|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 August, 2011

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியல்!

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்திரா நூயிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல காங்கிரஸ் தலைவர்சோனியா காந்திக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதலிடத்தை ஜெர்மன் அதிபர் ஏஞ்சலொ மார்க்கல் பெற்றுள்ளார்.

55 வயதாகும் பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயி 4வது இடத்தைப் பிடித்துள்ளார். 64 வயதான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 7வது இடத்தில் உள்ளார். ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரி சந்தா கோச்சார் 43வது இடத்திலும், பயோகான் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா 99வது இடத்திலும் உள்ளனர்.

ஐரோப்பிய யூனியனின் ஒப்பில்லாத தலைவியாக ஏஞ்செலா மார்க்கல் விளங்குவதாக அவருக்கு போர்ப்ஸ் புகழாரம் சூட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் 2வது இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் பிரேசில் முதல் பெண் அதிபராக சில மாதங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட தில்மா ருஸ்ஸாப் இருக்கிறார்.

ஐந்தாவது இடத்தில் பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரி ஷெரில் சந்த்பர்க், 6வது இடத்தில் மெலின்டா கேட்ஸ், 8வது இடத்தில் மிஷல் ஒபாமா, 9வது இடத்தில் ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டைன் லகார்டே, 10வது இடத்தில் கிராப்ட் புட்ஸ் நிறுவன சிஇஓ ஐரீன் ரோசன்பெல்ட் ஆகியோர் உள்ளனர். இந்தப் பட்டியலில் மொத்தம் உள்ள 100 பேரில் 65 பேர் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா, சீனா, இஇந்தியா, இங்கிலாந்திலிருந்து தலா 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வயதில் குறைந்த பெண் லேடி ககாதான். 25வயதான இவர் 11வது இடத்தில் இருக்கிறார். அதிக வயதான பெண் இங்கிலாந்து ராணி எலிசபெத்தான். 85 வயதான இவர் 49வது இடத்தைப் பிடித்துள்ளார். ஒப்ரா வின்பிரே, பியான்ஸ் நோல்ஸ், ஏஞ்செலீனா ஜூலி, ஹாரி பாட்டர் நாவலாசிரியை ஜே.கே.ரோலிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...