அமெரிக்கா சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்!
2 வயது குழந்தைகள் முதல் 92 வயது பெரியவர்கள் வரை பயன்படுத்துவதற்கு ஏதுவாக
விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம்
செய்துள்ளது ஹபி சைக்கிள் நிறுவனம். அமெரிக்காவை சேர்ந்த ஹபி
சைக்கிள் நிறுவனம் சைக்கிள் தயாரிப்பில் சர்வதேச அளவில் புகழ்பெற்று
விளங்குகிறது. அமெரிக்கா தவிர 20 நாடுகளில் தனது சைக்கிள் மாடல்களை ஹபி
விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், 2 வயது குழந்தைகள் முதல்
92 வயது பெரியவர்கள் பயன்படுத்தும் வகையில் விஷேசமாக வடிவமைக்கப்பட்ட
சைக்கிள் மாடல்களை இந்தியாவிவல் அறிமுகம் செய்துள்ளது ஹபி நிறுவனம். ஆக்ஷன்
பைக்ஸ் நிறுவனத்தை தனது அதிகாரப்பூர்வ மொத்த விற்பனையாளராக நியமித்துள்ள
ஹபி நிறுவனம் 15 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறி்த்து ஆக்ஷன் பைக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் அக்ஷய் கபூர் கூறியதாவது: "ஹபி சைக்கிள்கள் தரத்திற்கு புகழ்பெற்றவை. இதேபோன்று, அவற்றின் விஷேசமான வடிவமைப்பும் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும். தற்போது 15 சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். ரூ.5,000 முதல் ரூ.14,500 விலையில் இவை விற்பனை செய்யப்படும். மேலும், நாடு முழுவதும் விற்பனை செய்வதற்கான சில்லறை வணிகர்கள் மற்றும் டீலர்களை நியமிக்கும் பணிகளை துவங்கியுள்ளோம்," என்றார்.
No comments:
Post a Comment