|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2012

எல்லோரும் ஒண்ணா சேர்ந்து ஏன் இந்த திடிர் முடிவு?


காங்கிரசில் இருந்து ஏதாவது க்ரீன் சிக்னல் கிடைச்சுதா என்ன??

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் ஞானதேசிகன்?

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்: திருமாவளவன்?

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் ராமதாஸ்?


இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் கலைஞர் 

இவர்களின் ஒரே நாளில் ஒட்டுமொத்த குரல் நம்மை சற்று திகைப்படைய வைக்கிறது...! 

திங்கட்கிழமையன்று துவங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதேப்போல, நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கைப் பிரச்சினையை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...