இங்கிலாந்தில் சுமார் 72,000 குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தந்தையின்றி வளர்கின்றனர் என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள 120,000 பிரச்சனைக்குரிய குடும்பங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 72,000 குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு தந்தையே இல்லை. அந்த குழந்தைகள் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். மீதமுள்ள குடும்பங்களில் தந்தைகள் இருந்தாலும் அவர்கள் குடிகாரர்களாகவோ, போதைக்கு அடிமையாகவோ, வேலைக்குப் போகாமல் ஊர்சுற்றுபவர்களாகவோ உள்ளனர். இதனால் அவர்களால் தங்கள் பிள்ளைகளு்ககு சிறந்த முன்மாதிரியாக இருக்க முடியவில்லை. இதில் விந்தை என்னவென்றால் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட 120,000 குடும்பங்களில் 20 சதவீத குடும்பங்களில் தலா 5 குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே வறுமையில் வாடும் குடும்பங்களில் ஏராளமான குழந்தைகள் இருப்பது மேலும் பிரச்சனை தான். இவ்வாறு பிரச்சனைகள் அதிகமுள்ள குடும்பங்கள் அரசுக்கு தலைவலியாக உள்ளது.
இது குறித்து அந்நாட்டு அரசு அதிகாரி எரிக் பிக்கில்ஸ் கூறியதாவது, பல குடும்பங்களில் தந்தைகளே இல்லாதது பெரிய பிரச்சனையாக உள்ளது. தந்தைகள் இருக்கும் குடும்பங்களில் அவர் குடிகாரர்களாகவோ, போதைப் பொருட்களுக்கு அடிமையாகவோ, வேலைக்கு செல்லாதவர்களாகவோ உள்ளனர். அத்தகைய தந்தைகளை வேலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் வேலைக்கு சென்று சம்பாதித்து பணம் கொண்டு வந்தால் தான் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க முடியும் என்றார். இந்த பிரச்சனை உள்ள குடும்பத் தலைவர்களை வேலைக்கு அனுப்ப, குடி மற்றும் போதைப் பழக்கங்களில் இருந்து விடுபடவைக்க இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் 448 மில்லியன் பவுண்ட் செலவிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டக் குழுவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் பிரச்சனை உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்காக சென்று அந்த குடும்பத் தலைவர்களை ஒழுங்குபடுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment