தமிழகத்தில் புதிதாக 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் துவக்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. தமிழக அரசு கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் தற்போது 62 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. நடப்புக் கல்வியாண்டில் மேலும் 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 2 சீருடைகளும், ஒரு செட் காலணியும் இலவசமாக வழங்கப்படும்.
உயர்தொழில்நுட்பங்களில் இளைஞர்களைப் பயிற்றுவிக்க, தனியார் பங்கேற்புடன் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி மையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment