ஆப்பிரிக்க நாடுகளின் தென் பகுதியில் உள்ள போட்ஸ்வானாவில் 12 பேர் பயணித்த
குட்டி விமானம் ஒன்று நடுவானில் வெடித்து சிதறியதில் 8 பேர் பலியாகினர். ஆப்பிரிக்க
நாடான போஸ்வானா நாட்டின் வடபகுதியில் உள்ள ஷாகானாகா விமான தளத்தில்
இருந்து மெரீமி ஏர் என்ற நிறவனத்திற்கு சொந்தமான குட்டிவிமானம் ஒன்று
அருகில் உள்ள போம்போம் தீவை நோக்கி புறப்பட்டது. இயற்கை செழிப்புமிக்க
போம்போம் தீவில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு
ரசிக்க குட்டி விமானங்கள் இயக்கப்படுவது வழக்கம்.
வழியில்
ஓகாவான்கோ என்ற டெல்டா பகுதியில் சென்ற போது, விமானம் திடீரென நடுவானில்
வெடித்து சிதறியது. இதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த விமான பைலட், 3
பிரான்ஸ் பெண்கள், 2 சுவீடனை சேர்ந்த 3 பேர், இங்கிலாந்து நாட்டவர் ஒருவர்
என மொத்தம் 8 பேர் இந்த விபத்தில் பலியாகினர். படுகாயத்துடன் உயிர்தப்பிய 4
பேரை, மீட்பு விமானம் மூலம் ஜோகன்ஸ்பெர்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டனர்.
இந்த விமான விபத்திற்கான காரணம் குறித்து
விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்தில் பலியான இங்கிலாந்தை சேர்ந்த
விமானி 12,000 மணிநேரங்கள் விமானத்தை இயக்கி அனுபவம் கொண்டவர் என மெரீமி
ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து டாக்டர்
ஒருவர் கூறியதாவது, விபத்தில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் அடையாளம்
தெரியாத வகையில் கருகி போயுள்ளன. டி.என்.ஏ. சோதனை மூலமே அவர்களை அடையாளம்
காண முடியும். மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு விபத்து நடந்த
இடத்திற்கு வருவது அவ்வளவு எளிதல்ல, என்றார்.
No comments:
Post a Comment