லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவோர்
பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு, அரசு சார்பில் 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி
அளிக்கப்படும் என, பீகார் அரசு அறிவித்துள்ளது. ஊழலுக்கு எதிராக வலுவான
மசோதா கொண்டுவரக் கோரி, ஹசாரே துவங்கியுள்ள போராட்டத்தால், நாடு முழுவதும்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும்
என்பதில், ஒருமித்த கருத்து எழுந்துள்ளது. இந்நிலையில், ஊழலை ஒழிக்கும்
நடவடிக்கையில் பீகார் அரசு தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளது. ஊழல்
ஒழிப்பில் போராடுபவர்களுக்கு வெகுமதி அளித்து கவுரவிக்க முடிவு
செய்துள்ளது. பாட்னாவில் நிருபர்களிடம் பேசிய பீகார் துணை முதல்வர் சுசில்
குமார் மோடி கூறுகையில்,"லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் நிதி
முறைகேடுகளில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தருவோருக்கு வெகுமதியாக, 50 ஆயிரம்
ரூபாய் வழங்கப்படும். மேலும், ஊழல் வழக்குகளில் ஆஜராகி சிறப்பாக செயல்படும்
அரசு வழக்கறிஞர்கள் மற்றும் ஊழல் வழக்குகளை சிறப்பாக விசாரிக்கும்
புலனாய்வு அதிகாரிகளுக்கும் பரிசு அளிக்கப்படும். ஊழல் வழக்குகளில்
சிக்கியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அதில் கிடைக்கும் நிதியைக்
கொண்டு, பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
No comments:
Post a Comment