திருச்சி மாவட்டம் புலிவலம் பக்கம் உள்ள குருவிகாரன்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (65). இவரது மனைவி செல்லம்மாள் (56). இவர்களது மகன் தனபால் (31). விவசாயி.தனபாலுக்கும், முசிறி தாலுகா ஏவூரை சேர்ந்த கோமதி (22) என்ற பெண்ணுக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கோமதியை நகை எதுவும் வாங்கிக்கொள்ளாமல் தனபால் திருமணம் செய்து கொண்டார். கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த கோமதியை அவரது மாமியார், மாமனார் ஆகியோர் நகை போடாமல் மருமகளாக வந்தவள் என அடிக்கடி திட்டிதீர்த்தனர். இதற்கிடையில் கோமதி கருத்தரித்து 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையும் குறை கூறிய மாமி யார் செல்லம்மாள் `ஆடி மாதம் கருத்தரித்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்.
சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது. எனவே கோமதியை அடித்து கொன்று விடு' என தனது மகன் தனபாலிடம் கூறினார். இதனை தொடர்ந்து கடந்த 21-11-2010 அன்று இரவு தனபால், தனது மனைவி கோமதியின் தலைமுடியை பிடித்து இழுத்து சுவற்றில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த கோமதி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.கோமதியின் உடலை யாருக்கும் தெரியாமல் வெளியே எடுத்து சென்று வயலில் போட்டு தனபால், அவரது தந்தை ராமசாமி, தாயார் செல்லம்மாள் ஆகியோர் எரித்தனர்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் தனபால் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் குற்றம் சாட்டப்பட்ட தனபால், செல்லம்மாள், ராமசாமி ஆகிய 3 பேருக்கும் ஆயுள் ஜெயில் தண்டனையும், தனபாலுக்கு 1000 ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனையும், செல்லம்மாள், ராமசாமி ஆகியோருக்கு தலா 500 ரூபாய் அபராதமும், அதை கட்டத்தவறினால் மேலும் தலா ஒரு மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
ஆயுள் தண்டனையும், 1000 ம் அபராதமும் இறந்தவளுக்கு போதுமா என்ன ? சட்டங்கள் மாற்றப்படவேண்டும் இல்லை ஆயுள் தண்டனை பெறவும் 1000 ம் அபராதம் கட்டவும் மக்கள் காத்துக்கிடப்பார்கள்...
No comments:
Post a Comment