உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளில் தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா அணி, உலக சாதனை படைத்தது. கொரியா
நாட்டின் டேகு நகரில் 13வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது.
இதன் கடைசி நாளில்ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டபந்தயம்
நடத்தப்பட்டது.
இதில், உலகின் வேகமான மனிதன் என அழைக்கப்படும் உசேன் போல்ட்டின் ஜமைக்கா அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டனர். போல்ட் உடன், நெஸ்டா கார்டர், மைக்கேல் பிராடர், யோகன் பிளேக் ஆகியோர் பங்கேற்றனர்.
துவக்க வீரர் முதல் சிறப்பாக செயல்பட்ட ஜமைக்கா அணியினர், 400 மீட்டர் தூரத்தை 37.04 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தனர். இதன்மூலம், அதே அணியினர் 2008ம் ஆண்டில் படைத்த 37.10 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றனர்.
போட்டிகளின் முடிவில், பதக்க பட்டியலில் 12 தங்கம் வென்ற அமெரிக்க முதலிடத்தை பிடித்தது. 8 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட மொத்தம் 25 பதக்கங்களை பெற்றது. 2வது இடத்தை 9 தங்கம் வென்ற ரஷ்யாவும், 7 தங்கம் பெற்ற கென்யா 3வது இடத்தையும், 4 தங்கம் பெற்று சாதனை படைத்த ஜமைக்கா 4வது இடத்தையும் பெற்றது. இந்தியாவிற்கு ஒரு பதக்கமும் கிடைக்கவில்லை.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில், ஒவ்வொரு நாட்டின் வீரர்களும் தங்கள் தேசியகொடியை ஏந்தி மைதானத்தை சுற்றி வந்து, ரசிகர்களின் உற்சாகமான கைதட்டல்களை பெற்றனர்.

No comments:
Post a Comment