ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலை பராமரித்துக் கொள்ளுதல் மிக அவசியம்.
சிலர் உடல் கட்டுமானத்துடன் வைத்து கொள்ள விரும்புவர். அப்படி உடல்
கட்டுமானத்துடன் இருக்கையில், எத்தகைய உணவுகளை உண்ண வேண்டும் என்று ஒரு
வரைமுறை உள்ளது. அந்த வரைமுறையைக் கடைபிடிக்காமல், எந்த ஒரு உடற்பயிற்சியை
செய்தாலும் அது பலன் தராது.
இவ்வாறு மேற்கொள்வதால் நம் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகளை நீக்கி, உடலுக்கு
ஏற்ற எடையை தயார் செய்து, ஆரோக்கியமான உடலமைப்பைக் கொடுக்கும். இப்போது
எதை சாப்பிடலாம், எதை சாப்பிடகூடாது மற்றும் எந்த வகையான உணவுகள் உடல்
கட்டுமானத்திற்கு ஏற்றது
1. நம் உடலை கட்டுமானத்துடன் வைக்க அடிப்படைத் தேவை புரதம் மற்றும்
நார்ச்சத்து உள்ள உணவுகள், குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புள்ள
உணவை சாப்பிட வேண்டும். அதற்கு கீழே பட்டியலிடப்பட்டுள்ள உணவு திட்டத்தை
பின்பற்றவும். மசாலா அதிகமுள்ள உணவை தவிர்க்கவும். சர்க்கரை அதிகம்
சேர்த்துக் கொள்ள வேண்டாம். காலைளில் குடிக்கும் டீ அல்லது காப்பியில்,
சர்க்கரை அல்லது கிரீம் சேர்த்து கொள்ள விரும்பினால், ஆடை இல்லாத பால்
பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்கு நல்லது.
2. ஒவ்வொரு 2-3 மணிநேர இடைவெளியில் உணவு சாப்பிட வேண்டும். உடல்
கட்டுமானத்தை வலியுறுத்த புரதங்கள் கொண்ட உணவினையும், உங்கள் உணவில் அதிக
காய்கறிகளை சேர்த்து கொள்வதும் அவசியம். மேலும் நார்சத்து நிறைந்த உணவை
சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலானது சரியான நிலையில் இருக்க உதவும்.
ஒருவேளை ஒரு நேரம் உணவை சாப்பிடவில்லை எனில், அதை ஈடு செய்ய அடுத்த உணவு
நேரத்தில் சேர்த்து சாப்பிடக்கூடாது.
3. காலையில் ஆளிவிதை 1 டீஸ்பூன் அப்படியே எடுத்து கொள்ள வேண்டும் அல்லது
பாலில் ஆளிவிதை தூள் சேர்த்து குடிக்க வேண்டும். சில சமயங்களில் அதை
சமையலில் சீரகத்தை பயன்படுத்துவது போல், சப்பாத்தி, சாலட், மோர், பொரியல்
ஆகியவற்றில் தூவி பயன்படுத்தலாம். ஆளிவிதை எண்ணெய்கள் பல கடைகளில்
கிடைக்கும். எனவே அந்த எண்ணெய்களை பயன்படுத்தி கூட சமைத்து சாப்பிடலாம்.
இதனால் மூட்டுகளில் வலி ஏற்படாமல் தடுக்கும்.
4. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஏனெனில் சிலர் நீர்ப்போக்கு இருப்பதை
அறியாமல் பசிக்குது என்று குழப்பத்தில் இருப்பர். எனவே எடையை இரண்டாக
பிரித்து பார்த்து, அதன் வழியில் நாம் தண்ணீர் குடிப்பது ஒரு பொதுவான வழி.
எடுத்துக்காட்டாக, நீங்கள் 150 பவுண்ட் எடை என்றால், நீங்கள் தினமும் 75
அவுன்ஸ் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யவும். மெட்ரிக் முறையில்
பயன்படுத்துவோர், உங்கள் எடையை (கிலோகிராம்) முறையில் 30 ஆல் வகுத்து
கொள்ளவும். உதாரணமாக, 70 கிலோ எடையுள்ளவர், ஒரு நாளைக்கு 2.3 லிட்டர்
தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி செய்பவராக இருந்தால்,
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
குறிப்புகள்:
குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்தது 23 கிராம் புரதச்சத்து கொண்ட உணவை
எடுத்துக் கொள்ளவும். சர்க்கரை அளவு 3 கிராமிற்கு குறைந்து இருக்க
வேண்டும். பல கடைகளில் சர்க்கரை இல்லாத பண்டங்கள் கிடைக்கின்றன. அவற்றை
வாங்கும் முன் ஒருமுறை அதனை பற்றி நன்கு தெரிந்துகொண்டு உபயோகித்தல் நல்லது
No comments:
Post a Comment