ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
14 November, 2017
27 September, 2017
ஹோட்டல்களில் இப்படியும் மோசடி!!
ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின் வர்த்தகச் சந்தையில் மாற்றங்களுக்கும், குழப்பங்களுக்கும் பஞ்சமில்லை. இதன் அமலாக்கத்தின் பின் பல கடைகளில் பல விதமான மோசடிகளும் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த ஒரு மோசடி அனைவருக்கும் ஒரு புரிதலை அளித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட நாட்களில் ஹோட்டல்களில் செய்யப்படும் மோசடிகள் வெளிவந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஹோட்டல் பில்-இன் மொத்த தொகையை மட்டும் பார்த்துப் பணம் செலுத்து விட்டு வருவது இயல்பாகிவிட்டது. ஆனால் இன்னமும் பல மோசடிகள் நடந்து வருகிறது. புனே நகரில் ஜகதீஷ் என்பவர் ஒரு சிறிய உணவகத்தில் உணவைச் சாப்பிட்டு உள்ளார். பில் வரும் போது அவர் வழக்கத்திற்கு மாறாக ஹோட்டல் பில்லை கவனித்துள்ளார். இதில் ஜிஎஸ்டிக்குப் பதிவு செய்யப்படாத அந்த ஹோட்டல் அனைத்து வாடிக்கையாளர்களிடம் இருந்தும் ஜிஎஸ்டி வரி வசூலித்து வருகிறதை அவர் கண்டுகொண்டார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தான் சாப்பிட்ட உணவிற்கான தொகை 140 ரூபாயாக இருந்த நிலையில், ஜிஎஸ்டி வரியான 18 சதவீதத்துடன் 25 ரூபாய் சேர்த்து 165 ரூபாயை ஹோட்டல் நிர்வாகக் கோரியுள்ளது. ஜிஎஸ்டி வசூலிக்கும் அனைத்து நிறுவனங்களும், வர்த்தக ஸ்தாபனங்களும் தங்களது பில்-இல் ஜிஎஸ்டி பதிவு எண்ணைத் தெரிவிக்க வேண்டும். இதன் பிடி ஜகதீஷ் பெற்ற ஹோட்டல் பில்-இல் ஜிஎஸ்டி எண்ணுக்குத் தாங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நிர்வாகம் தெரிவித்திருந்தது. பதவு செய்வதற்கு முன்பாக எப்படி வாடிக்கையாளர்களிடம் இருந்து நீங்கள் வரி வசூலிக்கலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் மூலம் ஹோட்டல் நிர்வாகம் ஜகதீஷ் அவர்களின் உணவு மீது விதிக்கப்பட்டு இருந்த ஜிஎஸ்டி வரியை ஹோட்டல் நிர்வாகம் ரத்துச் செய்து உணவுக்கு உண்டான பணத்தைப் பெற்றும் பெற்றுக்கொண்டது. இதுகுறித்த ஜகதீஷ்-இன் பேஸ்புக் பதவு இப்பகுதி மக்களுக்கு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
16 May, 2017
02 April, 2017
30 March, 2017
முதலாவதாக ஆதரவு கரம் நீட்டுவோம்...!
எங்கள் விவசாயிகள் தவிக்குகிறார்கள்... போராடுகிறார்கள்...
மத்திய அரசு ஒட்டு அரசியல் செய்கிறது...
மாநில அரசு ஒரு குற்றவாளி குடும்பத்தினர் கையில் அரசாங்கத்தை ஒப்படைக்க முழு கவனம் செலுத்துகிறது... நாம் என்ன செய்ய போகிறோம்???
முதலாவதாக ஆதரவு கரம் நீட்டுவோம்...
மத்திய அரசு ஒட்டு அரசியல் செய்கிறது...
மாநில அரசு ஒரு குற்றவாளி குடும்பத்தினர் கையில் அரசாங்கத்தை ஒப்படைக்க முழு கவனம் செலுத்துகிறது... நாம் என்ன செய்ய போகிறோம்???
முதலாவதாக ஆதரவு கரம் நீட்டுவோம்...
27 March, 2017
11 March, 2017
10 March, 2017
நம் நாடு இன்னும் முன்னேறாமல் இ௫க்க இதுவே சான்று!
09 March, 2017
06 March, 2017
05 March, 2017
விழித்தெழு தமிழா...
என் தமிழகத்தை கூறுபோட நினைக்கும் ஜனநாயக அற்ற அரசியல்....
இலங்கையில் தமிழீழம் கேட்டு போராடியதுபோல்,
பாரதத்தில் தனிநாடு தமிழகநாடாக கேட்கும் சூழலை உருவாக்கி கொண்டிருக்கிறது,
திராவிட கட்சிகளும் தேசிய கட்சிகளும்...
எத்தனை பாரபட்சங்கள் தமிழகத்தில்
நம்மை நிம்மதியாக இருக்க விடாமல் எத்தனை சதிவேலை நடக்கிறது...
பாரதத்தை கார்பொரேட் கம்பெனிகளுக்கு விற்று விட்டனர்...
எதிர்த்து குரல் கொடுப்பது தமிழகத்தில் மட்டுமே...
அதை எப்படி அரசியல் ஆதாயம் காண்கிறது திராவிட கட்சிகளும் தேசிய கட்சிகளும்...
இங்கே மக்கள் ஆட்சி என்று கூறி மக்களை அடிமை படுத்தும் அரசியல் ஆட்டம் நடக்கிறது...
உலகத்தையே ஆளுமை செய்த தமிழனை அடக்கி ஆளத் துடிக்கிறது...
தமிழனின் குருதியில் கலந்தது அவன் வீரம் அதை மீண்டும் எழவைத்து விடாதீர்கள்...
அதை தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை...
தமிழா உன்னை அழிக்க துடிக்கும் கேடுகெட்ட அரசியலுக்கும் கார்பொரேட் கம்பெனிகளுக்கும் விளங்க வை தமிழன் யார் என்று.....!!!!
திராவிட கட்சிகளையும் தேசிய கட்சிகளையும் தமிழகத்தை விட்டு விரட்டி அடி...
விழித்தெழு தமிழா...
உன் விடியலை தேடி....
இவன் நான் தமிழன் ரிஷி
இலங்கையில் தமிழீழம் கேட்டு போராடியதுபோல்,
பாரதத்தில் தனிநாடு தமிழகநாடாக கேட்கும் சூழலை உருவாக்கி கொண்டிருக்கிறது,
திராவிட கட்சிகளும் தேசிய கட்சிகளும்...
எத்தனை பாரபட்சங்கள் தமிழகத்தில்
நம்மை நிம்மதியாக இருக்க விடாமல் எத்தனை சதிவேலை நடக்கிறது...
பாரதத்தை கார்பொரேட் கம்பெனிகளுக்கு விற்று விட்டனர்...
எதிர்த்து குரல் கொடுப்பது தமிழகத்தில் மட்டுமே...
அதை எப்படி அரசியல் ஆதாயம் காண்கிறது திராவிட கட்சிகளும் தேசிய கட்சிகளும்...
இங்கே மக்கள் ஆட்சி என்று கூறி மக்களை அடிமை படுத்தும் அரசியல் ஆட்டம் நடக்கிறது...
உலகத்தையே ஆளுமை செய்த தமிழனை அடக்கி ஆளத் துடிக்கிறது...
தமிழனின் குருதியில் கலந்தது அவன் வீரம் அதை மீண்டும் எழவைத்து விடாதீர்கள்...
அதை தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை...
தமிழா உன்னை அழிக்க துடிக்கும் கேடுகெட்ட அரசியலுக்கும் கார்பொரேட் கம்பெனிகளுக்கும் விளங்க வை தமிழன் யார் என்று.....!!!!
திராவிட கட்சிகளையும் தேசிய கட்சிகளையும் தமிழகத்தை விட்டு விரட்டி அடி...
விழித்தெழு தமிழா...
உன் விடியலை தேடி....
இவன் நான் தமிழன் ரிஷி
ஜல்லிகட்டுல குலைக்காத நாய்...நெடுவாசளுக்கு ஊலை இடுது...??
சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளைக்காரன் ஷீவை நக்கி பிழைத்த கூட்டம் எல்லாம் எங்களை தேச நலனில் அக்கரை இல்லாதவர் என்று கூற தகுதி இருக்கிறதா?
உங்கள் பார்வையில் நாங்கள் தேச விரோதியாக தெரிகிரோம் என்றால் நாங்கள் அதை பெருமையாக தான் கருத வேண்டும். எங்கள் பார்வையில் மக்கள் தான் தேசம். மக்களின் நலனில் உண்மையான அக்கரை கொண்டவர்களே தேசப்பற்றாளர்கள்.
உங்கள் பார்வையில் நாங்கள் தேச விரோதியாக தெரிகிரோம் என்றால் நாங்கள் அதை பெருமையாக தான் கருத வேண்டும். எங்கள் பார்வையில் மக்கள் தான் தேசம். மக்களின் நலனில் உண்மையான அக்கரை கொண்டவர்களே தேசப்பற்றாளர்கள்.
27 February, 2017
விழி தமிழா...!
தமிழகத்தின் வளங்கள் எண்ணற்றது. அதில் முக்கியமும் முதன்மையானது நீர். அதிகளவில் தேவைப்படும் தமிழக குடிநீர் தேவையை கடல் நீரை சுத்திகரித்து செய்து கொள்ளலாம் (தமிழக அரசின் அம்மா மினரல் வாட்டர் கடல் நீர் சுத்திகரிப்பில் பெறப்படுவது தான்). மண்ணிற்கு தேவையான சத்துக்கள் ஏதும் இல்லா இந்த நீரை உழவிற்கு பயன்படுத்தவே முடியாது. புள்ளிவிவரப்படி தமிழகத்தில் ஆற்று நீர் குடிநீர் தேவையை விட உழவிற்கே அதிகம் பயன்படுத்துகிறோம். அதற்காகத்தான் காவிரி நீர் பங்கீட்டிற்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
1972-73ல் காவிரிச்சிக்கல் தமிழகத்தில் பூதாகாரமாய் தலைதூக்கவே 1974ல் காவிரிப் பாசன ஆணையம் முன்னெடுக்கப்பட்டு 1976 அன்றைய மத்திய நீர்ப்பாசன அமைச்சர் ஜெகஜீவன்ராமின் தலைமையில் வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் குடகு மலைப் பகுதியில் (காவிரி உற்பத்தியாகும் பகுதி) ஹிராங்கினி அணையை சத்தமில்லாமல் கட்டி முடித்தது கர்நாடகம். இதனை எதிர்த்து 1986ல் தஞ்சை உழவர் சங்கங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழக்கு தொடுத்தனர். இந்நிலையில் தான் உழவு உள்ள வரை தமிழகம் தண்ணீர் கேட்டுக் கொண்டே தான் இருக்கும். தமிழகத்தை உழவிலிருந்து வெளியேற்றிவிட்டால் மாநில நீர்த்தேவை குறையும் என முடிவெடுத்து மத்திய அரசை அமைதியாய் அனுகியது கர்நாடக அரசு. தேசிய கட்சிகள் கோலோச்சும் கர்நாடகாவின் இத்திட்டத்திற்கு செவிசாய்த்த மத்திய அரசு, 1980களின் இறுதியில் தமிழகத்தின் நெற்களஞ்சிய மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க ஆய்வுகள் மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது (இதனை தஞ்சை பூர்வ உழவர்களைக் கேட்டால் சொல்வர்). ஆனால் இதனை நேரடியாக சொல்லாமல் மண்ணெண்ணை குழாய் அமைக்க வேண்டி ஆய்வு செய்யப்படுகிறதென ஆரம்பித்தது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. தமிழக அரசோ கூட்டணி தேசியக் கட்சி சொன்னவுடன் திட்டத்தை படித்துக்கூட பார்க்காமல் ஒப்புதல் வழங்கி மீத்தேனுக்கு பச்சைக் கொடி காட்டியது. இதில் கோரப்பட்ட டெண்டர் பத்தில் ஐந்து நிறுவனங்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவை. இப்போது நெடுவாசலில் போடப்பட்டிருக்கும் ஜெம் லேப் நிறுவனம் கூட கர்நாடக பாஜ. MP மறைந்த திரு.மல்லிகார்சுனப்பாவுடையது.
விழி தமிழா. அழிவுத் திட்டங்களை எதிர்த்து நில். போராடு.
போராடாத எந்த ஒரு இனமும் விடுதலை அடைந்ததாக சரித்திரம் இல்லை.
26 February, 2017
இது யாரோட இந்தியா..இதுதான் இந்தியாவெனில் யாருக்கு வேணும் இந்த இந்தியா..?
ஆளும் வர்க்கமே சொரணை இல்லையா ?
வி ஐ பி களுக்கே இந்தியா…!!!
பாவனா -வுக்கு
பாவாடை கிழிந்தால்
பாராளுமன்றம் வரை எதிரொலிக்கிறது
நந்தினி
ஹாசினி -களுக்கு
கருவறுக்கப்பட்டாலும்
அது கிணற்றுக்குள்ளே மூடி மறைக்கப்படுகிறது …!!!
அம்பாணி, அதாணி
மல்லையா கடன் வாங்கினால்
அது தள்ளுபடி செய்யப்படுகிறது
இராமையா
மூக்கையா இராமசாமி -கள்
கடன் வாங்கினால்
தடியடி நடத்தி வசூலிக்கப்படுகிறது..!!!
அரசியல்வாதிகள்
ஆற்றுமணலை கொள்ளையடித்தால்
சுங்கச்சாவடிகள் சுதந்திரமாக திறக்கப்படுகிறது
அன்றாட காய்சிகள்
மாட்டு வண்டியில்
மணல் எடுத்தால்
மாட்டு வண்டிகள் சூறையாடப்படுகிறது..!
கல்வியை தொழிலாக்கி
அதை காசுக்கு விற்று
பணம் பார்க்கும் கபோதிகளுக்கு
கல்வி தந்தையென பட்டம் அளிக்கப்படுகிறது
தேர்விலே
பக்கத்தில் இருப்பவனை பார்த்து
காப்பி அடித்தால் மாணவனுக்கு
மூன்றாண்டு தேர்வெழுத தடைவிதிக்கிறது..!
போலி நாயகனுக்கும்
அரசியல் வாதிகளுக்கும்
சட்டத்தில் பல விதிவிலக்குகள் அளிக்கப்படுகிறது
சாமானியனுக்கோ சட்டம்
தன் கடமையை செய்கிறது..!
இயற்கையை அழிப்பவன்
இறைவனென போற்றப்படுகிறான்
இயற்கையை காக்க போராடுபவன்
தேசதுரோகியென தூற்றப்படுகிறான் .
ஆக இது யாரோட இந்தியா..இதுதான் இந்தியாவெனில் யாருக்கு வேணும் இந்த இந்தியா..?
கட்டமைக்கப்பட்ட இந்தியா என்ற போலி தேசத்தை தியாகம் செய்கிறோம்.
திருப்பதி கோவில் சுவரில் எழுதியிருக்கும் கல்வெட்டு சொல்லும் அந்த கோவில் யாருடையதுனு - தியாகம் செய்திருக்கோம்
கேரளாவில் பீர்மேடு யாருடையது - தியாகம் செய்திருக்கோம்
தண்ணி கொடுக்காதபோதும் நெய்வேலில இருந்து மின்சாரம் கர்நாடகாவுக்கு கொடுக்கிறோம் - தியாகம் செய்திருக்கோம்
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட எல்லாரையும் தமிழர்களுக்கு தெரியும் ஆனா 21 வருடம் செக்கிழுத்த வ.உ.சிதம்பரத்தை தமிழ்நாடு தாண்டி யாருக்காவது தெரியுமா? - தியாகம் செய்திருக்கோம்
கேரளாவில் குஜராத்தில் விரட்டப்பட்ட அணுஉலையை எங்க தலைல கட்டுணீங்க - தியாகம் செய்திருக்கோம்
பெங்களூர் உண்மையான பேர் தெரியுமா - தியாகம் செய்திருக்கோம்
நீங்க இலங்கைட்ட சீன் போடா கச்சத்தீவை கொடுத்தீங்க - தியாகம் செய்திருக்கோம்
மாநிலங்கள் பிரிக்கையில் 11% காடுகள் ஒதுக்கியபோது தமிழகத்திற்கு எத்தனை சதவீதம்னு தெரியுமா - தியாகம் செய்திருக்கோம்
தியாகத்தை பற்றி யாரிடம் பேசுவது என தெரிந்து பேசுங்கள்
இனி இந்தியாவை தியாகம்
செய்ய தயாராகிவிட்டோம்!
செய்ய தயாராகிவிட்டோம்!
இந்தியா என்ற அண்டை நாட்டிற்காக தமிழர் நாடு கணக்கில் இல்லாத எண்ணற்ற தியாகங்கள் போதுமான அளவு கடந்த பல நூறு வருடங்களாக செய்துள்ளது...
எமது மண்ணின் வளங்களை போதுமான அளவு களவாடி இருக்கிறீர்கள்...
நெய்வேலி மண்ணை முழுமையாக நாங்கள் இழந்து மின்சாரம் உற்பத்தி செய்கிறோம் ஆனாலும் அந்த மின்சாரம் எங்கள் உரிமை அல்ல...
கடற்கரை முழுமைக்கும் அணு உலை பூங்கா என்று எங்கள் கடல் வளங்களையும்,எம் மண்ணையும் சிதைக்கிறீர்கள் நாங்களே இதுவரை தியாகம் செய்பவர்களாக இருந்து வருகிறோம்...
கச்சத்தீவை தியாகம் செய்தோம் மீன்பிடி உரிமை இழந்தோம்...
முல்லை பெரியாறு அணையை தியாகம் செய்தோம் தண்ணீர் எங்களுக்கு இல்லை...
நியூட்ரினோ, மீத்தேன் என்று எங்கள் நாட்டை இன்னும் தியாகம் செய்து வருகிறோம்...
எங்கள் ஆறுகளில் இருந்து எம் மண்ணை தியாகம் செய்து உங்கள் இந்தியாவை செழிப்புடன் இருக்கவைத்திருக்கிறோம்...
தகவலுக்கு நன்றி
கார்த்திகேயன்
கார்த்திகேயன்
25 February, 2017
22 February, 2017
18 February, 2017
govtam@nic.in rajbhavantamilnadu@gmail.com
இந்த இரண்டு mail id க்குமே mail அனுப்புங்க...
TO : rajbhavantamilnadu@gmail.com
CC : govtam@nic.in
CC : govtam@nic.in
Subject : Requesting to conduct Re-election or Secrete Ballot
Dear Governor General Mr. Vidyasagar Rao,
This is to bring to your notice that I am very much worried on the way the polling has been conducted today in legislative assembly.
Though it has been requested many times by Mr.Stalin, The plea has been rejected by the honorable speaker Mr. Danapal.
We request you to urgently look into this issue and conduct a re-poll for the sake to save Tamilnadu from Corrupted Mannargudi mafias.
We also urge Central government to dissolve the government and give people the another chance.
Since the case regards to Live Telecast of legislative assembly meeting in front of honorable Supreme court , I request you to pressure Central government to finish the case soon and help Tamilnadu people the freedom to know what is happening in Legislative assembly.
Thanks and looking forward to your reply.
Jai Hind
Thank you,
Thank you,
13 February, 2017
12 February, 2017
08 February, 2017
அண்ணா முதல் ஓ.பன்னீர்செல்வம் வரை
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை போல, குறிப்பிட்ட கால இடைவெளியில் திராவிட இயக்கத்தில் பிளவுகளும், பிரிதல்களும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நீதிக்கட்சியில் பெரியார் இணைந்த பிறகு தீவிர முற்போக்கு இயக்கமாக அதை முன்னெடுத்தார். அதனால் அதில் முன்னோடியாக இயங்கிய ஜமீன்தார்களும், பணக்காரர்களும் அதை இடையூறாகக் கருதி வெளியேறினர். ஆனால் அது பெரிய பிளவாகவோ அந்த இயக்கத்துக்குத் தொய்வாகவோ இருக்கவில்லை. அதேசமயம் அந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறிய பின்னர் அதில் உருவான சில பிரிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை.
பெரியார் - அண்ணா
தந்தைப் பெரியாருடன் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் அண்ணாவுக்கு இருந்தது. 1948-ல் முதல் இந்திய சுதந்திர தின விழாவினை ‛கறுப்பு நாள்’ எனப் பெரியார் தன் கட்டுரையில் குறிப்பிட, அதே இதழில் 'இன்ப நாள் - இனிய நாள்' என அண்ணா கட்டுரை எழுதினார். அதன் பின்னர் தமக்கு உதவியாக இருந்த மணியம்மைக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்க அவரைத் திருமணம் செய்தார் பெரியார். இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசித்து தனியாக இயக்கம் காண முடிவு செய்தனர். அதன்படி 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி திமுக தொடங்கப்பட்டது.
அண்ணா- சம்பத்
திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணாவுடன் வெளியேறிய பெரியாரின் அண்ணன் மகன் ஈ.வி.கே.சம்பத், திமுக சார்பில் 1957-ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 1961-ம் ஆண்டு 'திராவிட நாடு' என்கிற திமுகவின் தனிநாடு கோரிக்கையில், அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பத் வெளியேறினார். பின்னர் அவர் சிவாஜி கணேசன், கண்ணதாசன், பழ.நெடுமாறன் ஆகியோரை இணைத்து 'தமிழ்த் தேசியக் கட்சி ' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். 1962-ல் அது சந்தித்த முதல் தேர்தலில் படு தோல்வி அடைந்தது. அதன் பின்னர் அந்தக் கட்சியை காங்கிரசுடன் இணைத்துக்கொண்டார் சம்பத்.
கருணாநிதி - எம்ஜிஆர்
இந்தப் பிரிவுதான் மிகப்பெரியதும் இன்று வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்து வருகிறது. 1967-ல் அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியைப் பிடிக்கிறது. அதன் பின்னர் இரண்டாண்டுகளில் அண்ணா மறைகிறார். அதற்கு அடுத்த நாளே, யார் பொதுச்செயலாளர், யார் முதல்வர் என்கிற பிரச்னைகள் ஒருசேர எழுகிறது. இதில் அப்போது கல்வி அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் இடையே பிரச்னை எழுகிறது. பெரியார் தலையிட்டு சமரசம் செய்தும் நெடுஞ்செழியன் ஒப்புக்கொள்ளவில்லை.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் கருணாநிதிக்கு இருந்தது. அவர் கட்சியின் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நெடுஞ்செழியனுக்கு அண்ணா வகித்த பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது; கருணாநிதி தலைவரானர். வெகுவிரைவில் கட்சியின் அதிகாரங்கள் முழுக்க தலைவருக்கு இருக்குமாறு பொதுக்குழுவினை கூட்டி முடிவெடுக்கப்பட்டு நெடுஞ்செழியன் டம்மியாக்கப்பட்டார்.
1971-ல் அரசைக் கலைத்து விட்டு பொதுத்தேர்தலை கருணாநிதி சந்திக்கிறார். அவருக்கு அவரது நண்பரும் நடிகருமான எம்ஜிஆர் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார். எம்ஜிஆர் திமுகவின் பொருளாளராகவும் இருந்தார். மிகப்பெரிய வெற்றியை அந்தந் தேர்தலில் திமுக பெறுகிறது. அடுத்த ஆண்டு திமுகவின் கணக்குகளை பொது மேடையில் கேட்டதற்காக எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் அந்த நடவடிக்கையை மக்கள் ரசிக்கவில்லை என்பதை அவருக்குக் கிடைத்த ஆதரவு காட்டியது. 75-ம் ஆண்டு மிசா சட்டத்தின் அடிப்படையில் திமுக கலைக்கப்பட்ட பின் அடுத்த 14 ஆண்டுகளுக்கு கருணாநிதியால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. 72-ம் ஆண்டே அதிமுக என்கிற கட்சியை தொடங்கிய எம்ஜிஆர் 77-ல் ஆட்சியைப் பிடித்து 87-ம் ஆண்டு சாகும் வரை ஆட்சி செய்தார்.
ஜானகி - ஜெயலலிதா
எம்ஜிஆர் காலமான உடன் நாவலர் நெடுஞ்செழியன் காபந்து முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கட்சி உறுப்பினர்கள் இணைந்து எம்ஜிஆரின் மனைவி ஜானகியை முதல்வராகத் தேர்வு செய்தனர். ஆனால் அடுத்த 28 நாட்களிலேயே சட்டமன்றத்தில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஒருவருக்கொருவர் அடித்து மண்டையை உடைத்துக் கொண்டனர். கட்சி ஜானகி அணி - ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தது. எம்ஜிஆரை பதவிக்காக மோரில் விஷம் வைத்து ஜானகி கொன்று விட்டார் என ஜெயலலிதா குற்றம் சாட்டினார். அரசியல் குளறுபடியை காரணம் காட்டி அன்றைய அதிமுக அரசு கலைக்கப்பட்டது. அதிமுகவின் பிரபல சின்னமான 'இரட்டை இலை'க்கு இரண்டு தரப்பும் உரிமை கோரியதால் அந்த சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஜானகி அணி படு தோல்வி அடைந்தது. அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக செயல்படத் தொடங்கியது.
கருணாநிதி - வைகோ
'திமுகவில் செங்குத்தான பிளவு' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 'தீக்கதிர்' ஏடு எழுதியது. அது எம்ஜிஆர் பிரிந்தபோது கூட இப்படிக் குறிப்பிடவில்லை. வை.கோபால்சாமி என்கிற வைகோ அக்டோபர் மாதம் 23-ம் தேதி நீக்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் 5 பேர் தீக்குளித்து இறந்தனர். அந்தளவுக்கு பெரும் தாக்கத்தை அந்தக் கட்சியில் இந்த நீக்கம் ஏற்படுத்தியது. வைகோவின் பின்னாலும் மிகப்பெரிய இளைஞர் கூட்டம் கூடியது. அவரது பிரிவுக்கு பின்னர் உடனடியாக வந்த மயிலாப்பூர்,பெருந்துறை ஆகிய இரண்டு இடைத்தேர்தல்களில் அவரின் கட்சி போட்டியிட்டது. இதில் பெருந்துறையில் இரண்டாம் இடத்துக்கு வைகோவின் கட்சி வந்து ஆச்சரியமளித்தது. திமுக தன் முடிவுகளால் இன்னொரு எம்ஜிஆரை உருவாக்கிவிட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர். ஆனால் வைகோவினால் அதைத் தக்கவைக்கும் அளவுக்கு அரசியல் சூழல் ஏற்படவில்லை.
சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மோதல் பிரிவுக்கு வழிவகுக்குமா? அல்லது ஜெயலலிதாவைப்போல கட்சியைக் கைப்பற்றுவாரா? ஒருவேளை பிரிந்தார் என்றால் அதைப் பெரிய பிளவாகக் கருதும் அளவுக்கு இருக்குமா எனப் போகப்போகத்தான் தெரியும்.
06 February, 2017
உன் அடையாளம் அழிக்கப்படும் போது கோவப்படு!
மோடி கோவை வருகையையொட்டி தமிழில் எழுதபட்ட மைல்கற்கள் பிடிங்கி எரியபட்டதால் தமிழர்கள் ஷிந்தியை அழித்தனர். உன் அடையாளம் அழிக்கப்படும் போது கோவப்படு!
05 February, 2017
04 February, 2017
போட்டி நடக்குறது க்கு பின்னால?
கச்சா எண்ணை
மற்ற நாடுகளில் கடலில் கலந்த கச்சா எண்ணையை எப்படி சுத்தம் செய்கிறார்கள் மற்றும் இந்தியாவில் எப்படி செய்கிறார்கள் என்று பாருங்க...
OMG விழித்துக்கொள் தமிழா!
கோயமுத்தூர்க்கு வந்த சோதனை . நாளை தமிழகம் முழுவதும் வரும் விழித்துக்கொள் தமிழா! இனி இந்த அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்!
கொசு விரட்டிகளை விட கூடுதல் பயன்கள்!
கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி, நம் வீட்டிலுள்ள மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம்.
ஒருமுறை தீர்ந்தால் அந்த பாட்டிலை தூக்கி எறியாதீர்கள்.
அந்த பாட்டிலில் சிறிதளவு ஆரத்தி கற்பூரத் துண்டுகளையும், வேப்ப எண்ணையையும் கலந்து மீண்டும் உபயோகப் படுத்தலாம்.
கொள்ளைக்கார கம்பேனி காரர்களின் கொசு விரட்டிகளை விட, இதில் கூடுதல் பயன்கள் ஏராளம்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 50 மில்லி சுத்தமான வேப்ப எண்ணை விலை சுமார் ரூ10 மட்டுமே.
ஒரு மாதத்திற்கு
மொத்த செலவே ரூ 11 மட்டு்மே,
இரண்டாவது மிகப் பெரிய விஷயம், இது உடல் நலத்திற்கோ, சுவாசத்திற்கோ தீங்கு விளைவிக்காத இயற்கை எண்ணெய்.
மொத்த செலவே ரூ 11 மட்டு்மே,
இரண்டாவது மிகப் பெரிய விஷயம், இது உடல் நலத்திற்கோ, சுவாசத்திற்கோ தீங்கு விளைவிக்காத இயற்கை எண்ணெய்.
கடையில் வாங்கும் கொசு விரட்டியில் "அல்லோத்ரின்" எனும் வேதிப் பொருள் கெடுதி விளைவிப்பதாகும்.
இதை விற்பவர்கள் இந்தியாவில் மொத்தம் நாலே நாலு உற்பத்தியாளர்கள்.
யோசியுங்கள், ரூ 65 பெறுமானமுள்ள இந்த வேதிப் பொருளை சுமார் 10 கோடி மக்கள் இந்தியாவில் மாதம் தோறும் வாங்குகிறார்கள்.
ஆக, மொத்த வியாபாரப் பரிவர்த்தனை வருடத்திற்கு ரூ 7800 கோடிகள்.
நான்கு கம்பெனிகளில் ஒரு கம்பெனி ஜப்பான் கூட்டுறவு, அந்நிய செலாவணியாக நம் பணம் அங்கே போகிறது.
இந்த வேதிப் பொருளை விற்று வரும் லாபப் பணத்தில்.... இந்தியில் சினிமா எடுக்கிறார்கள்.
மக்களை மயக்கிட, விளம்பர படங்களை எடுத்து அதை மக்களிடம் கொண்டு சேர்க்க, கோடி கோடியாக கொட்டுகிறார்கள்.
ரூ 65 விற்பனை விலையில் லாபம் 250%.
நீங்களே உங்கள் வீட்டில் வேப்பெண்ணை கற்பூரம் மூலம், தயார் செய்து கொண்டால், குறு நிறுவனங்களாகிய வேப்ப எண்ணெய் உற்பத்தி உயர்ந்து, நமது விவசாயிகள் பயனடைவார்கள்.
நீங்களே உங்கள் வீட்டில் வேப்பெண்ணை கற்பூரம் மூலம், தயார் செய்து கொண்டால், குறு நிறுவனங்களாகிய வேப்ப எண்ணெய் உற்பத்தி உயர்ந்து, நமது விவசாயிகள் பயனடைவார்கள்.
இந்த விஷயத்தை நமக்குத் தெரிவித்த முகம் தெரியாத அந்தப் பெண்மணியைப் பாராட்டுகிறேன்.
02 February, 2017
சட்டத்தை மாற்றுங்க.
10 லட்சம் சம்பாதிக்கிறேன், 3 லட்சத்துக்கு வரி கட்ட சொல்லிரீங்க சரி கட்டிட்டேன்.மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன்,அதுல்லையும் பத்திர பதிவுன்னு 14% வாங்குரிங்க,நகை வாங்க போறேன் அங்கேயும் வரி.சாப்பிட போறேன் அங்கேயும் வரி.மக்களை சாகடிச்சி புடுங்குரீங்க.கார் வாங்கும்போதே வரியும் சேர்த்து புடுங்குரீங்க அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வசூலிக்கிரீங்க...இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா!நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பெனிக்கு லோன் கொடுப்பிங்க, கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பண்ணுவிங்கா!கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் வரி பணத்த செலவழித்து விழா நடத்தி விருது கொடுப்பிங்கலட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவேடிக்கை எடுத்ததிங்கனு கேட்ட புரியாத & புரிஞ்சுக்க முடியாதபடி ஒரு பதில் சொல்லுவிங்க,இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா? பதுக்கத்தான் செய்வான்.முதலில் சட்டத்தை மாற்றுங்க. எல்லா சிஸ்டத்தையும் மாற்றுங்க.
புடிங்கிய ஆணிகள் போதும்!
நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக மட்டுமே பேசுவோம்..மற்ற மக்கள் பிரச்சனைக்கெல்லாம் நாங்கள் போராட மாட்டோம் ..நம்மை ஆளும் முதல்வரும் ,பிரதமரும் தெய்வ பிறவிகள் அவர்களை பற்றி பேசுவது ஒரு பாவச்செயல்.. அவர்களை பற்றி பேசினால் அது முறையா ? நுரையா? என்று பிதற்றுபவர்களெல்லாம் எல்லாம் தேசியவாதிகள் நீயூட்ரலாக பேசுகிறவர்களாம்..
சீமான் ,கோவன் ,திருமுருகன் காந்தி , கவுதமன் இவர்கள் வேறு வேறு இயக்கமாக இருந்தாலும் ஆளும் அரசுகள் செய்யும் மக்களை விரோத போக்கை தைரியமா தட்டி கெட்டவர்கள் ..அதற்காக பலமுறை சிறை சென்றவர்கள் ...இவர்களுக்கு அரசு தேச துரோக பட்டம் கட்டத்தான் செய்யும்...அரசு சொல்கிற அதே குரலை நீ எதுக்கு சொல்ற??? இன்றைக்கு கூட லாரன்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தீ வைத்தது மாணவர்கள் இல்லை..மக்களும் இல்லை என்று மொட்டையா சொல்லி விட்டு நகர்கிறார் ..https://www.youtube.com/watch?v=G17znB3VnMU&spfreload=10 ..இந்த நால்வர்தான் காரணம் என்ற தொனியில் பேசிவிட்டு நகர்கிறார் ..காவல் துறைதான் காவல்நிலையத்திற்கு தீ வைத்தது ..அரசு தான் இதற்கு காரணம் என்று சொல்ல தைரியம் இல்லை ..நீயெல்லாம் என்ன நடுநிலை வாதி ..உன்ன மாதிரி நடுநிலைவாதிகள் புடிங்கிய ஆணிகள் போதும் லாரன்ஸ் ..நீ அரசியலுக்கு வந்து எண்ணத்தை கிழிக்க போற ..கிளம்புங்க உங்க நடுநிலையை ஆந்திர பக்கம் போய் காட்டுங்க
01 February, 2017
31 January, 2017
நெஞ்சு முழுக்க நஞ்சு!
50 வருடங்களுக்கு முன்னர் நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிக்கனிலும், இன்று நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் சிக்கனிலும் பல வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு சிக்கன். ஆனால், அது இன்று உயிரைக் கொல்லும் ஸ்லோ பாய்சன் உணவாக மாறி வருகிறது.சிக்கனில் அதன் கருவுறுதல் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆன்டி-பயாடிக்ஸ் அதிகளவில் உட்செலுத்துகின்றனர். இது கோழியின் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது.. அதை சாப்பிடும் மக்களின் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது.
1950-களில் இருந்த கோழிகளை விட இன்று இருக்கும் கோழிகள் நன்கு மடங்கு உருவில் பெரிதாக இருக்கிறது. மேலும், ஒரு ஆய்வில் அன்றைய கோழிகளை காட்டிலம் இன்றைய கோழிகளில் கொலஸ்ட்ரால் அளவு 250% அதிகரித்து காணப்படுகிறது என அறியப்பட்டுள்ளது. ட்ரக்ஸ் மூலமாக கோழியின் ஹார்மோன்-ல் ஏற்படுத்தப்படும் மாற்றம் தான் இதற்கான காரணமாக இருக்கின்றது. இதை வியாபாரம் மற்றும் லாபம் அதிகம் காண உற்பத்தியாளர்கள் பின்பற்றுகின்றனர்.
ஆர்சனிக் என்பது ஒருவகை ரசாயனம். இதை இன்று உற்பத்தி செய்யப்படும் கோழிகளில் அதிகம் சேர்க்கின்றனர். இதை அரசு அறிவுரைக்கு அதிகமான அளவில் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மனித உடலுக்கும், ஆரோக்கியதிற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கனில் நெஞ்சு பகுதி அனைவரும் விரும்பு உண்ணும் பாகம். ஆனால், இன்று நாம் சாப்பிடும் சிக்கனின் நெஞ்சு பகுதி 97% பாக்டீரியா தாக்கம் நிறைந்து இருக்கிறது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இதுவும் நமது ஆரோக்கியத்தை சீரழிக்கும் ஒன்று தான்.
29 January, 2017
28 January, 2017
26 January, 2017
25 January, 2017
மாற்றம் முன்னேற்றத்தின் முதல் படி!
1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்கா நியூக்கிளியர் அணு குண்டு வீசியது... 71 ஆண்டுகள் கழித்தும் அமெரிக்காவால் ஒரு கண்டு ஊசி கூட
ஜப்பானில் விற்பனை செய்ய இயலவில்லை.
ஜப்பான் அரசு அமெரிக்க நாட்டு பொருட்களுக்கு எந்த தடையையும் விதிக்கவில்லை.
நம் நாட்டின் மீது இப்படி ஈவு,இரக்கம் இன்றி நச்சு அணுகுண்டு வீசி விட்டதே என மக்களே எடுத்த தீர்க்க முடிவு.
ஆனால் நாம் சீன போரில் நம் கயிலாயத்தையும் இழந்து நமக்கு தொடர்ந்து எல்லைப் பிரச்சனைகளை தரும் சீன பொருட்களை வாங்குகிறோம்.
ஜப்பானியர் தேசப்பற்று எங்கே?.
நம் இந்தியர்களின் தேசப்பற்று எங்கே?.
தேசம் காத்த நம் முன்னோர்களின் உடல் பலிகளை மறந்து நாம் சீன பொருட்களை வெட்கம் இன்றி வாங்குகிறோம்.
மாற்றம் அவசியம்.
12 January, 2017
இப்போ கொழுந்து விட்டு எரியிது இனி கொல விழுகப் போகுது..!
மாடு புடிக்கப் போறோண்டா
நாங்க மல்லுக்கட்ட வாறோண்டா
மாடு புடிக்கப் போறோம்டா
நாங்க மல்லுக்கட்ட வாறோடா
திமிரோடு இருக்கோண்டா
நாங்க திமில புடிக்கப் போறோண்டா
திமிரோடு இருக்கோண்டா நாங்க திமில புடிக்கப் போறோண்டா
மாட்டுக்கு பொங்க வச்ச மனுசப் பய
எங்கள நீ கொம்பு சீவி விட்டுட்ட
எங்க கொலத்த அழிக்கப் பாத்துட்ட
எங்கள கொம்பு சீவி விட்டுட்ட கொலத்த அழிக்கப் பாத்துட்ட
எங்க கொல சாமிய எங்க கொல சாமிய
இறக்குவோண்டா களத்துல ஏந்துவோண்டா நெஞ்சில
வாடிவாச பக்கங் கூட வந்ததில்ல நீங்க
வாடி வாச பக்கங் கூட வந்ததில்ல நீங்க
வைக்க புல்லு எல்லாம் போட்டு வளர்த்தவங்க நாங்க
வைக்க புல்லு எல்லாம் போட்டு வளர்த்தவங்க நாங்க
பொங்க வச்சி ஊட்டுவோம் நாங்க
பொங்க வச்சி ஊட்டுவோம்
வீட்டில் போட்டா எடுத்து மாட்டுவோம்
இதுக்கு மேல நெருக்குனா இனி யாருன்னு காட்டுவோம்
இதுக்கு மேல நெருக்குனா இனி யாருன்னு காட்டுவோம்
இப்போ கொழுந்து விட்டு எரியிது இனி கொல விழுகப் போகுது..
இயக்குனர் சற்குணம்.
09 January, 2017
Subscribe to:
Posts (Atom)