உலக சாதனைக்காக உப்பை வைத்து பெரிய வரைபடம் வரைந்து வேலூர் காட்பாடி பெண் சாதனை படைத்துள்ளார்.கோவையை மையமாகக் கொண்டு செயல்படும், "எலைட்' உலக சாதனை என்ற நிறுவனம் சார்பில் உப்பை வைத்து உலகின் பெரிய அளவு வரைபடம் வரைந்து சாதனை செய்யும் நிகழ்ச்சி வேலூர் அடுத்த காட்பாடியில் நடந்தது. வேலூரை சேர்ந்த சதீஷ் என்ற தொழில் அதிபர் மனைவி சரிதா, இந்த சாதனையை காலை, 7. 30 மணிக்கு துவங்கி மாலை, 5.30 மணிக்கு முடித்தார். 9 மணி நேரத்தில் இவர் இந்த சாதனையை செய்தார்.இதற்காக, 7 மீ., நீளம், 12 மீ., அகலம் கொண்ட ஒன்றரை இன்ச்க்கு, 84 சதுர மீட்டர் கொண்ட உப்பால் மாபெரும் ஓவிய தாளில் உலக உருண்டை கொழுந்து விட்டு எரிவது போல வரைபடம் வரைந்தார்.இதற்காக, 2,000 கிலோ எடை கொண்ட, 100 மூட்டை கல் உப்பு, 40 கிலோ கலர் உப்பை பயன்படுத்தினார். ஏழு கலர்களில் படம் வரைந்துள்ளார். இவர் இதை செய்யும் போது யாரிடமும் பேசக் கூடாது. மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை, 15 நிமிடம் ஓய்வு எடுத்து கொள்ளலாம். கிளவுசை கையில் அணிந்து கொண்டு வரைய கூடாது மற்றும் இவர் வரையும் படம் பொது மக்களிடம் ஒரு இமேஜை ஏற்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் படி சரிதா இந்த படத்தை வரைந்துள்ளார். இந்த பூவுலகை வெப்பமயமாதலில் இருந்து தடுக்க வேண்டும் என்கின்ற உணர்வு நம் வருங்கால சந்ததிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை வரைந்துள்ளார்.உலக சாதனை செய்த சரிதா ஆந்திர மாநிலம் கர்நூல் சொந்த ஊர். பி காம் பட்டதாரியான இவர் இந்த சாதனை செய்ய சிறப்பு பயிற்சிகள் பெற்றுள்ளார்.
இது குறித்து "எலைட்' உலக சாதனை நிறுவனத்தின் நிறுவனர் பிரதீப் குமார் கூறுகையில்,""எலைட்' உலக சாதனை நிறுவனத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரத்து, 800 சாதனையாளர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 96 நாடுகளில், 11 உலக சாதனைகள் செய்யப்பட்டுள்ளது,'' என, கூறினார்.
No comments:
Post a Comment