எலுமிச்சை சாறு சாதாரணமாகவே எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் தன்மை நிறைந்தது. அத்தகைய எலுமிச்சை சாற்றினை சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இல்லையெனில் அவை வறட்சியை உண்டாக்கிவிடும். குறிப்பாக, இந்த முறை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும். எனவே பரிசோதித்து பின்னர் செய்வது நல்லது.
வெள்ளரிக்காய் குளிர்ச்சியைத் தரும் பொருட்களில் ஒன்று. மேலும் இது ஒரு ப்ளீச்சிங் பொருளும் கூட. இதனை சாறு எடுத்து, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அழகான சருமத்தைப் பெறலாம்.
ஓட்ஸ் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, வேண்டுமெனில் தண்ணீரையும் சேர்த்து, முகத்தில் தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.
தயிர் சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு, ப்ளீச் செய்வதற்கு தயிர் ஒரு சிறத்த பொருள். அதற்கு தயிரை சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் செய்தால், சருமம் அழகாக இருப்பதோடு, வெள்ளையாக பொலிவோடும் காணப்படும்.
பால் பாலை ஒரு பஞ்சில் நனைத்து, முகத்தில் தடவி, காய வைத்து, கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு ஜொலிக்கும்.
தக்காளி சென்சிட்டிவ் சருமத்திற்கு தக்காளி ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். அதற்கு தக்காளியை அரைத்து, அதனை சருமத்தில் தடவி, காய வைத்து, குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
ஆரஞ்சு தோல் மற்றும் பால் ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து, பொடி செய்து, அதனை பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கருப்பாக இருக்கும் உடலின் பிற பகுதிகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமமும் பொலிவோடு காணப்படும்
.
No comments:
Post a Comment