பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல் ராங்க் பெற்றுள்ளார். ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான இவர் ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 5,477 பள்ளிகளில் பயின்ற, ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இத்துடன், தனித்தேர்வர்கள், 57 ஆயிரத்து, 86 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 1,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன.இத்தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.
முதலிடம் பெற்ற மாணவர்களின் விவரம் மற்றும் பாட வாரியாக முதல் இடம் பெற்றவர்களின் விவரமும் இத்துடன் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரம், அந்தந்த பள்ளிகளிலேயே, காலை 10 மணிக்கு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும்.மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலை, வரும் 25ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள், தாங்கள் தேர்வு எழுதிய அந்தந்த தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் ஜெராக்ஸ் மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புபவர்கள், வரும் 11 முதல், 16ம் தேதி வரை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறலாம்.
No comments:
Post a Comment