ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
28 January, 2013
புற்றுநோயை கட்டுப்படுத்தும் மஞ்சள்!
மெரிக்காவின், ஹூஸ்டனில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ மையத்தைச்
சேர்ந்த மருத்துவர் சரஸ்வதி சுகுமார் கூறியதாவது:இந்தியாவில், பல
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உணவில் மஞ்சள் சேர்க்கப்பட்டு வருகிறது. மஞ்சளை
உணவில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக, 20 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள்
நடத்தப்பட்டு உள்ளன.இதில், மூட்டுவலியை குறைப்பதில், மஞ்சள் பெரும் பங்கு
வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதுபோல், புற்றுநோய், நீரிழிவு நோய்,
சரும நோய் போன்றவற்றிலிருந்தும், மனிதர்களை காப்பதில் மஞ்சள் முக்கியப்
பங்கு வகிக்கிறது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும்
கதிர்வீச்சு சிகிச்சையால், சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை மஞ்சள் சரி
செய்து விடுகிறது.
மாத்திரை வடிவில்:மஞ்சளை
அப்படியே சாப்பிடும் வகையில் நம் உடல் அமைப்பு இல்லை என்பதால், இப்போது,
மாத்திரை வடிவிலும் மஞ்சள் கிடைக்கிறது. நாம் சமைக்கும் உணவுடன் மஞ்சளையும்
சேர்த்துவிட்டால், அது நல்லதொரு பலனை அளிக்கும். மஞ்சளை சேர்த்துக்
கொள்வதால் கூடுதலான ருசி கிடைக்காது; மாறாக, உணவுப் பொருளுக்கு நிறத்தை
அளிக்கும். மஞ்சளின் முழு பலனையும் பெற, சமையல் எண்ணெயை சூடு படுத்தி,
அதில் மஞ்சள் தூளைக் கலந்து உணவுப் பொருளுடன் சேர்க்கலாம்.
பிள்ளைய பார்த்தீங்களா?
குரோம்பேட்டையைச் சேர்ந்த தெரு நாய் ஒன்று இரண்டு குட்டிகளை போட்டது. தனது
குழந்தைகளை கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டு அதற்கு சாப்பாடு கொடுப்பதற்காக வெளியே
போய் கிடைத்த இரையோடு திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி. அங்கு இருந்த
இரண்டு குட்டிகளையும் காணவில்லை. அந்த இடத்தை சுற்றி,சுற்றி வந்த அதன்
கண்களில் கண்ணீர். இந்த காட்சியை எல்லாம் மாடியில் இருந்து பார்த்த சுரேஷ்
என்பவர் நாயின் கவலையை எழுதி நோட்டீசாக ஒட்டிவிட்டார்.
இந்திய பிரபலங்கள் 100...
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட இந்திய பிரபலங்கள் 100 பேரின்
பட்டியலில் விஜய்க்கு 28வது இடமும், சூர்யாவுக்கு 43, அஜீத்துக்கு 61
மற்றும் விக்ரமுக்கு 67வது இடமும் கிடைத்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கை இந்திய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை
வெளியிட்டுள்ளது. பிரபலம் மற்றும் வருமானத்தின் அடிப்படையில்
தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் பாலிவுட் நடிகர்
ஷாருக்கான். அவர் கடந்த 2011-2012ம் ஆண்டில் ரூ.202.83 கோடி
சம்பாதித்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சல்மான் கான்.
எனது வாயில் தனது ஆணுறுப்பை எடுத்து அவர்...?
41வயதுப் பெண் ஒருவர் மருத்துவமனை ஒன்றில் டாக்டர் செய்த பாலியல்
சேஷ்டைகள் குறித்து கோர்ட்டில் விவரித்தபோது கடும் வேதனையுடன் அதைக்
குறிப்பிட்டார். அவர் சொல்லச் சொல்ல கோர்ட் ஹாலே அதிர்ச்சியுடன் அதைக்
கவனித்தது.
சர்ச்சையில் சிக்கியுள்ள டாக்டரின் பெயர் ஜார்ஜ் டூட்நாட். டோரண்டோவைச்
சேர்ந்தவர். இவர் மீதுதான் இப்போது வழக்கு பாய்ந்துள்ளது. மொத்தம் 21
வழக்குகள். அதாவது 21 பெண்களை, இவர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தது,
சில்மிஷம் செய்தது, அவமரியாதை செய்தது என்று வழக்குப் போட்டுக் கைது
செய்துள்ளனர்.
இவரால் பாதிக்கப்பட்ட 41 வயதுப் பெண் டோரண்டோ கோர்ட்டில் பரபரப்பான
வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் திகிலுடன்
விவரித்தார். கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் இவருக்கு இந்தக்
கொடுமை நடந்தது.
அப்போது அவருக்கு ஹிஸ்டரெக்டமி அறுவைச் சிகிச்சை நடந்தது.
வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர்
விவரித்துள்ளார்.. அது இதோ...
எனக்கு மயக்க மருந்து கொடுத்திருந்தனர். ஆனாலும் எனக்கு நினைவு இருந்தது.
என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை என்னால் உணரவும் முடிந்தது.
அப்போது டாக்டர் ஜார்ஜ், எனது கவுனுக்குள் கையை விட்டு எனது வலது
மார்பகத்தை பிடித்து நிமிண்டினார். இதை உணர்ந்து நான் அதிர்ச்சி அடைந்து
கண்களைத் திறந்து பார்த்தேன். அப்போது டாக்டரின் முகம் எனது முகத்திற்கு
வெகு அருகே இருந்தது. அவர் என்னை முத்தமிட்டார். மேலும் அவரது நாக்கு எனது
வாய் மீது இருந்தது.
என்னால் நகரக் கூட முடியவில்லை. மற்ற டாக்டர்கள் எங்கே என்று நான்
கேட்டபோது, முன்னெச்சரிக்கையுடன் நடக்க எனக்குத் தெரியாதா என்ன என்று
என்னிடம் கேட்டார் ஜார்ஜ்.
அடுத்து அவர் செய்த செயல்தான் மிகக் கொடுமையானது. எனது வாயில் தனது
ஆணுறுப்பை எடுத்து அவர் வைத்தார். நான் மிகவும் கொடுமையாக உணர்ந்தேன்.
எனக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது என்று அவர் கூறியபோது அப்பெண்
கடும் கோபத்துடன் காணப்பட்டார்.
64 வயதான டாக்டர் ஜார்ஜ் மீது 2006 முதல் 2010 வரை 25 முதல் 75 வயது
வரையிலான பெண்களை பாலியல் ரீதியாக இப்படிச் சீரழித்ததாக புகார்கள்
பதிவாகியுள்ளன. அவர் மீது 21 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டாக்டர் ஜார்ஜ் 1981ம் ஆண்டு முதல் நார்த் யார்க் ஜெனரல் மருத்துவமனையில்
பணியாற்றி வந்தார்.
ரேப் அதிகரிக்க காரணம் குட்டைப் பாவடையும், ஹை ஹீல்ஸ்ம்தான்?
உலகம் முழுவமும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து
வருகின்றன. பாலியல் வன் கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை
கொடுக்கலாம் என்ற பேச்சு ஒரு புறம் இருக்க பெண்களின் அணியும் உடைதான்
அவர்களை பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்குகிறது என்று கருத்து கூறி
வருகின்றனர் சில அதிசய பிறவிகள்.
கவர்ச்சிகரமான உடை அணிவதும், நள்ளிரவில் பெண்கள் தனியாக போவதும்தான்
அவர்கள் கற்பழிப்புக்கு ஆளாகின்றனர் என்று இந்தியாவில் சில நாடாளுமன்ற
உறுப்பினர்கள் கருத்து கூறி நாடு முழுவதும் எதிர்ப்பை வாங்கி
கட்டிக்கொண்டனர். இதேபோல் இங்கிலாந்திலும் ஒரு எம்.பி பேசியுள்ளார்.
டோரி கட்சியைச் சேர்ந்த அந்த எம்.பியின் பெயர் ரிச்சர்டு கிரஹாம்.
கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டும், ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டும் ராத்திரி
நேரத்தில் பாருக்குப் போய் மது அருந்துவதும் பெண்களுக்கு ஆபத்தானது. அதை
அவர்கள் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் கற்பழிப்பு போன்றவை நடக்கத்தான்
செய்யும் என்றும் அவர் பேசியுள்ளார்.
எம்.பியின் இந்தப் பேச்சுக்கு கற்பழிப்புக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த ஜோ
உட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.பியின் பேச்சு நம்மை 100
ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டு போய் விடும் என்று அவர் சாடியுள்ளார்.
அது சரி கவர்ச்சியான உடை அணிந்தால்தான் பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாக்கப்படுகின்றனர் என்றால் 13 வயது பள்ளிச் சிறுமிகள் சுடிதார் அணிந்து
கொண்டுதானே பள்ளிக்குச் செல்கின்றனர். அவர்களை ஏன் கற்பழிக்கின்றனர்.
5 வயது சிறுமிகள் முதல் 60 வயது முதிய பெண்கள் வரை ஆண்களின் வக்கிரப்
பார்வைக்கு தப்ப முடியவில்லையே இதை என்ன சொல்வது?. புடவை அணிந்து கொண்டோ
அல்லது உடல் முழுக்க மறைக்கும் ஆடை அணிந்து கொண்டோ செல்லும் பெண்களை
மட்டும் எதுவும் செய்யாமல் விட்டுவிடுவார்களா என்ன?
போப் பறக்க விட்ட புறா கடித்துக் குதறிய சீகல்!
வாடிகன் சிட்டியில், போப்பாண்டவர் பறக்க விட்ட புறாவை, சீகல்
எனப்படும் கடற்பறவை படு வேகமாக பாய்ந்து வந்து கடித்துக் குதறி ரத்தக்
களறியாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் இதை அதிர்ச்சியுடன்
பார்த்து விக்கித்து நின்றனர்.
சமாதானத்தின் அடையாளமாக பார்க்கப்படுவது புறா. ஆனால் இந்த சமாதானப் புறாவை
கடித்துக் குதறி அனைவரையும் பதற வைத்து விட்டது சீகல் பறவை ஒன்று.
போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் நேற்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை
உரையை நிகழ்த்தினார். அதற்கு முன்பாக அவர் புறா ஒன்றை பறக்க விட்டார்.
அப்போது வாடிகன் சிட்டி வளாகத்தில் வசித்து வரும் சீகல் பறவை ஒன்று படு
வேகமாக புறாவை நோக்கி ஓடி வந்து அதைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்து
போப்பாண்டவர் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடும் வேதனையில் துடித்தபடி புறா சீகல்லிடமிருந்து தப்பித்து ஓடிப்
பறந்ததைப்பார்த்து கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரும் வேதனையும்,
அதிர்ச்சியும் அடைந்தனர். புறாவை சரமாரியாக கடித்துக் குதறிய பின்னர் அந்த
சீகல் பறவை அங்கிருந்து பறந்தோடி விட்டது.
இத்தனைக்கும் ரோம் நகரிலிருந்து வந்த 2000 இளைஞர்கள் நடத்திய அமைதிப் பேரணி
போப்பாண்டவர் உரை நிகழ்த்திய செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில்
நேற்று முடிவடைந்தது. இதன் அறிகுறியாகவே புறாவைப் பறக்க விட்டார்
புலிகள் மீதான தடையை நீக்க கோரும் மனு ஏற்பு!
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வைகோவின்
ரிட்மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த ரிட் மனு
தலைமை நீதிபதி (பொறுப்பு) நீதியரசர் எலிப்பி தர்மாராவ், நீதியரசர் அருணா
ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு
வந்தது.
அப்போது வைகோ கூறியதாவது:
"விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு 2012 மே 14 இல்
பிறப்பித்த ஆணையை, மத்திய அரசு நியமித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி
வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயத்திற்கு அனுப்பி வைத்தது. அந்தத்
தீர்ப்பாயத்தில் நான் நேரில் சென்று, புலிகள் மீதான தடையை இரத்து செய்ய
வேண்டும் என்று மனுதாக்கல் செய்தேன். தீர்ப்பாயம் நடத்திய விசாரணைகளிலும்
பங்கேற்றேன். ஆனால், அந்தத் தீர்ப்பாயத்தில் பதிவு செய்யப்பட்ட
சாட்சியங்களின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆவணங்களின் பிரதிகள் எனக்கு
வழங்கப்படவில்லை.
புலிகள் மீதான தடையை, உறுதி செய்து தீர்ப்பாயம் 2012 நவம்பர் 27 ஆம் தேதி
பிறப்பித்த ஆணை நீதிக்கு எதிரானதும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)
சட்டத்தின் விதிகளுக்கு முரணாகவும் உண்மைக்கு மாறான வாதங்களின்
அடிப்படையிலும் தரப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும்
இறையாண்மைக்கும் எதிராகவோ ஆபத்து ஏற்படும் விதமாகவோ செயல்பட்டால்தான்
சட்டப்படி குற்றமாகும்.
விடுதலைப்புலிகள் இயக்கம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படவில்லை.
ஆனால் மத்திய அரசு, விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டையும் தமிழ் ஈழத்தில்
சேர்க்க திட்டமிட்டுள்ளதாக எள்ளவும் உண்மை இல்லாத, முழுக்க முழுக்க
அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் மீது சுமத்தி இந்தத்
தடையை நீடித்துள்ளது.
எது தமிழ் ஈழம்?
தமிழ் ஈழம் என்பது இலங்கைத் தீவில், ஈழத் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான
வடக்கு-கிழக்கு பகுதிகளைக் குறிப்பதாகும். இதற்கு ஆதாரமாக 1976 மே 14 இல்
வட்டுக்கோட்டையில் தமிழர் அமைப்புகள் தந்தை செல்வா தலைமையில் கூடி
நிறைவேற்றிய பிரகடனத்தை நான் தீர்ப்பாயத்தில் ஆவணமாக தாக்கல்
செய்திருந்தேன். ஆனால், தீர்ப்பாய நீதிபதி அந்தப் பிரகடனத்தின் வாசகத்தையே
புரிந்து கொள்ளாமல், இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள தமிழர்கள், தமிழ்
ஈழத்தின் குடிமக்கள் ஆகலாம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஈழத்தின் பூர்வீகக் குடிமக்கள், புலம்பெயர்ந்த நாடுகளில்
வாழ்பவர்கள், குடி உரிமை பெறலாம் என்றுதான் அப்பிரகடனம் கூறுகிறது.
அடிப்படையையே நீதிபதி மாற்றிச் சொல்கிறார். வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு
விடுதலைப்புலிகள் அங்கீகரித்ததற்கு ஆதாரம் இல்லை என்று தீர்ப்பாய நீதிபதி
கூறுகிறார். ஆனால், நான் பதிவு செய்த ஆவணங்களில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்
27 ஆம் தேதி மாவீரர் நாள் உரையின்போது, தேசியத் தலைவர் பிரபாகரன்
உரையாற்றும் மேடையில், தமிழ் ஈழ வரைபடம் துல்லியமாக
சித்தரிக்கப்பட்டுள்ளது. அது இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு பகுதிகளை
மாத்திரமே காட்டுகிறது. இது தான் வட்டுக்கோட்டை பிரகடனத்திற்கு புலிகள்
தந்துள்ள அங்கீகாரமாகும்."
இலங்கையில் இருந்து ஈழத் தமிழர் யார் வந்தாலும் இந்தத் தடையைக் காரணம்
காட்டி அவர்களை அச்சுறுத்துவதும், பொய்வழக்கு போடுவதும், சிறப்பு முகாமில்
அடைப்பதும் வழக்கமாகிவிட்டது. எனவே, தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்து,
புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுகிறேன்.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் மீதான தடையை எதிர்த்து, நான்
தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தங்கள்
முன்னிலையில் விசாரணை நடைபெற்று அதன் மீதான தீர்ப்பையும் எதிர்பார்த்து
இருக்கிறோம்" என்றார்.
உடனே நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்கள், வைகோவின் ரிட் மனுவை
அனுமதித்ததோடு, நான்கு வார காலத்திற்குள் அரசு தரப்பு பதில் தாக்கல் செய்ய
உத்தரவிட்டார்.
ப.சிதம்பரம் மீது 'ஐபிசி 420' வழக்கு!
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து
ஏமாற்றிய மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் சுஷில்குமார் ஷிண்டே
ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீசாருக்கு ஆந்திர மாநில
ரெங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ரெங்காரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஆந்திர பிரதேச இளநிலை வழக்கறிஞர்கள்
சங்கத்தின் சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில்,
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை தாமதிக்கும் வகையில் பொய்யான
வாக்குறுதிகளை அளித்து முன்னாள் உள்துறை அமைச்சரும் தற்போதைய நிதி
அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் தற்போதைய உள்துறை அமைச்சர் சுஷில்குமார்
ஷிண்டே ஆகியோர் ஏமாற்றியுள்ளனர் என்றும் இருவர் மீதும் நடவடிக்கை தேவை
என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ரெங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம், மத்திய அமைச்சர்கள்
ப.சிதம்பரம் மற்றும் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் மீது போலீசார் வழக்குப்
பதிவு செய்ய அனுமதி அளித்தது. இவர்கள் இருவர் மீது இ.பி.கோ. 420-வது கீழ்
மோசடி வழக்குப் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தெலுங்கானா விவகாரம் 'விஸ்வரூபம்' எடுத்து ஆந்திராவை கொந்தளிப்பாக்கியுள்ள
சூழலில் ஆந்திர நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பை மதித்து செயல்படுத்தவில்லை?
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மதித்து செயல்படாத கர்நாடகாவுக்கு
உச்சநீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்தது.
தமிழகத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பற்ற 12 டி.எம்.சி. நீரையாவது
தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மையில்
தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான ஜெயின் ஓய்வு பெறுவதால் இன்று அது
விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் 12 டி.எம். நீர். கோரி வாதிடப்பட்டது. ஆனால்
கர்நாடகா இதை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து 6 டி.எம்.சி. நீரையாவது
தமிழகத்துக்கு திறந்துவிட முடியுமா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்
கேட்டனர்.
ஆனால் கர்நாடகாவோ தங்களது குடிநீர் தேவைக்கே 15 டி.எம்.சி.நீர்
தேவை என்று கூறியது. இதனால் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், காவிரி
நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகா மதித்து செயல்படுத்தவில்லை என்று கண்டனம்
தெரிவித்தனர்.
மேலும் 1992ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவின் குடிநீர் தேவை என்ன என்பதை
அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் காவிரி
கண்காணிப்புக் குழுவின் செயல்பாடும் திருப்தி இல்லை என்றும் உச்சநீதிமன்ற
நீதிபதிகள் கூறினர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் மனு மீது நாளை பிற்பகல் விசாரணை நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 January, 2013
விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும்
விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் முஸ்லிம் அமைப்புகள்.......... விஸ்வரூபம் படத்தை பார்த்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்ததே ஒரு முஸ்லிம் தான்.......ஹாசன் முகமது ஜின்னான்னு இருக்கே அவரு முஸ்லிம் தான? படம் பார்த்து இருப்பார்ல?? போங்கப்பா ரெண்டு பேரும் சேர்ந்து எல்லாருக்கும் மெல்லுறதுக்கு அவல் கொடுத்தாச்சு so start music...
ஏன் தைப்பூசம்?
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன்
வடதிசைப்பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். இவர்
இந்த மாதத்தில் மகரராசியில் இருக்கிறார். சக்தியின் அம்சமாக திகழ்பவர்
சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடகராசியில்
சஞ்சரிக்கிறார். அன்று, மகரத்தில் இருக்கும் சூரியனும், கடகத்தில்
இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர். இதற்கு
என்ன அர்த்தம் தெரியுமா? அம்பிகை சிவகாமி கண்டு களிக்க,பரம்பொருளான சிவன்,
நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து
ஆடுகிறார். தைப்பூசநாளில் சிவபார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர்.
நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம்
நாம் வேண்டியதைப் பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக
நிர்ணயித்தனர். இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை.
அம்மையப்பரான சிவபார்வதி, மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக்குழந்தை
முருகன். அவ்வகையில், பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான
நாளாக அமைந்தது. தைப்பூசநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து
வேண்டிய வரம் பெறுவோம்.
இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்?
சகுனி கருணாநிதி அரசியலில் அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகி! லோக்சபா தேர்தலில், 16 சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என, தி.மு.க.,விடம்
காங்கிரஸ் முரண்டு பிடித்து வருகிறது. ஆனால், எட்டு சீட்டுகளை மட்டுமே
ஒதுக்க தயாராக உள்ள தி.மு.க., காங்கிரசை வழிக்கு கொண்டுவர, மீண்டும்,
"டெசோ' ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவராக, ராகுலை தேர்வு செய்ததும், அவருக்கு
தி.மு.க., தலைவர் கருணாநிதி, வாழ்த்து அனுப்பினார். அக்கடிதத்திற்கு, நன்றி
தெரிவித்து, ராகுல் தரப்பில் எவ்வித பதிலும் அனுப்பவில்லை. இதனால், ராகுல்
மீது, தி.மு.க., தரப்பில், அதிருப்தி உருவாகியுள்ளது.ஜெய்ப்பூரில் நடந்த
காங்கிரஸ் மாநாட்டில், மதச்சார்பற்ற கட்சிகளுக்கு, சோனியா விடுத்த அழைப்பு,
தி.மு.க., தரப்புக்கு கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில்
உள்ள, மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து செல்லும் பொறுப்பு,
தி.மு.க.,வுக்கு இருக்கும் போது, மறைமுகமாக, தே.மு.தி.க., - பா.ம.க.,
உள்ளிட்ட சில கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுக்கிறது என, தி.மு.க.,
தரப்பு கருதுகிறது.லோக்சபா தேர்தலில், தி.மு.க., அணியில், 16 சீட்டுகளை
காங்கிரஸ் தரப்பு கேட்டுள்ளதாகவும், அதற்கு தி.மு.க., தரப்பில், எட்டு
தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்யப்படும் என, கூறியதாக, கட்சி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, சுமூகமாக நடப்பதற்கு,
ராகுலின் முழு ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் தி.மு.க., தரப்பில்
எழுந்துள்ளது. இதனால், காங்கிரசுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்க, இலங்கை
தமிழர்கள் பிரச்னையை தி.மு.க., கையில் எடுத்துள்ளது.
இலங்கையில், இந்து கோவில்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், அவற்றை தடுத்து நிறுத்த. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, சமீபத்தில் தி.மு.க., முன் வைத்துள்ளது.அடுத்த கட்டமாக, அடுத்த மாதம், 4ம் தேதி, "டெசோ' கூட்டம் சென்னையில் நடைபெறும் என, தி.மு.க., அறிவித்துள்ளது. "டெசோ' கூட்டம் நடத்துவதன் மூலம், இலங்கை தமிழர்களை ஆதரிக்கும் சில கட்சிகள், தி.மு.க., தலைமையின் கீழ் அணிவகுக்க வாய்ப்பு உள்ளது.தொகுதி பங்கீடு மற்றும் ராகுல் செயல்பாட்டில் தி.மு.க., அதிருப்தி அடைந்தால், காங்கிரசை கழற்றி விட்டுவிட்டு, இலங்கை தமிழர்களை, ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் தி.மு.க.,விடம் திட்டம் உள்ளது. இது தொடர்பாக, சுவீஸ், ஜெர்மனி, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் சிலர், கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்."நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்' என, வெளிநாடு வாழ் தமிழர்கள் தெரிவித்த கருத்துக்களை, தனது அறிக்கை வாயிலாக கருணாநிதி வெளிப்படுத்தி உள்ளார்.
இலங்கையில், இந்து கோவில்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், அவற்றை தடுத்து நிறுத்த. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, சமீபத்தில் தி.மு.க., முன் வைத்துள்ளது.அடுத்த கட்டமாக, அடுத்த மாதம், 4ம் தேதி, "டெசோ' கூட்டம் சென்னையில் நடைபெறும் என, தி.மு.க., அறிவித்துள்ளது. "டெசோ' கூட்டம் நடத்துவதன் மூலம், இலங்கை தமிழர்களை ஆதரிக்கும் சில கட்சிகள், தி.மு.க., தலைமையின் கீழ் அணிவகுக்க வாய்ப்பு உள்ளது.தொகுதி பங்கீடு மற்றும் ராகுல் செயல்பாட்டில் தி.மு.க., அதிருப்தி அடைந்தால், காங்கிரசை கழற்றி விட்டுவிட்டு, இலங்கை தமிழர்களை, ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் தி.மு.க.,விடம் திட்டம் உள்ளது. இது தொடர்பாக, சுவீஸ், ஜெர்மனி, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் சிலர், கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்."நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்' என, வெளிநாடு வாழ் தமிழர்கள் தெரிவித்த கருத்துக்களை, தனது அறிக்கை வாயிலாக கருணாநிதி வெளிப்படுத்தி உள்ளார்.
26 January, 2013
தனி தமிழ்நாடு அமைத்து கொள்கிறோம் சீமான்!
நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டம் நடந்தது.இதில்
கட்சி தலைவர் சீமான் பேசியபோது, ‘’தமிழ் படித்தால் மட்டுமே வேலை, தமிழில்
பெயர் வைத்திருப்பவர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்ற நிலை மிக விரைவில்
வரும். நாங்கள் தமிழுக்காக போராடுவது அழிவின் விழிம்பில் இருக்கும் தமிழை
காக்கவே தவிர, மற்ற மொழிகளை அழிப்பதற்காக அல்ல, தமிழ் இனத்தில் பிறந்து
தமிழுக்காக போராடிய ஒரே தலைவர் பிரபாகரன்தான்.தமிழை வளர்க்கவும்,
தமிழ் இனத்தை அழியாமல் காக்கவும் வேறு ஒரு தலைவர் தமிழ் இனத்தில் இருந்தது
இல்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு தமிழ் மொழியை பற்றி கவலை இல்லை.
அவர்களுக்கு தேவை எல்லாம் தமிழர்களை ஆள வேண்டும். தாய்மொழியாக இருந்த தமிழ்
பாடமொழியாகி தற்போது விருப்ப பாடமொழியாக இருப்பது மிகவும் வருத்தப்பட
கூடிய விஷயமாகும். எந்த மொழியில் பேசுகிறீர்களோ அதை முழுமையாக பேசுங்கள்.
பேசும் மொழியில் மற்ற மொழிகளை இணைத்து அந்த மொழிகளை கலங்கப்படுத்தாதீர்கள்.
தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் பதவி
மோகத்திற்காக மத்தியில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்தார்களோ அப்போது
இருந்தே தமிழ் மொழி அழிய தொடங்கிவிட்டது. எனவே தமிழையும், தமிழ் இனத்தையும்
வாழ வைப்பதற்காக இளைய தலைமுறையினர் வரவிருக்கும் வரலாற்று புரட்சிக்கு
தயாராக இருக்க வேண்டும். இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள்
கொள்ளப் படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லயேல்
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தனி தெலுங் கானா அமைத்து கொண்டதை போல
நாங்களும் தனி தமிழ்நாடு அமைத்து கொள்கிறோம். மேலும்
தமிழ்நாட்டிற்கு நிதிஉதவி வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. ஆனால்
தமிழர்களுக்கு எதிரி நாடான இலங்கைக்கு ரூ.80 ஆயிரம் கோடி வட்டியில்லா கடனாக
வழங்கியுள்ளது. மேலும் கடன் கொடுக்க தயாராக உள்ளது. ஆனால் இந்தியாவில் ஒரு
அங்கமாக இருக்கும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் நிதி வழங்க
மத்திய அரசு தயாராக இல்லை.இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்
கற்றால்தான் வேலை என்ற நிலை வரும். தமிழ்மொழி தமிழர்களுக்கு தாய்ப்பால்
போன்றது. மற்ற மொழிகளை கற்று கொள்ளுங்கள் ஆனால் தாய்மொழி தமிழை தாய்ப்பால்
போல பருகுங்கள் அப்போதுதான் அடுத்த தலைமுறையில் தமிழ்மொழி வளரும்’’என்று
கூறினார்.
பாரத விலாஸ்!
சிவன், அம்பிகை, விஷ்ணு, விநாயகர், சூரியன் ஆகிய ஐந்து தெய்வங்களையும்
வழிபடும் முறைக்கு பஞ்சாயதனம் என்று பெயர். இந்த ஐந்தில் எது இஷ்ட தெய்வமோ
அதை நடுவில் வைத்து, மற்ற தெய்வங்களைச் சுற்றிலும் வைத்து வழிபட வேண்டும்.
விக்ரகமாக வைக்காமல், இயற்கையாகக் கிடைக்கும் கற்களையே இதற்குப்
பயன்படுத்துவர். நர்மதா நதியில் கிடைக்கும் கல்லை சிவலிங்கமாகவும்,
ஆந்திராவிலுள்ள சுவர்ணமுகி ஆற்றங்கரையில் கிடைக்கும் சுவர்ணரேகசிலா என்னும்
பொன் நிறக் கற்களை அம்பிகையின் அம்சமாகவும், பீகாரில் ஓடும் சோணபத்ரா
நதியில் கிடைக்கும் சிவப்புக்கற்களை விநாயகராகவும், நேபாளம் கண்டகி
நதியிலுள்ள கிடைக்கும் சாளக்கிராமக் கற்களை விஷ்ணுவாகவும், தஞ்சை
மாவட்டத்தில் வல்லத்தில் கிடைக்கும் ஸ்படிக கற்களை சூரியனாகவும் வைத்துக்
கொள்வர். இதனோடு, முருகனை வழிபட விரும்புபவர்கள் வேல் ஒன்றையும் சேர்த்துக்
கொள்ளலாம். நாட்டின் ஒருமைப்பாட்டை உணர்த்தும் பஞ்சாயதன பூஜை முறை
பின்பற்றும் வீட்டை பாரத விலாஸ் என்றே பாராட்டி மகிழலாம்.
64-வது குடியரசு தினம்!
உலகின் பெரிய ஜனநாயக நாடுஇந்தியா, என்பதில் பெருமை கொள்கிறோம். 121 கோடி
மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டில் மொழி, மதம், இனம் என வேறுபாடுகள் இருந்த
போதும், ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து பயணிப்பது தான்
சிறப்பம்சம்.விஞ்ஞானம், அறிவியல், விளையாட்டு, கல்வி, சினிமா என அனைத்து
துறைகளிலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, இந்தியா முன்னேறிவருகிறது. கடந்த
15 ஆண்டுகளில்தனிமனித வருமானம் அதிகரித்துள்ளது.வடக்கில் பனிபடர்ந்த
இமயமலை,தெற்கில் பசுமையான கேரளா,மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் வடகிழக்கு
மாநிலங்கள், பாலைவனம் உள்ள ராஜஸ்தான் என புவியியல் அமைப்பிலும் பல
வித்தியாசங்கள். சரியும் ஜனநாயகம்இவ்வளவு சிறப்புமிக்க இந்தியஜனநாயகம்,
இன்றைய நவீன காலத்தில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கிதவிக்கிறது.
ஜனநாயகத்தின் தலைமை இடமான பார்லிமென்ட், பயனில்லாத இடமாக
மாறிக்கொண்டிருக்கிறது. காந்தி, நேரு, வல்லபாய் படேல், நேதாஜி என ஆரம்பகால
தலைவர்களின் சிறப்பான பணியை தொடர முடியாமல், தற்போதைய அரசியல்வாதிகள்
தடுமாறுகின்றனர்.
இதனால் ஜனநாயகத்தின் மீதுமக்கள் நம்பிக்கை இழக்கின்றனர்.
தற்போதைய எம்.பி.,க்களில் மூன்றில் ஒரு பகுதியினர், கிரிமினல் பின்னணி
உடையவர்கள். எந்த கூட்டத் தொடருமே, முழுமையான நாட்களை நிறைவு செய்வதில்லை.
ஒவ்வொரு திட்டத்திலும் கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது.ஆளும் மற்றும்
எதிர்கட்சிகள் மாறி மாறி அவர்கள் செய்த ஊழல்களை பற்றி பேசவே நேரம்
கிடைக்கவில்லை. பின், மக்களைப்பற்றி சிந்திக்க எப்படி நேரம் வரும்.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, இந்தியர்களின் கறுப்பு பணத்தை
பற்றிய விவரம் இன்றளவும் வெளியிடப்படவில்லை. வெளிநாட்டு, உள்நாட்டு
பயங்கரவாதம், நவீன இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.நாட்டின் உயரிய
விசாரணை அமைப்பான சி.பி.ஐ., ஆளும் கட்சியின், கைப்பாவையாக செயல்படுவதாக
குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு ஆட்சியில் போடப்படும் வழக்குகள், அடுத்த
ஆட்சியில், அதன் சுவடே இல்லாமல் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது,குற்றங்கள்
அதிகரிக்கத்தான் வழி செய்யும். வாரிசு அரசியல், அசுர வளர்ச்சி பெறுகிறது.
அதே நேரம், அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் கானல்
நீராக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், ஆண்டுதோறும் அதிகரிக்கிறதே
தவிர குறையவில்லை. மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு 100
ரூபாய்க்கும் கீழ் வருமானம் பெறுபவர்கள். நாளுக்குநாள் உயரும்
விலைவாசியால், இவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதற்கு ஒரே தீர்வு,
பெரும்பான்மை மக்களுக்கு பயன்பெறக் கூடிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குஅரசு
முன்னுரிமை அளிக்க வேண்டும். மறுபக்கம், ஜனநாயகத்தை பாதுகாக்க, மக்களும்
ஒத்துழைக்கவேண்டும்.
25 January, 2013
Subscribe to:
Posts (Atom)




















