|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 November, 2018

நம் வாழ்வியலுக்கு ஒவ்வாத அபத்தம் தீபாவளி!


நம் வாழ்வியலுக்கு ஒவ்வாத அபத்தம் தீபாவளி! திகாசங்களில் குறிப்பிடப்படும் அசுரன், சூரன், அரக்கன், வானரம் என்பதெல்லாம் நாம்தான் என்பதையும், ஆரிய இதிகாசங்கள் கொடியவர்களாகவும், கோர வடிவம் உடையவர்களாகவும், கோமாளித்தனம் நிறைஉலகிலேயே தம் இனத்தவந்தவர்களாகவும் சித்தரிப்பது நம்மைதான் என்பதையும், தன் சாவை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம்தான் என்பதையும் உணர்ந்து அவமானம் கொள்வோம்.. 

27 September, 2017

ஹோட்டல்களில் இப்படியும் மோசடி!!



ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின் வர்த்தகச் சந்தையில் மாற்றங்களுக்கும், குழப்பங்களுக்கும் பஞ்சமில்லை. இதன் அமலாக்கத்தின் பின் பல கடைகளில் பல விதமான மோசடிகளும் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த ஒரு மோசடி அனைவருக்கும் ஒரு புரிதலை அளித்துள்ளது.

ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட நாட்களில் ஹோட்டல்களில் செய்யப்படும் மோசடிகள் வெளிவந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஹோட்டல் பில்-இன் மொத்த தொகையை மட்டும் பார்த்துப் பணம் செலுத்து விட்டு வருவது இயல்பாகிவிட்டது. ஆனால் இன்னமும் பல மோசடிகள் நடந்து வருகிறது. புனே நகரில் ஜகதீஷ் என்பவர் ஒரு சிறிய உணவகத்தில் உணவைச் சாப்பிட்டு உள்ளார். பில் வரும் போது அவர் வழக்கத்திற்கு மாறாக ஹோட்டல் பில்லை கவனித்துள்ளார். இதில் ஜிஎஸ்டிக்குப் பதிவு செய்யப்படாத அந்த ஹோட்டல் அனைத்து வாடிக்கையாளர்களிடம் இருந்தும் ஜிஎஸ்டி வரி வசூலித்து வருகிறதை அவர் கண்டுகொண்டார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தான் சாப்பிட்ட உணவிற்கான தொகை 140 ரூபாயாக இருந்த நிலையில், ஜிஎஸ்டி வரியான 18 சதவீதத்துடன் 25 ரூபாய் சேர்த்து 165 ரூபாயை ஹோட்டல் நிர்வாகக் கோரியுள்ளது. ஜிஎஸ்டி வசூலிக்கும் அனைத்து நிறுவனங்களும், வர்த்தக ஸ்தாபனங்களும் தங்களது பில்-இல் ஜிஎஸ்டி பதிவு எண்ணைத் தெரிவிக்க வேண்டும். இதன் பிடி ஜகதீஷ் பெற்ற ஹோட்டல் பில்-இல் ஜிஎஸ்டி எண்ணுக்குத் தாங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நிர்வாகம் தெரிவித்திருந்தது. பதவு செய்வதற்கு முன்பாக எப்படி வாடிக்கையாளர்களிடம் இருந்து நீங்கள் வரி வசூலிக்கலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.  

இதன் மூலம் ஹோட்டல் நிர்வாகம் ஜகதீஷ் அவர்களின் உணவு மீது விதிக்கப்பட்டு இருந்த ஜிஎஸ்டி வரியை ஹோட்டல் நிர்வாகம் ரத்துச் செய்து உணவுக்கு உண்டான பணத்தைப் பெற்றும் பெற்றுக்கொண்டது. இதுகுறித்த ஜகதீஷ்-இன் பேஸ்புக் பதவு இப்பகுதி மக்களுக்கு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வாக அமைந்துள்ளது.

30 March, 2017

முதலாவதாக ஆதரவு கரம் நீட்டுவோம்...!

எங்கள் விவசாயிகள் தவிக்குகிறார்கள்... போராடுகிறார்கள்...
மத்திய அரசு ஒட்டு அரசியல் செய்கிறது...
மாநில அரசு ஒரு குற்றவாளி குடும்பத்தினர் கையில் அரசாங்கத்தை ஒப்படைக்க முழு கவனம் செலுத்துகிறது... நாம் என்ன செய்ய போகிறோம்???
முதலாவதாக ஆதரவு கரம் நீட்டுவோம்...

11 March, 2017

ஐஸ்வர்யாதனுஸ் நடனம்!


இதயம் பலவீனமானவங்க,
கர்ப்பின பெண்கள், குழந்தைகள் இந்த ஆட்டத்தை பாக்காதீங்க

10 March, 2017

உலகின் குப்பைத்தொட்டி இந்தியா இந்தியாவின் குப்பைத்தொட்டி தமிழ்நாடு!


நம் நாடு இன்னும் முன்னேறாமல் இ௫க்க இதுவே சான்று!

ஐ.நா-வில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரதநாட்டியத்தையே கொலை பண்ணி௫ச்சு ,ஒட்டு மொத்த உலக நாட்டையும் அதிர்ச்சிகுள்ளாக்கிய நடனம்,நாட்டில் எவ்வளவோ திறமைசாலிகள் உள்ளன நம் நாடு இன்னும் முன்னேறாமல் இ௫க்க இதுவே சான்று ,இந்தியா ஒவ்வொரு விசயத்திலும் திறமைசாலிகளை பயன்படுத்தாமல் இது மாதிரி அரசியல் பண்ணுறதின் விளைவுதாங்கள் இது

05 March, 2017

விழித்தெழு தமிழா...

என் தமிழகத்தை கூறுபோட நினைக்கும் ஜனநாயக அற்ற அரசியல்....

இலங்கையில் தமிழீழம் கேட்டு போராடியதுபோல்,

பாரதத்தில் தனிநாடு தமிழகநாடாக கேட்கும் சூழலை உருவாக்கி கொண்டிருக்கிறது,
திராவிட கட்சிகளும் தேசிய கட்சிகளும்...

எத்தனை பாரபட்சங்கள் தமிழகத்தில் 
நம்மை நிம்மதியாக இருக்க விடாமல் எத்தனை சதிவேலை நடக்கிறது...

பாரதத்தை கார்பொரேட் கம்பெனிகளுக்கு விற்று விட்டனர்...

எதிர்த்து குரல் கொடுப்பது தமிழகத்தில் மட்டுமே...

அதை எப்படி அரசியல் ஆதாயம் காண்கிறது திராவிட கட்சிகளும் தேசிய கட்சிகளும்...

இங்கே மக்கள் ஆட்சி என்று கூறி மக்களை அடிமை படுத்தும் அரசியல் ஆட்டம் நடக்கிறது...

உலகத்தையே ஆளுமை செய்த தமிழனை அடக்கி ஆளத் துடிக்கிறது...

தமிழனின் குருதியில் கலந்தது அவன் வீரம் அதை மீண்டும் எழவைத்து விடாதீர்கள்...

அதை தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை...

தமிழா உன்னை அழிக்க துடிக்கும் கேடுகெட்ட அரசியலுக்கும் கார்பொரேட் கம்பெனிகளுக்கும் விளங்க வை தமிழன் யார் என்று.....!!!!

திராவிட கட்சிகளையும் தேசிய கட்சிகளையும் தமிழகத்தை விட்டு விரட்டி அடி...
விழித்தெழு தமிழா...
உன் விடியலை தேடி....

இவன் நான் தமிழன் ரிஷி

ஜல்லிகட்டுல குலைக்காத நாய்...நெடுவாசளுக்கு ஊலை இடுது...??

சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளைக்காரன் ஷீவை நக்கி பிழைத்த கூட்டம் எல்லாம் எங்களை தேச நலனில் அக்கரை இல்லாதவர் என்று கூற தகுதி இருக்கிறதா?

உங்கள் பார்வையில் நாங்கள் தேச விரோதியாக தெரிகிரோம் என்றால் நாங்கள் அதை பெருமையாக தான் கருத வேண்டும். 
எங்கள் பார்வையில் மக்கள் தான் தேசம். மக்களின் நலனில் உண்மையான அக்கரை கொண்டவர்களே தேசப்பற்றாளர்கள்.


27 February, 2017

விழி தமிழா...!


தமிழகத்தின் வளங்கள் எண்ணற்றது. அதில் முக்கியமும் முதன்மையானது நீர். அதிகளவில் தேவைப்படும் தமிழக குடிநீர் தேவையை கடல் நீரை சுத்திகரித்து செய்து கொள்ளலாம் (தமிழக அரசின் அம்மா மினரல் வாட்டர் கடல் நீர் சுத்திகரிப்பில் பெறப்படுவது தான்). மண்ணிற்கு தேவையான சத்துக்கள் ஏதும் இல்லா இந்த நீரை உழவிற்கு பயன்படுத்தவே முடியாது. புள்ளிவிவரப்படி தமிழகத்தில் ஆற்று நீர் குடிநீர் தேவையை விட உழவிற்கே அதிகம் பயன்படுத்துகிறோம். அதற்காகத்தான் காவிரி நீர் பங்கீட்டிற்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

1972-73ல் காவிரிச்சிக்கல் தமிழகத்தில் பூதாகாரமாய் தலைதூக்கவே 1974ல் காவிரிப் பாசன ஆணையம் முன்னெடுக்கப்பட்டு 1976 அன்றைய மத்திய நீர்ப்பாசன அமைச்சர் ஜெகஜீவன்ராமின் தலைமையில் வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் குடகு மலைப் பகுதியில் (காவிரி உற்பத்தியாகும் பகுதி) ஹிராங்கினி அணையை சத்தமில்லாமல் கட்டி முடித்தது கர்நாடகம். இதனை எதிர்த்து 1986ல் தஞ்சை உழவர் சங்கங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழக்கு தொடுத்தனர். இந்நிலையில் தான் உழவு உள்ள வரை தமிழகம் தண்ணீர் கேட்டுக் கொண்டே தான் இருக்கும். தமிழகத்தை உழவிலிருந்து வெளியேற்றிவிட்டால் மாநில நீர்த்தேவை குறையும் என முடிவெடுத்து மத்திய அரசை அமைதியாய் அனுகியது கர்நாடக அரசு. தேசிய கட்சிகள் கோலோச்சும் கர்நாடகாவின் இத்திட்டத்திற்கு செவிசாய்த்த மத்திய அரசு, 1980களின் இறுதியில் தமிழகத்தின் நெற்களஞ்சிய மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க ஆய்வுகள் மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது (இதனை தஞ்சை பூர்வ உழவர்களைக் கேட்டால் சொல்வர்). ஆனால் இதனை நேரடியாக சொல்லாமல் மண்ணெண்ணை குழாய் அமைக்க வேண்டி ஆய்வு செய்யப்படுகிறதென ஆரம்பித்தது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. தமிழக அரசோ கூட்டணி தேசியக் கட்சி சொன்னவுடன் திட்டத்தை படித்துக்கூட பார்க்காமல் ஒப்புதல் வழங்கி மீத்தேனுக்கு பச்சைக் கொடி காட்டியது. இதில் கோரப்பட்ட டெண்டர் பத்தில் ஐந்து நிறுவனங்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவை. இப்போது நெடுவாசலில் போடப்பட்டிருக்கும் ஜெம் லேப் நிறுவனம் கூட கர்நாடக பாஜ. MP மறைந்த திரு.மல்லிகார்சுனப்பாவுடையது.
விழி தமிழா. அழிவுத் திட்டங்களை எதிர்த்து நில். போராடு.
போராடாத எந்த ஒரு இனமும் விடுதலை அடைந்ததாக சரித்திரம் இல்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...