இசையமைப்பாளர் பரத்வாஜ் வித்தியாசமாக 1330 திருக்குறள்களையும் ஒன்று சேர்த்து ஒரு ஆல்பம் தயாரிக்க இருக்கிறார்.
காதல் மன்னன், அமர்க்களம், ஆட்டோகிராப், ஜே ஜே, வட்டாரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ். தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த இவர் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் மட்டும் 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் ஒன்றாக சேர்த்து ஆல்பம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து பரத்வாஜ் கூறியதாவது, சமீபத்தில் தான் திருக்குறளை படிக்க ஆரம்பித்தேன். அதில் உள்ள ஒவ்வொரு குறளும் மிக அருமையாக உள்ளது. வாழ்க்கையின் அர்த்தத்தை மிக அழகாக விளக்கி இருக்கிறார் வள்ளுவர். அப்படிப்பட்ட குறளை ஒரு ஆல்பமாக தயாரிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன். இது என்னுடைய கனவு திட்டம். ஒவ்வொரு குறளுக்கும் ஒரு பாடகர்கள் வீதம், 1330 பாடகர்களை இந்த ஆல்பத்தில் பாட இருக்கின்றனர். இந்த ஆல்பம் சுமார் 11மணி நேர பாடக்கூடியதாக இருக்கும். இந்தபணி தொடர்பாக விரைவில் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். என்றார்.

No comments:
Post a Comment