பெரிய அளவில் நடைபெறும் இடப் பெயர்வினால் எச்ஐவி பாதிப்பு இந்தியாவில்
வேகமாக அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில்
தெரியவந்துள்ளது.
இன்றைக்கு கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாடு முழுவதும்
உள்ள மக்கள் பல்வேறு ஊர்களுக்கும் பெருமளவில் மக்கள் இடம் பெயர்கின்றனர்.
இவ்வாறு கூட்டம் கூடடமாக இடம் பெயர்ந்து போவதன் காரணமாக எச்ஐவி பரவலும்,
எய்ட்ஸ் பரவலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாம்.இது அபாயகரமான நிலையை
நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு!
2001 இந்தியமக்கள் தொகைக் கணக்குப்படி இந்திய மக்கள் தொகையில்
மூன்றில் ஒரு பங்குப் பேர் இடம் பெயர்ந்தோர் ஆவர். அதாவது 27.4 சதவிகிதம்
பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.பொது மக்கள் தொகையை விட இந்த இடம் பெயர்ந்தோர் மத்தியில் எச்ஐவி பரவல்
கூடுதலாக இருப்பதாக, அதாவது 10 மடங்கு அதிகமாக இருப்பதாக தேசிய எய்ட்ஸ்
கட்டுப்பாட்டு கழகம்,மகாராஷ்டிரவில் 2009 கணக்குப்படி 18..6 சதவீதம் பேருக்கு பாலியல்
வியாதிகள் இருந்ததாம். இவர்களில் 45 சதவீதம் பேர் முறையான சிகிச்சை
பெறவில்லை. 76 சதவீதம் பேர் எய்ட்ஸ், எச்ஐவியின் சீரியஸ் தன்மை குறித்து
தெரிந்திருக்கவில்லை. 13 சதவீதம் பேர்தான முறையான சிகிச்சை பெற்றனர் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் சுமார் 21 லட்சம் பேர் இந்த
நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 சதவிகிதம் 15 வயதுக்
குட்டபட்டவர்களும், 86 சதவிகிதம் 15 முதல் 49 வயதுக் குட்பட்டோரும்
அடங்கும். இதில் 39 சதவிகிதம் அதாவது 8 லட்சத்து 16 ஆயிரம் குடும்பப்
பெண்கள் எய்ட்ஸ் நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது வருந்தத்தக்க
விஷயம்.நாடு முழுவதிலும் உள்ள செக்ஸ் தொழிலாளர்களிடையே குறிப்பாக பெண்களிடையே
எய்ட்ஸ் நோய் கணிசமாகக் குறைந் துள்ளதாக ஒரு ஆய்வு தெரி விக்கிறது. இந்த
ஆய்வின்படி கடந்த 2007-ல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் செக்ஸ்
தொழிலாளர்களின் சதவிகிதம் 5.06 ஆக இருந்தது. ஆனால் கடந்த வருடம் இது 2.67
ஆகக் குறைந்துள்ளது. விழிப்புணர்வு காரணமாகவே இது தடுக்கப்பட்டுள்ளது
என்கின்றனர்.
No comments:
Post a Comment