|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 June, 2012

12 புதிய ரயில்கள் தமிழகத்திற்கு ...


நெல்லை- மும்பை, சென்னை- பெங்களூருஇரட்டை மாடி ரயில் என  தமிழகத்திற்கு 12 புதிய ரயில்கள்களை தென்னக ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. தென்னக ரயில்வேயின் புதிய ரெயில்வே கால அட்டவணை சென்னையில் இன்று  வெளியிடப்பட்டது. அதில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரயில்கள், புறப்படும்,  வரும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்கள், விரிவு செய்யப்பட்டுள்ள ரயில்கள்  மற்றும் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்  அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரயில்களின் வேகம் அதிகரிப்பு, புதிய பாசஞ்சர் ரயில், மின்சார ரயில்  சேவைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த தகவல் தெற்கு ரயில்வே இணைய தளத்திலும்  வெளியிடப்பட்டுள்ளன.இதில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள 12 புதிய ரெயில்கள் விவரம் வருமாறு:
 
1. பைகானூர்- கோயம்புத்தூர் வாராந்திர சூப்பர் பாஸ்ட் ஏ.சி. ரயில் விடப்படுகிறது.  இந்த ரயில் (22475) வியாழக்கிழமை தோறும் பைகானூரில் புறப்படுகிறது.  கோவையில் இருந்து சனிக்கிழமை மதியம் 3.20 மணிக்கு புறப்படுகிறது.
 
2. ரயில் எண். 16561 யஷ்வந்த்பூர்- கொச்சுவேளிக்கு புதிய வாராந்திர ரெயில்  விடப்படுகிறது. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை,  பாலக்காடு, திருச்சூர், கோட்டயம் வழியாக கொச்சுவேளி செல்கிறது.வியாழக்கிழமை  தோறும் யஷ்வந்த்பூரில் புறப்படுகிறது.
 
3. சாலிமர்- சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தோறும் பகல் 12.20 மணிக்கு சாலிமரில் புறப்பட்டு  புதன்கிழமை மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்து சேருகிறது.சென்ட்ரலில் இருந்து  வியாழக்கிழமை தோறும் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 9.30  மணிக்கு சாலிமர் சென்று அடைகிறது. இந்த ரயில் கடந்த வாரம் முதல்  இயக்கப்படுகிறது.
 
4. விசாகப்பட்டினம்- சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில்  (22869) விடப்படுகிறது. இந்த ரயில் திங்கட்கிழமை தோறும் இரவு 7.20 மணிக்கு  விசாகப்பட்டினத்தில் புறப்படும். செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணிக்கு சென்ட்ரல்  வந்து சேரும். சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 9.10 மணிக்கு  புறப்பட்டு புதன்கிழமை காலை 10.25 மணிக்கு சென்றடையும்.
 
5. அசன்சால்- சென்னை சென்ட்ரல் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12376)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் புதன்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு  அசன்சாலில் புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 10.45 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.  சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை தோறும் பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு  ஞாயிற்றுக்கிழமை இரவு 9.55 மணிக்கு அசன்சாலுக்கு சென்று அடைகிறது.
 
6. சென்னை சென்ட்ரல்- பூரிக்கு வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22860)  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் திங்கட்கிழமை தோறும் மாலை 4.15  மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை பகல் 3 மணிக்கு சென்றடையும்.பூரியில்  ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை மதியம்  2.55 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.
 
7. திருச்சி- திருநெல்வேலி தினசரி பகல் நேர ரயில்.
 
8. திருநெல்வேலி- தாதருக்கு வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் (22630).
 
9. கச்சிகுடா- மதுரை வாராந்திர ரயில் விடப்படுகிறது. 17615 எண் கொண்ட இந்த  ரயில் தர்மாவரம், பாலக்காடு, காட்பாடி, ஈரோடு, திருச்சி வழியாக மதுரை  சென்றடையும். சனிக்கிழமை தோறும் காலை 6.06 மணிக்கு கச்சிகுடாவில் புறப்பட்டு  ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மதுரை வந்து சேரும். ஞாயிற்றுக்கிழமை தோறும்  பகல் 12.50 மணிக்கு மதுரையில் புறப்பட்டு திங்கட்கிழமை பகல் 2.05 மணிக்கு  கச்சிகுடா சென்றடையும்.10. திருப்பதி- மன்னார்குடிக்கு வாரம் மூன்று முறை செல்லும் எக்ஸ்பிரஸ் அறிமுகம்  செய்யப்படுகிறது. இந்த ரயில் (17407) திருப்பதியில் செவ்வாய், வியாழன்,  சனிக்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு புறப்படும்.மன்னார்குடிக்கு மாலை 4.35  மணிக்கு போய் சேரும்.மன்னார்குடியில் இருந்து புதன், வெள்ளி,  ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு புறப்படும்.மேற்கண்ட அனைத்து  ரயில்களும் அறிமுகம் செய்யப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
 
11. விழுப்புரம்- மயிலாடுதுறைக்கு பாசஞ்சர் ரெயில் விடப்படுகிறது.விழுப்புரத்தில் பகல்  2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.50 மணிக்கு மயிலாடுத்துறை சென்றடையும்.  மயிலாடுத்துறையில் பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்துக்கு மாலை 6 மணிக்கு  வந்து சேரும். இந்த ரயில் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும்.12. விழுப்புரம்- காட்பாடி இடையே தினசரி பாசஞ்சர் ரயில் அறிமுகம்  செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு அடுக்கு மாடி ரயில் புதிதாக விடப்படுகிறது.இந்த  ரயில் குளு குளு வசதியுடன் தினசரி இயக்கப்பட உள்ளது.22625 என்ற எண் கொண்ட  இந்த ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு  பெங்களூருக்கு பகல் 1.30 மணிக்கு போய் சேரும்.
 
பெங்களூரில் இருந்து பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு சென்ட்ரல்  வந்து சேரும். ஏசி இரண்டு அடுக்கு ரயில் ஜோலார்பேட்டை வழியாக விடப்படுகிறது.  அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை,  கிருஷ்ணராஜபுரம், பெரம்பூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் 11  ஏ.சி. சேர்கார் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். அவை ஒவ்வொன்றும் 2 அடுக்கு  மாடிகளாக இருக்கைகள் அமைக்கப்படுகிறது.
இந்த ரயில் சேவை தொடங்குவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...