எகிப்தைச் சேர்ந்த பயங்கரவாதி சயீப் அல் ஏடல் என்பவர், அல்- குவைதாவின் தற்காலிகத் தலைவராகவும், முஸ்தபா அல் ஏமனி என்பவர், நடவடிக்கைகளுக்கான தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 1990களில், சூடான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அல்-குவைதா முகாம்களைப் பயிற்சி முகாம்களை அமைத்தவர் இந்த சயீப் அல் ஏடல். 2001ல் ஆப்கனில் அமெரிக்கப்படைகள் நுழைந்த போது, அவர், அங்கிருந்து ஈரானுக்குத் தப்பிச் சென்றார்.ஈரானில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் மீண்டும் ஆப்கன்-பாக்., எல்லைப் பகுதிக்கு திரும்பினார் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment