|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 March, 2011

பக்ரைனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.



30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் எகிப்தின் மக்கள் புரட்சி, அடக்குமுறையில் இருக்கும் மற்ற சில நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட தாக்கத்தால் எழுச்சி கண்டுள்ளனர் பக்ரைன் மக்கள். அந்நாட்டில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஆனால் அறவழியில் போராட முயன்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் பலியாகினர்.
பக்ரைனில் கலவரம் கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருப்பதால் அங்கு 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மன்னர் பிறப்பித்தார். மக்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக மன்னர் தெரிவித்தார்.
3 மாத கால அவசர நிலையின் போது பக்ரைன் படைகளுக்கு உதவுவதற்காக ஓமன் மற்றும் கத்தார் படைகள் அங்கு விரைந்துள்ளன. இதற்கிடையில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் கலவரத்தில் குதித்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் இறந்தனர், பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுகிறது.

 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...