தமிழகத்தை சேர்ந்த 50 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள், வடமாநிலங்களில் கொத்தடிமையாக இருப்பதாக, மதுரையில் நடந்த குழந்தை உழைப்பு எதிர்ப்பு தின மாநில கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு ஆர்வலர்கள் தெரிவித்த கருத்துகள்: வடமாநிலங்களில் உள்ள முறுக்கு, மிட்டாய், அப்பளம் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு, தமிழக குழந்தைகளை அனுப்ப நிறைய ஏஜன்ட்கள் உள்ளனர். 7-15 வயது குழந்தைகள், தொழிலுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். குழந்தை ஒன்றுக்கு, ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. முன் பணமாக, ரூ.10 ஆயிரம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, குழந்தையை அழைத்துச்செல்லும் ஏஜன்ட்கள், அதன் பின் பேசியபடி பணம் தருவதில்லை. தென்மாவட்டத்திலிருந்து, 50 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் வடமாநிலத்தில் கொத்தடிமையாக உள்ளனர். அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
ஆக்ராவில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட உசிலம்பட்டி பாலமுருகன் கூறியதாவது: மிட்டாய் தயாரிக்கும் கம்பெனிக்கு 22 வயதில் வேலைக்கு சென்றேன். உடம்பில் தழும்பு இல்லாத இடமே இல்லை. அந்த அளவுக்கு அடி, உதை வாங்கினேன். இரு முறை வலது மார்பில் ஊசி போட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டேன். இன்னும் என் உடல்நிலை பழைய நிலைக்கு திரும்பவில்லை.பாலமுருகன் தாய் விஜயா: என் கணவர் கூலி வேலை பார்க்கிறார். வறுமையால் தான் மகனை வேலைக்கு அனுப்பினேன். ஒரு வருட ஒப்பந்தத்தில் அழைத்து சென்றனர். மூன்று ஆண்டுகள் கொடுமைப்படுத்தியுள்ளனர். எழுந்து நடக்கவே சிரமப்படுகிறான். என் மகனின் இந்த நிலைக்கு நான் தான் காரணம் என நினைக்கும் போது, இதயம் வலிக்கிறது, என்றார்.குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசார தென்மண்டல அமைப்பாளர் வனராஜன் கூறியதாவது: சட்டத்தில் குழந்தைகளுக்கான வயதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக உள்ள, 1986ன் குழந்தை தொழிலாளர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மதுரை மாவட்டத்தில் மீட்கப்பட்ட 44 குழந்தைகளுக்கு, அரசின் விடுவிப்பு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே உதவித்தொகை பெற
முடியும்,
No comments:
Post a Comment