ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
சிவாஜி கணேசனின் ரசிகர்களுக்கும், பழைய காலப் படங்களின் பிரியர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, செவாலியே சிவாஜி நடித்த கர்ணன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருமாற்றம் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.மார்ச் மாதம் சுமார் 50 திரையரங்குகளில் திரையிடப்பட கர்ணன் படம், அதற்காக பிரத்யேகமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒலி, ஒளிப் பதிவுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் சிவாஜி (கர்ணன்), ராமாராவ் (கிருஷ்ணன்) என இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களின் நடிப்பை மீண்டும் பெரிய திரைகளில் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது. ரூபாய் 40 லட்சம் செலவில் 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்து கர்ணன் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றியுள்ளனர். இத்திரைப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ள சாந்தி சொக்கலிங்கம், கர்ணன் திரைப்படத்தை மீண்டும் பெரிய திரைகளில் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று கூறினார். தமிழ் திரைப்பட வரலாற்றையே புரட்டிப் போட்ட கர்ணன் திரைப்படம், நிச்சயமாக தமிழ் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று நம்புகிறோம்.
No comments:
Post a Comment