World’s tallest drop ride, 415 feet high
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
30 August, 2013
ஹைதராபாத்திலிருந்து அஞ்சலி
அன்புடையீர் வணக்கம்... கற்றது தமிழ் படம் துவங்கி இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் என்னை ஆதரித்து ஊக்கமளித்த அனைத்து ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி... சமீபத்தில் நான் சுந்தர்.C இயக்கத்தில் விஷாலுடன் நடித்த மதகஜராஜா படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாகவும், படம் சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும் செய்திகளும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அது முற்றிலும் தவறான தகவல் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.இனி வரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தேவைப்படும் எனில் என்னுடைய newsfromanjali@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! வணக்கம்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலைக்கு ஆர்டர் 04254 252 022
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 'சிறுமுகைப்புதூர் ஸ்ரீ
ராமலிங்க சவுடாம்பிகை நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும்
விற்பனை சங்கம்' செயல்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும்
கைத்தறி பட்டுச்சேலைகளின் அழகிய வேலைப்பாடுகளுக்கு, இரண்டு
முறை "தேசிய விருது' கிடைத்துள்ளது. தற்போது அங்கு உற்பத்தியும்
சேலைகளில் மணமக்களின் உருவத்தை அழகாக நெய்து தருகிறார்கள்.
சேலை நெய்பவர்களின் கைக்குள் எத்தனை கலைநயம்
ஒளிந்திருக்கிறதோ! புகழ் பெற்ற கடைகள் தங்கள் சொந்த செலவில்
விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் இதுபோன்ற நெசவாளர்களுக்கு
விளம்பரம் செய்ய போதிய பணம் இல்லை இருந்தும் மக்கள் தானாகவே
முன்வந்து விளம்பரம் செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களின்.
பெருமைக்குரிய விசயம். மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு
ஆர்டர் தர விரும்புவோர், 04254 252 022 என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.
29 August, 2013
'Idli, sambhar most nutritious breakfast'
dietitian and coordinator at Academy of Clinical Nutrition, Madras Medical College.
3 இட்லி, ஒரு கப் சாம்பார், ஒரு டம்ப்ளர் ஃபில்டர் காபி சென்னை
மக்களின் பாரம்பரிய காலை உணவு மட்டுமில்லை இது பிற மெட்ரோக்களில் உள்ள
மக்களின் உணவோடு ஒப்பிடுகையில் மிகவும் சத்தானது என்று ஆய்வில் தெரிய
வந்துள்ளது.
இந்தியா பிரேக்பாஸ்ட் ஹேபிட்ஸ் ஸ்டடி என்ற பெயரில் சென்னை, மும்பை, டெல்லி
மற்றும் கொல்கத்தா ஆகிய 4 மெட்ரோக்களில் சத்தான காலை உணவு குறித்து ஒரு
கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
இந்த கணக்கெடுப்பில் 8 முதல் 40 வயது வரை உள்ள 3,600 பேர் கலந்து கொண்டனர்.
அந்த தகவலை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது.
27 August, 2013
ஆய கலைகள் 64
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
அமைச்சராவதற்காக "காக்கா' பிடித்தேன்.
அகமது படேல், சோனியா, ராகுல் ஆகியோரை காக்கா பிடித்து தான், அமைச்சர்
பதவியை பெற்றேன்' என, ஜார்க்கண்ட் மாநில அமைச்சர், யோகேந்திர சாகு
தெரிவித்துள்ளது, "டிவி' சேனல் நடத்திய, "ஸ்டிங்' ஆபரேஷன் மூலம்,
வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காங்., கூட்டணி அரசு,
சமீபத்தில் பதவியேற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர், ஹேமந்த்
சோரன், முதல்வராக பதவி வகிக்கிறார். காங்கிரசைச் சேர்ந்த, ஐந்து பேர்,
அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில், விவசாய அமைச்சராக உள்ள, யோகேந்திர
சாகுவும், ஒருவர்."அமைச்சர் பதவியை பெற்றது எப்படி' என்பது குறித்து, ஒரு,
"டிவி' சேனல் நிறுவனம், இவரிடம், ரகசியமாக தகவல் சேகரித்து (ஸ்டிங்
ஆபரேஷன்), அதை படம் பிடித்தது. அந்த காட்சி, தற்போது ஒளி பரப்பாகி,
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், யோகேந்திர சாகு,
கூறியுள்ளதாவது:
ஜார்க்கண்ட் அரசில், காங்கிரசும் பங்கேற்க போவதாக தகவல்
வெளியானதை அடுத்து, என் ஆதரவாளர்களுடன் டில்லி சென்றேன். காங்., சார்பில்,
அமைச்சராகும் நபர்களின் பட்டியலில், என் பெயர் இல்லை. 15 நாட்கள்
டில்லியில் முகாமிட்டேன்.அமைச்சர் பதவியை பெறுவதற்கான நடவடிக்கைகளில்
இறங்கினேன். காங்., தலைவர் சோனியா, அவரின் அரசியல் ஆலோசகர் அகமது படேல்,
காங்., துணை தலைவர் ராகுல், ஆகியோர் மூலமாக, காய் நகர்த்தினேன்.எந்த வகையான
நடவடிக்கையில் ஈடுபட்டேன் என்பதை தற்போது கூற முடியாது. அதெல்லாம்,
அரசியல் விவகாரம். கடைசியில், நான் நினைத்தது நடந்தது; எனக்கு அமைச்சர்
பதவி கிடைத்தது.இவ்வாறு, சாகு, அதில் கூறிஉள்ளார். முதல்
முறையல்ல:யோகேந்திர சாகு, இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது, இது முதல்
முறையல்ல. ஏற்கனவே, ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளிப்பதற்காக, லஞ்சம் வாங்க
விரும்புவதாக, அவர் தெரிவித்துஇருந்தார். இதுவும், ஸ்டிங் ஆபரேஷன் மூலம்,
வெளிச்சத்துக்கு வந்து
தங்கம் வென்ற வீராங்கனைகள் வரவேற்க ஆள் இல்லை!
போலந்து நாட்டில் நடந்த வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகளை விமான நிலையத்தில் வரவேற்க ஆள்
யாரும் இல்லாமல் போயினர். தங்கம் வென்ற இவர்களுக்கு அவமதிப்பு நடந்துள்ளதாக
வில்வித்தை ஆர்வலர்கள் கவலைப்பட்டனர்.கடந்த வாரத்தில் போலந்து ரோகிளவ் நகரில் உலக கோப்பை வில்வித்தை தொடரில்
பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பாம்பைலாதேவி, ரிமிலி
ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் தென்கொரிய வீராங்கனைகளை 219 - 215 என்ற
கணக்கில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற வீராங்கனைகள் இன்று டில்லி திரும்பினர், இவர்களை வரவேற்க
விளையாட்டு அமைப்பினர் யாரும் வரவில்லை. எவ்வித வரவேற்பும் இல்லை . ஆளோடு ,
ஆளாக வந்து சேர்ந்தனர். சம்பந்தப்பட்ட துறை சங்கத்தினரோ அல்லது மாநில அரசு
தரப்பிலோ யாரும் வரவில்லை. இந்தியாவுக்காக தங்கம் வென்ற வீராங்கனைகள்
புறக்கணிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
19 August, 2013
திருவள்ளுவர் அறியாத உண்மைகள்...!
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து
இருக்கிறார்கள். திருவள்ளுவரைபற்றிய
இரகசியங்கள் இதோ.திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக்
குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார்
என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும்
சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும்
சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த
காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த
ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து
பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண
மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு
செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக
இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற
கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம்
கொண்டாடுகிறார்கள்.
பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று
இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள்
இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட
கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி
இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.
சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும்
இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி
அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்'
என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற
செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற
மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும்
உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும்
அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப்
பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும்
இல்லாமல் இருப்பது வியப்புதான்.
அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி
பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும்
எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ
எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார்.
இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும்
பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித
நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே
அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன. இவர் சிந்தனைகள் உலக
மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே
தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.
திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட
மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான
தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும்
இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில
கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற
நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில்
ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும்
இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும்
புரிந்து கொள்ள முடிகிறது.சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல
குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும்
வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில்
ஒரு பாடல்:
“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று
சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக்,
யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து
விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று
வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார்
என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும்,
திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக
சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர
நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல்
கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை
உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும்
உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள்
அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.
தமிழர்கள் சொரணை அற்றுப் போய் விட்டார்களா? சோற்றால் அடித்த பிண்டங்களா?
மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
ஈழத்தின் விடுதலைக்காக ஈடு சொல்ல முடியாத வீரச்சமர் புரிந்து, உன்னதமான உயிர்த்தியாகம் செய்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி, அபாண்டமான பழி சுமத்தி, நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க, சிங்கள அரசு பல முனைகளிலும் தனது அக்கிரமச் செயலை முடுக்கி விட்டு உள்ளது. எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்தே ஈழத்தமிழருக்கு வஞ்சகமும், துரோகமும் செய்த இந்தியாவின் காங்கிரஸ் தலைமை, 2004 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைத் தன் தலைமையில் அமைத்த நாளில் இருந்து, விடுதலைப்புலிகளை அழிக்க, சிங்கள அரசோடு இணைந்து செயல்பட்டது. முப்படைத் தளவாடங்களையும் தந்தது
யுத்தத்தை முழுக்க முழுக்க இயக்கியது. அந்த முயற்சியில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்தனர். ஈழத்தமிழர் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளிதான் இந்திய அரசு. அதனால்தான் உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவவும், சிங்கள அரசைப் பாதுகாக்கவும் திட்டமிட்டு, தற்போது காமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறது. இதயங்களில் இரத்தத்தைக் கொட்டச் செய்யும், தமிழ் இனக்கொலைக் காட்சிகளை, சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டபோதுதான் நடந்த கொடூரம் உலகுக்குத் தெரிந்தது. குறிப்பாக, எட்டு ஈழத் தமிழ் இளைஞர்கள் அம்மணமாக, கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியும், இசைப்பிரியா மிகக் கொடூரமாக இராணுவத்தால் கொல்லப்பட்ட காட்சியும், மனித மனங்களை உலுக்கின. ஈழத்தில் நடத்திய படுகொலைகளை மறைப்பதற்காக சிங்கள அரசும், செய்த துரோகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்திய அரசும், திட்டமிட்டு, இந்தியாவில் உள்ள ஒரு திரைப்பட நிறுவனத்தைப் பயன்படுத்தித் தயாரித்த படம்தான் மெட்ராஸ் கஃபே எனும் திரைப்படம் ஆகும்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், பிரதானப் பாத்திரத்தில் நடித்துள்ளவனுமான, கேரளத்தைச் சேர்ந்த ஜான் ஆபிரகாம், ரகசியமாக கொடியவன் மகிந்த ராஜபக்சேயை, இருமுறை சந்தித்து உள்ளான். இலங்கையிலும் படப்பிடிப்பு நடத்திவிட்டு, தற்போது, இல்லை என்று மறுக்கவும் செய்கிறான். இந்தப் படத்தை, சூஜித் சர்கார் என்பவன் இயக்கி உள்ளான். 1987 இல், இந்திய அமைதிப்படை, இலங்கைக்குச் சென்றதைப் பின்புலமாகச் சித்தரித்து, இப்படத்தை எடுத்து உள்ளனர். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைக் கொடூரமானவர்களாகவும், இந்திய இராணுவத்தினர் பலரை அவர்கள் கொன்றதாகவும், அமைதிப்படை இந்தியா திரும்பிய பின்னர், இந்தியாவின் உளவு நிறுவனமான ரா அமைப்பின் அதிகாரியாக, கேரளத்தைச் சேர்ந்தவனாக, இலங்கைக்கு படத்தின் கதாநாயகன் ஜான் ஆபிரகாம் சென்று, அங்கு உள்ள நிலைமையை அறிவதாகவும், பின்னர் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதாகவும், இப்படம் சித்தரிக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை, பாஸ்கரன் என்ற பெயரில், படத்தில் ஒரு பாத்திரமாக்கி, ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதே, அன்றைய ராஜீவ் காந்தி அரசு, ஈழத்தமிழர்களுக்குச் செய்த மன்னிக்க முடியாத, துரோகம் ஆகும்.
நயவஞ்சகமாகப் பொய் சொல்லி, தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு வந்து, அவரது விருப்பத்துக்கு எதிராக, கட்டாயப்படுத்தித் திணித்த ஒப்பந்தம்தான் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்பதை, ஆகஸ்ட் 4 ஆம் நாள் சுதுமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். ‘பிரபாகரன் தலைக்குப் பத்து இலட்சம் பரிசு' என்று இந்திய இராணுவ அமைச்சர் கே.சி.பந்த் அருகில் இருக்க, ஜெயவர்த்தனா அறிவித்தான். தியாக தீபம் திலீபன், துளி நீரும் பருகாமல் உயிர்ப்பலி ஆனதற்கும் இந்திய அரசே காரணம். குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட, 12 புலிப்படைத் தளபதிகள், நச்சுக்குப்பி கடித்து மடிவதற்கும், இந்திய அரசே காரணம். 1987 அக்டோபரில், பிரபாகரனைக் கொலை செய்ய, இந்திய இராணுவ கமாண்டோக்களை ஏவினர். புலிகளின் செய்தித்தாள் அலுவலகங்கள், தொலைக்காட்சி அலுவலகத்தை, இந்திய இராணுவம் தாக்கி அழித்தது. எண்ணற்ற தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தனர்.
யாழ்ப்பாண மருத்துவமனையின் மீது குண்டுகளை வீசினர். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்தனர். ‘தமிழர்களின் சடலங்கள், சாலை ஓரங்களில் கிடக்கின்றன; நாய் நரிகளும், காக்கை கழுகுகளும் தின்னுகின்றன' என்று, லண்டனில் இருந்து வெளியாகின்ற கார்டியன் பத்திரிகை தெரிவித்தது. இந்திய இராணுவத்தின் இக்கோரத் தாண்டவத்தைப் பற்றி, ஒரு வினாடி காட்சி கூட இத்திரைப்படத்தில் கிடையாது. இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா (சுஹறு), பிரபாகரனைக் கொலை செய்யப் பலமுறை திட்டமிட்டது. அதற்காக, மாத்தையா, கிருபன் போன்ற துரோகிகளைப் பயன்படுத்தியது. போரை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தைக்குத் தான் தயார் என்றும், பிரபாகரன் அவர்கள், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய எட்டுக் கடிதங்கள் எழுதியும், அவற்றை ராஜீவ் காந்தி குப்பைத் தொட்டியில் போட்டார். இந்திய உளவு நிறுவனம் ரா , விடுதலைப்புலிகளின் முன்னாள் யாழ் தளபதி ஜானியை, சென்னையில் இருந்து வன்னிக்காடுகளுக்கு அருகில் சேர்த்து, பிரபாகரனைச் சந்தித்து வருமாறு அனுப்பி வைத்தது. அவர் திரும்பி வருகையில், இந்திய இராணுவமே அவரைச் சுட்டுக் கொன்றது. இப்படி ஒரு துரோகத்தை உலகில் எந்த நாடும் செய்தது இல்லை. 1992 யாழ்ப்பாணத் தளபதி கிட்டுவை, இந்தியக் கடல் எல்லையில் இருந்து பலநூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால், பன்னாட்டுக் கடல் பரப்பில், இந்தியக் கடற்படை முற்றுகை இட்டுத் தாக்கிக் கொன்றது.
இந்திய இராணுவம் ஈழத்தில் இழைத்த கொடுமைகளை, மனதில் ஆறாத இரணமாகிப் போன ஈழத்தமிழர் துயரத்தை, இந்திய அரசின் துரோகத்தை, நான் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் முன்னிலையிலேயே, நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டாகப் பதிவு செய்து இருக்கிறேன். 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சோனியா காந்தி இயக்குகின்ற காங்கிரÞ தலைமையிலான மத்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பெருந்துரோகத்தால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த துரோகத்தை மறைக்கவும், கொடியவன் சிங்கள அரசுக்குத் தொடர்ந்து உதவவும், இலங்கை-இந்திய அரசுகளின் திட்டமிட்ட ஏற்பாடுதான், ஜான் ஆபிரகாமின் மெட்ராஸ் கஃபே திரைப்படம் ஆகும். என்ன கொழுப்பு இருந்தால், நம்மை யார் என்ன கேட்க முடியும் என்ற திமிர் இருந்தால், படத்துக்கு ‘மெட்ராஸ் கஃபே' என்று பெயர் சூட்டுவான்? ஈழத்தமிழர்களுக்குப் பெருங்கேடு செய்த ஜே.என். தீட்சித், இந்திய அரசின் துரோகத்துக்குக் ஆலோசனைகள் கூறிய எம்.கே. நாராயணன், சிவசங்கர மேனன், கொடியவன் ராஜபக்சேக்கு ஆலோசகரான சுதீஷ் நம்பியார் போல, கேரள மண்ணில் இருந்து மற்றொருவன் ஜான் ஆபிரகாம். மெட்ராஸ் கஃபே திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு, இந்திய அரசும், சிங்கள அரசும், பெருமளவுக்கு உதவி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
1984 இல், டெல்லியில் நடைபெற்ற பிரதமர் இந்திரா படுகொலையைப் பின்புலமாகக் கொண்டு, சீக்கிய இன மக்களை இழிவுபடுத்தித் திரைப்படம் தயாரிக்கும் துணிச்சல், பாலிவுட் திரை உலகுக்கு உண்டா? அப்படி ஒரு படம் தயாரித்து, பஞ்சாபில் திரையிட முனைவானா? தமிழர்கள் சொரணை அற்றுப் போய் விட்டார்களா? சோற்றால் அடித்த பிண்டங்களா? தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள், இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோது, நெஞ்சு கொதித்ததால்தான், கொழுந்து விட்டு எரிந்த மரண நெருப்புக்கு, முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்கள், தங்கள் உயிர்களைப் பலியிட்டனர். தமிழனுக்கு நீதி கேட்டு நாம் போராடுகிறோம். நீதியை அழிக்க, வல்லாண்மை சக்திகள், வேகமாக வேலை செய்கின்றன. இந்தக் கூட்டுச் சதியை, தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலக நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இப்படம் திரையிடப்பட்டாலும், அங்கு உள்ள தமிழர்கள், தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 23 ஆம் தேதி படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திரைப்படத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும். இதனை மீறி படம் திரையிடப்பட்டால், மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தடுப்பதற்கு அறப்போர் நடத்திட வேண்டும்! தமிழகத்தில் திரையிடுவதற்கு, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது; திரை அரங்குகளின் உரிமையாளர்கள் திரையிடக் கூடாது என வேண்டுகிறேன். தமிழகத் திரை உலகத்தினர், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையிடுவதைத் தடுப்பதற்கு முன்வர வேண்டுகிறேன். இதற்கு மேலும் இப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுமானால், அதனைத் தடுப்பதற்கு, திரை அரங்குகளை முற்றுகை இடும் அறப்போரை நடத்துவோம் என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
18 August, 2013
பகத் சிங் தியாகி இல்லையாம்
மண்ணு முட்டி மோகன் அரசு சொல்லுது
நாட்டுக்காக உயிர் நீத்த பகத் சிங் தியாகியா, இல்லையா என்பது குறித்து மத்திய அரசிடம் தகவல் இல்லை என்றாலும் கூட பகத்சிங்கின் தீரத்தையும், தியாகத்தையும், யாரும் சந்தேகப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். வெள்ளையர்களுக்காகப் போராடி தனது இன்னுயிரை தூக்குக் கயிற்றிடம் கொடுத்து வீர மரணம் அடைந்தவர் பகத்சிங். ஆனால் அவருக்கு வீர மரணம் அடைந்தவர் என்ற அடைமொழியைக் கொடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக கேட்கப்பட்ட ஆர்.டி.ஐ. கேள்விக்கு, பகத் சிங்குக்கு தியாகி அடைமொழி தரப்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
மேலும் அவருக்கு அப்படி ஒரு பட்டம் தரப்பட்டதா என்ற தகவலும் தங்களிடம் இல்லை என்றும் கூறியுள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்குகையில், ஆவணங்களை வைத்துத்தான் பகத்சிங்கின் வீரத்தை பிறர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அவரது தியாகம், தீரம் வரலாறு அறிந்தது. பகத்சிங்கின் தியாகத்தையும், தீரத்தையும், வீர மரணத்தையும் யாரும் கேள்வி கேட்க முடியாது. பகத்சிங் குறித்த இந்த விவகாரம் நாட்டு மக்கள் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. நமது தியாகிகளுக்கும், நாட்டுக்காகப் போராடியவர்களுக்கும் நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். நாட்டுக்காக வீரத் தியாகம் செய்தவர் பகத்சிங் என்பது உண்மை, வரலாறு. அதை ஆவணத்தில் சொல்லித்தான் அறிய வேண்டும் என்பதில்லை. நமது தேசிய பாரம்பரியத்தில், வீரத் தியாக வரலாற்றில் பகத்சிங்கும் ஒரு அங்கம் என்று அவர் விளக்கியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இதுபோன்ற சர்ச்சையான விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சர்ச்சைகளை ஏற்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதனால் பகத்சிங் மற்றும் மற்ற தியாகிகளுக்கு அவதூறு ஏற்படுவதை நாம் உணர வேண்டும் என்றார். இதற்கிடையே, பகத்சிங்குக்கு வீரத் தியாகி என்ற அடைமொழியை வழங்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தப் போவதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.
16 August, 2013
கசப்பான உண்மைகள்!!
1.அத்தியாவசிய தேவையான அரிசியின்
விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால்
சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!
2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசி
யின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால்
பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று
ரூபாய்..!!
3.வங்கிகளில் வாகனக்
கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால்
கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!
4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில்,
பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி
நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு
வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!
5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான
பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய
செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில்
பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு
நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய
செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!
6. அணியும் ஆடைகளும், காலணிகளும்
குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன.
ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும்
நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!
7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc
இவையெல்லாம் செயற்கையான
இரசாயனப்பொருட்களால்
தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும்
நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில்
(லெமனில்) தயாரிக்கப்படுவதாக
சொல்லப்படுகிறது..!!
8.மொத்தமாகப் பள்ளிகளையும்,
கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு,
வீதிக்குவீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது.
சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று
கல்லூரிகளை வைத்து வியாபாரம்
நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9.கோதுமைக்கு வரியில்லை. அது
விளைபொருள். கோதுமையை மாவாகத்
திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை
சப்பாத்தியாக செய்து விற்றால்
வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக்,
பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!
10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள்
அனைவருக்கும் உண்டு. ஆனால்
பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில்
செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம்
இல்லை..!!!
11.குழந்தைத் தொழிலாளர்களை
ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால்
தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும்
சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை
மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!
13 August, 2013
சென்னை ஒரு ஊராய்யா?
நாமதான் சொல்லணும்...மரியாதை இல்லாத பேச்சு,நெருக்கடியான
போக்குவரத்து,சுகாதாரமில்லாத குடியிருப்பு,குடிதண்ணீருக்கே
தட்டுப்பாடு,எதைத்தொட்டாலும் அதிக காசு,எப்போதும் பரபரப்பான சூழல் என்றுள்ள
உங்க சென்னை ஒரு ஊராய்யா? என்று வெளியூர்காரர்கள் கேட்கத்தான்
செய்வார்கள்.அதற்காக சென்னையை விட்டு கொடுக்கமுடியுமா,வருகின்ற 22/8/13
ந்தேதி சென்னை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நம்ம ஊரு ரொம்ப நல்ல ஊரு
என்று அச்சடிக்கப்பட்ட டிசர்ட்டுகள் நேற்று சென்னையில் விற்பனைக்கு
அறிமுகம் செய்யப்பட்டது.
பேய்கள் இருப்பதை கண்டுபிடிக்க மொபைல் அப்ளிகேஷன்
தொழில்நுட்பம் என்பது ஒரு வகையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஒன்று
தான். ஆனால் இப்பொழுது இதிலும் மூட நம்பிக்கைகள் வந்துள்ளன. பேய்கள்
இருப்பதை கண்டுபிடிக்க மொபைல் அப்ளிகேஷன் வந்துள்ளது.
ஐபோனில் பயன்படுத்தப்படும் வகையில் உள்ள இந்த மொபைல் அப்ளிகேஷனை, ரோஜெர்
பின்ஜெல்டன் மற்றும் ஜில் பெய்ட்ஸ் என்பவர்கள் உருவாக்கியுள்ளனர். உங்கள்
சுற்றுபுறத்தில் உள்ள எலமென்ட்களை வைத்து இந்த அப்ளிகேஷன் செயல்படும்.
இந்த மொபைல் அப்ளிகேஷன் பேய்கள் மற்றும் ஆவிகள் இருப்பதை கண்டுபிடித்து
உங்கள் போன்களுக்கு அதை பற்றிய தகவலை மெசேஜ் அனுப்பும். இந்த மெசேஜ்
பேய்கள் மற்றும் ஆவிகளின் எனர்ஜியை சித்தரிக்கும் வார்த்தையாக வரும்.
உதாரணமாக பிங்கர்ஸ், சீக்ரெட்ஸ், ஸ்ட்ரைசினைன், எலிபேன்டியாசிஸ் (fingers
or secrets to strychnine or elephantiasis) என வரலாம். ஒரு சிலருக்கு
கஷின் ஷேவ், கிராண்ட் பாதர், டைனிங் ரூம், ரயில் ரோட் (Cousin save,
resourceful grandfather, read some. Dining room, garters, shallow,
around railroad,) என மெசேஜ்கள் வந்துள்ளதாம்.
12 August, 2013
Subscribe to:
Posts (Atom)