|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 May, 2012

Kaalamellam Kaathiruppen Movie...


Sevarkkodi Movie...


லேட்டா சாப்பிட்டா உடம்புல கொழுப்பு ஜாஸ்தி!


உண்ணும் உணவை காலதாமதமாக உட்கொண்டால் உடலில் கொழுப்பு சத்து அதிகமாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சரியான நேரத்தில் உணவு உட்கொண்டால் மட்டுமே கொழுப்பு சத்துக்கள் எரிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.சாப்பிட வாப்பா, சாப்பிட வா என்று அம்மா கெஞ்சிக்கொண்டே இருந்தாலும் காதில் வாங்காமல் இண்டர் நெட், தொலைக்காட்சி என எதிலாவது மூழ்கிப்போய்விடுகிறீர்களா? இது தவறான செயல். நேரத்திற்கு சாப்பிடாமல் இரவில் நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.கொழுப்பு அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து ஏற்படும் என்பதில்லை உண்ணும் உணவை தாமதமாக சாப்பிட்டாலே உடம்பில் கொழுப்பு தங்கி உடல் பருமனாகிவிடும் எனவே உணவை சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இதை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சால்க் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் இந்திய ஆராய்ச்சியாளர் டாக்டர் சச்சிதானந்தா பாண்டே தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
எலிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் அவற்றுக்கு தாமதமாக தீனி போட்டு சாப்பிட வைத்தனர். அவ்வாறு உணவு தின்ற எலிகளுக்கு கொழும்பு சத்து அதிகரித்து இருந்தது. அதே போன்றுதான் தாமதமாக சாப்பிடும் மனிதர்களின் உடலிலும் கொழுப்பு சத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.ஓரு குறிப்பிட்ட நேரத்தில்தான் கல்லீரல் மற்றும் குடல் உறுப்புகள் வேகமாக வேலை செய்யும். மற்ற நேரங்களில் அவை அமைதியாக தூக்க நிலையில் இருக்கும். எனவே, அப்போது சாப்பிடும் போது உணவில் இருக்கும் கொழுப்பு சத்து எரிக்கப்படாமல் அப்படியே உடலில் சேர்ந்து விடுகிறது இதனால் இளம் தலைமுறையினருக்கு உடல் பருமன் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பிராந்தியை எப்படிக் குடிக்கணும்?


டாஸ்மாக் கடைகளில் புதிய வகை பிரெஞ்சு பிராந்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை எப்படிக் குடிக்க வேண்டும் என்பது குறித்து ஒரு செயல்முறை விளக்கம் அளித்துள்ளனர் அந்த பிராந்தியை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ள நிறுவனத்தார்.பிரான்ஸ் நாட்டில் புகழ் பெற்ற கிரேப் பிராந்தியான இந்த ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை டாஸ்மாக் கடைகளில் கேட்டு வாங்கிக் குடிக்கலாம். ஆனால் வழக்கமான மது வகைகளைப் போல குடிக்காமல் இதைக் குடிக்க விசேஷ பயிற்சி தேவைப்படுமாம். அதைத்தான் இந்த பிராந்தியை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்துள்ள ஜியோஸ்பேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் இந்த வகை பிராந்தி விதம் விதமான அளவில் கிடைக்கிறது. சரி இதை எப்படிக் குடிக்க வேண்டும் என்று தெரியுமா..?கால் உள்ள நீளமான கண்ணாடிக் கிளாஸில்தான் இதை ஊற்றிக் குடிக்க வேண்டும். அதற்கு முன்பாக இந்த கிளாஸை, பிராந்தியை ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் கிளாஸில், 20 சதவீதம் பிராந்தியை ஊற்றி, அதில் 40 சதவீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஐஸ் கட்டிகளைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சுவை மாறி விடும்.அதன் பிறகு குடிக்க வேண்டியதுதான். ஆனால் கிளாஸின் மேல் பகுதியில் கையை வைத்து பிடித்து குடிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் கையில் உள்ள சூடு பிராந்திக்குப் பரவி சுவை மாறி விடலாம். எனவே கிளாஸின் கால் பகுதியில் பிடித்துத்தான் நாசூக்காக வாயில் தள்ள வேண்டும்.

முதலில் ஸ்மெல் பண்ணுங்க. அதன் சுவையை நுகர்ந்த பின்னர் மெதுவாக அருந்தவும். பிராந்தியின் விசேஷமே அதில் உள்ள திராட்சையின் சுவைதான். மெதுமெதுவாக குடிக்கும்போது மகா ஆனந்தமாக இருக்குமாம்.இதற்கு சைடு டிஷ்ஷாக கண்டதையும் சாப்பிடக் கூடாது. சிப்ஸ், ஊறுகாய் என வழக்கமாக் போகாமல் பழ வகைகளைச் சாப்பிடலாம். வெள்ளரிக்காய், தக்காளி, பீட்ரூட், முட்டை கோஸ், கேரட், பீன்ஸ் போன்றவையும் நல்ல சைடு டிஷ்தான்.ஒரு பெக் அடித்த பின்னர் 15 மணி நேரம் கேப் விட வேண்டுமாம், பிறகு இன்னொரு பெக் அடிக்கலாமாம். இப்படியே ஒரு 30 மில்லி வரை அடிக்கலாமாம். வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிக்காமல் லீவு விட வேண்டும். இந்த பிராந்தியைக் குடிப்போரின் வாய் முழுவதும் திராட்சை மணம் வீசுமாம்.

இதே நாள்...


  • இலங்கை குடியரசு தினம்(1972)
  • ஏமன் தேசிய தினம்
  • விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது(1990)
  • ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தை பெற்றனர்(1906)
  • முதல் அட்லஸ் 70 வரைபடங்களுடன் வெளியிடப்பட்டது(1570)

சிங்கப்பூரில் பேய்கள் குறித்த அலசல்!


திருநங்கைகளை கேவலப்படுத்துவதை எதிர்த்து Kalki Subramaniam.


21 May, 2012

அட கொடுமையே!


“மறக்க மாட்டோம் மன்னிக்க மட்டோம்!

மறக்க மாட்டோம் மன்னிக்க மட்டோம்! தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! ஐ.நா. சபையே தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்து!” சென்னை மெரினா கடற்கரையில் மே 20 ஞாயிறு அன்று மாலை விண்ணதிர எதிரொலித்த முழக்கங்கள் இவை.தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும், தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் மே-20 அன்று வீரவணக்க ஒன்றுகூடலுக்கு, மே பதினேழு மற்றும் பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி, இன்று எழுச்சியுடன் ஒன்றுகூடல் நடைபெற்றது.மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகில் நடைபெற்ற ஒன்றுகூடலுக்கு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமை வகித்தார். முன்னதாக, ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் ஈகச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 



இந்நிகழ்வில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, லோக் சனசக்தி கட்சித் தலைவர்  இராம் விலாஸ் பாஸ்வான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, ம.தி.மு.க. தென் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன், பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, புதிய பார்வை இதழாசிரியர் திரு. ம.நடராஜன், ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் மற்றும் உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். போர் குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் இயக்கம் சார்பில், தமிழீழத்தில் வாக்கெடுப்பு நடத்தக் கோரி 1 கோடி கையெழுத்துகள் பெறுகின்ற கையெழுத்து இயக்கம் மெரினா வந்த மக்களிடம்  நடத்தப்பட்டது. இராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பெருந்திரளானோர் இதில் கையெழுத்திட்டனர்.“இலங்கை அரசு இனப்படுகொலை அரசு! சர்வதேச விசாரணையை உடனே நடத்து!”, “இந்திய அரசின் துரோகத்தை மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்” உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு, மெழுவர்த்தி ஏந்தியபடி சிறுவர்களும், பெண்களும் என பொதுமக்கள் பெருந்திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உண்மைகள் எப்போதும் வெளியே வரப்போவதில்லை?


இந்தியர்கள் கலாச்சாரம், பண்பாட்டில் உயர்ந்தவர்கள் என்ற உயர்வான எண்ணம் உலக நாடுகள் மத்தியில் உள்ளது. அதேபோல் கோயில், புராதான சின்னங்கள், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள், நம்மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப வாழ்வு, ஆன்மீகத்தை பற்றி வெளிநாடுகளில் இந்திய அரசு செய்யும் சுற்றுலா தொடர்பான விளம்பரங்கள் நம்நாட்டை நோக்கி அதிகளவிளவில் மக்களை வர வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு அந்நிய செலவாணியை வாரி வழங்கும் துறையாக சுற்றுலாத்துறை உள்ளது. ஆண்டு தோறும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

2000- ல் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 22 லட்சம். அதுவே கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமாகி 2009ல் 51,67,699 லட்சமாகவும், 2010ல் 55,83,746 லட்சம் வந்ததாக இந்திய சுற்றுலா துறை தகவல் தெரிவிக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 1 கோடி பேர் வருகை தருவார்கள் என இந்திய அரசின் புள்ளிவிவரம் மகிழ்ச்சி தெரிவிக்கிறது. அதேபோல், இப்பயணிகளால் ஆண்டு தோறும் அந்நிய செலவாணியும் உயர்ந்து வருவதாக இந்திய பொருளாதார அறிக்கைகள் சொல்கின்றன. 2009ல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் நமது அரசுக்கு கிடைத்த வருமானம் 54,960 ஆயிரம் கோடி. 2010ல் 64,889 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

இப்படி இந்தியாவுக்கு கோடி கோடியாய் கொட்டும் வருமானம் ஒரு புறத்தில் வந்தால் சுற்றுலா பயணிகள் ரூபத்தில் இந்தியாவுக்குள் வரும் கால் கேள்ஸ் எனப்படும் விலைமாதுக்கள் தினமும் இந்தியாவில் லட்சங்களில் சம்பாதித்து அதை கறுப்பு பணமாக ஹவாலா முறையில் தங்களது நாடுகளுக்கு கொண்டும் போகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகிறது. நமது நாட்டில் விபச்சாரம் என்பது சட்டப்படி தவறு. அதனால், சில ஆண்டுகள்க்கு முன்பு வரை இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், பணக்கார குடும்ப இளைஞர்கள், மிகப்பெரிய நிறுவன அதிகாரிகள், பன்னாட்டு நிறுவன ஊழியர்கள், உயர் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் ஜாலியாக இருக்க பாங்காங், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், போலந்து, நெதர்லாந்து, பிரேசில், காங்கோ, சுஸர்லாந்து, க்யூபா மங்கோலியா, சாலமன் ஐஸ்லாந்து போன்ற செக்ஸ் டூரிஸ நாடுகளுக்கு போவார்கள். காரணம் இங்கு விரும்பியவர்களுடன் விரும்பும் வண்ணம் அனுபவித்துவிட்டு வரலாம், எந்த சட்ட தொந்தரவும் இல்லாத செக்ஸ் டூரிஸ்ட்டுக்கு சட்ட பாதுகாப்பு உள்ள நாடுகள். அதோடு வெளிநாட்டு பெண்கள் மீதான மோகம். அதனால் ஜாலியாக இருக்க நினைத்தவர்கள் இங்கு படையெடுத்தார்கள். அனுபவித்தார்கள். 

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அப்படித்தான் ‘விளையாட்டு’ பிள்ளைகளான இவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. இவர்களுக்கு பணம் பிரச்சனையில்லை. ஆனால் இந்தியாவில் இருந்து அங்கு போய் வர நேரம் விரயமாகிறதே என கவலைப்பட்டனர். இவர்களின் கவலையை போக்க உள்ளுர் புரோக்கர்கள், இன்டர்நேஷனல் புரோக்கர்களாக உருமாறினார்கள். இன்டர்நேஷனல் தொடர்புகள் மூலம் பெண்களை டான்ஸ் ஷோ, மாடலிங் என்ற பெயரில் இந்தியாவுக்கு வர வைத்து தேவையானவர்களுக்கு தேவையான நேரத்தில் சப்ளை செய்தனர். கடந்த 2008 செப்டம்பர் மாதம் லண்டனில் இருந்து வெளிவரும் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் இதழ்க்கு அமெரிக்காவை சேர்ந்த ஸபா என்ற 25 வயது விலைமாது அளித்தபேட்டியில், எனக்கு ஒரு மணி நேரத்திற்கு இந்திய தொழிலதிபர்கள் தரும் விலை 5 லட்சம், வந்து போக டிக்கட் செலவு, விலை உயர்ந்த கார் பயணம், உயர்தரமான ஹோட்டலில் தங்கும் வசதி என செய்து தருகிறார்கள் என்றார். அந்த பேட்டி இந்தியாவுக்கு வெளிநாட்டு விலை மாதுக்காளை படையெடுக்க வைத்துவிட்டது. வெளிநாட்டு மாதுக்களுக்கு இந்தியாவில் பலரும் போட்டி போடுவதால் டிமாண்ட் அதிகமானது. இதனால் நிறைய வெளிநாட்டு மாதுக்கள் சுற்றுலா விசாவில் இங்கு வர வைக்கப்படுகின்றனர். அப்படி வர வைக்கப்பட்டவர்கள் இன்று இந்தியாவை செக்ஸ் நாடாக அறிவிக்கும் அளவுக்கு பெருகியுள்ளார்கள் என்கிறார்கள் இத்தொழிலை நன்கறிந்தவர்கள். 


இந்த பேட்டி மற்றும் இங்கு வந்து போகும் பெண்களால் பரவிய தகவல், ஐ.பி.எல் விளையாட்டு காண என்ற போர்வையில் இளம் விலைமாதுக்கள் இந்தியாவுக்கு அதிகளவில் வர தொடங்கியுள்ளார்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் இவ்வகை பெண்கள் இந்தியாவுக்குள் அதிகம் வருகின்றனறாம். கடந்த 2010 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளாக 56 லட்சம் பேர் வந்துள்ளனர். இதில் 20 – 35 வயதுக்குள்ளான பெண்கள் அதிகம். கிரிக்கெட் ரசிகைகள் என்ற போர்வையிலும், ஐ.பி.எல் போட்டிகளின் போது மைதானங்களில் ரசிகர்களை, வீரர்களை உற்சாகபடுத்த சியர்ஸ் கேர்ள்ஸ் எனப்படும் நடன பெண்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுகின்றனர்.மும்பையில் உள்ள பத்திரிக்கை நண்பர் போலந்து நாட்டை சேர்ந்த சியர்ஸ் கேர்ள் ஒருவரிடம் பேசியபோது, 2008 ஜனவரி மாதம் ஐ.பி.எல் ஆட்டத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்பற ஒப்பந்தத்தில் ஸ்காட்லாந்து சியர்ஸ் கேர்ள்ஸ் டீமில் உள்ள 150 பேர் கையெழுத்திட்டோம். 

ஸ்காட்லாந்து விமான நிலையத்தில் விமானம் ஏற சென்றபோது, என்னுடன் எனக்கு பணிப் பெண்ணாக, மேக்கப் வுமனாக, பிசியோதெரப்பிஸ்ட் என 5 பெண்கள் வந்தனர். இப்படி எனது குரூப்பில் 150 பேருடன் தலா 5 பேர் வந்தனர். மும்பை விமான நிலையத்தில் இறங்கியபோது, அவர்கள் எல்லாம் அங்கிருந்தே எங்களை விட்டு பிரிந்து போய்விட்டனர். அவர்கள் எதற்காக வந்தார்கள் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் கண்டுக்கொள்ளவில்லை.ஏன் எனில் எங்கள் குழு தலைமை எங்களுக்கு தரும் கமிஷன். அதோடு ஒரு நாள் இங்கு நாங்கள் நடனமாட எங்களுக்கு கிடைக்கும் தொகை 10 லட்சம். அதை இழக்க நான் விரும்பவில்லை. என்னை போல் தான் மற்றவர்களும். அதனால் நாங்கள் கண்டுகொள்வதில்லை. இது ஆண்டுதோறும் நடக்கிறது என பட்டவர்தமான தெரிவித்துள்ளார். தற்போது இந்தியா வெளிநாட்டு செக்ஸ் பெண்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது என்கிறார்கள் மும்பையில் இத்தொழிலை ஆய்வு செய்யும் நபர்கள். இதை நடத்துபவர்கள் எல்லாம் பெரும் பண முதலாளிகள், வெளிநாட்டு விலைமாதுக்களை வைத்து சம்பாதிக்கும் பணத்தில் 40 சதவிதம் புரோக்கர்களுக்கு, மீதி அப்பெண்ணுக்கு என்ற ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் உள்ளதாம்.

இந்த பணமெல்லாம் ஹவாலா முறையில் சம்மந்தப்பட்ட பெண்ணின் நாடுகளில் கொண்டும் போய் தரப்படுகிறது. இந்த பெண்கள் எல்லாம் 3 மாதம், 6 மாதம் சுற்றுலா விசாவில் வருபவர்கள். தேதி முடிந்தும் பல நூற்றுக்கணக்கான பெண்கள் மும்பை, டெல்லி மாநகரங்களில் உலா வருகிறார்கள். இந்தியாவில் தற்போது, தொழிலுக்காக 2 ஆயிரம் வெளிநாட்டு பெண்கள் உள்ளார்கள் என அதிர்ச்சி தருகிறார்கள்.இவர்களை பற்றி பன்னாட்டு புலனாய்வு அமைப்புகள் இந்திய புலனாய்வு அமைப்புகள்க்கு தகவல் தெரிவித்தும் இதில் வரும் அந்நிய செலவாணியை கருத்தில் கொண்டு அரசும், புலனாய்வு அமைப்புகளும் இதை கண்டு கொள்வதில்லை. தற்போது இந்த வெளிநாட்டு மாதுக்களின் புகலிடமாக கோவா, ராஜஸ்தான், புதுவை இருக்கின்றனவாம். அதோடு, தற்போது கார்ப்பரேட் அலுவலங்கள் போல் வெளிநாட்டு விலைமாதுக் களை வரவைக்க சென்னை, மும்பை, பெங்களுர், டெல்லி, ஐதராபாத் போன்ற நகரங்களில் புரோக்கர்கள் அலுவலகமே வைத்துள்ளதாக தெரிவிக்கறார் மும்பை சமுக சேவகர் ஒருவர். 

இதுப்பற்றி பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்துள்ள மதிமுக வழக்கறிஞர் பிரிவின் மாவட்ட அமைப்பாளர் ரமேஷ்கிருஸ்டியிடம் பேசியபோது, சமீபத்தில் வெளிநாட்டு விலைமாதுக்கள் 5பேரை டெல்லி போலிஸ் கைது செய்தது. அவுங்கள தீவிரமா விசாரிச்சாலே நம் நாட்லயிருந்து ஹவாலா முறையில வெளிநாடுகளுக்கு பணம் போற வழிய இன்னும் நெருக்கமா அறியலாம். அதோட இவுங்க மூலமா தீவிரவாதிகளுக்கான தகவல் சப்ளையாகவும் வழியிருக்கு. ஆனா இவுங்களை விசாரிக்க முடியாதபடிக்கு அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள் முட்டுக்கட்டை போட்டு வர்றதா தகவல் தெரியுது. இந்த தொழில்ல இருக்கற அரசியல்தான் லலித்மோடி-சசிதரூர் இடையே போட்டி ஏற்பட்டு மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து சசிதரூரை இறக்கனார் லலித். அவர் தன்பங்குக்கு விளையாட ஐ.பி.எல் தலைவர் லலித்மோடியை நாட்டை விட்டே துரத்திட்டார் இது கடந்த ஆண்டு விவகாரம். இந்த ஆண்டு ஆஸ்த்திரியா கிரிக்கெட் வீரர் லூக் மீது அமெரிக்கவில் இருந்து வந்த ஒரு மாடலிங் பெண் தந்த பாலியல் புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதையெல்லாம் தீவிரமா விசாரிக்கறதேயில்ல. இதை விசாரித்தால் இதுக்கு பின்னாடி இருக்கற பல உண்மைகள் வெளி வரும் என்றார். 

உண்மைகள் எப்போதும் வெளியே வரப்போவதில்லை. அதுதான் இந்தியா. 

Sathyamev Jayate Big Fat Indian Wedding


Padam Paarthu Kathai Sol Movie...





கணிணியில் தகவல்களை மற்றவர்களிடமிருந்து எளிதில் மறைக்க!

1. முதலில் உங்கள் கணிணியில் நீங்கள் Administratorஆக லொகின் செய்திருக்க வேண்டும். 

2. இனிமேல் மறைத்து வைக்க வேண்டிய தகவல் உள்ள கோப்புகள் அனைத்தையும் ஒரு புதிய கோப்பறையில் போட வேண்டும். எடுத்துக்காட்டாக D ட்ரைவில் Data என ஒரு கோப்பறையை உருவாக்கலாம். 

3. அதன் பின் Start பட்டனை அழுத்தி ரன் பாக்ஸில் CMD என டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி(command prompt) கிடைக்கும்.  

4. இங்கு நீங்கள் மறைத்து வைக்க வேண்டிய கோப்பறையின், அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். உதாரணமாக attrib+s+h D:Data என இருக்க வேண்டும். இதன்பின் உங்கள் கோப்பறை மறைக்கப்படும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம். மறைத்து வைத்துள்ள கோப்பறைகள் என்றாவது ஒருநாள் அல்லது ஒருநேரம் இதனை வெளியே தெரியும் படி வைக்க எண்ணலாம் அல்லது மேலும் சில கோப்புகளை இதன் பின் மறைத்து வைக்க எண்ணி இந்த கோப்பறையில் போட்டு வைக்க திட்டமிடலாம். அப்போது attrib s h D:Data என டைப் செய்திட வேண்டும்.

அதிசிய பிரமிடு...!


நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசியங்களில் மிக மிக்கியமான ஒன்று பிரமிடு உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தை கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடைக்கிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான 'கிஸா' பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை . உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விழயங்களை உள்ளடக்கியதுஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .

இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். சுண்ணாம்பு கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செயப்பட்ட க்ரநிடே சுண்ணாம்பு கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டன .இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்பு கற்கள் எவ்வாறு அவளவு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கபட்டன் என்பதும், அத்தகைய பாலைவன பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று.புற கற்களில் வித்தியாசமான எழுத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன இவை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வராலாற்று அய்ய்வலர்கள் கருத்து .கிசவில் உள்ள மூன்று பிரமிடுகளும் .பைதொகராஸ் என்கிற கணித விதிகளிபடியும் ,பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின் நட்சத்திரங்களை குறிக்கின்ற துல்லிய கோட்பாட்டில் அமைக்கபட்டுலத்தை ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்.மற்றுமொரு அதிசய விழயம் என்னவென்றால் .உள்ளே வைக்கப்பட்ட உடல்கள் கேட்டு போகாமல் இருப்பதின் விந்தை தான். உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல் மாறாக முற்றிலும் உலர்ந்த நிலைக்குஉள்ளது. 

ஆராய்ச்சியாளர்களின்ஆய்வுக்கு பெருந்தினியாக உள்ளது !இன்னும் முற்றிலுமாக பயன் பாடுகளை கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் ,குருக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர துளைகளின் பயன் பாடுகள் மர்மங்கலகவே உள்ளன.இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இத்தகைய சதுர துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ளரோபோட்களை உள் செலுத்தி உலகம் முழும் முழுதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டபோது.உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கபட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது .இவற்றை திறக்கவும் அதற்குபின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வு குழுக்கள் மும்முரமாக மனிதனின் அதிசய தக்க ஆற்றல் அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும்..இன்னும் பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும் பிரமிடுகளை எண்ணி நாம் ஆச்சரியபடுவதில் தவறு ஒன்றும் இல்லை.


பிரமிக்கத் தக்க முறையில் கட்டப் பட்டுள்ள பிரமிட கூம்பகம் பண்டை கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப் பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ ஞானத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன. எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிக்கத் தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஓர் புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப் பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே. அவற்றில் நழுவிச் சென்ற சில கணித துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க ஞானிகள் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய வருகின்றது. பிரமிட்களும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [Stonehenge, Ireland] போலக் கற்தூண் காலங் காட்டியாக [Megalithic Calendars] கருதப் படுகின்றன.இந்த பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள் கண்டு பிடிக்க பட்டு உள்ளது மம்மிப்படுத்துதல் பற்றி ..

1. இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்திப் பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் அவரை அலம்புவார்கள்.

2. உடலில் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.

3. நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டுக் கல் உப்பில் பதப்படுத்தப்படும்.

4. இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.

5. ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள்.

6. உடல் கல் உப்பால் மூடப்படும்.

7. நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணைகளைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும்.

8. உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.

9. உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.

10. மம்மி இப்போது அடக்கத்திற்குத் தயார்.

20 May, 2012

இதே நாள்...


  • சிலி கடற்படை தினம்
  • இந்திய தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்
  • பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது(1859)
  • பாரீசில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1904)
  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்த தினம்(1991)

ராட்டினம் Movie...



தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் சினிமா அல்லாத ஒரு வாழ்க்கையை திரையில் பார்த்து, அந்த மனிதர்களோடே நாமும் பயணிக்க முடியும். அப்படிப்பட்ட அழகான, அரிதான சினிமாக்களில் ஒன்று ராட்டினம்.

தாயின் ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்திய மகன்!!


உலகின் ஆறு உண்மைகள்?

முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட 

முடியாது !

இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா 

முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..

மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் 

ஆக்கப்பட்டதால் !

நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் 

ஆக்கனும்னு நினைக்கிறீங்க !

ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் 

போறீங்க !
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !

இதே நாள்...


  • கமரூன் தேசிய தினம்
  • ப்ளூடூத் வெளியிடப்பட்டது(1999)
  • குவோமிங்தான் அரசு தாய்வானில் ராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது(1949)
  • உலகின் முதலாவது நவீன அட்லஸை ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்(1570)

இனி ஆக்ஷனுக்கு பை! - ஜாக்கி சான்!


இனி ஆக்ஷன் படங்களில் நடிக்கப் போவதில்லை... ஒய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார் உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான்.கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் தனது ஆர்மர் ஆஃப் காட் மூன்றாம் பாகத்தை அறிமுகப்படுத்தியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.பரபரப்பான சண்டைக்காட்சிகளில் நடிக்க தன் வயது தடையாக உள்ளதாகவும், நடிப்பு தன்னை களைப்படைய வைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஹாங்காங்கில் பிறந்த சீன நடிகர் ஜாக்கி சான். 58 வயதாகும் ஜாக்கி சான் தனது 100வது படமான சைனீஸ் ஜோடியாக்கை (ஆர்மர் ஆப் காட் 3) உருவாக்கி வருகிறார்.இந்தப் படம்தான் அவரது கடைசி ஆக்ஷன் படமாகும். கேன்ஸ் திரைப்பட விழாவில் சைனீஸ் ஜோடியாக் புரமோஷனுக்காக வந்திருக்கும் ஜாக்கி சான், இந்தப் படத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்வதாக அறிவித்து, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தார்.

இப்போது அந்தப் படத்தின் மூன்றாவது பாகமாக வருவதுதான் சைனீஸ் ஜோடியாக். டிசம்பரில் இந்தப் படம் வெளியாகிறது.தனது ஓய்வு குறித்து அறிவித்த ஜாக்கி சான் கூறுகையில், "இன்னும் எத்தனை நாளைக்கு ஆக்ஷன் நாயகனாக நடிப்பது... சண்டை போட்டு போட்டு களைத்துவிட்டது. அதிரடி சண்டைக்கு என் வயசு இடம்கொடுக்கவில்லை.இப்போது உலகம் ரொம்ப வன்முறைக் களமாக மாறிவிட்டது. உண்மையில் எனக்கு வன்முறை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால்தான் என் படங்களில் சண்டைக் காட்சியைக் கூட நகைச்சுவையாக்கிவிட்டேன்.கராத்தே கிட் நடிக்கும்போதே, போதும் ஆக்ஷன் என்ற மனநிலைக்கு வந்திருந்தேன்.சைனீஸ் ஜோடியாக் படத்துக்குப் பின் இனி ஆக்ஷன் படங்களில் நடிக்க மாட்டேன். திரைக்குப் பின்னால் என் பங்களிப்பு இருக்கும். ராபர்ட் டி நீரோ போல, புதிய பரிமாணத்தில் தோன்றத் திட்டமிட்டுள்ளேன்," என்றார்.

19 May, 2012

ஸ்ரீதர் MOVIE...



CSK >>> YSK?

Yesterday Rajastan Royals
Today KingsX1Punjab
Tomorrow RolyalChallengersBangalore
intha puzhapukku.......???????

கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்!


எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்,'' என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார்.சென்னை அரசு மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் பார்வையிடுவதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக் கல்வி அமைச்சர் விஜய்குமார் காவித்க நேற்று சென்னை வந்தார்.அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் கனகசபையுடன் கலந்துரையாடினார்.

பின், அமைச்சர் பேசியதாவது:எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையிலும் பணிபுரிவதற்கு, முற்றிலும் தடை விதித்துள்ளோம். வெளியில் பணிபுரியச் சென்றால், அரசு மருத்துவமனைகளில் ஈடுபாட்டுடன் பணிபுரிய மாட்டார்கள்.அவ்வாறு வெளியில் செல்வதைத் தவிர்ப்பதற்காக, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.மகாராஷ்டிராவில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், குறைந்தது ஓராண்டுக்கு, கிராமப் புறங்களில் பணியாற்ற வேண்டும். அவ்வாறு, பணிபுரிய மறுப்பவர்கள், அரசிற்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனை, மிகவும் பெரியதாக இருக்கிறது. இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, மிகவும் அதிகமாக இருக்கிறது. எங்கள் மருத்துவமனையில், அதிகமாக, 1,500 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன.தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள், எங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய தாராளமாக வரலாம். ஏனென்றால், அங்கு ஓய்வின் வயது,62 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு, 14 அரசு மருத்துவமனைகள் உள்ளன. மேலும், ஆறு மருத்துவமனைகள் உருவாக்கப்பட உள்ளன.

இதே நாள்...


  • கனடாவின் மொன்ட்றியல் நகரம் அமைக்கப்பட்டது(1604)
  • இந்தியாவின் நவீன தொழில்துறை முன்னோடியான ஜாம்செட்ஜி டாடா இறந்த தினம்(1904)
  • சோவியத் ஒன்றியம், மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது(1971)
  • இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1649)

ஷங்கர் வீட்டு முன் முற்றுகை போராட்டம் !



இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அந்நாட்டுக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என திரையுலகம் தடைவிதித்தது. இதனால் தமிழ் நடிகர், நடிகைகள் யாரும் அங்கு செல்லவில்லை. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன.ஆனால் இதை மீறி 'ரெடி' என்ற இந்தி படப்பிடிப்பில் பங்கேற்க அசின் இலங்கை சென்றார். இது சர்ச்சையை கிளப்பியது. அசினுக்கு நடிகர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தமிழ் படங்களில் அவரை நடிக்க வைக்கக்கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டது.இந்த நிலையில் ஷங்கர் இயக்கப் போகும் புதுப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-இலங்கையில் ராஜபக்சே அரசு ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. அதன் மூன்றாம் ஆண்டு துக்க தினத்தை உலக தமிழர்கள் இப்போது கடை பிடிக்கின்றனர்.ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன.இந்த நிலையில் தமிழர் உணர்வுகளுக்கு எதிராக நடந்து கொண்ட அசினை தனது புதுப்படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. திரையுலகினரின் தடையை மீறி அசின் இலங்கை சென்றது மட்டு மின்றி ராஜபக்சேயுடன் விருந்தும் சாப்பிட்டார்.ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றவர்களோடு கைகுலுக்கி விட்டு வந்த அசினை படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக்கூடாது. மீறி நடிக்க வைத்தால் ஷங்கர் வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அறிக்கையில் 

கேரளாவின் குப்பை மேடா? தமிழகம்??

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே கொட்டப்பட்ட கேரள தொழிற்சாலையின் ரசாயன கழிவுகளை 24 மணி நேரத்துக்குள் அகற்ற கெடு நிர்ணயிக்கப்பட்டது.பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரம் சோதனை சாவடியில் கடந்த 17ம் தேதி அதிகாலை கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரசாயன கழிவை ம.தி.மு.க.,வினர் மடக்கி பிடித்தனர்..

ஆனால், கழிவு கொண்டு வந்த லாரி ஓட்டுனர் மற்றும் சிலர் ம.தி.மு.க.,வினருக்கு போக்கு காட்டிவிட்டு லாரியை பொள்ளாச்சி அருகே உள்ள செடிமுத்தூரில் கொண்டுவந்து நிறுத்தி லாரியில் இருந்த கழிவுகளை கொட்டினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், பொள்ளாச்சி சுற்று வட்டார ம.தி.மு.க.,வினர் செடிமுத்தூரில் திரண்டனர். அதிகாரிகள் யாரும் இப் பிரச்னைக்கு தீர்வு காண முன்வராததால் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.அதற்குள், பொள்ளாச்சி தாலுகா இன்ஸ்பெக்டர் மகேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று, ம.தி.மு.க.,வினரிடமும், கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ரசாயன தொழிற்சாலை (நிட்டா ஜெலடின்) நிர்வாகத்தையும் தொடர்பு கொண்டு பேசினார். தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ம.தி.மு.க இருதரப்புக்கும் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மதியம் 2.00 மணிக்கு பேச்சு நடத்தினர்.தொழிற்சாலை நிர்வாகத்தரப்பில் பேசிய அமீர் என்பவர், "கேரள மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், "இக்கழிவுகளை வைத்து இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்தலாம். இந்த கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்று சான்று கொடுத்துள்ளார். எனவே நாங்கள் இந்த கழிவுகளை உலர வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிட்டும்ளோம்' என்றார். 

ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் பேசும்போது, "இயற்கை உரம்” தயாரிக்க இக்கழிவுகளை பயன்படுத்துவதாக இருந்தால் கேரளாவிலேயே அதை செய்யட்டும். தமிழகத்துக்கு எதற்காக கொண்டு வர வேண்டும். இந்த கழிவுகள் அபாயகரமான ரசாயனகழிவுகள் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.
எனவே, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் கேரளா உள்ளாட்சித்துறை மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக இந்த கழிவை கேரளாவுக்கு எடுத்து செல்ல வேண்டும்'' என்றார்.பொள்ளாச்சியில் கொட்டப்பட்ட கழிவு 24 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்தி கேரளாவுக்கு கொண்டு செல்ல வேண்டும். இனிமேல் கேரளா தொழிற்சாலை கழிவை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானித்து இரு தரப்பிலும் கையெழுத்தை போலீசார் பெற்றனர். இதையடுத்து கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல, கேரள மாநிலம் தத்தமங்கலத்தில் இருந்து 1,1/2 டன் ஆடு, மாட்டு, கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றிக் கொண்டு மினி டோர் ஆட்டோ ஓன்று நேற்று முன்தினம் ஆனைமலை நோக்கி வந்தது.

செமனாம்பதி சோதனை சாவடியில் நின்ற தமிழக போலீசார் அந்த மினிடோர் ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். அதனை ஓட்டி வந்த டிரைவர் வினை மற்றும் புரோக்கர் பாலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இறைச்சி கழிவு ஏற்றப்பட்ட மினிடோர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு ஆனைமலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.ஏற்கனவே மக்கிப்போய் இருந்த அந்த கழிவுகள் துர்நாற்றம் வீசியதால் போலீசார் அந்த மினிடோர் ஆட்டோவை கொண்டுபோய் ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்தினர். நேரம் போக போக நாற்றம் அதிகமானது.வேறு வழியில்லாமல், இரவு 7 மணி அளவில் ஆனைமலை பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் கொண்டுபோய் குழி தோண்டி புதைக்க போலிசார் முயன்றனர்.இதை அறிந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். கேரள கழிவுகளை கொண்டு வந்து இங்கு புதைக்க ஆனைமலை என்ன குப்பைக்காடா ? என்று போலீசாரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். 

கேரளாவின் இறைச்சி கழிவுகளை இங்கு புதைக்க கூடாது என வலியுறுத்தி சின்னப்பம் பாளையம் செல்லும் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த தமிழக அரசு பேருந்தை சிறை பிடித்தனர். தகவல் அறிந்ததும் ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்து விரைந்து வந்து சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எக்காரணம் கொண்டும் கேரள இறைச்சி கழிவுகளை இங்குள்ள குப்பை குழியில்  புதைக்க விடமாட்டோம் என்று பொதுமக்கள் கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து இறைச்சி கழிவு ஏற்றப்பட்ட மினிடோர் ஆட்டோ கேரள எல்லைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கேரளா எல்லைக்குள் அனுப்பிய பின்னரே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.பொதுமக்கள் நடத்திய சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பொதுமக்களுக்கு உள்ள விழிப்புணர்வும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு வரவேண்டும்.

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கபட்ட ஒரே பெண்மனி!


மனிப்பூர் மேரி கோம் லன்டன் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கபட்ட 

ஒரே பெண்மனி. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இந்த 29 வயது 

பெண்மனி தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இது வரை ஐந்து முறை உலக 

சாம்பியன் மற்றூம் இந்தியாவின் நெ 1 சாம்பியன் இவர். காடுவெட்டி குரு 

போன்ற குண்டர்கள் சாரி தொண்டர்கள் இந்த நாட்டையே கொளுத்துவோம் 

என வெட்டி பந்தா விட்டு கொண்டிருக்கும் வேலையில் 33% சதவிகிதம் கூட 

சரியாக தராத ஐந்து பெண்மனிகள் முதலைமச்சர் ஆக ஆளும் இந்த பரந்த 

இந்திய தேசத்தில் இந்த விஷயம் பெருமைக்குறியது.

- சும்மா கல்யானம் ஆனாலே ஒன்னும் முடியலடா சாமி என 

நீட்டி முழக்கும் பெண்களே இரண்டு குழந்தைகளுக்கும் தாய் ஆகி இன்னும் 

சாம்பியன் - உங்களால் முடியாது ஒன்றும் இல்லை.

பார்த்ததில் பிடித்தது!


18 May, 2012

Aravaan Movie


அப்படியா ?

மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதனன் முதலிய நூற்றுவருக்கும் இடையே பெரும்போர் நடந்தபோது இருதரப்புப் படைகளுக்கும் உணவு வழங்கி உதவியவன் சேரமான் உதியஞ் சேரலாதன் என்ற சேரமாமன்னன். அவன் இவ்வாறு உணவு வழங்கியதால், பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்றே சரித்திரத்தில் அவனது திருப்பெயர் விளங்குகிறது. புறநானூறு என்ற சங்ககால நூலின் இரண்டாவது பாடலில் அந்த மாமன்னனைப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடினார்.  பாண்டவ-கவுரவ யுத்தத்தின் போது சேரமாமன்னன் உதியஞ் சேரலாதன் இருபடைகளுக்கும் சோறு வழங்கிய செய்தியை புலவர் வியந்து குறிப்பிடுகிறார். புறநானூற்றுப் புலவர் தெரிவிக்கும் இந்தச் செய்தியை சிலப்பதிகாரம்  உறுதி செய்கிறது. மதுரை மாநகரம் கண்ணகியின் கோபத்தால் அக்கினிக்கு இரையான பிறகும் கண்ணகியின் கோபம் தீரவில்லை. அவள் வருத்தத்துடன் அமர்ந்திருந்தபோது, பாண்டிய மன்னனின் குலதெய்வமான மதுராபதி என்ற குலதெய்வம் கண்ணகியின் பின்பக்கமாக வந்து நின்றது. நீ யார்? என்று கண்ணகி கேட்டாள். அவளுக்குத் தன்னைப் பற்றி தெரிவித்த மதுராபதி தெய்வம் மேலும் சில செய்திகளைக் கூறியது. பாண்டியன், கோவலன் இருவரும் தவறு செய்யாதவர்கள். ஆனால், இருவருக்கும் முன் செய்த தீவினையின் விளைவாக ஏற்பட்ட பழி ஒன்று உண்டு என்று மதுராபதி தெய்வம் கூறியது. பிறகு உயர்குடிப் பிறந்த மன்னர்கள் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பதைச் சில உதாரணங்களுடன் அந்த தெய்வம் விவரித்தது. தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு நீதி தவறாத நேர்மையாளன் என்று புகழ்பெற்ற பொற்கைப் பாண்டியன், ஒரு புறாவுக்காக தான் துலாக்கோல் ஏறிய சோழ மன்னன் சிபி, கன்றை இழந்த பசுவுக்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கி நீதி செய்த மற்றொரு சோழமன்னனாகிய மனு, பாரதப்பெரும் போரில் இரு தரப்புப் படைகளுக்கும் சோறு அளித்த சேரமன்னன் உதியஞ் சேரலாதன் என்று ஒரு பட்டியலையே மதுராபதி தெய்வம் எடுத்து உரைக்கின்றது. 

சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், கட்டுரைக் காதை பகுதியில் பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை என்ற அடிகளில் சேரமன்னன் சோறு வழங்கிய செய்தி சொல்லப்படுகிறது. இதே செய்தியை, வஞ்சிக்காண்டம், வாழ்த்துக் காதை பகுதியில் இளங்கோ அடிகள் மீண்டும் குறிப்பிடுகிறார். தோழிப் பெண்கள் மன்னர்களைப் போற்றி புகழ்ந்து ஆடுகிறார்கள்; பாடுகிறார்கள். இதிலும் மகாபாரத யுத்தத்தில் இரு தரப்பு படைகளுக்கும் சேரமாமன்னன் பெருஞ்சோறு அளித்த செய்தி பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவின் வடக்கே ஒரு பகுதியில் ஒரு பெரும்போர் நடக்கிறது. அதற்கு தெற்கே தமிழ்நாட்டிலிருந்து சோறு வழங்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தி, இந்தியப் பண்பாட்டின் பழமையை மிகச்சரியாக எடுத்துக்காட்டுகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...