இளம் நடிகையான ப்ரிடா
பிண்டோ ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகையாக உருவாகி
உள்ளார். இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர்
சர்வதேச பேஷன் நிறுவனத்தின் விளம்பர மாடலாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்காக
அவருக்கு 7 மில்லியன் டாலர்கள் தொகை தரப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இது
ரூ.35 கோடியாகும். இரண்டாண்டுக்கு அவர் அந்நிறுவனத்தின் விளம்பர மாடலாக
இருப்பார். விளம்பரத்திற்காக அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகை எனும்
சிறப்பை இதன் மூலம் ப்ரிடா பெறுகிறார். அவரது மேலாளரும் இந்த தகவலை உறுதி
செய்துள்ளார்
No comments:
Post a Comment