ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
30 November, 2012
29 November, 2012
28 November, 2012
27 November, 2012
26 November, 2012
மோடியை கேவலப்படுத்த மோசடி செய்த காங்கிரஸ்!
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ‘இலங்கை அகதிகள்' படத்தைப்
போட்டு பிரச்சாரம் செய்த காங்கிரஸின் மோசடித்தனம்தான் இப்பொழுது சமூக
வலைதளங்களின் ஹாட்டாபிக்!குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம்
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் எப்படியாவது
முதல்வர் நரேந்திர மோடியை வீழ்த்திவிட துடித்துக் கொண்டிருக்கிறது
காங்கிரஸ் கட்சி. இந்த துடிப்பு கொஞ்சம் ஓவராகிவிட்டது போல! குஜராத்
மாநிலத்து குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் அவமதிப்படுகிறார்கள்..
இந்த விவகாரத்துக்கு தீர்வு காணவில்லை மோடி அரசு என்று சாடி ஒரு படத்தைப்
போட்டு பிரச்சாரம் செய்தது!
ஆனால் மோடி டீமோ இந்த படத்தோட பூர்வோத்ரத்தைக் கண்டுபிடித்துவிட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான யுனிசெப்-ன் போட்டோகிராபர் எடுத்த இலங்கை
அகதி முகாமைச் சேர்ந்த தாயும் சேயும் இருக்கும் படம்தானாம் இது! இதை
வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் களேபர விவாதம் நடக்கிறது! தேர்தல்
நேரத்தில் காங்கிரஸ் கட்சி இப்படி ஏடாகூடமான சிக்கலில் மாட்டிக்
கொண்டிருப்பதால் கதிகலங்கிக் கிடக்கிறது!
பார்த்ததில் பிடித்தது!
துப்பாக்கி படத்துல ஒரு டவுட்டு!
தீவிரவாதியோட கக்காவை எப்படி விஜய் டிஸ்போஸ் செஞ்சாரு?
அப்பேர்பட்ட கமலே ரொம்ப கஷ்ட்டப்பட்டாரு!!
22 November, 2012
19 November, 2012
ஏழைகளே அடிமையாகி...
இந்தியாவில், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு, பணக்காரர்களை விட ஏழைகளே அதிக எண்ணிக்கையில் அடிமையாகி வருவதாக, உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.நாட்டில் மொத்தம், 46.7 சதவீதம் பேர், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். இதில், 21.8 சதவீதம் பேர் பணக்காரர்கள்; 24.9 சதவீதம் பேர் ஏழைகள். புகைபிடிப்பவர்களின் சமூகம் - பொருளாதாரம் இடையேயுள்ள பிரச்னையை (இன் ஈகுவாலிட்டி), மையமாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இத்தகவல் தெரிய வந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில், 25 சதவீதம் பேர், அதிக அளவில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர்.மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகத்தின் உதவியுடன், உலக சுகாதார அமைப்பு நடத்திய, "குளோபல் அடல்ட் டொபேக்கோ சர்வே 2009-10' ஆய்வறிக்கையில், "புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர், குறைந்தபட்சம் மாதம், 300 ரூபாயும், பீடிக்காக 93 ரூபாயும் செலவழிக்கின்றனர். பணக்கார பெண்களை விட, ஏழை பெண்கள் நான்கு மடங்கு அதிகமாக புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.மண்டல புற்றுநோய் மைய (ஆர்.சி.சி) ஆன்காலஜித் துறை மருத்துவர் ஜெயகிருஷ்ணன் சர்வதேச அளவில், ஐரோப்பிய நாடான ஹங்கேரியில், 82.6 சதவீத ஏழை மக்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். மிகவும் குறைந்த பட்சமாக, ஆப்ரிக்க நாடான எத்தியோபியாவில், 5.3 சதவீத ஏழைகள் புகைபிடிக்கும் அடிமையாகி உள்ளனர். ஹங்கேரியில், 65.6 சதவீத பெண்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர்; சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளனர். புகைபிடிக்கும் பழக்கத்தால், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களில், ஏழை மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
குழந்தை ரூ.100-க்கு விற்பனை!
நூறு ரூபாய்க்கு பச்சிளம் குழந்தையை விற்ற தாயையும், விற்கப்பட்ட குழந்தையுடன் பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.கோயம்பேடு மாநகர பேருந்து நிலைய வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, பச்சிளம் பெண் குழந்தையுடன், பெண் ஒருவர் திரிந்தார்.சந்தேகமடைந்த பேருந்து நிலைய போலீசார், அவரிடம் விசாரித்ததில், அவர் பெயர் முனியம்மாள், 24, மூலக்கடை, காமராஜர் சாலை பகுதியில் வசிப்பவர். குழந்தையுடன், கொடுங்கையூர் செல்ல உள்ளார் என, தெரியவந்தது.சந்தேகம் தீராத போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் பல விவரங்கள் தெரியவந்தன.கடந்த மாதம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், முனியம்மாளின் சகோதரி மகன் சிகிச்சை பெற்ற போது, மருத்துவமனைக்கு அவர் சென்றார். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வி, 30 என்பவருக்கு, பெண் குழந்தை பிறந்தது. செல்வியுடன், முனியம்மாளுக்கு நட்பு ஏற்பட்டது.ஏற்கனவே, தனக்கு ஒரு பெண் இருப்பதால், பிறந்த பெண் குழந்தையையும் வளர்ப்பது கடினம் என, செல்வி கூறினார். தான் வளர்ப்பதாக கூறிய முனியம்மாளிடம், கடந்த 12ம் தேதி, 100 ரூபாய்க்கு குழந்தையை விற்றார்.அந்த குழந்தையுடன் தான், முனியம்மாள் பேருந்து நிலைய வளாகத்தில் சுற்றி திரிந்தார். தனது முதல் கணவர் இறந்த நிலையில், இரண்டாவது கணவரும் கைவிட்டதால் தான் குழந்தையை விற்றதாக, விசாரணையில் செல்வி இதையடுத்து இருவரையும், கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் கைது செய்தனர்.
பார்த்ததில் பிடித்தது!
பொதுவாக வேலை தேடுபவர்களுக்கும்,கொடுப்பவர்களுக்கும் படிப்புதான் இது வரை தகுதியாக இருந்தது.,ஆனால் இங்கே ஒருவர் அதெல்லாம் வேண்டாம்,நேர்மையான ஆளா இருந்தா போதும்,வேலை தருகிறேன் என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.நேர்மை என்பது அடிப்படை குணமாக இருந்தது போய் ,இப்போது அது அபூர்வமான குணமாகிவிட்டது போலும்.அதுனால்தான் அப்படிப்பட்ட ஆட்களை இப்படி விளம்பரம் செய்து தேடுகிறார்கள் ,இது ஒன்றும் சந்தோஷப்பட வேண்டிய விஷயமில்லை என்பது மட்டும் புரிகிறது.
18 November, 2012
புரையோடிப்போன லஞ்சம்!
திருச்சி ஏர் போர்ட்ல நடக்கும் அக்கிரமம்.., திருவிளையாடலில் ஒரு வசனம் வரும் " பிரிக்க முடியாதது எதுவோ?" என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக " இந்தியாவும் லஞ்சமும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார்! இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும் நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை!
லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!

அ
அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது! ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம்! என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள் ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்!
சம்பவம் ஒன்று.
விமானத்தை விட்டு இறங்கி ஒரு பேருந்தில் கொண்டு போய் குடிநுழைவு வாசலில் ( Immigration Check point ) இறக்கிவிட்டனர். என்னதான் அடிக்கடி வந்துபோனாலும் விமானத்தில் ஏறியதுமுதல் சொந்த பந்தங்களை காணும் ஆவல்தான் வீடு போய் அவர்களை பார்க்கும்வரை இருக்கும்! ஒவ்வொருவருமே அந்த ஆசைகளை சுமந்துதான் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஒரு விமானம் முழுவதும் வந்த பயணிகளுக்கு மூன்றே மூன்று அதிகாரிகள்தான்! அதுகூட மிட்நைட் என்பதால் அதிகாரிகள் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம்! ஆனால் அதன்பிறகு நடந்ததுதான் கொடுமை!
நாங்கள் வரிசையில் நிற்கும்போதே ஒருவர் உள்ளே இருந்து வந்து ஒரு பெயரை சொல்லி அழைத்துக்கொண்டே வந்தார், உடனே அவர் பெயர் சொல்லி அழைத்த நபர் தன் மனைவியோடு வரிசையின் கடைசியில் இருந்து வந்து எந்தவித கூச்சமும் இல்லாமல் வாயெல்லாம் பல்லாக வரிசையில் நிற்பவர்களை கடந்து அந்த ஊழியரை பின்தொடந்து சென்றார்! அதிகாரிகளும் அவர்களுக்கு முதலில் செக் செய்து அனுப்புகின்றனர்! அந்த ஒருவர் மட்டும் அல்ல அதன் பிறகும் இதேபோல இன்னும் இரண்டுபேரை அந்த ஊழியர் அழைத்துக்கொண்டு சென்றார்! எந்த நாட்டு இன்டர் நேசனல் ஏர்போர்ட்டிலும் காணக்கிடைக்காத காட்சி அது! அருகில் நின்று கொண்டிருந்தவர் சொன்னார், அவர்கள் அந்த விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஏதாவது ஒரு அதிகாரிக்கு உறவாக இருக்கும் என்று! அப்படியே உறவு இல்லையென்றாலும் இதேபோல் செல்ல வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்!
அதாவது, நம்மை வரவேற்க வந்தவர்கள் இதற்கென சிலரை பிடித்து தள்ளுவதை தள்ளி நாம் பெயரை அவர்களிடம் கொடுத்துவிட்டால் போதும், அவர்களும் கடமை தவறாமல் நம்மை வரிசையில் நிற்கவிடாமல் உறவு என்று சொல்லி அழைத்துவிடுவார்கள்! இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும், சிங்கபூர் நான் பிழைக்க வந்த நாடுதான், ஆனால் நிரந்தரவாசியாக இருந்தால்கூட போதும் எந்த நாட்டிற்கு போனாலும் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் குடிநுழைவுக்கு எந்த வரிசையிலும் நிற்க வேண்டாம், எனது இந்தியன் பாஸ்போர்ட்டை வைத்து ஆட்டோ ஸ்கேனிங்கில் வந்து விடலாம். ஆனால் சொந்த நாட்டில் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்துகொண்டு இந்த அவலங்களை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!
சம்பவம் இரண்டு.
ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து வந்தால் அடுத்து லக்கேஜ் கலெக்சன். இந்த முறை எனக்கு ஒரே ஒரு செக் இன் லக்கேஜ் மட்டுமே, இங்கு ஐ.டி. ஷோவில் வாங்கிய ஒரு LED T.V . இங்கு அதை செக் இன் செய்து கன்வேயரில் அனுப்புவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனென்றால், இதுபோல எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்களுக்கு தனி கன்வேயர்! ஆனால் திருச்சி கன்வேயர் பற்றி சொல்லவே வேணாம், புது விமான நிலையத்தில் இப்படி ஒரு டிசைனிங்?! அந்த கன்வேயரில் வரும் உங்கள் லக்கேஜ் சேதப்படாமல் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்! சரி.. அதைப்பற்றி தனியாகவே எழுதலாம் அவ்வளவு இருக்கு! பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த காரணங்களால் டிவி போன்ற ஹேண்டில் கேர் ஐட்டங்களை கன்வேயரில் அனுப்பாமல் தனியாக சைடில் உள்ள வாசல் வழியாக எடுத்து வைப்பார்கள், எனது டிவி யையும் எடுத்து வைப்பார்கள் என்று காத்துகொன்டிருந்தேன், ஆனால் எடுத்துவைத்தபாட்டைக் காணும்! ஆனால் மற்றவர்கள் ஒவ்வொருவராக எடுத்துகொண்டு சென்றார்கள். சரி.. அருகில் சென்று கேட்கலாம் என்று அங்கு சென்றேன், நான் போனதுமே அங்கு உள்ள ஒரு ஊழியர் வந்து " உங்களது என்ன பொருள் சார்?" என்றார், நானும் டிவி என்று மாடலையும் சொன்னேன், கேட்டுக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார், நானும் பரவாயில்லை நல்ல சர்வீஸ் என்று நினைத்தேன்! ஆனால் கொஞ்ச நேரத்திலே என் நினைப்பில் அவர் மண் அள்ளிப்போட்டார்! வேகமாக வெளியில் வந்து " இருக்கு சார், கொஞ்சம் கவனிங்க எடுத்துட்டு வர்றேன்" என்றார்!
எனக்கு முதலில் புரியவில்லை, பின்னர்தான் கவனித்தேன் அருகில் இருப்பவர்கள் நூறு ரூபாயை அவர் கைகளில் திணித்துவிட்டு தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டனர்! நான் அவரிடம் கேட்டேன் " ஏன் சார்..பணம் கொடுக்கலைனா நம்ம திங்க்ஸ எடுக்க முடியாதா? எடுத்து வைக்கிறதுதானே அவங்க வேலை? என்றேன், அவரும் " சார்.. நாம சண்டை போடலாம்.. முதலில் நமக்கு நேரம் இல்லை. இரண்டாவது உங்க டிவி 40,000 ரூபாய்னு வைங்க, இந்த நூறு ரூபாய்க்கு பார்த்தா, உள்ளேயே வச்சு சம்திங் டேமேஜ் பண்ணிட்டு கன்வேயர்ல டேமேஜ் ஆயிருச்சுன்னு சொல்வாங்க" என்றார்! அதிர்சியுடனே அந்த நாய்களுக்கு எலும்புத்துண்டை வீசிவிட்டு டிவியை எடுத்துகொண்டு வந்தேன்! இதையும் மீறி நகரும்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த கான்ஸ்டபிள் " தம்பி.. கொடுக்கவேண்டியதை கொடுத்திட்டிங்களா? என்றார்! இத்தனையும் கன்வேயர் ரூமுக்குள் இருந்த ஒரு கஸ்டம் ஆபிசர் நன்றாக கண்காணித்துக் கொண்டிருந்தார்! யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று! கூட்டுக்கொள்ளை!
சம்பவம் மூன்று.
டிவியை எடுத்துகொண்டு அடுத்து சுங்கச் சோதனை! கண்டிப்பாக டிவி போன்ற சாதனங்களுக்கு சுங்கவரி ( TAX ) உண்டு என்று தெரியும். ஏற்கனவே ஒருமுறை கட்டி இருப்பதால் அதற்கு தயாராகவே வந்தேன். தனியாக இதற்கென இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் சென்று எனது டிவி மாடல் மற்றும் விலைகளை சரி பார்த்து 3750 ரூபாய் கட்ட சொன்னார்கள்! எனக்கும் சந்தோசமே, ஏனென்றால் இதற்குப் பில் கொடுத்துவிடுவார்கள்! ஒரு பைசா கூட அந்த அதிகாரிகள் எடுக்க முடியாது! சரி என்று கட்டப் போகும்போது அதில் இருந்த ஒரு அதிகாரி எனக்கு பின்னால் வந்து மெதுவாக " தம்பி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அந்தப்பக்கம் சைட்ல சோபால உட்காந்திருக்கதுதான் எங்க சீனியர் ஆபிசர்! அவர் இப்ப போயிருவார், அவர் போனதும் 2000 மட்டும் கொடுத்திட்டு உங்க டிவிய எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்!
மேலும் " நேரம் காலம் தெரியாம இங்க வந்து உக்காந்துகிட்டு எங்க பொழப்புல மண்ண போடறான்" என்று அந்த சீனியர் ஆபிசரையும் திட்டிக்கொண்டே சென்றார்! இந்தியன் படத்துல நிழல்கள் ரவிய கமல் கொல்லப்போகும் போது அவருக்கே லஞ்சம் கொடுக்கிறேன்னு நிழல்கள் ரவி சொல்லும்போது கமல் ஆயாசமா கன்னத்துல கைய வச்சிக்கிட்டு சொல்லுவாரே " உன்னை கொல்றதுல தப்பே இல்லடான்னு" அதுதாங்க அப்ப மனசுல வந்துச்சு! சரி நீ ஆணியே புடுங்க வேண்டாம்னு முழு தொகையும் கட்டிட்டு டிவியை எடுத்துக்கிட்டு வெளில வந்துட்டேன்!
சம்பவம் நான்கு.
எல்லாத் தொல்லைகளும் முடிந்து அப்பாடான்னு வெளில வந்து லக்கேஜ் எல்லாவற்றையும் காரில் ஏற்றிவிட்டு திரும்பினா, நான் கொண்டுவந்த ட்ராலிய வாங்குறதுக்காக ஒரு ஊழியர் தயாராக நின்றார்! பரவாயில்ல... இந்த சர்விசாவது நல்லா இருக்கு என்று நினைப்பதற்குள் அதற்கும் ஒரு சம்மட்டி அடி! ட்ராலியை எடுத்துகொண்டு தலைய சொரிந்தார் அந்த ஊழியர், " என்னப்பா என்ன வேணும்?" என்றேன், "பார்த்து கவனிங்க சார், ட்ராலிய தள்ளிட்டு உள்ள போகணும்" என்றார்! நானும் விடாமல் " போங்க.. அதுக்குதானே உங்களுக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்காங்க?" என்றேன்,
" என்ன சார் நீங்க? ஒவ்வொருத்த ரெண்டு வெள்ளி, பத்து வெள்ளின்னு கொடுத்துட்டுப் போறாங்க, இதுக்குப் போய் கணக்கு பார்க்குறீங்க?" என்றார் சாதரணமாக! எனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரிடம் சொன்னேன் " அண்ணே. இன்னும் சிங்கபூர்ல தினக்கூலிக்கு வர்ற நம்ம ஆளுங்களுக்கு ஒரு நாள் சம்பளமே 18 வெள்ளிதான்! இங்க ட்ராலி தள்ளியே அவ்வளவு சம்பாதிக்க முடியும்னா எனக்கும் ஒரு வேலை இங்க வாங்கித் தாங்க, நானும் வந்து ட்ராலி தள்ளுகிறேன்" என்றேன்! அந்த முனகியபடியே திரும்பிச் சென்றார்! கண்டிப்பாக கெட்ட வார்த்தையில் திட்டியபடியே சென்றிருப்பார்!
சம்பவம் ஐந்து.
எல்லாவற்றையும் கடந்து வீட்டுக்குச் செல்லும் ஆர்வத்தோடு விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால், கொஞ்ச தூரத்தில் போலிஸ் செக் போஸ்ட்! அதை தொடும் முன்னரே ஒரு போலிஸ் வந்து நிறுத்தச் சொல்லி கை காட்டினார், நிறுத்தியவுடன் டிரைவர் சீட் பக்கம் குனிந்தார் அவர், என்னவோ என்று கண்ணாடியை இறக்கினால் குப்பென்று அடித்தது சரக்கு வாடை! டிரைவர் சீட்டில் இருந்த என் மாமாவிடம் " என்ன புதுசா? கவனிச்சிகிட்டு போய்க்கிட்டே இருங்க, ஐயா உள்ளதான் இருக்காரு" என்றார்!
உடனே என் மாமாவும் ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டவும் " ஓக்கே ரைட்..போய்க்கிட்டே இருங்க" என்று கை காட்டி அனுப்பி வைத்தார்! நான் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன், அவர் சொன்ன ஐயா, நன்றாக தூங்கியபடி டியூட்டி பார்த்துக் கொண்டிருந்தார்! மாமாவிடம் கேட்டேன் " நாம பணம் கொடுக்கலைனா என்ன பண்ணுவாங்க?" என்று, "என்ன பண்ணுவாங்க? சந்தேகமா இருக்கு செக் பண்ணனும்னு லேட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் மோசமான ஆளுங்களா இருந்தா, கஞ்சா பாக்கெட்ட அவங்களே போட்டு நம்ம கார்ல இருந்துதான் எடுத்ததா வழக்கு போடுவாங்க" என்றார்! அரசாங்க அதிகாரிகளைப் பற்றிய மக்களின் இந்தப் பயம்தான் அவர்களை மேலும் லஞ்சமயமாக வாழவைத்து கொண்டிருக்கிறது!
சம்பவம் ஆறு.
விடுமுறையை சந்தோசமாக கழித்துவிட்டு திரும்ப சிங்கை வர அதே திருச்சி விமான நிலையம்! சரி.. எந்தப் பிரச்னையும் இருக்காது, ஏனென்றால் என்னிடம் செக் இன் லக்கேஜ் இல்லை! ஒரு ஹேன்ட் லக்கேஜ் மற்றும் லேப் டாப் மட்டுமே என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் அப்போதும் லஞ்சம் தன் கோரப் பற்களை காட்டியபடி என்னை வரவேற்றது! இந்தமுறையும் இமிக்ரேசனில் நீண்ட வரிசை! இன்னும் கொடுமை என்னவென்றால், மூன்று விமானங்கள் குறைந்த நேர இடைவெளியில் கிளம்பும், மூன்று விமான பயணிகளையும் கையாள அதே மூன்று அதிகாரிகள் மட்டுமே! நான் சிங்கைக்கு வரும் பயண நேரத்தைவிட விமான நிலையத்தில் செலவழிக்கும் நேரம் அதிகம்! ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து உள்ளே போகும் முன் ஒரு கஸ்டம் ஆபிசரும் அவருக்கு துணையாக ஒரு போலிசும் இருந்து பாஸ்போர்ட்டை செக் செய்து அனுப்புவார்கள்.
என் பாஸ்போர்ட்டை வாங்கி புரட்டிப் பார்த்த அந்த போலிஸ் " என்ன தம்பி.அடிக்கடி வந்து போவீங்க போல? உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதே இல்லை, கவனிச்சிக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்! அந்த நேரம் பார்த்து டைகர் ஏர்வேசின் செக்கிங் எஜன்ட் வர, நான் நழுவி எஸ்கலேட்டரில் ஏற ஆரம்பித்தேன், அவரும் விட வில்லை என் பின்னாடியே வந்துவிட்டார்! " தம்பி..கவனிச்சிட்டு போங்க" என்று! திரும்பவும் மேலே ஒரு பெண் என் போர்டிங் பாஸை செக் செய்து ஓக்கே சொல்லவும் உடனே உள்ளே போய் விட்டேன்! உள்ளே போய் எல்லா ஃபார்மாலிடீஸ் முடிந்தபின் திரும்பிப் பார்த்தேன், அப்பவும் அவர் இடுப்பில் கை வைத்து என்னை முறைத்தபடியே நின்றார்! என்னைப்போல அடிக்கடி வந்து செல்பவர்களையே இவர்கள் இந்தப் பாடு படுத்தினால், அதிகம் படிக்காமல் முதல் முறை வெளிநாடு செல்பவர்களை இவர்கள் என்ன பாடு படுத்துவார்கள்? பணம் கொடுத்தால்தான் பயணமே சாத்தியம் என்று சொன்னாலும் சொல்வார்கள்! இவர்களுக்கு ஏன் இந்தப் பிழைப்பு?
இந்த நீண்ட கட்டுரையை படித்து முடிக்கும் உங்களுக்கே இவ்வளவு ஆயாசமாக இருக்கும்போது, இதை ஒவ்வொரு பயணத்திலும் அனுபவிக்கும் பயணிகளின் நிலையை நினைத்துப்பாருங்கள்! பல வெளிநாட்டினர் வந்துபோகும் இது போன்ற இடங்களில் நம் மானத்தை நேரடியாக விமானத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஊழல் அதிகாரிகள்! இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் லஞ்சத்தை தவிர்த்து வாழவே முடியாத சூழ்நிலையில் கொண்டுவந்து தள்ளிவிட்டது இந்த அதிகார வர்க்கம்! லஞ்சம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாத குழந்தைகளை லஞ்சம் கொடுத்துதான் பள்ளியில் சேர்க்கிறோம்! லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்று போதிக்க வேண்டிய ஆசிரியரே லஞ்சம் கொடுத்துதான் அந்த வேலைக்கு வருகிறார்! லஞ்சம் வாங்குவதை கண்காணித்து கண்டிக்க வேண்டிய காவல்துறை லஞ்சத்தில் திளைத்து கொண்டிருக்கிறது! சட்டங்களை கடுமையாக்க வேண்டிய மந்திரிகள் லஞ்சத்தை கமிஷன் என்று பெயர் மாற்றி வைத்து வாங்குகின்றனர்! ஆக மொத்தம் இந்தியாவிற்கு தேசிய வியாதி என்று ஒன்றை தேர்வு செய்தால் அதற்கு சரியான தேர்வு இந்த லஞ்சம்!

17 November, 2012
உலகின் 'உண்மை"யான அதிபர்!
ஆடம்பர மாளிகை, அணிவகுக்கும் கார்கள், எந்நேரமும் சூழ்ந்திருக்கும்
பாதுகாப்பு படை, எல்லாவற்றுக்கும் வேலையாட்கள்... ஒரு நாட்டின் அதிபர்
என்றவுடன் அவர்பற்றி நம் மனதில் விரியும் ‘இமேஜ்’ இப்படித்தானே இருக்கும். ஆனால், பழைய பண்ணை வீட்டில் சாதாரண விவசாயி போல வலம்வருகிறார் உருகுவே
நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிக்கா. அவரை ‘ஏழை அதிபர்’ என்றே சர்வதேச ஊடகங்கள்
வருணிக்கின்றன.
உருகுவே அரசால் வழங்கப்படும் மாளிகையை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, சரியான சாலை வசதிகூட இல்லாத பண்ணை வீட்டில் வசித்துக்கொண்டே நாட்டை நிர்வகிக்கிறார், அதிபர் முஜிக்கா. தன் மனைவியுடன் இணைந்து பூந்தோட்டங்களை வளர்ப்பது தினசரிக் கடமைகளுள் ஒன்று. கூடவே, ஒற்றைக்காலை இழந்த நாயைப் பராமரிக்கிறார். அவருக்கு இரண்டு காவல்துறை அதிகாரிகள் மட்டுமே காவல்.
தனது மாதச் சம்பளமான 12,000 டாலர்களில் 90 சதவீதத்தை தனது அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்குச் செலவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010-ல் இவரது சொத்து மதிப்பு 1,800 டாலர்கள். இந்த ஆண்டு, தனது மனைவியின் சொத்தில் பாதியைத் தன்னுடையச் சொத்துடன் சேர்த்துள்ளார். இதனால், சுமார் 2 லட்சம் டாலர்களாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ஆனால், இந்தச் சொத்து மதிப்பு, துணை அதிபரின் சொத்து மதிப்பைவிட மிகவும் குறைவுதான்.
‘‘என்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு என்னால் வாழ முடிகிறது’’ என்று சாதாரணமாகச் சொல்லும் இவர், கடந்த 2009-ல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உருகுவே ஜனநாயக நாடாவதற்கு முன்பு ஆறு முறை சுடப்பட்டிருக்கிறார்; 14 ஆண்டு காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்து இருக்கிறார். தன்னுடைய வாழ்க்கை முறையையை நிர்ணயித்தது சிறை வாழ்க்கைதான் என்று அவர் நினைவுகூர்கிறார். ‘‘என்னை ஏழை அதிபர் என்கிறார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. மேலும் மேலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என பாடுபடுகிறார்களே அவர்கள்தான் ஏழைகள்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் இந்த அதிபர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ரியோ+20 மாநாட்டில் இவர் நிகழ்த்திய உரையின் சிறுபகுதி இது: ‘‘இந்த மதிய வேளை முழுவதும் நாம் நீடித்த மேம்பாடு பற்றி பேசிக்கொண்டு
இருக்கிறோம். வறுமை நிலையைப் போக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து
இல்லை. ஆனால், நாம் என்ன நினைக்கிறோம்? வளர்ந்த நாடுகளைப் போலவே மேம்பாடும்
நுகர்வும் நமக்கு வேண்டுமா? உங்களை ஒன்று கேட்கிறேன்... ஜெர்மனியில்
வீட்டுக்கு ஒரு கார் இருப்பது போலவே இந்தியாவிலும் வீட்டுக்கு ஒரு கார்
இருந்தால் என்ன ஆகும்? நமக்கு சுவாசிக்க ஆக்ஸிஜன் மிச்சம் இருக்குமா?
சரி, 700 கோடி கார்களால் ஏற்படும் கழிவுகளை இந்தப் பூமிதான் தாங்குமா? இதுபோன்ற நுகர்வு கலாசாரம் நம் கிரகத்தையை அழித்துவிடாதா?’’ உலகத் தலைவர்கள் பலரும் நுகர்வுடன் கூடிய வளர்ச்சியை எட்டும் விஷயத்தில் கண்மூடித்தனமாக யோசிப்பதாகக் குற்றம்சாட்டுகிறார் அதிபர் ஜோஸ் முஜிக்கா. எளிமையான வாழ்க்கை முறையால் மக்களை வசீகரித்திருந்தாலும், அண்மைக்காலமாக சொல்லிக்கொள்ளும்படியான பொருளாதார முன்னேற்றங்கள் ஏதும் நாட்டில் இல்லை என்பது இவர் மீதான விமர்சனப் பார்வை.எனினும், ஒரு நாட்டின் அதிபராக இருந்துகொண்டு எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து, சமகால தலைவர்களுக்கு பாடம் புகட்டுகிறார் என்பதை மட்டும் மறுக்க முடியாது.

16 November, 2012
கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால்!
உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களில் ஒன்று தான் கொலஸ்ட்ரால். இந்த
கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் இருந்தால், இதயத்தில் பெரும் பாதிப்பு
ஏற்படும். அதிலும் இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் ஏறுவதற்கு காரணம்,
உண்ணும் உணவுகள் தான். எப்படியெனில் வெளியே எங்கேனும் சென்றால், உடல்
நலத்தில் அக்கரை இல்லாமல் சுவைக்காக கடைகளில் விற்கும் கொலஸ்ட்ரால் அதிகம்
உள்ள உணவுகளை வாங்கி சாப்பிடுகிறோம். இதனால் கொலஸ்ட்ரால் அதிகமாகி,
இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு
போதிய இரத்தம் செல்லாமல் இருப்பதால், மாரடைப்பு ஏற்படுகிறது.அதிலும்
இந்த பிரச்சனை இளம் வயதிலிருந்தே உண்ணும் உணவினாலும் ஏற்படும். ஏனெனில்
அப்போது உணவுக்கட்டுப்பாடு எதுவுமின்றி, கண்டதை அதிகம் சாப்பிடுவோம். இது
பிற்காலத்தில் கொலஸ்ட்ராலை அதிகரித்து, தேவையற்ற நோய்களை வரவழைத்துவிடும்.
ரெட் ஒயின் அனைவருக்கும் ரெட் ஒயினின் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியும். அதுவும் ரெட் ஒயின் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்தான டெம்ப்ரானில்லா (tempranillo) என்னும் பொருள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆகவே இதனை அளவுக்கு அதிகமாக பருகாமல் அளவோடு சாப்பிட்டால் நல்லது.
பாதாம் பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஃப்ளேவனாய்டு அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை தடுத்துவிடும்.
டார்க் சாக்லெட் பொதுவாக டார்க் சாக்லேட் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது தெரியும். அதுவும் இதயம் நன்கு செயல்படும் என்பது தெரிந்ததே. ஆனால் அதே டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால், உடலில் இருந்து 10 சதவீத கொலஸ்ட்ராலும் குறையும்.
ஓட்ஸ் ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்தான பீட்டா-க்ளுக்கான் உள்ளது. இது உடலானது கொலஸ்ட்ராலை உறிஞ்சாமல் பாதுகாக்கும். ஆகவே தினமும் காலையில் ஓட்ஸை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகாமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அவோகேடோ அவோகேடோவில் கொலஸ்ட்ராலை உடலில் இருந்து குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா-சிட்டோஸ்டெரால் உள்ளது. இது உடலில் இருந்து குறைந்தது 15 சதவீத கொலஸ்ட்ராலை குறைத்துவிடும்.
ஆலிவ் ஆயில் இதயம் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. அது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.
ஆப்பிள் ஆப்பிளில் கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருளான பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வர, உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை ஊக்கப்படுத்தும். ஆகவே வாரத்திற்கு இரண்டு முறை சாலமன் அல்லது கானாங்கெளுத்தி மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டால் நல்லது.
சோயாபீன்ஸ் சோயாபீன்ஸில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இந்த சோயாபீன்ஸ் இதயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.
தக்காளி தக்காளியில் லைகோபைன், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இவை கொலஸ்ட்ராலை எளிதில் கரைத்துவிடும். ஆகவே அதனை சமைத்தோ அல்லது அப்படியேவோ சாப்பிட்டால், நல்லது.
வெண்டைக்காய் வெண்டைக்காய் சாப்பிட்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும். ஏனெனில் அதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் இதனை வறுத்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் போய்விடும்.
பூண்டு பூண்டை அதிகம் உணவில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறைந்து விடுவதோடு, தமனிகளில் எந்த ஒரு அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். அதிலும் தினமும் அதிகமான அளவில் பூண்டை சாப்பிடாமல், 3-4 பூண்டு சாப்பிட்டால், இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.
14 November, 2012
சொந்த வீட்டில் கிழக்கு திசையில்!
சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். தன் ஊரில் கிழக்கேயும், வேற்று ஊரில் மேற்கேயும் தலை வைத்துப் படுக்க வேண்டும் என்பது கிராமத்துப் பழமொழி. பொதுவாக இந்த நியதி சாஸ்திரங்களிலும் காணப்படுகிறது. ஆனால், தெற்கே தலை வைத்துப் படுப்பது, சில இடங்களில் காலங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது. இது வீட்டுக்கு ஆகாது என்று சொல்வர். வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமுண்டு இதனால் வடக்கில் தலை வைத்து படுக்கும் போது, ரத்த ஓட்டம் மூளைக்கு அதிகமாக இழுக்கப்படும் மூளை பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். திசை காட்டும் கருவியின் முள் வடக்கு நோக்கி திசை காட்டுவது, அந்த திசையின் காந்த சக்தியால் தான். தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், வெளியூரில் தங்கும் போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள்.
திருப்பூர் தற்கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக
தமிழக அளவில், திருப்பூர் மாவட்டம், தற்கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக
உள்ளது. அதேபோல், குடும்பங்கள் சீரழிவு காரணமாகவே 80 சதவீத தற்கொலை
சம்பவங்கள் நடக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2009ல் 871 பேரும்;
2010ல், 940 பேரும்; 2011ல், 859 பேரும், 2012ல், கடந்த அக்., வரை, 511
பேரும் தற்கொலை செய்துள்ளனர். தினமும் சராசரியாக மூன்று பேர் தற்கொலை
செய்து கொள்வதும்; 60 பேர் வரை தற்கொலைக்கு முயற்சிப்பதும் சாதாரணமாக
நடந்து வருகிறது.
மேற்குவங்கத்தில் வறுமை காரணமாக ஆண்டுக்கு 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து
கொள்கின்றனர்.தமிழகத்தில், ஆண்டுக்கு 15 ஆயிரத்து 963 பேர் தற்கொலை செய்து
கொள்கின்றனர். இதில், கடன் தொல்லையால் 2.2 சதவீதத்தினரும், போதைக்கு 2.4
சதவீதத்தினரும், காதல் தோல்வியில் 3.55 சதவீதம் பேரும், நோய் பிரச்னைக்காக
19.6 சதவீதம் பேரும், குடும்ப சண்டை காரணமாக 24.3 சதவீதத்தினரும் தற்கொலை
செய்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கலாசார சீரழிவு, சமுதாய கட்டமைப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால்,
திருப்பூரில், அதிர்ச்சி தரும் கொலைகள், தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.பனியன் தொழில் வளர்ச்சி காரணமாக, உலக அளவில் தனி இடத்தை பெற்றுள்ள
திருப்பூர், பல்வேறு மாவட்ட மற்றும் மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும்
நகரமாக உள்ளது. படித்தவர், படிக்காதவர் என பாரபட்சம் இல்லாமல்,
வாழ்வாதாரத்தை தரும் திருப்பூரில், சமூக கட்டமைப்பு இல்லாதது, கலாசார
சீரழிவு, பணிச்சுமை, மன உளைச்சல், போதைக்கு அடிமையாதல் என பல்வேறு
காரணங்களால் வாழ்வை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து
வருகின்றன.தேசிய குற்றப்பதிவேடுகள் துறையின் அறிக்கைப்படி, இந்திய அளவில்
தற்கொலைகள் அதிகரிப்பில், மேற்குவங்கத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது
இடத்தில் தமிழகம் உள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக 400 பேர் வரை காணாமல் போனதாகவும் போலீசில் புகார்கள்
பதிவாகி வருகின்றன. மேலும், கள்ளத்தொடர்பு, காதல் தோல்வி காரணமாக கொலைகள்
அதிகளவு நடக்கும் நகரமாகவும் உள்ளது.வாழ்வாதாரத்தை தேடி, திருப்பூரை நோக்கி
வருபவர்கள், வாழ்வை இழக்க வேண்டிய காரணம் குறித்து ஆய்வு செய்தால், கலாசார
சீரழிவு, சமூக கட்டுப்பாடு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள்
அணிவகுக்கின்றன.திருப்பூரில் பல்வேறு மாவட்ட, மாநில மக்கள்
வசிப்பதால், பல்வேறு கலாசாரம், பழக்க வழக்கங்களும் கலந்துள்ளன.ஒவ்வொரு
பகுதியில் இருந்து வந்த மக்களும், சமூக கட்டுப்பாடுகளை மறந்து, அதிக
பணப்புழக்கம் பல்வேறு தீய வழிகளுக்கு கொண்டு செல்கிறது. சமூக கட்டுப்பாடு
இல்லாத நிலை, கலாசார சீரழிவு, போதைக்கு அடிமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள்
தற்கொலைகள், கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களுக்கு வழி வகுத்து வருவதாக
ஆய்வில்.
11 November, 2012
உலகம் கொண்டாடும் தைரிய தேவதை!
தாலிபான் பயங்கரவாதிகளின் தோட்டாக்களை மண்டியிடச் செய்து, மீண்டு
எழுந்துள்ள பாகிஸ்தான் போராளிச் சிறுமி மலாலாவைக் கௌரவிக்கும் வகையிலும்,
உலக அளவில் கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்கான விழிப்பு உணர்வை
வலுப்படுத்தும் வகையிலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்று ஓர் அறிவிப்பை
வெளியிட்டுள்ளது."நவம்பர் 10 - (சனிக்கிழமை) உலக அளவில் 'மலாலா தினம்' கொண்டாடப்படும்
என்பதே அந்த அறிவிப்பு. சர்வதேச அளவில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி,
அடிப்படை உரிமை என்பதற்கான அடையாளமாகவே மலாலா திகழ்கிறார் என்று புகழாரம்
சூட்டியிருக்கிறார், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன். தற்போது, உலக அளவில் 6 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல
முடியாத அவல நிலையில் வாடுகிறார்கள். அவர்களுக்குக் கல்வி கிடைப்பதற்காக
மேற்கொள்ளப்பட்டுவரும் விழிப்பு உணர்வை வலுப்படுத்துவதே மலாலா தினத்தின்
நோக்கம்.
அமைதி நோபல் அலை... இதனிடையே, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், உலக அளவில் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றன. இந்தப் பிரசாரத்துக்கு இங்கிலாந்து அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது. நாடு, மொழி, மதங்கள் கடந்து தனக்குக் கிடைத்துள்ள ஆதரவில் நெகிழ்ந்து உலகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார், பிரிட்டனில் சிகிச்சை பெற்றுவரும் மலாலா. அவரது உடல்நிலை வெகுவாக முன்னேறி இருக்கிறது. நானும் மலாலா இயக்கத்தில் சேர விரும்புவோர் நாட வேண்டிய தளம் - http://educationenvoy.org இனி மலாலாவின் சரித்திரத்தை நினைவுகூர்வோம்...

தைரிய தேவதை!
வீதிக்கு வருவதே வீரதீரச் செயல், எந்த நேரமும் தாக்கப்படக்கூடிய அச்சம்,
'நாமும் நாளை இப்படித்தான் தெருவில் பிணமாகக் கிடப்போமா?' என்கிற பீதி...
2003 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் தாலிபான் பயங்கரவாதிகளின்
ஆதிக்கத்தால் பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் சந்தித்த
அவலநிலையே இவை. எல்லாவற்றுக்கும் மேலாக, 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகள்
குண்டுவைத்து தகர்க்கப்பட்டன. 50 ஆயிரம் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
குறிப்பாக, பெண்களுக்குக் கல்வி கிடைக்காமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து
வேலைகளையும் செய்தனர்.
இக்கொடுமைகளை எதிர்த்து நின்றாள். 2009-ல் தன் எழுத்தின் மூலம் தாலிபான்களில் அட்டகாசங்களை உலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டினாள். ஸ்வாட் பகுதி முழுவதுமே தாலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு வித்திட்டாள். அவள் மலாலா யூசஃப்சாய். அப்போது அவளுக்கு வயது 11. ஆம், அண்மையில் தாலிபான்களின் துப்பாக்கித் தோட்டாக்கள் தீண்டிய 14 வயது போராளிச் சிறுமியைப் பற்றிதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.
சக தைரியச் சிறுமிகளைப் போலவே யூனிஃபார்ம் அல்லாத சாதாரண உடை அணிந்து, புத்தகங்களை மார்பில் மறைந்து பள்ளிக்குச் சென்று வந்த மலாலாவிடம் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. டைரிக் குறிப்பின் ஒவ்வொரு வாக்கியமும் தாலிபான்கள் இழைத்துக்கொண்டிருக்கும் கொடுமைகளின் பதிவாகவே இருந்தது. அதை அப்படியே பி.பி.சி. உருது மொழிப் பிரிவுக்கு புனைப்பெயரில் அனுப்பிவைத்தாள் மலாலா. எழுத்தின் வீரியம் உணரப்பட்டதால், உடனடியாக வலைப்பதிவு தொடராக வெளியிடப்பட்டது. அதுவே, ஸ்வாட் பகுதியில் இருந்து தாலிபான்கள் விரட்டி அடிக்கப்படுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. அதன்பின், நியூயார்க் டைம்ஸ் ஆவணப் படம் மூலம்தான் தெரியவந்தது, பிபிசி-யில் தன் டைரிக் குறிப்புகளை வழங்கியது 11 வயதுச் சிறுமி மலாலா என்று. முதன்முறையாக மலாலாவின் முகத்தைப் பார்த்த உலகம் வியப்பில் ஆழ்ந்தது. ஹிட்லரின் வெறிச் செயல்களைத் தனது டைரிக் குறிப்புகள் மூலம் வரலாற்றுப் பதிவாக்கிய ஆன்னி ஃபிராங்க்கை நினைவூட்டினாள். மலாலாவின் தைரியத்தைக் கொண்டாடியது பாகிஸ்தான். அந்நாட்டின் இளம் அமைதியாளருக்கான முதல் விருதை வழங்கி கௌரவித்தது பாகிஸ்தான் அரசு. பெண் கல்விக்காகப் போராடும் அவளுக்கு சர்வதேச அரங்கில் பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன.
இவற்றைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்ட தாலிபான்கள், மலாலாவை தங்கள் 'ஹிட்' லிஸ்டில் வைத்து, அவளைத் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டினர். மின்கோராவில் உள்ள பள்ளி வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தவளைச் சுட்டனர். கழுத்திலும் தலையிலும் தோட்டாக்கள் துளைக்க, படுகாயத்துடன் விழுந்தாள். அந்தத் தோட்டாக்களுக்கே மலாலாவின் மகத்துவம் தெரிந்திருக்கிறது. ஆம், தோட்டக்கள் அவள் உயிரைப் பறிக்கவில்லை. உடனடியாக, பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த பாகிஸ்தான் மக்களுக்கு மலாலா குறித்த வருத்தமும், தாலிபான்கள் மீதான கோபமும் மிகுதியானது. உலக நாடுகள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பினர். அதேவேளையில், மலாலா உயிர்பிழைக்கப் பிரார்த்தனைகளும் தொடர்ச்சியாக நடந்தன.
இதனிடையே, மலாலா தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியால், பாகிஸ்தானில் தாலிபான்களின் ஆயுதக் கலாசாரத்துக்கு எதிராக மக்களிடையே உணர்வலைகள் எழுந்தன. பெண்கல்விக்காகக் குரல் கொடுத்ததற்காகவும், மதசார்பற்றவளாக செயல்பட்டு வருவதற்காகவுமே மலாலாவைத் தாக்கினோம் என்ற தாலிபான்களின் விளக்கமும் மக்களின் கொதிப்பைக் கூட்டியது.பாகிஸ்தான் அரசின் முயற்சியால் மலாலாவுக்கு இங்கிலாந்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நினைவு இழந்தவளை மீட்க, மருத்துவர்கள் கடுமையாகப் போராடினர். லட்சக்கணக்கான உள்ளங்களின் வேண்டுதல்களுக்குப் பலன் கிடைத்திருக்கிறது. மலாலா அபாயக் கட்டத்தைத் தாண்டி குணமாகிவருகிறாள். படுக்கையில் எழுந்து அமர்ந்து, அப்பாவின் கரம்பிடித்துப் புன்முறுவல் பூத்தக் காட்சியைக் கண்ட மக்களின் கண்களில் நீர்த்துளிகள்...கல்வியில் பின்தங்கி இருக்கும் பாகிஸ்தானில் 'நானும் மலாலா' என்ற முழக்கம், மாணவர்களின் மந்திரச் சொல் ஆனது.

07 November, 2012
Subscribe to:
Posts (Atom)