|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 August, 2011

என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி அஜீத்!

என் அப்பா அம்மாவுக்குப் பிறகு நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான், என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.

தனது மங்காத்தா படம் வெளிவரும் இந்த தருணத்தில் தொடர்ந்து நாளிதழ்கள், வாரப் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார் அஜீத்.

இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்...

''பாலா, கௌதம் மேனன், விஷ்ணுவர்தன்னு தொடர்ந்து உங்களுக்கு இயக்குநர்களோட மோதல் இருந்துகிட்டே இருக்கே?'' ''நான் எப்பவுமே டைமை நம்புறவன். டைம் சரியா இருந்தா, எல்லாமே சரியா நடக்கும். அந்த நேரத்துல சில காரணங்களால் எங்களால் சேர்ந்து வொர்க் பண்ண முடியலை. மற்றபடி எங்களுக்குள் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால்... நிச்சயம் நடிப்பேன்!''

''ஏன் ரசிகர் மன்றங்களைக் கலைத்தீர்கள்?'' ''இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!''

''ரஜினியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் அவரிடம் பேசினீர்களா?'' ''கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால், என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான். அவர்கிட்ட என்ன பேசினேன்னு வெளில சொல்றது நாகரிகமா இருக்காது. ரஜினி சார் எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்கிறதுதான் என் விருப்பம்!''

''ஆட்சி மாற்றம் பற்றி..?'' ''என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது. நான் அதை ஒழுங்காச் செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது ரெகுலரான விஷயம்தானே? நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னு டைய சொந்த அரசியல் கருத்து களை வெளிப்படையாச் சொல்ல முடியாது. அப்புறம் என்னை 'இவங்க ஆள், அவங்க ஆள்’னு முத்திரைகுத்திடு வாங்க!''  -இவ்வாறு கூறியுள்ளார் அஜீத்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...