|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 February, 2013

சும்மா சூட்டை கிளப்பும் மசாஜ்!


காதலனுடன் தனியாக ஓர் இரவு?

முற்றிலும் பெண்களே பங்கேற்கும் ஏ.கே.பி.48 என்ற பாப் இசைக்குழு கடந்த 2005ம் ஆண்டு ஜப்பானில் துவங்கப்பட்டது. 16 முதல் 20 வயதுக்குட்பட்ட சுமார் 90 பெண்கள் இந்த இசைக்குழுவில் பாடகிகளாக உள்ளனர். ஜப்பானையும் தாண்டி ஆசியா கண்டம் முழுவதும் ஏ.கே.பி.48 பாப் இசைக்குழு பிரபலமடைந்துள்ளது. இந்த இசைக்குழுவில் இடம் பெற்றுள்ள பாடகிகளுக்கு நிர்வாகத்தின் சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகக்கூடாது என்பது முக்கிய கட்டுப்பாடு ஆகும். இந்த கட்டுப்பாட்டை மீறி, வேறொரு இசைக்குழுவில் பணியாற்றும் அலன் ஷிராஹாமா என்ற வாலிபரின் வீட்டிலிருந்து ஏ.கே.பி.48 பாடகி மினாமி மினேகிஷி வெளியே வரும் புகைப்படத்துடன் கூடிய செய்தி நேற்று ஜப்பான் பத்திரிகைகளில் வெளியாகின. இந்த செய்தி வெளியான சில மணி நேரத்திற்குள் தனது தலைமுடியை மொட்டை அடித்துக்கொண்ட மினாமி மினேகிஷி வீடியோ மூலம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

'இப்படி மன்னிப்பு கேட்பதால் மட்டும் எனது தவறு நியாயமாகிவிடும் என நான் கருதவில்லை. இந்த இசைக்குழுவில் இருந்து வெளியேற்றப்பபடுவதை நான் விரும்பவில்லை. நான் செய்த தவறுக்காக வருத்தப்படுகிறேன். எனது ரசிகர்களும், இசைக்குழுவின் நிர்வாகிகளும் என் தவறை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என கண்ணீர் பொங்க அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். 
 

பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை!

, ஓடும் பேருந்தில், மருத்துவக் கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். நாட்டையே, உலுக்கிய இந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.வர்மா தலைமையில், இமாச்சல் பிரதேச ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, லீலா சேத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல், கோபால் சுப்ரமணியம் ஆகிய, மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், பாலியல் வன்முறையை தடுக்க தேவையான சட்டங்கள், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, இந்த குழு, ஆய்வு செய்து, 200 பக்கங்களை உடைய அறிக்கையை, உள்துறை அமைச்சகத்திடம், பரிந்துரையாக, கடந்த, 23ம் தேதி அளித்தது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு, தூக்கு தண்டனை வழங்குவது உட்பட, பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டு இருந்தன.

இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது பற்றி, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என, நீதிபதி வர்மாவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம், நேற்று நடந்தது. இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், வர்மா கமிஷன் அறிக்கை பரிந்துரை குறித்தும், அவசர சட்டம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.பின், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு, ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த அவசர சட்டத்தை, நாளை மறுநாள் மத்திய அரசு வெளியிடும் என, தெரிகிறது.மிக கொடூரமான பலாத்கார குற்றத்திற்கு, தூக்கு தண்டனை, பலாத்கார குற்றத்துக்கு, 20 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கும் வகையில், அவசர சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது

Poda Podii Movie 2012


மூளை செயல்பட 1.5 வினாடிகள்?


நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதற்கு காரணம் அதிவேகம். ஏனெனில், நெடுஞ்சாலையில் செல்லும்போது காரின் வேகத்தை சரியாக உணர்ந்து கொள்ள முடியாததே இதற்கு காரணம். நெடுஞ்சாலையில் செல்லும்போது காரின் கதவுகளை முழுவதுமாக அடைத்துவிட்டு, ஏசியை போட்டுக் கொண்டு செல்லும்போது வேகத்தை முழுமையாக உணர முடியாது. 100 கிமீ வேகத்துக்கும் மேல் செல்லும்போது கூட சாதாரணமாகவே தெரியும். இதனைத்தான் Speed blindness என்று கூறுகின்றனர். மேலும், முன் பின் செல்லும் வாகனங்களின் வேகமும் உங்களது வாகனமும் ஒரே வேகத்தில் செல்வதால் உங்கள் வாகனத்தின் வேகத்தை உணர முடியாமல் மெதுவாக செல்வது போன்ற மாயையை மூளைக்கு ஏற்படுத்தி விடும். 
ஒருவேளை, அவசரத்தில் திடீரென பிரேக் பிடித்தால் கூட அது பயனளிக்காது. உதாரணமாக, 80 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் குறைந்தது 28.11 மீட்டர் தூரத்தில்தான் கார் நிற்கும். இதற்கு 2.59 வினாடிகள் ஆகும். இதுவே 100 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் 54.33 மீட்டர் தூரத்தில்தான் கார் நிற்கும். இதற்கு 3.73 வினாடிகள் ஆகும். இது சாலைநிலைகளை பொறுத்து. சில வேளை சாலையில் மணல் படர்ந்திருந்தால் இந்த தூரம் மேலும் அதிகரிக்கும். இதுதவிர, காரின் எடையை பொறுத்தும் இந்த தூரம் மாறுபடும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட கார்களில் இந்த தூரம் கணிசமாக குறையும். சாதாரண பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட காராக இருந்தால் ஒருமுறை பம்ப் செய்து பின்னர் பிரேக் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், கார் கட்டுக்குள் கொண்டு வருவது சிரமம் என்பதோடு, பல்டி அடிக்கும் வாய்ப்பும் அதிகம். நாம் கால்களால் பம்ப் செய்து பிரேக் பிடிப்பதைதான் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் குறிப்பிட்ட இடைவெளியில் சீராக பிரேக்கிங் பவரை வீல்களுக்கு அனுப்புகிறது. இதனால், கார் ரோல்ஓவர் ஆகாமல் சரியான இடத்தில் நிற்கும். 
அதெல்லாம் சரி, காரை கட்டுக்குள் கொண்டு வர உங்களது மூளை வேளை செய்ய வேண்டுமே. அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அவசர நிலையை உணர்ந்து மூளை செயல்பட 1.5 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். சமதள பாதையில் செல்லும் வேகத்தை விட சரிவான பாதையில் வேகத்தை பாதியளவு குறைத்துவிடுவது நல்லது. விபரீதத்தை உணர்ந்து மூளை செயல்படுவதற்கு எடுக்கும் கால விரயத்தைத்தான் MOTION INDUCED BLINDNESS என்று கூறுகின்றனர். எனவே, நம் நாட்டில் நெடுஞ்சாலைகளில் அதிகபட்சம் 90 கிமீ வேகத்தில் செல்வது கூடுதல் பாதுகாப்பு. அதுவும், சாலையில் போக்குவரத்து நிலையை பொறுத்தும் நம் வேகம் இருக்க வேண்டும். மேலும், இந்த ஸ்பீடு பிளைன்ட்னஸ் வராமல் இருக்க அடிக்கடி ஸ்பீடோமீட்டரிலும் ஒரு கண் வைக்க வேண்டும். குவான்ட்டோ உள்ளிட்ட கார்களில் 100 கிமீ வேகத்தை தாண்டும்போது பீப் ஒலி அடித்து எச்சரிக்கும் வசதி இருக்கிறது. எது எப்படியோ, மித வேகம், மிக நன்று அல்லவா?

 

அப்பா இப்பத்தான் ஆரம்பிக்கிறாங்களாம்?


வங்கிகளில் செக் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறார். ஆன்லைன் மூலமான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் செக் பயன்பாட்டுக்கு கணிசமாக ஒரு தொகையை பிடித்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. செக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் எத்தனை சதவீதத்தை கட்டணமாக வசூலிப்பது என்பதை ரிசர்வ் வங்கி தீர்மானிக்கவில்லை. செக் புத்தகங்களுக்கு அதிக கட்டணத்தை வசூலிப்பது என்பதும் ரிசர்வ் வங்கியின் யோசனை.இதற்காக மக்களிடம் கருத்து கேட்புகளைக் கோருகிறது ரிசர்வ் வங்கி.. ஆன்லைன் பரிமாற்றத்துக்கு என்ன மாதிரியான சலுகைகள் கொடுக்கலாம்., செக் பயன்பாட்டுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பது பற்றி ரிசர்வ் வங்கிக்கு கருத்து தெரிவிக்கலாமாம்.

 

அடுத்த ஆட்டம் அமெரிக்காவில்!



அமெரிக்காவில் வெளியாகியுள்ள கோக் விளம்பரப் படம் அங்குள்ள அரபு அமெரிக்கர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. கோகோ கோலா சூப்பர் பவுல் விளம்பரம்தான் தற்போது அங்கு பஞ்சாயத்தைக் கிளப்பியுள்ளது. எப்படி தமிழகத்தில் விஸ்வரூபம் இஸ்லாமியர்களின் அதிருப்தியை வாரிக் கட்டிக் கொண்டுள்ளதோ அதேபோல அரபு அமெரிக்கர்கள், இந்த கோக் விளம்பரத்திற்கு எதிராக வரிந்து கட்டிக் கிளம்பியுள்ளனர். எப்பப் பார்த்தாலும் அராபியர்களை இழிவுபடுத்துவது போலவே காட்டுகிறார்களே இந்த அமெரிக்கர்கள் என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

 

கடல் உள்வாங்கிருச்சாமே! அப்படியா?

31 January, 2013

போ...செத்துப்போ.. நான் தடுக்க முடியுமா?


வரைமுறையைக் கடைபிடிக்காமல், உடற்பயிற்சியை செய்தால் பலன்?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலை பராமரித்துக் கொள்ளுதல் மிக அவசியம். சிலர் உடல் கட்டுமானத்துடன் வைத்து கொள்ள விரும்புவர். அப்படி உடல் கட்டுமானத்துடன் இருக்கையில், எத்தகைய உணவுகளை உண்ண வேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது. அந்த வரைமுறையைக் கடைபிடிக்காமல், எந்த ஒரு உடற்பயிற்சியை செய்தாலும் அது பலன் தராது. இவ்வாறு மேற்கொள்வதால் நம் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகளை நீக்கி, உடலுக்கு ஏற்ற எடையை தயார் செய்து, ஆரோக்கியமான உடலமைப்பைக் கொடுக்கும். இப்போது எதை சாப்பிடலாம், எதை சாப்பிடகூடாது மற்றும் எந்த வகையான உணவுகள் உடல் கட்டுமானத்திற்கு ஏற்றது
   
1. நம் உடலை கட்டுமானத்துடன் வைக்க அடிப்படைத் தேவை புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகள், குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புள்ள உணவை சாப்பிட வேண்டும். அதற்கு கீழே பட்டியலிடப்பட்டுள்ள உணவு திட்டத்தை பின்பற்றவும். மசாலா அதிகமுள்ள உணவை தவிர்க்கவும். சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம். காலைளில் குடிக்கும் டீ அல்லது காப்பியில், சர்க்கரை அல்லது கிரீம் சேர்த்து கொள்ள விரும்பினால், ஆடை இல்லாத பால் பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்கு நல்லது. 
 
 2. ஒவ்வொரு 2-3 மணிநேர இடைவெளியில் உணவு சாப்பிட வேண்டும். உடல் கட்டுமானத்தை வலியுறுத்த புரதங்கள் கொண்ட உணவினையும், உங்கள் உணவில் அதிக காய்கறிகளை சேர்த்து கொள்வதும் அவசியம். மேலும் நார்சத்து நிறைந்த உணவை சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலானது சரியான நிலையில் இருக்க உதவும். ஒருவேளை ஒரு நேரம் உணவை சாப்பிடவில்லை எனில், அதை ஈடு செய்ய அடுத்த உணவு நேரத்தில் சேர்த்து சாப்பிடக்கூடாது. 
 
3. காலையில் ஆளிவிதை 1 டீஸ்பூன் அப்படியே எடுத்து கொள்ள வேண்டும் அல்லது பாலில் ஆளிவிதை தூள் சேர்த்து குடிக்க வேண்டும். சில சமயங்களில் அதை சமையலில் சீரகத்தை பயன்படுத்துவது போல், சப்பாத்தி, சாலட், மோர், பொரியல் ஆகியவற்றில் தூவி பயன்படுத்தலாம். ஆளிவிதை எண்ணெய்கள் பல கடைகளில் கிடைக்கும். எனவே அந்த எண்ணெய்களை பயன்படுத்தி கூட சமைத்து சாப்பிடலாம். இதனால் மூட்டுகளில் வலி ஏற்படாமல் தடுக்கும். 
 
 4. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஏனெனில் சிலர் நீர்ப்போக்கு இருப்பதை அறியாமல் பசிக்குது என்று குழப்பத்தில் இருப்பர். எனவே எடையை இரண்டாக பிரித்து பார்த்து, அதன் வழியில் நாம் தண்ணீர் குடிப்பது ஒரு பொதுவான வழி. எடுத்துக்காட்டாக, நீங்கள் 150 பவுண்ட் எடை என்றால், நீங்கள் தினமும் 75 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யவும். மெட்ரிக் முறையில் பயன்படுத்துவோர், உங்கள் எடையை (கிலோகிராம்) முறையில் 30 ஆல் வகுத்து கொள்ளவும். உதாரணமாக, 70 கிலோ எடையுள்ளவர், ஒரு நாளைக்கு 2.3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்புகள்: குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்தது 23 கிராம் புரதச்சத்து கொண்ட உணவை எடுத்துக் கொள்ளவும். சர்க்கரை அளவு 3 கிராமிற்கு குறைந்து இருக்க வேண்டும். பல கடைகளில் சர்க்கரை இல்லாத பண்டங்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கும் முன் ஒருமுறை அதனை பற்றி நன்கு தெரிந்துகொண்டு உபயோகித்தல் நல்லது

 
 

இடப் பெயர்வினால் எச்ஐவி இந்தியாவில் அதிகரித்து?

பெரிய அளவில் நடைபெறும் இடப் பெயர்வினால் எச்ஐவி பாதிப்பு இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இன்றைக்கு கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாடு முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு ஊர்களுக்கும் பெருமளவில் மக்கள் இடம் பெயர்கின்றனர். இவ்வாறு கூட்டம் கூடடமாக இடம் பெயர்ந்து போவதன் காரணமாக எச்ஐவி பரவலும், எய்ட்ஸ் பரவலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாம்.இது அபாயகரமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு! 
 
2001 இந்தியமக்கள் தொகைக் கணக்குப்படி இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குப் பேர் இடம் பெயர்ந்தோர் ஆவர். அதாவது 27.4 சதவிகிதம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.பொது மக்கள் தொகையை விட இந்த இடம் பெயர்ந்தோர் மத்தியில் எச்ஐவி பரவல் கூடுதலாக இருப்பதாக, அதாவது 10 மடங்கு அதிகமாக இருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம்,மகாராஷ்டிரவில் 2009 கணக்குப்படி 18..6 சதவீதம் பேருக்கு பாலியல் வியாதிகள் இருந்ததாம். இவர்களில் 45 சதவீதம் பேர் முறையான சிகிச்சை பெறவில்லை. 76 சதவீதம் பேர் எய்ட்ஸ், எச்ஐவியின் சீரியஸ் தன்மை குறித்து தெரிந்திருக்கவில்லை. 13 சதவீதம் பேர்தான முறையான சிகிச்சை பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் சுமார் 21 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 சதவிகிதம் 15 வயதுக் குட்டபட்டவர்களும், 86 சதவிகிதம் 15 முதல் 49 வயதுக் குட்பட்டோரும் அடங்கும். இதில் 39 சதவிகிதம் அதாவது 8 லட்சத்து 16 ஆயிரம் குடும்பப் பெண்கள் எய்ட்ஸ் நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது வருந்தத்தக்க விஷயம்.நாடு முழுவதிலும் உள்ள செக்ஸ் தொழிலாளர்களிடையே குறிப்பாக பெண்களிடையே எய்ட்ஸ் நோய் கணிசமாகக் குறைந் துள்ளதாக ஒரு ஆய்வு தெரி விக்கிறது. இந்த ஆய்வின்படி கடந்த 2007-ல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் செக்ஸ் தொழிலாளர்களின் சதவிகிதம் 5.06 ஆக இருந்தது. ஆனால் கடந்த வருடம் இது 2.67 ஆகக் குறைந்துள்ளது. விழிப்புணர்வு காரணமாகவே இது தடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.
 

 

அரசியல் பழிவாங்கல்களை முடிவுக்கு கொண்டுவர விஸ்வரூபமெடுக்க வேண்டும்!

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தடையின் பின்னணி தொடர்பாக எராளமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் நிஜம் என்ன என்பதை கற்பனை கதைகளால் மறைத்துவிட முடியாது. விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தடை என்பது இந்த நாட்டின் சகிப்புத் தன்மை எப்படி குறைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அண்மைக்காலமாக நடிகர்கள், எழுத்தாளர்கள் என பலரும் இலக்கு வைக்கப்பட்டு கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாகி வருவது அதிகரித்து வருகிறது. மதச்சார்பற்ற மாண்புகள் கொண்ட ஒரு ஜனநாயக குடியரசில் இத்தகைய போக்குகள் ஆரோக்கியமானது அல்ல. தமிழகத்தில் பல ஆண்டுகாலமாக கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் மிகவும் அதிகரித்தே இருக்கின்றன. 
 
தமிழகத்தில் திரை உலகத்தை சேர்ந்தவர்கள் அரசியல்வாதிகளாக உருவெடுப்பதும் ஏன் முதல்வர் பதவியில் அமருவதும் நடந்து கொண்டு இருக்கிறது. 1960களுக்குப் பிந்தைய காலத்தில் திமுகவும் அதிமுகவும் ஏராளமான கதாநாயன்கள், வில்லன்கள், நகைச்சுவை நடிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி கட்சி சார்ந்து அரசியல் இருக்கும் திரை உலகத்தினர் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போது வேட்டையாடப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுதான் கடந்த காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி ஏன் எதிர்காலத்திலும்கூட இது தொடரவே செய்யப் போகிறது. தற்போது பிரபல நடிகரான கமல்ஹாசன் இப்படி புதிய பலிகடாவாகியிருக்கிறார்.

ரசிகர்களின் மனோநிலை என்ன என்பதை உணர்ந்து அதை திரையில் படைக்கக் கூடியவர் கமல்ஹாசன். தமிழ்த் திரை உலகில் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டவர் வேறு யாரும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நட்சத்திரத்துக்கு அரசியலின் பெயரால் நெருக்கடியை கொடுத்திருப்பது தமிழகத்துக்கு மாபெரும் அவமானம். கமல்ஹாசனே சொல்வதைப் போல தனது சொத்து முழுவதையும் விற்று ரூ100 கோடி அளவில் முதலீடு செய்து விஸ்வரூபத்தை உருவாக்கியுள்ளார். தற்போது அவரது திரை உலக சகாக்கள் பலரும் கூட அவரிடமிருந்து விலகி இருக்கவே செய்கின்றனர். எங்கே தாங்களும் இலக்கு வைக்கப்பட்டு விடுவோமோ என்று அவர்கள் அச்சப்படுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டி எழுப்பினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமமான உரிமைகள் இருக்கின்றன என்பதை நிலைநாட்டினார் அவர். அவரது அரசியல்தான் தமிழகத்து அரசியலை ஒழுங்கமைத்தது. அத்தகைய ஒரு தேவை தற்போது உருவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகரிக்கும் அரசியல் பழிவாங்கல்கள், வேட்டையாடுதல்களை முடிவுக்குக் கொண்டு வர அத்தகைய ஒரு இயக்கம் தற்போது அவசியம்!
 

30 January, 2013

மதத்தைவிட மனிதநேயம் முக்கியம் கமல்

விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து, நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அடுத்து  படம் வெளியிட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை தமிழக அரசு படத்தை தடை செய்ய உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சட்டம்- ஒழுங்கு கருதி படத்தை தடை செய்தது.  இதுகுறித்து கமலஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-​இது நான் சிறுவயதில் இருந்து ஓடி விளையாடி வளர்ந்த வீடு இது. இங்கு இருந்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். இது எனது சொந்த வீடு. இதில் எனது சகோதரர்களுக்கும் உரிமை உண்டு. அவர்களிடம் இருந்து நான் விலைக்கு வாங்கி விட்டேன். நான் கொடுத்த பணத்தை என் தந்தை எல்லா சகோதரர்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டார்.

நான் எடுக்கும் படத்தில் எனது சகோதரர் சந்திரஹாசன் பங்குதாரர் என்று வரும். அவர் சம்பளமாக பணம் எதுவும் வாங்கியது இல்லை. சிறுவயதில் இருந்து இன்று வரை என்னை தன் பொறுப்பில் வளர்த்து வருகிறார். தற்போது என்ன நடக்கிறது என்று எனக்கு தெரிய வில்லை. அது தெரிந்தால் நான் அரசியல் வாதியாகி விடுவேன் என்ற பயம் இருக்கிறது.
இன்று காலை படம் வெளிவரும் என்று எதிர்பார்த்தேன். தியேட்டர்களில் எனது ரசிகர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். என் ரசிகர்களில் இஸ்லாமியரும் இருக்கிறார்கள். சினிமாதான் என் தொழில். நான் நேர்மையை மட்டுமே கற்று இருக்கிறேன். இந்த படத்தில் நிறைய முதலீடு செய்து இருக்கிறேன். ரசிகர்களின் திறமையையும், நம்பி படத்திற்கு முதலீடு செய்து இருக்கிறேன். இருக்கிற சொத்துக்களை விட அதிகம் கடன் வாங்கி முதலீடு செய்து இருக்கிறேன். எனக்கு மதம் முக்கியம் இல்லை. மனிதநேயம் தான் முக்கியம். ரசிகர்கள் மீதும் படத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையில் சொத்துக்களை அடகு வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். சரியான நேரத்தில் பணத்தை கட்டவில்லை என்றால் சொத்துக்களை தனதாக்கி கொள்ளலாம் என பணம் கொடுத்தவருக்கு எழுதி கொடுத்துள்ளேன். 

இதுபோல் பல இடையூறுகளை  ஏற்கனவே சந்தித்து உள்ளேன். ராஜபார்வை படத்தில் நிறைய இழந்தேன். அதில் இருந்து மீள 7, 8 வருடங்கள் வேலை செய்ய வேண்டி இருக்கிறது.1986-​ல் மறுபடியும் ஜ்ஜியம் நிலைக்கு தள்ளப்பட்டேன். அதில் இருந்து மீண்டு இப்போது ரூ.100 கோடி செலவில் படத்தை எடுத்துள்ளேன். அதற்கும் நிறைய தடங்கல்கள். தமிழகத்தில் நான் இருக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறார்களோ என தெரியவில்லை. எனக்கு சிறு ஆசை வந்துள்ளது. மதசார்பற்ற மாநிலத்தில் தான் நாம் இருக்கிறோமா என்று எண்ண தோன்றுகிறது. தமிழ்நாடு மதசார்பற்ற மாநிலம். இப்போது இங்கேயும் அந்த நிலை உருவாகி இருக்கிறது. காஷ்மீரில் இருந்து கேரளா வரை மதசார்பற்ற இடம் கிடைக்குமா என்று தேடுவேன். இங்கு கிடைக்கா விட்டால் வேறு நாடுகளில் மதசார்பற்ற மாநிலம் இருக்கிறதா என்று தேடுவேன்.  கோபத்தில் இதை நான் சொல்லவில்லை. புண்பட்டது போதும், உனக்கு தமிழர்களை பிடிக்கவில்லையா என்று கேட்கலாம். தமிழர்கள் என் உயிர். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று என் உடலையும், இந்த மக்களுக்குத்தான் கொடுத்து இருக்கிறேன். நடந்துள்ள சம்பவங்கள் என் மனதை உருக்கிவிட்டன. என் சொத்துக்களை எடுத்தால்தான் தேசத்துக்கு ஒற்றுமை கிடைக்கும் என்றால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் குழந்தையாக நடிகையர் திலகம் (சாவித்திரி) கையில் இருந்தவன். ஜெமினி கணேசன் கையைப் பிடித்து நடை பயின்றவன். நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்தவன். எம்.ஜி.ஆரின் தோளில் ஏறி நிமிர்ந்து நின்றவன் அப்படி வளர்ந்த பிள்ளை நான். எனக்கு பயம் இல்லை. திறமை இருக்கிறது. இந்த படத்தின் கதை களம் ஆப்கானிஸ்தானில் நடக்கிறது. இங்கே இந்திய முஸ்லிம்களை கேலி செய்வதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும். இந்த படத்தின் தீர்ப்பு எனக்கு சாதகமாக இல்லை. தற்போது கிடைத்திருக்கும் நீதியை நான் வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் 5 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கமல்ஹாசனை சந்தித்தனர். அவர்களுடன் சேர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- என்னை சந்தித்த முஸ்லிம் அமைப்புகள் கேட்டுக்கொண்டபடி சர்ச்சைக்குரிய குரான் பற்றிய காட்சிகளை மக்களின் ஒற்றுமையை கருதி நீக்குகிறேன் என்று கூறினார். இதையடுத்து நேற்று பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது விசாரணையில் தனி நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை நிறுத்தி வைத்தும், தமிழக அரசு விதித்த தடையை நீட்டித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடினர். இதனால் ஆழ்வார்பேட்டை பகுதி நாள் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

பத்திரிகை சுதந்திரம் 140வது இடத்தில் இந்தியா?

பத்திரிகை சுதந்திரம் குறித்த 179 நாடுகளின் பட்டியலில் இந்தியா 9 இடங்கள் கீழிறங்கி 140வது இடத்தில் உள்ளது. இது, கடந்த 2002ம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரும் வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவுக்கும் இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெயர் பெற்றுள்ளது. உலக அளவிலான 2013ம் வருட பத்திரிகை சுதந்திர குறியீட்டு எண் அடிப்படையில் இந்தியா 140வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 இடங்கள் வீழ்ச்சி என்பது குறிப் பிடத்தக்கது. ஊடகவிய லாளர்கள் மீதான தாக்குதல்கள், இணையதள கருத்துச் சுதந்திரம் பறிப்பு, கருத்துகளுக்கு தணிக்கை உள்ளிட்ட காரணிகள் கடந்த வருடம் இந்தியாவில் அதிகரித்துள்ளதாம்.

சீனா ஒரு இடம் மேலேறி 173வது இடத்தில் உள்ளது. பத்திரி கை சுதந்திரம் விவகாரத்தில் வேறு எந்த முன்னேற்றமும் சீனாவில் ஏற்படவில்லை. கடந்த வருடத்தில் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த நாடுகள் மூன்றுமே ஐரோப்பிய நாடுகளே. பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே ஆகியவை பத்திரிகை சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.துர்க்மேனிஸ்தான், வட கொரியா, எரித்ரியா நாடுகள் தொடர்ந்து பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, இணையதளக் கட்டுப்பாடுகள், கருத்து தணிக்கை, காஷ்மீர் மற்றும் சட்டீஸ்கரில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், பொதுவாக பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப் படுதல் போன்றவை இந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப் படும்போது கணக்கில் கொள்ளப் பட்டுள்ளன.

இது வேரையா? கமல் என்ன ஏசுபிரானா?

கமலின் விஸ்வரூபம் படம் குறித்த சர்ச்சை நாடு முழுவதும் பேசப்படும் ஒன்றாகிவிட்டது. கமல் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துவிட்டதாகக் கூறி வழக்கு நடந்துவருகிறது. இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் விஸ்வரூபம் படத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றன.இந்நிலையில் கிறித்துவ மதத்தைச் சார்ந்த வசீகரன் என்ற நபர் தலைமைச் செயலாளரை சந்தித்து கமல்ஹாசன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் ” கமல்ஹாஸன் இனி ‘உலகநாயகன்’ என்ற  பெயரை உபயோகப்படுத்தக்கூடாது. ‘உலக நாயகன்’ என்ற பெயர் பிரபஞ்சத்தைக் காக்கும் ஏசு கிறிஸ்துவின் பெயர்.கமல் ஏசு பிரானின் பெயரை தனக்கு வைத்துக்கொள்வது ஏசு நாதரை இழிவுபடுத்துவது போல் உள்ளது” என்று கூறியிருக்கிறார். மேலும் இதை தலைப்புச் செய்தியாக போடும்படி அவரே பத்திரிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டது மேலும் சிறப்பான விஷயம்.

தத்துவச் சிறப்பு!

நடப்பவை நன்றாக நடக்கட்டும்!

கும்பாபிஷேகத்தில் கருணாநிதி...!

தனக்கும் கடவுளுக்கும் ரொம்ப தூரம் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி சொல்லியுள்ளது அவர்களது தொண்டர்களுக்கு தெரியாதா, அல்லது தெரிந்தும் அவரை கிண்டல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. திருச்சி உக்கிரகாளியம்மன் கோயில் விழா தொடர்பாக தி.மு.க.,வினர் வைத்துள்ள பேனரில் அம்மன், கோபுர படத்துடன் கருணாநிதி படமும்

இதுலே யாரு அரூபம்?

அரசு விளக்கியே தீர வேண்டும் விஜயகாந்த்.


விஸ்வரூபம் விவகாரம் முஸ்லிம்கள் பிரச்சினையாக மட்டுமே இருந்தவரை அமைதி காத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இப்போது பிரச்சினையில் அரசு தீவிரமாகத் தலையிட்டுள்ளதால் விஜய்காந்த் களமிறங்கியுள்ளார்.படத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தமிழகத்தை விட்டே வெளியேறப் போவதாகக் கமல் கூறியுள்ளது என் மனதை வருத்தப்பட வைத்துள்ளது. சினிமாவுக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட மகா கலைஞனை தமிழக அரசு புண்படுத்திவிட்டது. அவர் எங்கும் போகக் கூடாது. இந்த நெருக்கடிக்கெல்லாம் என்ன காரணம் என்பதை இந்த அரசு விளக்கியே தீர வேண்டும். கமல் ஹாஸன் தன் படத்தை ஆளுங்கட்சி தொலைக்காட்சிக்கு விற்க மறுத்தது காரணமா? ஒரு விழாவில் வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக அமர்வதை விரைவில் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னது காரணமா? அல்லது அரசின் நெருக்கடிக்கு பணியாமல் சட்டத்தை நாடியது காரணமா? இதனை விளக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்த அரசு," என்றார். மேலும், கமலை நேரில் சந்தித்து அவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.

 

கலைஞனை காயப்படுத்திப் பார்ப்பது அரசுக்கு நல்லதல்ல!


விஸ்வரூபம் படம் இந்த அளவுக்கு சர்ச்சையில் சிக்க தமிழக அரசே முழுக் காரணம் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஞானி கூறியுள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டை கூறியிருப்பது மிகவும் வருத்தமான ஒன்றாகும். இந்தப் பிரச்சினைக்கு முழுக் காரணமும் தமிழக அரசுதான். தமிழக அரசு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்ததால்தான் இந்த நிலை. சர்ச்சைக்குரிய படம் என்றால் அதுகுறித்து இஸ்லாமியர்கள் கோர்ட்டுக்குப் போயிருக்க வேண்டும். ஆனால் கமலிடம் அவர்கள் போனால் அரசு கோபப்பட்டு பிரச்சினையை அது தனது கையில் எடுத்துக் கொண்டது. மிகவும் நொந்து போய்தான் கமல் ஹாசன் பேசியுள்ளார். இது வருத்தம் தருகிறது. ஒரு கலைஞனை இப்படிக் காயப்படுத்திப் பார்ப்பது எந்த அரசுக்கும் நல்லதல்ல, சரியல்ல. நீதிமன்றம் மீது நிறைய நம்பிக்கை உள்ளது. இந்தத் தடையை நீதிமன்றம் நீடிக்காது, நீக்கும் என்றே நம்புகிறேன். அதேபோல தமிழக அரசும் பொறுப்புடன் நடந்து கொண்டு கோர்ட் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும். தியேட்டர்கள் மீது நடக்கும் தாக்குதல்களை தடுக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. சட்டம் ஒழுங்கை தமிழக அரசு தான் பராமரிக்க வேண்டும் என்றார் ஞானி.

 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...