நோபல் அமைதி பரிசை 3 பெண்கள் பெற்றுக்கொண்டனர். இந்த பரிசு லிபெரியா அதிபர்
எல்லன் ஜான்சன் சர்லிப், அதே நாட்டை சேர்ந்த லெமக் போவீ, யெமன் நாட்டின்
டவாக்குல் கர்மன் ஆகியோர் பலத்த கரகோஷத்துக் கிடையே தங்களுக்கான பரிசு
மற்றும் பதக்கங்களை பெற்றுக்கொண்டனர். இவர்கள் அநீதி, சர்வாதிகாரம், பாலியல் வன்முறை ஆகியவற்றிற்கு எதிராக போராடியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல்
பரிசுக்கான குழுத்தலைவர் தேர்ப்ஜெர்ன் ஜாக்லாந்து கூறுகையில்,பரிசை பெற்ற
பெண்கள், மனித உரிமை, பெண்களுக்கு சமஉரிமை மற்றும் அமைதிக்கான தூதர்களாக
விளங்குவதாக கூறினார்.
No comments:
Post a Comment