ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
28 May, 2013
27 May, 2013
25 May, 2013
14 May, 2013
HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD
Alt + 0153..... ™... trademark symbol
Alt + 0169.... ©.... copyright symbol
Alt + 0174..... ®....registered trademark symbol
Alt + 0176 ...°......degre e symbol
Alt + 0177 ...±....plus-or -minus sign
Alt + 0182 ...¶.....paragr aph mark
Alt + 0190 ...¾....fractio n, three-fourths
Alt + 0215 ....×.....multi plication sign
Alt + 0162...¢....the cent sign
Alt + 0161.....¡..... .upside down exclamation point
Alt + 0191.....¿..... upside down question mark
Alt + 1.......☺....sm iley face
Alt + 2 ......☻.....bla ck smiley face
Alt + 15.....☼.....su n
Alt + 12......♀.....f emale sign
Alt + 11.....♂......m ale sign
Alt + 6.......♠.....s pade
Alt + 5.......♣...... Club
Alt + 3.......♥...... Heart
Alt + 4.......♦...... Diamond
Alt + 13......♪.....e ighth note
Alt + 14......♫...... beamed eighth note
Alt + 8721.... ∑.... N-ary summation (auto sum)
Alt + 251.....√.....s quare root check mark
Alt + 8236.....∞..... infinity
Alt + 24.......↑..... up arrow
Alt + 25......↓...... down arrow
Alt + 26.....→.....ri ght arrow
Alt + 27......←.....l eft arrow
Alt + 18.....↕......u p/down arrow
Alt + 29......↔...lef t right arrow
12 May, 2013
இன்று உலக அன்னையர் தினம்!
உலகில் எதற்கும் ஈடு இணையற்றது ஒன்று இருக்கிறதென்றால்,
அது அன்னை தான். அனைவருக்கும், அன்னைதான் முதல் தெய்வம். நம்மை உலகுக்கு
அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே. வயதான காலத்திலும் அவர்களை அன்போடு
நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் மே 2வது ஞாயிறு (மே
12), உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.எப்படி வந்தது. :பண்டைய கிரீசில், "ரியா' என்ற
கடவுளைத் தாயாகக் கருதி வழிபாடு நடத்தப்பட்டது. ரோமிலும் "சிபெல்லா' என்ற
பெண் கடவுளை அன்னையாக தொழுதனர். இன்றைய அன்னையர் தினம் நேரடியாகத்
தாய்மார்களை குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. நவீன அன்னையர் தினம்
முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவின், கிராம்ப்டன் நகரில்
1908ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அமெரிக்காவை பின்பற்றி இந்தியா, ஜெர்மனி
உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள், மே 2வது ஞாயிறு அன்று இத்தினத்தை
கொண்டாடுகின்றன.சிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு
முக்கியம். "எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,
பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல் வரிக்கு
ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். இன்று முடிந்தால் நேரிலோ அல்லது "மொபைல்' மூலமாகவோ அன்னையருக்கு வாழ்த்துக்கூறி, ஆசிர்வாதத்தை பெற மறவாதீர்.
தாயின் கருவறைக்குள் 280 நாட்கள் வளரும் சிசுவின் உயிருக்கு தாயின் ரத்தத்தில் உள்ள சத்துக்கள் தான் தொப்புள் கொடியின் மூலம் கிடைக்கிறது. சிசுவின் நீண்ட பயணத்திற்கு தாயின் ஊட்டச்சத்துமிக்க உணவு மிக அவசியம். தாயின் எடை 25 - 35 ஐ.பி., (11.5 - 16 கிலோ) 9 மாதத்திற்குள் அதிகரிக்க வேண்டும். தாயின் எடை குறைவாக இருந்தால் குழந்தையின் எடையும் குறையும். தாயின் எடை அதிகமானால், குழந்தையும் பெரிதாகி, சிசேரியன் செய்ய வாய்ப்பு அதிகம்.அதனால் சமச்சீரான சத்தான உணவை கர்ப்பிணிகள் எடுக்க வேண்டும். புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அதிகளவில் தாய்க்கும் சேய்க்கும் தேவைப்படுகிறது. முட்டை, பால், இறைச்சி உணவு, பருப்பு வகைகளில் புரதச்சத்து கிடைக்கிறது. இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை பீட்ரூட், கீரை, அசைவ உணவுகள், பால் இவற்றில் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் கிடைக்காது என்பதால் இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.இவை மட்டுமின்றி பாஸ்பரஸ், அயோடின், மேக்னிசியம், காப்பர், சோடியம், பொட்டாசியம் புளூரைடு முதலிய தாது பொருட்களும் தேவைப்படுகிறது. டாக்டரின் அறிவுரைப்படி தேவையான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, கர்ப்பிணிகள் தாங்கள் விரும்புவதை உண்ண அறிவுறுத்தப்படுகிறது. வசதியற்ற பெண்கள் உணவின் அளவு போதுமானதாக உள்ளதா, கர்ப்பிணியின் எடை சரியாக அதிகரித்துள்ளதா என அறிந்து கொள்ள வேண்டும். இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகள் சரியான முறையில் வழங்க வேண்டும். இதைவிட ஒவ்வொரு பெண்ணும் தாய்மையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும்
11 May, 2013
08 May, 2013
மாத்தியோசி! குளுகுளு' பயணி நிழற்குடை!!
இந்தியாவிலேயே முதன்முறையாக, குளிர் சாதன வசதி செய்யப்பட்ட பயணிகள் நிழற்குடை, கும்பகோணத்தில் திறக்கப்பட்டுள்ளது.கும்பகோணம்
நகரில், 20க்கும் மேற்பட்ட இடங்களில், பயணிகள் நிழற்குடை
அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடைகள் நகராட்சியால்
பாராமரிக்கப்படுகிறது. கும்பகோணம் மொட்டைகோபுரம், ரயில்வே ஸ்டேஷன்
மேம்பாலம், நால்ரோடு உள்ளிட்ட, பத்து இடங்களில் உள்ள நிழற்குடைகளை,
குளிரூட்டப்பட்ட நிழற்குடையாக மாற்ற கடந்த நகராட்சி கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது.இதில், முதற்கட்டமாக, கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில்,
நால்ரோடு அருகே, அதிக அளவில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்து பயணம்
செய்வதால், அந்த இடத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு, அதற்கு
பதிலாக கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி சார்பில், 18 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த
நிழற்குடையில், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுளளது. நகராட்சி
அலுவலகத்தில் இருந்தபடி, இந்த நிழற்குடையை கண்காணிக்க முடியும்.மேலும்,
பொது தொலைபேசியில் காசு போட்டு பேசும் வசதி, கணினி மூலம், பிறப்பு, இறப்பு
சான்றிதழை டவுன்லோடு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. பயணிகள்
நிழற்குடையின் ஒரு பகுதியில், சிட்டி யூனியன் வங்கியின், ஏ.டி.எம்.,
பொருத்தப்பட்டுள்ளது.
பயணிகளை கவரும் வகையில், கும்பகோணத்தில், "ஏசி' வசதியுள்ள நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில், சாதாரண நிழற்குடைகளை கூட, தேவைக்கேற்ப அமைக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.சென்னை மாநகராட்சி பகுதியில், மெட்ரோ ரயில் பணி, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக, பெரும்பாலான நிழற்குடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, சென்னை முழுவதும், 1,035 நவீன நிழற்குடைகள் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டது.இதற்காக, கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் முறையில், நவீன நிழற்குடைகள் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. கோடையை கருத்தில் கொண்டு, பொது நிதியில் இருந்து, 200 நிழற்குடைகளை அமைக்க, மாநகராட்சி முடிவு செய்து, அந்த பணியும் பெரிதாக துவங்கவில்லை.இதனால், பெரும்பாலான பயணிகள், "வானமே நிழற்குடை' என, சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்கின்றனர். சாதாரண நிழற்குடைகளை விரைவில் அமைப்பதோடு, மற்ற மாவட்டங்களுக்கு வேண்டும் என, பயணிகள் தரப்பில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
பயணிகளை கவரும் வகையில், கும்பகோணத்தில், "ஏசி' வசதியுள்ள நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில், சாதாரண நிழற்குடைகளை கூட, தேவைக்கேற்ப அமைக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.சென்னை மாநகராட்சி பகுதியில், மெட்ரோ ரயில் பணி, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக, பெரும்பாலான நிழற்குடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, சென்னை முழுவதும், 1,035 நவீன நிழற்குடைகள் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டது.இதற்காக, கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் முறையில், நவீன நிழற்குடைகள் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. கோடையை கருத்தில் கொண்டு, பொது நிதியில் இருந்து, 200 நிழற்குடைகளை அமைக்க, மாநகராட்சி முடிவு செய்து, அந்த பணியும் பெரிதாக துவங்கவில்லை.இதனால், பெரும்பாலான பயணிகள், "வானமே நிழற்குடை' என, சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்கின்றனர். சாதாரண நிழற்குடைகளை விரைவில் அமைப்பதோடு, மற்ற மாவட்டங்களுக்கு வேண்டும் என, பயணிகள் தரப்பில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
1,21,653 சஹாரா ஊழியர்கள் கின்னஸ் சாதனை!
1,21,653 இந்திய ஊழியர்கள் இணைந்து தேசியகீதம் பாடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். இதற்கு முன்னர் 42,813 பேர் ஒன்று கூடி தேசீய கீதம் பாடப்பட்ட பாகிஸ்தான் சாதனை இதனால் முறியடிக்கப்பட்டுள்ளது. சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதோ ராய் தலைமையில், உத்திரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் முன்தினம் சகாரா நிறுவனத்தாரின் சாதனை முயற்சியாக 1,21,653 ஊழியர்கள் இணைந்து இந்தியாவின் தேசியகீதத்தை ஒருங்கிணைந்து பாடினார்கள். நமது தேசிய கீதத்தை உருவாக்கிய ரபிந்தரநாத் தாகூரின், 152ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நோக்கில் நடைபெற்றது இந்த முயற்சி. இதுவரை 42,813 பாகிஸ்தானியர்கள் சேர்ந்து தங்கள் நாட்டின் தேசியகீதத்தை இசைத்ததுதான் கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது. தற்போது நடந்த இந்த நிகழ்ச்சியை கின்னஸ் சாதனைக் குழு மேற்பார்வையிட்டு கின்னஸில் இடம்பெற சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே, இனி இந்த நிகழ்ச்சியே சாதனை நிகழ்ச்சியாக அறிவிக்கப் பெறும். இந்த சாதனை குறித்து சகாரா நிறுவனத் தலைவர் சுப்ரதோராய் கூறியது 'தேசிய கீதத்தை ஒருங்கிணைந்து பாடுவதில் பாகிஸ்தான் நாடு முன்னணியில் இருக்கிறது என்பதனை அறிய வந்தபோது, நமது நாட்டினர் இந்த சாதனை முயற்சியில் முதலிடத்தில் இருக்கவேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். மேலும், இதற்காக ஒரு குழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியபோது எங்களின் சாதனை நிகழ்ச்சி எந்தத் தடையுமில்லாமல் நிறைவேற்றப்பட்டது என கூறினார்.
கருப்பை வெளுப்பாக்கலாம்!
எலுமிச்சை சாறு சாதாரணமாகவே எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் தன்மை நிறைந்தது. அத்தகைய எலுமிச்சை சாற்றினை சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இல்லையெனில் அவை வறட்சியை உண்டாக்கிவிடும். குறிப்பாக, இந்த முறை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும். எனவே பரிசோதித்து பின்னர் செய்வது நல்லது.
வெள்ளரிக்காய் குளிர்ச்சியைத் தரும் பொருட்களில் ஒன்று. மேலும் இது ஒரு ப்ளீச்சிங் பொருளும் கூட. இதனை சாறு எடுத்து, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அழகான சருமத்தைப் பெறலாம்.
ஓட்ஸ் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, வேண்டுமெனில் தண்ணீரையும் சேர்த்து, முகத்தில் தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.
தயிர் சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு, ப்ளீச் செய்வதற்கு தயிர் ஒரு சிறத்த பொருள். அதற்கு தயிரை சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் செய்தால், சருமம் அழகாக இருப்பதோடு, வெள்ளையாக பொலிவோடும் காணப்படும்.
பால் பாலை ஒரு பஞ்சில் நனைத்து, முகத்தில் தடவி, காய வைத்து, கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு ஜொலிக்கும்.
தக்காளி சென்சிட்டிவ் சருமத்திற்கு தக்காளி ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். அதற்கு தக்காளியை அரைத்து, அதனை சருமத்தில் தடவி, காய வைத்து, குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
ஆரஞ்சு தோல் மற்றும் பால் ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து, பொடி செய்து, அதனை பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கருப்பாக இருக்கும் உடலின் பிற பகுதிகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமமும் பொலிவோடு காணப்படும்
.
பிரீமியர் ஷோவுக்கு கலக்கல் கவர்ச்சியாக வந்த மிஸ் யுனிவர்ஸ்!
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த ஹாலிவுட் படமான தி கிரேட் காட்ஸ்பி படத்தின் பிரீமியர் ஷோவுக்கு பிரா கூட போடாமல் கலக்கல் கவர்ச்சியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் 2012ம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவரன ஒலிவியா கல்போ. லியானோர்டோ டி காப்ரியா நாயகனாக நடித்துள்ள படம்தான் தி கிரேட் காட்ஸ்பி. இப்படத்தில் அமிதாப்பும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரிமீயர் ஷோ நியூயார்க்கில் நடந்தது. அதில்தான் மிஸ் யுனிவர்ஸ் ஒலிவியோ செம கலக்கலான டிரஸ்ஸில் வந்திருந்தார்.
மே 8ம் தேதி ஆஸ்துமா நோய் விழிப்புணர்வு தினம்.
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அவர்களை ஆஸ்துமா நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் என்று ஆய்வு ஒன்றின் மூலம் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். சின்னஞ்சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தாக்கும் நோயாக ஆஸ்துமா உள்ளது. தூசு, குப்பை, காற்றுமாசு போன்றவைதான் ஆஸ்துமாவிற்கு காரணமாக கூறப்படுகிறது. நம்முடைய சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் ஆஸ்துமாவில் இருந்து குடும்பத்தை பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஆஸ்துமா நோய் விழிப்புணர்வு தினம் மே 8ம் தேதி உலக அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஆஸ்துமாவினால் ஏற்படும் ஆபத்துக்களையும், அதை தவிர்க்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்வோம்.
ஆஸ்துமா என்பது கிரேக்க வார்த்தையாகும். இந்த நோயை இரண்டாம் நூற்றாண்டில் அரேசியஸ் என்ற மருத்துவர் கண்டுபிடித்தார். இதன் பொருள் மூச்சுவிடுவதற்கு சிரமம் என்பதாகும். மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு கொடிய நோய்களுள் ஆஸ்துமாவும் ஒன்று. மூச்சிறைப்பு நோய் என்று வர்ணிக்கப்படும் ஆஸ்துமா மிகுந்த சிரமத்தை தரக்கூடியது. குளிர்காலங்களில் இந்த நோயின் தாக்கம் இரட்டிப்பாகும். மூச்சுக்குழல் பாதையில் உள்ள மூச்சுக் குழாய்கள் சுருங்கி சுவாசிப்பதற்கு சிரம்படுவதே ஆஸ்துமா. பல்வேறு காரணிகளால் இந்நோய் ஏற்பட்டாலும் பெரும்பான்மையாக கூறப்படும் காரணம் அலர்ஜிதான். உலக அளவில் 10 கோடி பேர் ஆஸ்துமா நோய் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளையும் ஆஸ்துமா நோய் அதிக அளவில் தாக்குகிறது. இந்தியாவில் 10 சதவீத குழந்தைகள் ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டுள்ளனர். 51 சதவீத மக்கள் இந்த பிரச்சனையால் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுப் பொருட்கள் , தூய்மையற்ற காற்று , புகை போன்றவை உள்ளே செல்வதால் திசுக்களில் இருந்து புரோகைடின் , கைமின் போன்ற பொருட்கள் வெளிப்பட்டு மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துக்கின்றன. மூச்சுக்குழாயில் ஏற்படும் அடைப்பு காரணமாக மூச்சு விடுவதில் மனிதர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை தவிர்த்தல் வேண்டும். தூய்மையான காற்றை சுவாசித்தல், நீரை காய்ச்சி குடிக்க வேண்டும், பருத்தி ஆடைகளை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.படுக்கை அறை தலையணைகளில், போர்வைகளில் அலர்ஜி ஏற்படுத்தும் நுண்ணியிரிகள் இருக்கலாம். எனவே அவற்றை அடிக்கடி நன்றாக அலசி, துவைத்து காயப்போட்டு உபயோகிக்கவேண்டும்.
வாக்குவம் கிளீனர் கொண்டோ அல்லது தூசியை நீக்கும் பொருட்களைக் கொண்டோ நன்றாக வீட்டை சுத்தம் செய்வது அவசியம். இதனால் தூசி, அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை வெளியேற்றலாம். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் மூலம் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவே செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பதை தவிர்க்கலாம். அதேபோல் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகரெட் புகை அலர்ஜி ஏற்படுத்தக்கூடியது. எனவே வீட்டில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்தால் புகைப்பதை தவிர்ப்பது நலம். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. குறைந்த பட்சம் 6 மாதம் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கின்றனர் மருத்துவர்கள். எனவே உங்கள் செல்லங்களை ஆஸ்துமா நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். சரியான நேரத்தில் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதும், அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது போன்றவை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயல்முறைகள் ஆகும். எனவே கொடிய நோயான ஆஸ்துமாவில் இருந்து வருங்கால சமுதாயத்தை காக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதும் அவசியமாகும்.
வாக்குவம் கிளீனர் கொண்டோ அல்லது தூசியை நீக்கும் பொருட்களைக் கொண்டோ நன்றாக வீட்டை சுத்தம் செய்வது அவசியம். இதனால் தூசி, அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை வெளியேற்றலாம். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் மூலம் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவே செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பதை தவிர்க்கலாம். அதேபோல் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகரெட் புகை அலர்ஜி ஏற்படுத்தக்கூடியது. எனவே வீட்டில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்தால் புகைப்பதை தவிர்ப்பது நலம். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. குறைந்த பட்சம் 6 மாதம் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கின்றனர் மருத்துவர்கள். எனவே உங்கள் செல்லங்களை ஆஸ்துமா நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். சரியான நேரத்தில் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதும், அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது போன்றவை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயல்முறைகள் ஆகும். எனவே கொடிய நோயான ஆஸ்துமாவில் இருந்து வருங்கால சமுதாயத்தை காக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதும் அவசியமாகும்.
02 May, 2013
ஆமைகளின் வழித்தடத்தில் கடல்வழிகண்ட ஆதித் தமிழர்கள்.
பழந்தமிழர்கள் ஆமைகளின் வழித்தடத்தைப் பின்பற்றி கடல்வழிகளைக்
கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர் என்று
ஒருங்கிணைந்த பெருங்கடல் கலாசார ஆய்வு அறக்கட்டளை தலைவர் சிவ.
பாலசுப்பிரமணி என்ற ஒரிசா பாலு தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மாதாந்திர கருத்தரங்கு எழும்பூர்
தமிழ் வளர்ச்சித் துறை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு
தொல்லியல்துறை ஆணையர் (பொறுப்பு) சீ.வசந்தி தலைமை வகித்தார். இதில்
ஆமைகளின் கடல் வழியில் -கடலோடி தமிழர்களின் தொன்மை" என்ற தலைப்பில் ஒரிசா
பாலு பேசியதாவது:
ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180
நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல்
நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை
சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும்
உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த,
தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
பாறைகளில் மோதினால்
உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக்
கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி
வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள்
கற்றுக் கொண்டனர்.
தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது.
கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு
சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர்
கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம்
நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம்
இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி.
துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது.
இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில்
குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன்
என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில்
வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல்
இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில்,
குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில்
நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன.
பழந்
தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆமைகளே தமிழரின்
கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள்
காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன.
கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக
பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில்
ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த
பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது
ஆராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல்
வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம்
செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன.
பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே
தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல்
நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள்
இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் பாலசுப்பிரமணி.
5 வயது சிறுமிக்கு பாதுகாப்பு இல்லை அம்பானிக்கு இசட் பிரிவா?
ஆரம்பம் முதலே முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு வழங்குவதில் பல
சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், தற்போது ‘ 5 வயது சிறுமி பாதுகாப்பு
இல்லாமல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள். ஆனால், இவருக்கு ஏன் இசட்
பிரிவு பாதுகாப்பு' என மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
எழுப்பியுள்ளது.
சில அச்சுறுத்தலின் எதிரொலியாக, தொழிலதிபர் அம்பானிக்கு இசட் பிரிவு
பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் மத்திய அரசுக்கு ரூ.16 லட்சம்
வரை கட்டணமாக செலுத்துகிறார். இதனை இடதுசாரி கட்சிகள் கடுமையாக கண்டித்து
உள்ள நிலையில், இது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர்
சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய பாதுகாப்பு படை
தவறாக பயன்படுத்தப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக்
கொண்டது. அப்போது நீதிபதி சிங்வி, மத்திய அரசுக்கு சில கேள்விகளை
எழுப்பினார்.அதில் ‘பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறைவான சூழலில் தனிமனிதருக்கு
மத்தியபடை பாதுகாப்பு வழங்குவது ஏன்? பாதுகாப்பு குறைபாடுகளால்தான் 5 வயது
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாள். அப்படி தனிமனிதருக்கு பாதுகாப்பு
வேண்டுமெனில், அவர்கள் தனியாக வாடகை காவலாளிகளை அமைத்து கொள்ளலாம்' என்றும்
கூறினார்.
Subscribe to:
Posts (Atom)