|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 January, 2012

2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன்!


பீகார் மாநிலத்தில் வெறும் இரண்டே மணிநேரத்தில் 61 பெண்களுக்கு மயக்க மருந்து கூட கொடுக்காமல் மிகக்கொடூரமாக குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டதில் உள்ளது கபார்போரா கிராமம். அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாத ஏழை மக்கள் ஆவர். கடந்த சனிக்கிழமை அந்த கிராமத்திற்கு 3 இளைஞர்கள் வந்தனர். தாங்கள் ஒரு என்ஜிஓவைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கு குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் நடத்த வந்துள்ளதாகவும் தெரிவி்ததனர். மேலும் குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்து கொள்பவர்களுக்கு மருந்து மாத்திரைகளும், ரூ.600 ரொக்கமும் கொடுக்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர்.

இதை கேட்ட அந்த படிப்பறிவில்லாத பெண்கள் ஆபரேஷனுக்கு சம்மதித்தனர். அவர்களுக்கு மயக்க மருந்து கூட கொடுக்காமல் கதற, கதற ஆபரேஷன் செய்துள்ளனர். அவர்களுக்கு ஏற்றப்பட்ட குளுகோஸ் கூட ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு மீதமானது என்று கிராமத்தினர் தெரிவித்தனர். இரண்டே மணிநேரத்தில் 61 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆபரேஷன் செய்து கொண்ட பெண்களில் பலரது நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து அராரியா மாவட்ட எஸ்பி ஷிவ்தீப் லாண்டே கூறியதாவது, ஆபரேஷன் செய்த 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளோம். அந்த கிராம மக்களின் அறியாமையையும், வறுமையையும் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர். அந்த பெண்களுக்கு ரூ.600க்கும் குறைவான பணமும், காலாவதியான மருந்துகளும் கொடுத்துள்ளனர் என்றார்.

இதையடுத்து புருனியா முகவரியில் பதிவு செய்யப்பட்ட ஜெய் அம்பே நலச் சங்கம் என்னும் என்ஜிஓ அலுவலகத்தில் நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி தபால் தலைகள் மற்றும் போலி மருத்துவ சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த என்ஜிஓ அமைப்பின் நிர்வாகிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் பாட்னாவில் பதுங்கியிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ராஜபக்சேவை கலங்க வைத்த விஜய் டிவி.


விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோதிட நிகழ்ச்சி இலங்கை அதிபர் ராஜபக்சேவை கலங்க வைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.  தமிழகத்தில் பிரபலமான டிவி சேனல்களில் விஜய் டிவியும் அதாவது ஸ்டார் விஜயும் ஒன்று. அந்த சேனலில் கடந்த 31ம் தேதி 6 பிரபல ஜோதிடர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் 2012ல் இந்திய அரசியல்வாதிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துக் கூறினர். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு 2012ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கேட்டார். அதற்கு ஜோதிடக் குழு தலைவர் ராஜபக்சேவின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு அவர் 2012 முடிவதற்குள் பதவி விலகுவார் என்றார். இதை மற்ற ஜோதிடர்களும் ஆமோதித்தனர். 

இலங்கையில் டயலாக் கேபிள் டிவி, விஜய் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. அந்த கேபிள் டிவி இந்த ஜோதிட நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சி குறித்த செய்தி ராஜபக்சேவின் காதுகளுக்கு எட்டியது. அதை கேட்டதும் அவர் கடுப்பாகி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநரை அழைத்து கண்டித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை மறுபடியும் ஒளிபரப்பக் கூடாது என்று உத்தரவிட்டார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வலிமையான இயக்கங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது எல்டிடிஇ!


உலகின் மிக வலிமையான சுதந்திரப் போராட்ட இயக்கமாக திகழ்ந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். பிரபாகரன் சொன்னதை வேதமாக தமிழ் மக்கள் ஏற்றுச் செயல்பட்டனர். கட்டுக்கோப்பான இயக்கமாகவும் அது செயல்பட்டது. அவர்கள் செய்த ஒரே தவறு, மரபு ரீதியான ஒரு ராணுவத்துடன் அதே ரீதியில் சண்டையிட்டதே என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரியும், ராஜீவ் காந்தியின் ஆலோசகராக செயல்பட்டவருமான ஜி.பார்த்தசாரதி. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மிகச் சிறந்த யோசனைகளைத் தந்த ஒரே வெளியுறவுத்துறை அதிகாரி என்ற பெயர் பெற்றவர் பார்த்தசாரதி. இந்திய ராணுவ அதிகாரியாக இருந்து ஐஎப்எஸ் தேர்ச்சி பெற்று, வெளியுறவுத்துறைக்கு வந்தவர் இவர்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார் ஜி.பார்த்தசாரதி. அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் புகழ்ந்து பேசினார். அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் இயக்கம் கடுமையான இயக்கமாக இருந்தாலும உலகின் மிக வலிமையான சுதந்திரப் போராட்ட இயக்கமாக செயல்பட்டது என்பதில் சந்தேகமில்லை. தனது குறிக்கோளுக்காக அது தீவிரமாக செயல்பட்டது. உத்வேகம் கொண்ட கள வீரர்களைக் கொண்டிருந்த அமைப்பாக விளங்கியது. அந்த அமைப்பின் தலைவர் சொன்னதை சட்டமாக, வேதமாக ஏற்றுச் செயல்பட்ட கள வீரர்கள் நிறைந்திருந்தனர். தங்களது உயிரைக் கூட இரண்டாம்பட்சமாக நினைத்த அவர்கள் பிரபாகரன் சொன்னதற்கே முதல் முக்கியத்துவம் கொடுத்தனர். 

கொரில்லா இயக்கமாக செயல்பட்ட விடுதலைப் புலிகள், மரபு ரீதியான போருக்கும் மாற முடிந்தது. இரு வகையான போர் முறைகளிலும் விடுதலைப் புலிகள் சிறப்பாகவே செயல்பட்டனர். ஆனால் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு என்னவென்றால் மரபு ரீதியான ஒரு ராணுவத்துடன் மரபு ரீதியாகவே மோதியதுதான் (அதாவது, கொரில்லா போர் முறையை தவிர்த்து). அதுதான் அவர்களது வீழ்ச்சிக்குக் காரணம். இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது நடந்த விதிமீறல்களை இந்தியா கண்டிப்பதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. அப்படி ஒரு நிலை வந்தால், ஐரோப்பிய நாடுகள் நமக்கு ஆதரவு தரலாம், அமெரிக்கா ஸ்திரமான முடிவெடுக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், இஸ்லாமிய நாடுகளும், சீனாவும் நமக்கு எதிராக திரும்பும்.

நான் ராஜீவ் காந்தியிடம், அவரது ஆலோசகராக இருந்தபோது அப்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆரை தொடர்பு கொண்டு பேசினேன். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நான் பேசியபோது, எம்.ஜி.ஆர். அந்த உடல் நலிவிலும் கூட தமிழகத்தில் நடந்து வந்த அத்தனை நிகழ்வுகளையும் தனது விரல் நுனியில் வைத்திருந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டேன். எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று என்னிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.

இலங்கையில் தற்போது தமிழர்களின் பொருளாதார நிலை நிச்சயம் சரியாக இல்லை. அவர்களுக்கு இந்தியா பெருமளவில் உதவ வேண்டும். இதற்காக தனது கொள்கைகளை அது பெரிய அளவில் மறு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இந்தியாவின் உதவி அவசியம்.

தான் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து இந்தியா நெருக்குதல் அளிக்க வேண்டும். அதேசமயம், பொருளாதார ரீதியாகவும் தமிழர்கள் மீண்டெழ வேண்டியதும் அவசியமாகும்.வட கிழக்கு மாகாணங்களில் பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும். நீர்ப்பாசனத்தை மேம்படுத்த உதவ வேண்டும். இதை முதலில் செய்ய இந்தியா முயல வேண்டும். இந்திய பொருளாதார சந்தையின் விரிவாக்கமாக நாம் இலங்கையின் முன்னேற்றத்தைப் பார்க்க வேண்டும் என்றார் பார்த்தசாரதி.

கல்தாவுக்கு ரெடியாகும் 15 அமைச்சர்கள்...?


அமைச்சரவை மாற்றப் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா தயாரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் திறமையற்றவர்கள் எனக் கருதப்படும் 15 அமைச்சர்கள் விரைவில் மாற்றப்படுவர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நீக்கம் இப்போதைக்கு இருக்காது என்றும் அதேசமயம், நீண்ட தாமதமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கூண்டோடு நீக்கி விட்டார் ஜெயலலலிதா. அவரது ஆதரவு அதிகாரிகளும் கூட இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். இது போக சசிகலா ஆதரவு கட்சிக்காரர்களும் கூட கட்சிப் பொறுப்புகளிலிருந்து தூக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சசிகலா ஆதரவு அமைச்சர்கள் மட்டும் இதுவரை தீண்டப்படாமல் இருக்கின்றனர். இது பலரையும் குழப்பி வருகிறது.

ஆனால் இதற்குப் பின்னணியாக ஒன்றைச் சொல்கிறார்கள். ஆளுநரிடமிருந்து ஜெயலலிதாவுக்குப் போன ஒரு அறிவுறுத்தல்தான் இந்தத் தாமதத்திற்குக் காரணமாம். அதாவது அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவதைத் தவிருங்கள். அது ஆட்சிக்கும், உங்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும். மேலும் ஆட்சி ஸ்திரமில்லாமல் இருக்கிறது என்ற பெரும் அவப் பெயரை ஏற்படுத்தி விடும் என்று ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அட்வைஸ் செய்துள்ளார் என்கிறார்கள். இதனால்தான் சசிகலாவை நீக்கிய கையோடு அமைச்சர்களையும் தூக்குவதாக இருந்த முடிவை ஜெயலலிதா தள்ளி வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

இருப்பினும் நீக்கப்படப் போகும் அமைச்சர்களின் பட்டியல் தயாராக இருப்பதாக தெரிகிறது. அதில் 11 பேர் சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரால் பதவிக்கு வந்தவர்களாம். இவர்களில் பலரும் பெரும் பணம் கொடுத்து அமைச்சர் பதவியைப் பிடித்தவர்கள் என்கிறார்கள். மேலும் 4 அமைச்சர்களும் இப்பட்டியலில் உள்ளனர். இவர்கள் சசிகலா தரப்பைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இவர்களின் பணித்திறமை குறித்து திருப்தி இல்லாததால் இவர்களையும் மாற்றி விட முதல்வர் தீர்மானித்துள்ளாராம். 15 பேரையும் நீக்கி விட்டு முற்றிலும் திறமையான, யாருடைய கோஷ்டியையும் சேராத அமைச்சர்களை நியமிக்க முடிவு செய்துள்ளார் முதல்வர் என்கிறார்கள் கார்டனுக்கு நெருக்கமானவர்கள். பொறுமையாக செயல்படுங்கள் என்று ஆளுநர் அறிவுரை கூறியுள்ள போதிலும் கூட, பொங்கலுக்குப் பிறகு மீண்டும் ஒரு தீபாவளியை தமிழகம் காணும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்.

வன விலங்குகள் சட்டத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளை சேர்த்தது மலையாள அதிகாரிகளின் சதி!


 1960ம் ஆண்டு வன விலங்குகள் சட்டத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சேர்த்துள்ளதன் பின்னணியில் மலையாள அதிகாரிகளின் சதி இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் பாரம்பரியமாக பல நூறு ஆண்டுகளாக நடந்து வருவது ஜல்லிக்கட்டு. அக்காலத்தில் தென் தமிழகத்தின் வீரக் கதைகளை விளைவிக்கும் வித்தைக் களமாக விளங்கியது ஜல்லிக்கட்டு. பெண் எடுக்க விரும்பும் ஆண் மகன் தங்களது வீட்டுக் காளைகளை அடக்கி வென்றால்தான் அக்காலத்து தமிழர்கள் பெண் கொடுப்பார்களாம். அந்த அளவுக்கு தமிழர்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது இந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு. அப்படிப்பட் ஜல்லிக்கட்டை முழுமையாக அழித்தொழிக்க டெல்லி வட்டாரத்தில் மிகப் பெரிய அளவில் ஒரு பெரிய குரூப்பே தீவிர நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக கூறுகிறார்கள். அதன் ஒரு அங்கம்தான் ஜல்லிக்கட்டுக் காளைகளை வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது என்கிறார்கள். மேலும் இப்படி காளைகளை சட்டத்தின் கீழ் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை முடக்க முயல்வது மலையாள அதிகாரிகள் சிலர் செய்த சதி வேலை என்றும் பேச்சு அடிபடுகிறது.


இதுகுறித்து ஜல்லிக்கட்டு பாதுகாப்புக் குழுவின் தலைவரான பேராசிரியர் அம்பலத்தரசு என்பவர் கூறுகையில், சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதில் போய் தற்போது காளைகளை சேர்த்துள்ளனர். அதேசமயம், கேரளாவில் ஆண்டுதோறும் யானைகளை வைத்து பல விளையாட்டுகளை நடத்துகின்றனர். யானைகளை பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்துகின்றனர், சித்திரவதை செய்கின்றனர். யானை ஓட்டம் என்ற பெயரில் ரேஸே நடத்துகின்றனர்.



இதுபோன்ற ரேஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது யானைகள் தாக்கி பலர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மக்களைத் தாக்குவதும், கடைகளை தாக்கி சூறையாடுவதும் என யானைகளால் கேரளாவில் ஏகப்பட்ட பாதிப்புகள் இன்று வரை தொடர் கதையாக உள்ளது. ஆனால் இதுவரை கேரளாவில் நடந்து வரும் யானை ஓட்டம் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, தடுக்க முயலவில்லை, தடை செய்ய விரும்பவில்லை. காரணம் டெல்லியில் வலுவான பதவிகளில் உட்கார்ந்திருக்கும் மலையாள அதிகாரிகள்தான் என்றார்.



கேரள மக்களுக்கு யானை பாரம்பரியச் சின்னம் என்றால் தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டுதான் பாரம்பரிய அடையாளம். கேரளாவுக்கு ஒரு நியாயம், தமிழகத்திற்கு ஒரு நியாயம் என மத்திய அரசு நடந்து வருவதாகவும் அம்பலத்தரசு போன்றவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விஷயத்திலும் கூட தமிழர்களை அவமதிக்கும் வகையில்தான் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் போன்றவர்கள் நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.



காளைகளை வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் படு வேகமாக கொண்டு வந்த ஜெய்ராம் ரமேஷ், யானைகளை மட்டும் அதில் சேர்க்காமல் இருப்பதற்கு மலையாள லாபிதான் காரணம் என்கிறார்கள். உண்மையில் யானைதான் இந்தியாவின் பாரம்பரிய விலங்கு, அதைத்தான் நாம் உண்மையில் பாதுகாக்க வேண்டும். யானைகள் இந்தியா முழுவதும் பல்வேறு வகைகளில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றன. பிச்சை எடுக்க வைக்கிறார்கள், போட்டி என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள். பலரது உயிரிழப்புகளுக்கும் யானை காரணமாக அமைகிறது. எனவே யானையைத்தான் பாதுகாக்க வேண்டும் என்பது அம்பலத்தரசுவின் வாதமாகும்.



ஜல்லிக்கட்டைக் காக்கவும், காளைகளை வன விலங்குகள் சட்டத்திலிருந்து மீட்டு கொண்டு வரவும் தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டம் அவசியம், தமிழர்கள் தங்களது கலாச்சார, பாரம்பரிய விளையாட்டை அழிக்கும் சதியைப் புரிந்து கொண்டு ஒன்றுபட்டு குரல் கொடுத்து போராட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.தற்போது மத்தியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன் இருக்கிறார். எனவே நல்லது நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலில் துவங்கிய முதல் சுதந்திர போர்!

 புத்தக கண்காட்சி உள் அரங்கில், அகநி பதிப்பகத்தின், எட்டு பாகங்கள் கொண்ட இந்திய சரித்திரக் களஞ்சியம் நூல் நேற்று வெளியிடப்பட்டது. வரலாற்று ஆய்வாளர் ப.சிவனடி எழுதிய இந்நூலில், கி.பி. 1700 முதல் 1840 ஆண்டு வரையிலான தமிழக, இந்திய, உலக வரலாறு இடம் பெற்றுள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழா, அகநி பதிப்பக அரங்கில் நடந்தது. வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட, ஓவியர் டிராட்ஸ்கி மருது பெற்றுக் கொண்டார்.  வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழர்களின் வரலாற்றை, ஆய்வு செய்து உண்மையான வரலாறு இதில் எழுதப்பட்டுள்ளது. நமக்கு வரலாறு மிக முக்கியம். ஏனெனில் வரலாறு தெரியாத எவராலும், வரலாறு படைக்க முடியாது. உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் பண்பாடு, கலாசாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் நாம் என்பதை, இந்நூல் வாசித்தால் உணர முடியும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.  தொகுப்பாசிரியர் வெண்ணிலா கூறியதாவது:இன்றைய இளைய தலைமுறைக்கு வலைதளங்கள் தெரிந்த அளவிற்கு, நம் வரலாறு தெரிவதில்லை. அவர்கள் அதை புரிந்து கொள்வதற்கே நாங்கள் கடுமையாக உழைத்து, இந்நூலை உருவாக்கி இருக்கிறோம். வரலாற்றின் பல்வேறு நிகழ்வுகளை நாம் படித்தால் தான், தற்போது அனுபவிக்கும் சுதந்திரம் எவ்வளவு ரணங்களுக்கும், ரத்தத்திற்கும் மத்தியில் பெற்றிருக்கிறோம் என்பது புரியும். குறிப்பாக, 1801ல் நடந்த மறவர் போர். இந்தியாவின் வமுதல் சுதந்திர போராட்டம் என, 1857ல் நடந்த மீரட் கிளர்ச்சியை இன்றைய வரலாறு சொல்கிறது. ஆனால், இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் நாங்குநேரியில் நடந்த மறவர் போர். மீரட் போர் 60 கிலோ மீட்டருக்குள் நடந்தது. ஆனால், மறவர் போர் 200 கி.மீ., தொலைவு வரை நடந்தது. மருது சகோதரர்கள், ஊமைத்துரை, செவத்தையா, கோபால் நாயக்கர் உள்ளிட்ட தலைமையின் கீழ் இப்போர் நடந்தது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் திருக்கோவிலில் அதற்கான கூட்டம் நடந்தது. நம்மை ஜெயிக்க முடியாமல் ஆங்கிலேயர்கள் திண்டாடினர். சரணடையவில்லை என்றால் காளையர்கோவிலை தகர்த்து விடுவோம் என ஆங்கிலேயர் எச்சரித்த போது தான், கோவிலுக்காக நம் மன்னர்களும், வீரர்களும் சரணடைந்தனர். பின் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். இந்தியாவின் முதல் சுதந்திர போர் இப்படி முடிந்தது. இந்த நூலை சாட்சியாக வைத்தே ஐகோர்ட்டில் இந்தியாவின் முதல் சுதந்திர போர், மறவர் போர் என்று அறிவிக்க கோரி வழக்கு நடந்து வருகிறது. இதுபோன்ற வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, 25 ஆண்டுகளுக்கு பிறகு பதிப்பித்திருக்கிறோம். இவ்வாறு வெண்ணிலா கூறினார்.

ராஜபக்சே தங்கை கணவர் ராமேஸ்வரம் கோவிலில் விரட்டியடிப்பு!


ராஜபக்சேவின் தங்கை நிரூபமாவின் கணவர் திருக்குமரன் நடேசன் தனது குழந்தைகளுடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது அங்கு மதிமுகவினரும், நாம் தமிழர் அமைப்பினரும் இணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது நடேசன் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபக்சேவின் தங்கை நிரூபமா. இவரது கணவர் நடேசன். இவர் அடிக்கடி தமிழகத்திற்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுப் போவது வழக்கம். பெரும்பாலும் திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களுக்கு அடிக்கடி வருவார்.


இந்த நிலையில் தனது குழந்தைகளுடன் நடேசன் சாமி கும்பிட ராமேஸ்வரம் வந்தார். அவரது வருகை குறித்த தகவல் பரவியதும் மதிமுகவினரும், நாம் தமிழர் அமைப்பினரும் அங்கு திரண்டனர். நடேசனை முற்றுகையிட்டு் போராட்டம் நடத்தினர்.கோவிலுக்கு வரக் கூடாது, தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர். அப்போது திடீரென சிலர் நடேசனை தாக்கி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் குறுக்கிட்டு நடேசனையும், அவரது குழந்தைகளையும் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் செனறனர்.

இதே நாள்...


  • உலகின் மிகப் பழமையான சுரங்க ரயில்பாதை லண்டனில் திறக்கப்பட்டது(1863)
  •  விக்கிப்பீடியா, நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது(2001)
  •  தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தம் ரங்கம்பிள்ளை இறந்த தினம்(1761)
  •  முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது(1920)

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு 30 மணி நேரம் 6 நிமிடம் தொடர்ந்து பேசி, உலக கின்னஸ் சாதனை நாகர்கோவிலைச் சேர்ந்தவர் மாடசாமி.

 சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 30 மணி நேரம் 6 நிமிடம் தொடர்ந்து பேசி, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர். நாகர்கோவிலைச் சேர்ந்தவர் மாடசாமி, 38. தொடக்கப்பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரை, கேரளாவிலும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கம்பம், ராயப்பட்டியில் உள்ள அரசு பள்ளியிலும், திருவனந்தபுரம் பல்கலையில், பி.எஸ்.சி., பட்டமும் பெற்றுள்ளார். தற்போது, கேரளா மாநிலம், இடுக்கிமாவட்டம், பீர்மேடு பகுதியில், கடந்த 1997ம் ஆண்டு முதல், போஸ்டல் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றி வருகிறார். இவர், சுவிட்சர்லாந்தில் செயல்பட்டு வரும், உலக சமாதான கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு, போர், யுத்தம் இல்லாத உலகம் உருவாக்குவதை நோக்கமாகவும், சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வை முக்கியமாக கொண்டும், செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள மாடசாமி, யுத்தமில்லாத உலகம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, வனப்பாதுகாப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்,தொடர்ந்து 30 மணிநேரம் 6 நிமிடம் பேசி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன், கடந்த 2009ல், அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், மைக்பேசியா என்பவர், 28 மணிநேரம் தொடர்ந்து பேசியதே, கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் முறியடித்துள்ளார். இடுக்கி அருகே, பீர்மேடு பகுதியில், ஆயிரக்கணக்கானோர் மத்தியில் இச்சாதனையை மாடசாமி நிகழ்த்தியுள்ளார். கோவையில் மாடசாமி கூறியது: ஒவ்வொரு மணி நேரத்துக்கு, ஒரு தலைப்பு வீதம், கூடங்குளம் அணுமின்நிலையம், உலக மகாயுத்தம், அசாம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் லைசென்ஸ் இல்லாமல் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், சோமாலியா நாட்டில் நிலவும் உணவுபஞ்சம், உலகவெப்பமயமாதல் உள்ளிட்ட 30 தலைப்புகளில் பேசினேன். ஒரு மணி நேரத்துக்கு, ஐந்து நிமிடம் இடைவேளை தரப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, உலகவெப்பமயமாதல் குறித்து, பள்ளி குழந்தைகளிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன், என்றார்.

நதிகளை இணைக்க இதுவரை மத்திய அரசு செய்துள்ள பணி என்ன? சுப்ரீம் கோர்ட்!

நதிகளை இணைக்க இதுவரை மத்திய அரசு செய்துள்ள பணி என்ன? இது தொடர்பான சுருக்கமான குறிப்பை கோர்ட்டால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள நதிகளை எல்லாம் இணைக்க வேண்டும் என, பரவலாக கோரிக்கை எழுந்ததை அடுத்து, கடந்த 2002ம் ஆண்டு அக்டோபரில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், விசேஷ குழு ஒன்றை நியமித்தார். இந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதில், நதிகள் இணைப்பை இரண்டு பிரிவாக மேற்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. மேலும், நாட்டில் உள்ள நதிகளை இணைத்தால், 2050ம் ஆண்டிற்குள், 16 கோடி ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், பெரிய நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில், நதிகள் இணைப்பு தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "நாட்டில் உள்ள நதிகளை இணைக்க இதுவரை மத்திய அரசு செய்துள்ளது என்ன? இது தொடர்பான, சுருக்கமான குறிப்பை, இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவி வரும் வழக்கறிஞர் ரஞ்ஜித் குமார், ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு முன், இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பெரும் பொருட் செலவாகும். மத்திய அரசுக்கு பெரிய அளவில் நிதிச் சுமை ஏற்படும். எனவே, செலவுகள் குறித்த அறிக்கை விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். பெரிய அளவில் செலவாகும் என, தெரிந்தால், கோர்ட் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என, தெரிவித்தது

ஒரு போதும் நிதி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியதில்லை நரேந்திர மோடி!


எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது. சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டே குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது. நான் ஒரு போதும் நிதி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியதில்லை' என, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பேசிய மோடி கூறியதாவது: பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில், சூரிய சக்தி மின் உற்பத்திப் பிரிவுகளை அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து இதற்கு எந்தப் பதிலும் இல்லை. தங்களுக்கு மத்திய அரசு மற்றும் பிரதமரின் ஆசி உள்ளதாக, ராஜஸ்தான் முதல்வர் கூறினார். ஆனால், அந்த அதிர்ஷ்டம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசிடம் இருந்து நாங்கள் எதையும் பெறவில்லை. எங்களின் சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டே, நாங்கள் எங்கள் மாநிலமான குஜராத்தை வளர்ச்சியடையச் செய்துள்ளோம்.


பிரதமருக்கு ஒரு முதல்வர் கடிதம் எழுதினால், வழக்கமாக நிதி வேண்டும் என, கேட்டுத்தான் கடிதம் எழுதுவார். நானும் கடந்தாண்டு ஒரு கடிதம் எழுதினேன். ஆனால், அந்தக் கடிதத்தில் நிதி கேட்கவில்லை. அதற்கு மாறாக குஜராத் மாநிலத்திற்கு ஒரு செயற்கைக் கோளை ஒதுக்க வேண்டும் என, கோரியிருந்தேன். அந்தக் கோரிக்கையால், மத்திய அரசு குழப்பம் அடைந்துள்ளது. நான் ஒரு போதும் நிதி கேட்டு பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதியதில்லை. கடந்த 2008ம் ஆண்டில், உலகளவில் பொருளாதார மந்த நிலை நிலவிய போது, வட்டமேஜை மாநாடு ஒன்றைக் கூட்டும்படி, பிரதமர் மன்மோகன்சிங்கை நான் கேட்டுக் கொண்டேன். பிரதமரும் அதை ஆமோதித்தார். ஆனாலும், எந்தக் கூட்டமும் கூட்டப்படவில்லை. அதனால், நாங்களே உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றைக் கூட்டினோம். அதில், 100 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். 450 மில்லியன் டாலர் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டோம். இவ்வாறு நரேந்திர மோடி

ஊட்டச்சத்து குறைபாடு தேசிய அவமானம்...


நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உலகில் 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்திய குழந்தை யாக உள்ளது என்றும், இது இந்திய தேசத்திற்கு அவமானமாக இருக்கிறது என்றும் பிரதமர்

 பிரதமர் கவலையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஊட்டச்சத்து குறைபாடு நீக்கிட அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது. பல்முக விழிப்புணர்வு திட்டங்கள் 200 மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கிறது. இந்த நிலை முற்றிலும் சீர்செய்யப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது என்பது நமக்கு ஏற்பட்டுள்ள தேசிய அவமானமாக இருக்கிறது. மாநில அரசுகளும் இது தொடர்பான திட்டத்திற்கு துணையாக நின்று செயலாற்ற வேண்டும்.

ஊட்டச்சத்து குறைவு நாட்டில் படு வேகமாக வளர்ந்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும். நாட்டின் உற்பத்தி அளவு அதிகரித்து வந்தபோதிலும் இந்த நிலையை இன்னும் குறைக்க முடியாத நிலையில் இருக்கிறோம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42 சதவீதம் எடை குறைவாக இருக்கின்றன. குடிநீர் மற்றும் சுகாதாரம் பேணிக்காத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் சுகாதாரம் வளர்க்கும் இன்னும் செயலாற்ற வேண்டும். குழந்தைகள் ஒருங்கிணப்பு திட்டத்தை மட்டுமே நம்பி அரசு சமாளிக்க முடியாது. இவ்வாறு அவர்

09 January, 2012

பார்த்ததில் பிடித்தது!


என் தமிழ் மேல் உனக்கேனிந்த கொலவெறி?


சகோதரா மன்னித்துவிடு... தனுஷின் கொலவெறிப்பாட்டை அங்கீகரித்த ஒட்டு மொத்த தமிழர் சார்பிலும் மன்னிப்பு கோருகிறேன்... - தனுஷின் 'தமிழ் கொலவெறிப்பாட்டு'க்கு எதிராக, யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் அட்டகாசமான தமிழில் எழுதி அதே மெட்டில் பாடியிருக்கும் 'என் தமிழ் மேல் உனக்கேனிந்த கொலவெறிடா?' என்ற பாட்டைக் கேட்ட பிறகு பலரும் உதிர்த்த கமெண்ட் இது! நாடே தனுஷின் கொலவெறி பற்றி பேசிக் கொண்டிருக்க, மொழி ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது இந்தப் பாடல்.

இந்தப் பாட்டைக் கண்டிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து எஸ் ஜே ஸ்டாலின் உருவாக்கியுள்ள 'கொலைவெறிப் பாடலுக்கு’ அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஏக வரவேற்பு. தமிழ் உணர்வாளர்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இந்தப் பாடலை உருவாக்கிய ஸ்டாலினை பாராட்டித் தள்ளிக் கொண்டுள்ளனர். 'என் தமிழ் மொழி மேல் உனக்கேன் இந்தக் கொலைவெறிடா’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் பப்பா பப்பா என பாடிக் கொண்டிருக்கும் தனுஷை 'தப்பு தம்பி தப்பு' என தலையில் குட்டுவது போல அமைந்துள்ளன. இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள் 1.30 லட்சம் பேர் கேட்டு ரசித்திருக்​கிறார்கள். இன்றைய நிலவரப்படி 1.70 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ள பாடல் இது. யாழ் நகரைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலை இயற்றி, பாடி, இசையமைத்த எஸ்.ஜெ.ஸ்டாலினுக்கு, உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

இந்தப் பாடலில் ஈழத் தமிழர்களின் அடையாளங்கள், மண் சார்ந்த நினைவூட்டல்கள் அழகாக இடம்பெற்றுள்ளது இன்னொரு சிறப்பு.

'கொலவெறிடா - யாழ்ப்பாணம் பதிப்பு' என்ற தலைப்பில் வந்துள்ள அந்தப் பாடலின் வரிகள் முழுமையாக:

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…

கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்

தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு

தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பை இழந்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…

தமிழ்க் கொலையாளிகளுக்கு இதைவிட ஒரு வன்மையான கண்டனத்தை யாரும் சொல்லிவிட முடியாது!

குழந்தைங்க ஆக்டிவா இருந்தா நல்ல படிப்பாங்க!

துறு துறு வென ஓடி ஆடி விளையாடும் குழந்தைகள், கல்வியறிவில் சிறந்து விளங்குவார்கள் என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக நேரம் குழந்தைகள் விளையாடினால் அவர்களை தடுக்க வேண்டாம் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.குழந்தைகளின் விளையாட்டுத் திறனுக்கும், கல்விக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து நெதர்லாந்தில் உள்ள வியு யுனிவர்சிட்டி மெடிகல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் அமிகா சிங் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 6 முதல் 18 வயதுக்குட்பட்ட வயதினரை உள்ளடக்கிய இந்த ஆய்வுகள் 53 முதல் 12,000 பேர் இந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடல் இயக்கத்துக்கும் கல்வித் திறனுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மூளைக்கு ஆக்ஸிஜன் அதிகம் விளையாடும்போது உடல் உறுப்புகள் இயங்கும். இதனால் அதிகப்படியான ரத்தம் மற்றும் ஆக்சிஜன் மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நோர்பைன்பிரின் மற்றும் எண்டோர்பைன்ஸ் அளவு அதிகரித்து மூளை சுறுசுறுப்படைகிறது. 

இதன்மூலம் புதிய நரம்பு செல்கள் உண்டாவதால் கல்வியில் சிறந்து விளங்க காரணமாகிறது. எப்போதும் துறுதுறுவென ஓடியாடி விளையாடும் சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர்களைவிட படிப்பில் சிறந்து விளங்குவது தெரியவந்தது. உடற்பயிற்சியும் இதுவிஷயத்தில் பலன் அளிக்கும். இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவில் ஏற்கனவே நடத்தப்பட்ட 10 ஆய்வுகள் மற்றும் கனடா மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட தலா 1 ஆய்வு முடிவுகளையும் இந்த ஆய்வாளர் ஆராய்ந்ததில் இந்த முடிவு.

2011ல் கலக்கிய ஆங்கிரி பேர்ட்ஸ்...


எந்த நேரமும் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு முக்கிய பொழுது போக்கே கேம்ஸ் விளையாடுவது தான். இந்த வசதியை கம்ப்யூட்டரிலும், மொபைல் போன்களிலும் எளிதாக பெறலாம். 2011-ஆம் ஆண்டு அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட விளையாட்டு ஆங்கிரி பேர்ட்ஸ் என்ற கேம் தான்.
பல இளைஞர்களாலும், சிறியவர்களாலும் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட விளையாட்டு என்ற பெருமையை இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேம் பெற்றுள்ளது. இந்த கேம் விதவிதமான ப்ளாட்ஃபார்மில் இருந்து 500 மில்லியன் தடவை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாக, நவம்பர் மாதம் ரோவியோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த ரோவியோ நிறுவனம் தான் ஆங்கிரி பேர்ட்ஸ் வீடியோ கேமை உருவாக்கியது.
2011 ஆண்டில் டாப் 10 கேம் அப்ளிக்கேஷன்களில் ஃப்ரூட் நின்ஜா, ஆங்கிரி பேர்ட்ஸ், கட் த ரோப், டைனி விங்ஸ் போன்ற விளையாட்டுகள் இடம் பிடித்து உள்ளது. அமேசான் ஆப்ஸ்டோர், ஆப்பிள் ஆப்ஸ்டோர், ஆன்ட்ராய்டு மார்கெட், பிளாக்பெர்ரி ஆப்ஸ்வேர்ல்டு, விண்டோஸ் போன்-7 மார்கெட், ஒவி ஸ்டோர் போன்ற இடங்களிலும் இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேம் அதிகம் டவுன்லோட் செய்யப்படுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இதே போல் உதாரணத்திற்கு இன்னொரு விளையாட்டை சொல்ல வேண்டும் என்றால் டாக்கிங் டாம் கேட். இது அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது யார் என்ன பேசினாலும் அதை ஒரு பூனை பொம்மை திருப்பி பேசுகிறது. இந்த டாக்கிங் டாம் பல பேரை கவர்ந்து இருக்கிறது. இந்த டாக்கிங் டாம் கேட் அனிமேஷன் பூனைகுட்டியை காட்டினால் நிறைய முதியவர்களும் கூட இதனுடன் பேச ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்கு மனோ ரீதியாக இன்னொரு காரணமும் சொல்லலாம். பொதுவாக வயோதிகர்களுடன் யாரும் அதிகம் பேசுவது இல்லை. இதனால் பேசியவுடன் திருப்பி பேசும் இந்த டாக்கிங் டாம் கேட் அனிமேஷன் பூனைகுட்டியிடன் முதியவர்கள் அதிகம் சிரித்து பேசுகின்றனர். கம்ப்யூட்டர்கள் மனிதர்களை எந்திரமாக மாற்றுவதாக ஒரு கருத்து உள்ளது. இப்பொழுது உள்ள ஒரு உண்மை என்னவென்றால் எந்திரமாக திரியும் மனிதர்களை இது போன்ற கேம்கள் மனிதர்களாக மாற்றுகிறது என்று தாராளமாக கூறலாம்.

அடிச்சு கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதிங்க!


 கறுப்புப் பணம் சம்பந்தப்பட்ட கணக்கு விவரங்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்றும், யாராவது வற்புறுத்திக் கேட்டாலும் சொல்லவே கூடாது என்றும் வருமான வரித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கறுப்புப் பணம் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். தேசிய அவமானம். ஆனால் இதனை சமூகத்தின் பெரிய மனிதர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் பலரே பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர். வெளிநாட்டு வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது குறித்து பல காலமாகப் பேசப்பட்டாலும், எந்த அரசும் இந்தப் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வர முயற்சிக்கவில்லை.

இப்போது கறுப்புப் பணம் குறித்து அதிகம் பேசத் தொடங்கிவிட்டதால் உஷாராகிவிட்ட பலர், பணத்தை இடம் மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், ரகசிய வங்கி கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை சம்பந்தப்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா பெற்றுள்ளது. லிச்டென்ஸ்டீனில் உள்ள எல்.ஜி.டி. வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை ஜெர்மனி அரசிடம் இருந்து வருமான வரித்துறையின் உயர் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் (சி.பி.டி.டி.) பெற்றுள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து 9,900 தகவல்கள், ஆவணங்களைப் பெற்றுள்ளது. இந்த பெயர் பட்டியலின் ரகசியத்தை பாதுகாப்பதில் சி.பி.டி.டி. மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

ஒருவேளை இந்தப் பெயர்ப் பட்டியல் வெளியாகிவிட்டால், வெளிநாடுகள், கறுப்பு பண முதலைகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதை நிறுத்தி விடும் என்றும், மேற்கொண்டு எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள முன்வராது என்றும் சி.பி.டி.டி. கூறி வருகிறது. இந்த பெயர் பட்டியல், ஏற்கனவே கொச்சி, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வருமான வரித்துறை பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு இயக்குனரகம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள், இந்த பெயர் பட்டியலைக் கேட்டு வருகின்றன.

சொல்லவே சொல்லாதீங்க... அப்படி கேட்கும் அரசுத் துறைகளிடம் எழுத்துமூலம் உறுதிமொழி பெற்ற பிறகே பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு சி.பி.டி.டி. உத்தரவிட்டுள்ளது. 'பெயர் பட்டியலை வரிவசூலுக்காகவோ அல்லது வரிஏய்ப்பு விசாரணைக்காகவோ மட்டுமே பயன்படுத்துவோம்' என்று எழுதி கையெழுத்து பெற்ற பிறகே, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு இந்த பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது இவர்களை கைது செய்யவோ, இவர்கள் பற்றி செய்தி வெளியிடவோ கூடாது.

மேலும், இந்த பெயர் பட்டியல், எந்த அதிகாரி பெயரில் பெறப்படுகிறதோ, அவரே இந்த பட்டியலை ரகசியமாக பாதுகாப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், எத்தகைய சோதனையிலும் இந்தப் பட்டியல் ரகசியமாகவே இருக்க வேண்டும் என்றும் சி.பி.டி.டி. கூறியுள்ளது. பெயர் பட்டியலை கேட்டு வாங்கும் அரசு விசாரணை அதிகாரிகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணிக்கும் பணியிலும் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மானத்தை இத்தனை அக்கறையோடு காக்கும் அரசு, உள்நாட்டில் வரி செலுத்தாதவரிடத்திலும் இதே கரிசனம், கவனம், ரகசியக் காப்பைக் காட்டுமா?

புலிகளின் ஸ்டாம்புகளுக்கு இலங்கை தபால்துறை தடை!


விடுதலைப் புலிகளின் ஸ்டாம்புகள் கொண்ட கடிதங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் போது, சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளை புறக்கணித்துச் செயல்படப் போவதாக இலங்கை தபால் துறை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொண்ட ஸ்டாம்புகளை பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு ஸ்டாம்பும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.ஆனால், இது தொடர்பான சர்வதேச தபால் ஒன்றியத்தின் சில விதிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை தபால் துறை தெரிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் தொடர்பான அடையாளங்களுடன் கூடிய ஸ்டாம்புகள் ஒட்டப்பட்ட தபால்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று பிரான்ஸ் தபால்துறைக்கு இலங்கை தபால்துறை கோரிக்கை வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் உள்நாட்டு சட்டங்கள், விதிகளின்படியே செயல்படப் போவதாகவும் சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளுக்கு இணங்கப் போதில்லை என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.

மாமியார் பெயரில் 550 ஏக்கர், தங்கச்சி பெயரில் 40 கோடியில் மாளிகை, அக்கா பெயரில் சொத்துக்கள்- ராமதாஸ்!


தமிழ், தமிழர் என்று பேசிக் கொண்டு எங்கு தனது தோட்டம், அலுவலகம், மக்கள் டிவி ஆகியவற்றில் மலையாளிகளுக்கும், தெலுங்கர்களுக்கும்தான் வேலை கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஏற்காட்டில் மாமியார் பெயரில் 550 ஏக்கர் தோட்டம், 40 கோடியில் தங்கை பெயரில் மாளிகை, சென்னையில் அக்கா பெயரில் சொத்துகள் என்று வாங்கிக் குவித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார் பண்ருட்டி வேல்முருகன். விழுப்புரத்தில் நடந்த இளம்புயல் பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு வேல்முருகன் பேசுகையில் டாக்டர் ராமதாஸை கடுமையாக சாடிப் பேசினார். தமிழ், தமிழர் என்று வசனம் பேசிக் கொண்டு மலையாளிகளையும், தெலுங்கர்களையும்தான் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பம் ஆதரித்து, வாழ வைத்துக் கொண்டிருப்பதாக அப்போது குற்றம் சாட்டினார் வேல்முருகன்.

அவர் பேசுகையில், பாமகவின் வளர்ச்சிக்கு 21 பேர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களில் 20 பேர் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அந்த குடும்பங்கள் வாழ வழியின்றி தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்றபோது, நான் என்ன கொட்டியா வைத்திருக்கிறேன், ஏன் நாயைப்போல் சுற்றி சுற்றி வருகிறீர்கள் என்றார். உங்கள் மகன் மந்திரியாக, உறவினர்கள் எம்.எல்.ஏ.க்களாக உயிரை இழந்த இந்த மக்களுக்கு ஏதாவது செய்ததுண்டா, உங்களால் அமைச்சராக்கப்பட்டவர்களால் இந்த மக்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு வழங்கியதுண்டா. அவரது எடுபிடிகள், நண்பர்கள், அன்புமணி ஆகியோர் அமைச்சர்களாவதற்கு தியாகம் செய்த தியாகிகளுக்கும், சமூகத்தினருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. அவர்களது, பினாமிகளை அமைச்சர்களாக்கி சம்பாதித்தனர்

பேராசிரியர் தீரன் 1996-ல் சட்டப்பேரவையில் வாதாடி அந்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும், மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகையும் பெற்றுத்தந்தார். பின்னால் வந்த அரசு அதை நிறுத்தியபோது இவர்கள் கேட்டதுண்டா. நாங்கள் போராட முயன்றதை ராமதாஸ் தடுத்தார். நாங்கள் அண்டா, குண்டாவை வைத்து, காணி நிலங்களை விற்று, கல்வி அறக்கட்டளையை உருவாக்கினோம்.இந்த சமுதாயத்தில் எத்தனையோ தியாகிகள் இருக்கும்போது, அந்த கல்வி நிறுவனத்திற்கு உங்கள் மனைவி சரஸ்வதி பெயரை வைத்தது ஏன். நீங்கள் நடத்தும் தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் உண்டா. ஏன் ஒரு தமிழ்நாட்டு தமிழன் கூட இல்லையே மக்கள் டிவியிலும் அவர்கள் குடும்பத்தினரே உள்ளனர். மலையாளி, தெலுங்கர்கள் தான் நிர்வாகிகளாக, ஆசிரியர்களாக உள்ளனர். தைலாபுரம் பயிற்சி பட்டறை இயக்குனரும் மலையாளிதான். வாயில்லா பூச்சிகள் தான் அவரிடம் உள்ளனர்

வன்னியர்களிடம் நிதி திரட்டி கட்டிய பல்கலை., யில் யாருக்காவது வேலை கொடுத்தாரா. அவர் குடும்பத்தினர் டிரஸ்ட் நிர்வாகிகளாக உள்ளனர். வெளிநபராக இருந்த கோவிந்தசாமியும் தற்போது நீக்கப்பட்டுள்ளார். ஏற்காட்டில் மாமியார் பெயரில் 550 ஏக்கர் தோட்டம், 40 கோடியில் தங்கை பெயரில் மாளிகை, சென்னையில் அக்கா பெயரில் சொத்துகள் உள்ளன. தியாகிகளுக்கு 10 லட்சத்தில் வீடு கட்டச் சொன்னேன், கல்லூரிக்கு அவர்கள் பெயரை வைக்க கேள்வி கேட்டேன். பதில் கூறவில்லை. கோடிகள் வந்தது குறித்த புள்ளி விபரங்கள் என்னிடம் உள்ளது. லாபத்திற்காக கட்சி நடத்துகின்றார்.

இந்த தேர்தலுக்கு கூட கருணாநிதியிடம் ராமதாஸ் குடும்பத்தினர் பெட்டி வாங்கியுள்ளனர். திண்டிவனம் வழக்கில் சி.பி.ஐ., உண்மை கொலையாளிகளை விசாரிக்க வேண்டும் டாஸ்மாக், ரிலையன்ஸ் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம், பின்னர் பெட்டி வாங்கிக் கொண்டு முடித்துக் கொள்வது. பவர் கார்ப்பரேஷனிடம் கோடிகளை வாங்கிக் கொண்டு ராமதாஸ் போராட்டத்தைப் பின் வாங்கினார். ஈழத் தமிழர் பிரச்னையின் போது அன்புமணியின் பதவிக்காக கூட்டணியை விட்டுவெளியேறவில்லை. அதை நான் சுட்டிக் காட்டியதை ராமதாஸ் ஏற்கவில்லை என்றார் வேல்முருகன். 

கை குலுக்கும் பழக்கம் குரங்குகளிடமிருந்து வந்ததா ?

ஷேக் ஹாண்ட் கொடுக்கும் பழக்கம் மேல்நாட்டுக்காரர்களிடம் இருந்து இன்று உலகிலுள்ள எல்லாரையும் தொற்றியுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் நம்மூர் பிரமுகர்களை சந்திக்க வந்தால் நீண்ட நேரமாக கை குலுக்குவதை டிவிகளில் காட்டுகிறார்கள். இந்தப் பழக்கம் குரங்குகளிடம் இருந்து மனித இனத்தைத் தொற்றிய சுவாரஸ்யமான கதை உங்களுக்கு தெரியுமா?  ஒரு பெண்ணை ஆணுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை பாணிக்ரஹணம் என்பர். அதுபோல, ராமபிரானை சுக்ரீவன் சந்தித்து அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். அதற்கு அடையாளமாக தனது கையை அவர் பிடித்தால் போதும் எனக்கருதி க்ருஹயதாம் பாணினா பாணிம் என்றான். கையைப் பிடித்தாலே நம் நட்பு உறுதியாகி விட்டது என்று பொருள். ராமன் மனிதனாக வந்திருந்தார் என்றாலும் அவர் கருணாமூர்த்தி. அவரவர் தரத்தைப் புரிந்து கொண்டு, அதே தரத்திற்கு தானும் இறங்கி வந்து அனுக்கிரஹம் செய்பவர். எனவே, குரங்கு என்றும் பாராமல் சுக்ரீவனின் கையைப் பிடித்து நட்பை உருவாக்கிக் கொண்டார். இவ்வாறு முதன் முதலில் கைபிடித்து உருவாகிய நட்பு, இன்று பரிணாம வளர்ச்சி பெற்று கை குலுக்கும் அளவுக்கு போயிருக்கிறது. வெள்ளைக் காரர்கள் நம் நாட்டை ஆண்ட போது, அவர்களை குரங்குக்கு ஒப்பிட்டு பரிகாசம் செய்ய, ஆன்மிக உபன்யாசகர்கள் இந்த மேற்கோளை காட்டுவார்களாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...