|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 August, 2011

லஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது : ரத்தன் டாடா!

லஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது'' என, ரத்தன் டாடா போன்ற தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மும்பையில், வர்த்தக மேலாண்மை கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா பேசுகையில், ""கடந்த 90ம் ஆண்டுகளில், தொழிற்சாலைகளுக்கான லைசென்ஸ் பெறுவதற்கு மட்டும், லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. தற்போது ஒப்பந்தம் போட, ஒப்பந்தத்தை மாற்ற என, எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேர்மையான வழியைக் கையாண்டால், தொழில் நடத்த முடியாது.
எனவே, லஞ்சம் கொடுப்பது போன்ற குறுக்கு வழியை கையாள வேண்டியுள்ளது. தொழில் நடத்துவதில், சமதளமான சூழ்நிலை இல்லை. இப்படிப்பட்ட தருணத்தில், லஞ்சம் கொடுக்காமல் காரியம் சாதிக்க நினைப்பவர்கள் பின்தங்கி விடுவர். அதே நேரத்தில், "லஞ்சம் கொடுத்து விட்டு காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டியது தானே' என, என்னிடம் வேலை பார்க்கும் இளைஞர்கள் கேட்கின்றனர். அவர்கள் சொல்வதைக் கேட்டால், நான் தலைநிமிர்ந்து நடக்க முடியாது'' என்றார். மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன துணை தலைவர் ஆனந்த் மகேந்திரா குறிப்பிடுகையில், ""ஊழலை ஒழிப்பதில் அரசியல்வாதியிடம் மட்டும் பொறுப்பை எதிர்பார்க்கக் கூடாது என்பதை தான், அன்னா ஹசாரேயின் போராட்டம் தெரிவிக்கிறது. நுகர்வோரிடமும் இந்த பொறுப்புணர்வு இருக்க வேண்டும்'' என்றார்.

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி குறிப்பிடுகையில், ""தொழிலில் போட்ட பணத்தை பல மடங்கு திருப்பி எடுக்க வேண்டுமானால், லஞ்சம் என்ற குறுக்கு வழியைத் தான் கையாள வேண்டியுள்ளது. லஞ்சம் கொடுப்பது அநியாயமானது என்பதை, வர்த்தகர்கள் பலரும் தைரியமாகக் கூற மறுக்கின்றனர். இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்க காத்திருக்கிறோம்'' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...