ஆசியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான ஏர்ஏசியா ஏர்லைன்ஸ்
நிறுவனம், இந்தியா மற்றும் சீன சந்தையில் புதிய யூனிட்களை துவங்க
திட்டமிட்டுள்ளது. ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகள்
நிறைவடைந்துள்ளன. 11ம் ஆண்டு துவக்கத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த
ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி டோனி பெர்னான்டஸ் கூறியதாவது,
இந்த செய்தி உண்மைதான் என்றும், இந்தியா மற்றும் சீன சந்தையில் விரைவில்
புதிய யூனிட்களை தாங்கள் துவக்க திட்டமிட்டுள்ளோம். லாப நோக்கத்தோடு
மற்றும் அதிவிரைவு விரிவாக்கத் திறனுடனான செயல்திட்டத்தை, அடுத்த 10
ஆண்டுகாலங்களில் செயல்படுத்த உள்ளோம். 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து,
11ம் ஆண்டில் அடி எடுத்துவைத்துள்ள தங்கள் நிறுவனம், அடுத்தகட்ட
நடவடிக்கைக்கு தயாராகி உள்ளோம். தற்போது இயங்கி வரும் இந்தோனேஷியா ஏர்ஏசியா
மற்றும் தாய் ஏர்ஏசியா யூனிட்களின் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே
இருந்தது. இதனை கருத்தில்கொண்டே, புதிய யூனிட்களை துவக்க
திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டில் துவங்கப்பட்ட பிலிப்பைன்ஸ் ஏர்ஏசியா
மற்றும் ஜப்பான் ஏர்ஏசியா பிரிவுகளிலிருந்து, 2012ம் ஆண்டின்
துவக்கத்திலிருந்து விமானங்களின செயல்பாடு துவங்க உள்ளது. ஏர்ஏசியா
நிறுவனம் சார்பில், தற்போதைய அளவில் 89 ஏர்பஸ் ஏ320 விமானங்கள் இயங்கி
வருவதாகவும், அடுத்த 10 ஆண்டுகளி்ல், 300 விமானங்களை இயக்க
திட்டமிட்டுள்ளோம். 2009ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2010ம் ஆண்டில்
நிறுவனத்தின் நிகரலாபம், கிட்டத்தட்ட 2 மடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளதாக
அவர் கூறினார்.
No comments:
Post a Comment