|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 June, 2011

மைசூர் நகருக்குள் புகுந்து 2 காட்டு யானைகள் அட்டகாசம்!

Two wild elephants have gone on a rampage in the Indian state of Karnataka, crushing one person to death. One of the animals ran into a local college compound, causing panic  
மைசூர் நகருக்குள் புதன்கிழமை காலை புகுந்த 2 காட்டு யானைகள், வங்கி காவலாளியையும், ரோட்டோரம் கட்டியிருந்த பசு மாட்டையும் குத்திக் கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். மைசூர் நகரவாசிகளுக்கு புதன்கிழமை காலைப்பொழுது யானைகளின் அட்டகாசத்துடன் விடிந்தது. எச்.டி.கோட்டை காட்டில் இருந்து பன்னூர் வழியாக மைசூர் நகருக்குள் காலை 5 மணிக்கு ஒரு பெண் யானையும், அதன் ஆண் யானைக்குட்டியும் புகுந்தன.இவை இரண்டும் பம்பு பஜார், சரஸ்வதிபுரம், மகாராணி கல்லூரி, ஆட்சியர் அலுவகங்கம் ஆகியப் பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை மிதித்து துவம்சம் செய்தன.
 

தலைதெறிக்க ஓடிய மக்கள்: ஒரு யானை, சயோஜிராவ் சாலையோரம் கட்டியிருந்த பசு மாட்டை தந்தங்களால் குத்திக் கொன்றது. பின்னர், ஆயுர்வேதக் கல்லூரி சந்திப்பு வழியாக சிவராம் பேட்டைக்குள் அந்த யானை நுழைந்தது. இதைக் கண்ட பொதுமக்கள், சாலைகளில் தலைத்தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
 
வங்கி காவலாளி சாவு: அப்போது, என்.எஸ்.சாலையில் உள்ள பேங்க் ஆப் மகாராஸ்ட்ராவில் காவலாளியாக பணிபுரியும் ரேணுகாபிரசாத் (58) என்பவரை யானை தும்பிக்கையால் வளைத்து பிடித்துக் கொண்டு, தந்தங்களால் குத்திக் கொன்றது. பின்னர் எதிரே வந்த வாகனங்களை மிதித்து, நொறுக்கியபடி ஒரு யானை நாராயணபுரா சாலை வழியாக ஜே.எஸ்.எஸ் பெண்கள் கல்லூரிக்குச் சென்றது. மற்றொறு யானை சுபாஷ் நகர், குச்சடஹள்ளி டோபிகாட்டில் உள்ள நாயுடு பண்ணைக்குள் நுழைந்தது. யானையைப் பிடிக்க மயக்க மருந்து: ஜே.எஸ்.எஸ்.பெண்கள் கல்லூரிக்கு வந்த வனத்துறையினர் மயக்க மருந்து கொடுத்து யானையைப் பிடித்தனர். பழகிய யானைகளான அர்ஜுன், அபிமன்யூ, கஜேந்திரா, ஸ்ரீராமா மூலம் நாயுடு பண்ணைக்குள் புகுந்த மற்றொரு யானையை வனத்துறையினர் பிடித்தனர்.
 
பொதுமக்கள் பீதி: யானைகளின் தொடர் அட்டகாசத்தால் 3 பேர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊருக்குள் யானைகள் புகுந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதால், அனைத்து தெருக்களிலும் கடைகள், அலுவலகங்கள் அவசர அவசரமாக மூடப்பட்டன. மைசூர் நகரம் முழுவதும் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதுபோல மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இச்சம்பவத்தால் மைசூர் நகர மக்கள் பீதியடைந்தனர். 

ரூ.5 லட்சம் நிவாரணம்: யானையால் கொல்லப்பட்ட ரேணுகாபிரசாத்தின் கண்களை தானம் செய்வதாக அவருடைய மனைவி வாணி, மகன்கள் தேவராஜ், ராஜு அறிவித்தனர். இதையடுத்து அவரது கண்களை கே.ஆர்.புரம் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். இறந்த ரேணுகாபிரசாத்தின் குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதிவழங்கியுள்ளது.  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...