|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 August, 2011

உலகின் டாப் 10 பயங்கர தாக்குதல்கள்-மும்பை தீவிரவாத தாக்குதலும் இடம் பிடித்தது!

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உட்பட உலகில் நடந்த முக்கியமான 10 தீவிரவாத தாக்குதல்களை கொண்ட பட்டியல் ஒன்றை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.

கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி, 10 பேர் அடங்கிய தீவிரவாதிகள் கும்பல் மும்பை மீது தாக்குதல் நடத்தியது. மும்பையின் முக்கிய பகுதியில் நடந்த இத்தாக்குதலில், மருத்துவமனை, ரயில் நிலையம், பஸ் நிலையம், ஹோட்டல் என பல இடங்களில் 166 பேர் பலியாகினர். இதில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் பிடிபட்டான்.

இந்த சம்பவத்தை, உலகில் நடந்த 10 முக்கிய தீவிரவாத தாக்குதல்கள் அடங்கிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ மையமான பென்டகன் தயாரித்துள்ள இந்த பட்டியலில், மும்பை தாக்குதலுக்கு பின், தீவிரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை அதிநவீனமாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் துவங்கிய பின்னர் அதை எதிர்க் கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் வீண். முன் எச்சரிக்கையும், ஒருங்கிணைப்பு செயல்பாடும் பாதுகாப்பை அதிகரிக்கிறது என அந்த அந்த பட்டியல் எச்சரிக்கை விடுக்கிறது.

பென்டகனின் இந்த பட்டியலில், 2007ல் ஈராக்கில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல், 2001ல் அமெரிக்காவில் நடந்த ஆந்ராக்ஸ் தாக்குதல், 2007ல் நடந்த போர்ட் டிக்ஸ் தாக்குதல், 1995ல் நடந்த டோக்கியோ சுரங்கப் பாதை சரேய்ன் தாக்குதல் ஆகிய சம்பவங்களும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...