டும். என்கிற நிலையும் உருவாகி விட்டது என்று தனது கருத்தினை தைரியமாக பதிவு செய்திருக்கிறார் சசிகுமார்.
No comments:
Post a Comment