|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 August, 2014

கற்பு போன்றது நட்பு!

* நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு, ஒருபோதும் நண்பனை விட்டுக் கொடுக்காதே. 
* உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது. 
* உன் நண்பர்களை காட்டு... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
* ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.
* நமது நண்பர்கள் தான், நமது உண்மையான சொத்துகள்.
* உன்னை பற்றி முழுதாக அறிந்திருந்தும், உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

02 August, 2014

படம் அல்ல பாடம்!

நம் ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்பும், இப்போதும் திடீரென சில ஏமாற்றுக்காரர்களின் செயலால் ஏமாந்தவர்கள் என்ற செய்தி தலைகாட்டும். அந்த செய்தி ஓய்ந்து மூன்று மாதங்களில் இன்னோரு பகுதியில் இதே போன்று வேறு ஒரு ஏமாற்று வேலை நடந்திருப்பதாக செய்தி வெளியாகும். அதில் ஈடுபட்ட ஏமாற்றுகாரன் தன் தவறை நியாயபடுத்த ஏதாவது ஒரு கதையை கூறுவான். அப்படி நம்மை சுற்றி  நடக்கும் ஊழலை பற்றி வந்திருக்கும் படம் தான் சதுரங்க வேட்டை. சமூகத்தால் ஏமாற்றப்படும் ஓர் இளைஞன், பெரியவனானதும் அதே ஏமாற்று வேலையை கையில் எடுத்தால் என்னவாகும் என்பதுதான் 'சதுரங்க வேட்டை’ படத்தின் ஒன்லைன்! 
ஊரில் திடீரென நோட்டீஸ் அடித்து கொடுத்து தங்கத்துக்கு ஆஃபர் என அறிவித்துவிட்டு ஊர்மக்கள் அனைவரையும் தங்கநகை சீட்டில் சேர வைத்து அதில் மோசடி செய்து விட்டு ஊரை விட்டே ஓடும் கதாநாயகன். அவன் வார்த்தையை நம்பி அவனுக்கு உதவும் பிரபல ரவுடி என்றவாறு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அந்த காட்சி அதேபோல் இன்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தங்க நகை சீட்டின் மூலம் பெண்களிடன் ஆசை வார்த்தை பேசி சீட்டில் சேர சொல்லி அவர்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல்கள் தினம் தினம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
 
அடுத்ததான் இன்று வேலை இல்லா பட்டதாரிகளாய் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் சுற்றி திரிபவர்கள் முதலில் பாக்கெட்டை சமாளிக்க எடுக்கும் முடிவு மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங். ஒரு பொருளை பொய் சொல்லி ஏமாற்றி விற்கும் வேலை டார்கெட் தான் முக்கியம் என்பதால் ஒரு பொய்க்கு 10 பொய்களை சொல்லி விற்கிறார்கள் கடைசியில் முதலாளி தப்பித்து ஓடி விடுவான் என்பதையும் அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர் வினோத்.தமிழ்நாட்டில் ஈமு கோழி வளர்ப்பு மோசடி மிகவும் பிரபலம். அதை பற்றி செய்திதாள்களின் அனைத்து பக்கங்களிலும் செய்தி வந்தாலும் மக்கள் அதில் மீண்டும் மீண்டும் ஏமாறுவார்கள் என்பதையும் பதிவு செய்திருப்பார். ஆண்மைக் குறைவுக்கு அற்புத மருந்து மண்ணுளி பாம்பு... லட்சாதிபதியாக்கும் குள்ள மனிதன் லில்லிபுட் என ஆசைக்காக அலைபவர்களை ஏமாற்றுபவன் ஈஸியாக ஏமாற்றிவிடுவான் என்பதற்கு இந்த படத்தின் கதாநாயகன் கதாபாத்திரம் தந்திரமாய் காட்டப்பட்டிருக்கும். இதுபோன்ற மோசடிகளில் சிக்கி ஏமாந்து போகாமல் இருப்பது எப்படி என்பதை, ஏமாற்றுபவரின் பக்கமிருந்தே படம்பிடித்து காட்டுகிறது திரைக்கதை. 
 
தினம் தினம் டிவிக்களிலும் பத்திரிக்கைகளிலும் வரும் செய்திகளை மக்கள் எவ்வளவு அசாதாரணமாக எடுத்து கொண்டு அதனை பற்றி கவலை படாமல் அடுத்த ஏமாறுதலுக்கு தயாராகிறார்கள் அதனை ஏமாற்றுக்காரர்கள் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார்கள். ஏமாற்றுக்காரனான கதாநாயகன் கைதாகும்போது '' நான் யாரையும் ஏமாற்றவில்லை, ஏமாறுபவர்களுக்கு வாய்ப்பளிக்கிறேன்'' '' Money is always ultimate'' '''நீதியை நிதி கொடுத்து வாங்கலாம்'' போன்று இன்றைய அரசியலையும், நாட்டு நடப்பையும் சேர்த்து பதிவு செய்திருக்கிறார். பெரிய தவறு செய்பவன் சிறிய விஷயத்தை கோட்டை விட்டு விடுவான் என்பதற்கு உதாரணமாக '' பல கோடி கொள்ளையடிக்கும் போது போலிஸிடம் மாட்டாதவர்கள். மண்ணுளி பாம்பை பொய் சொல்லி விற்கும் போது மாட்டுவது" போலிஸ் ஸ்டேஷன் பேக்ஸ் மிஷினில் பேப்பர் தீரும் அளவுக்கு குற்றம் செய்தாலும் லஞ்சம் கொடுத்தால் வெளியே வந்துவிடலாம் போன்ற சீன்கள் அரசியல் ஹியூமர்!! இவ்வளவு தவறு செய்பவன் அனாதை ஆஸ்ரமத்திற்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் நிதி அளிப்பதை விளம்பரமாக்கி மக்களை நம்ப வைப்பான் என்பதையும் நாசூக்காக திரைக்கதையில் சொல்லி இருப்பது க்ளாஸ்!
 
ஏமாற்றுவேலை செய்பவனுக்கு பின்னால் அதை நியாயபடுத்த ஒரு பிளாஷ்பேக் என்றாலும் கடைசி சீன் வரை அவனை பணத்திற்காக பயணிக்கும் மனிதனாக காட்டி இருப்பது. ஆசை வார்த்தைக்கு ஏமாறும் மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் அவர்களது ஆசை என்பதை எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதையும் நறுக்கென்று சொல்லி இருக்கிறார்கள். இறுதியாக ரைஸ் புல்லிங் எனும் கோவில் கலசத்தை திருடுவது என்ற மோசடி அதனை ந்மப வைக்க ஆன்மீக பத்திரிக்கைகளில் வரும் செய்தியை காட்டி நம்ப வைப்பது அதனை நம்பி வாங்கும் தொழிலதிபருக்கு தெரியாமல் எப்படி ரைஸ் புல்லிங் நடக்க வைக்கிறார்கள் இரும்புதுகள்களுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்து அரிசி போல் மாற்றி அதனை காந்தவிசை உள்ள பொய் கலசத்தின் அருகில் கொண்டு சென்றால் அது உள்ளே இழுக்கப்படும் என்பதை தத்ரூபமாக படமாக்கி இருக்கிறார்கள். இவ்வளவு தவறு செய்யும் ஹீரோ இறுதியில் என்ன ஆனான் என்பது தான் படத்தின் கதை. 

இவ்வளவு மோசடிகளை பார்த்தபிறகும் மக்கள் ஆசை வார்த்தைக்கு ஏமாந்தால் அது அவர்கள் விதி! என்னதான் ஊடகங்களும், சினிமாக்களும் தவறுகளை காட்டினாலும் மக்கள் அதனை பொருட்படுதாமல் மீண்டும் அதே தவறை செய்வது குறையவில்லை. அப்படி இருப்பவர்களுக்கு இந்த படம் கொஞ்சம் அழுத்தமாகவே தன் பதிவை சொல்லி இருக்கிறது. ஏமாற்று வேலைகளை எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதை பார்த்து அதில் சிக்கி கொள்ளாமல் இருக்க ''சதுரங்கவேட்டை'' படம் அல்ல பாடம்!!

30 June, 2014

ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம்! விஜய்சேதுபதி!!

விஜய்சேதுபதியின் முகத்தில் பாதி முகம் புலிமுகம் மாதிரி டிசைன் செய்யப்பட்ட ‘எடக்கு’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் எப்போது கமிட் ஆனார்? இது பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லையே! என ரசிகர்களும் விஜய் சேதுபதிக்கு நெருக்கமானவர்களும் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள். 

’எடக்கு’ படம் பற்றி கேட்டபோது விஜய்சேதுபதி “ ’எடக்கு’ என்ற பெயரைக் கேட்டதும் எனக்கே முதலில் வியப்பாக இருந்தது. அந்தமாதிரி படத்தில் நான் நடித்ததாக நினைவே இல்லை. அதுபற்றி விசாரித்த பிறகு தான் தெரிந்தது, அது நான் 7 வருடங்களுக்கு முன்பு நடித்த கன்னடத் திரைப்படமான ’அக்கடா’ படத்தின் டப்பிங் என்று. அக்கடா படத்தில் நான் மெயின் ரோலில் நடிக்கவில்லை. படத்தில் மொத்தமே நான்கு காட்சிகளில் தான் வருவேன். என் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையில் படம் பார்க்க வந்து, நான் நான்கே காட்சிகளில் வருவதைக் கண்டால் என் மீதான நம்பிக்கை குறைந்துவிடும். நான் அந்த படத்திற்கு தமிழில் டப்பிங் கூட பேசவில்லை. ஆனால் என்னை முன்னிலைப்படுத்தி படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

27 June, 2014

அவ்ளோ கிறுக்கு பயலும் நம்ம ஊர்ல தான்!


நாட்டுல உள்ள அவ்ளோ கிறுக்கு பயலும் நம்ம ஊர்ல தான் இருக்காங்க.
ஒரே ஒரு சந்தேகம் இவனுவ எல்லாம் பிறந்து கிறுக்கான மாறுறாங்களா?! 
இல்ல கிருக்கனாவே பிறக்கிறான்களா?!

பவர்ஸ்டார் பண்ணிய குசும்பு!


பவரிடம் உள்ள ப்ளிஸ் பாயிண்ட் என்னவென்றால் யார் வேண்டுமானாலும் கலாய்த்துக் கொள்ளுங்கள், நக்கலடியுங்கள் நான் கண்டுகொள்ளவே மாட்டேன். அதன் மூலம் எனக்கு பப்ளிசிட்டி கிடைத்தால் போதும் என்று இருக்கிறார் மனிதர். இந்நிலையில் அவர் ட்விட்டரில் வேட்டையாடு விளையாடு படத்தில் கமல், கமலினி முகர்ஜி ஜோடி போட்டோவையும், தானும், ரேகாவும் ஜோடியாக நிற்கும் போட்டோவையும் போட்டு இதில் யார் அழகான ஜோடி என்று கேட்டிருக்கிறார். போட்டோவில் கமல் ஜோடியை ஆப்ஷன் ஏ என்றும், தனது ஜோடியை ஆப்ஷன் பி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதில் அழகான ஜோடியை தேர்வு செய்யுமாறு கூறி இரண்டு ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார். விந்தை என்னவென்றால் இரண்டு ஆப்ஷனுமே பி தான். அப்படி என்றால் பவர், ரேகா ஜோடி தான் அழகு என்கிறார்.


நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!


26 June, 2014

இவருக்கா அமைதிக்கான விருது...?


நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!



கண்றாவி காதல்கள்?

தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகள் இவை. எத்தகைய சீரழிவை நோக்கி இந்தச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்கள் உதாரணம். 
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்!
பள்ளிக்குச் சென்ற தனது மகளைக் காணவில்லை என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியின் தந்தை ஒருவர் புகார் தந்தார். 'பள்ளிக்குச் சென்று விசாரித்தபோது, அவள் இன்று பள்ளிக்கு வரவே இல்லை என்று சொல்லிவிட்டார்கள்’ என்று அவர் சொல்ல... உடனடியாக போலீஸார் விசாரணையில் இறங்கினர். அந்தப் பெண் படிக்கும் பள்ளி, தோழிகள், உறவினர்கள் என்று விசாரித்தும் எந்தப் பயனும் இல்லை. அந்தப் பெண் பயன்படுத்திய செல்போனில் அதிகமாகப் பேசிய ஒருவன், அந்தப் பெண் பள்ளிக்குச் செல்லும்போதும் திரும்ப வரும்போதும் பின்தொடர்ந்த ஒருவன், அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவன் என மூன்று நபர்களை அள்ளிக்கொண்டு வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களும், அந்தப் பெண்ணைப் பார்க்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
அந்தப் பெண்ணின் தந்தை, 'சார்... நம்ப வேண்டாம். இவனுகதான் என் மகளை எங்கோ கடத்தி வைத்துக்கொண்டு தெரியாது என்று சொல்கிறார்கள்’ என்று அழவே... போலீஸார் அவர்களை நையப் புடைத்தனர். அப்போது, மூவரில் ஒருவனுடைய செல்போன் ஒலித்தது. 'சார்... இது என் பொண்ணு நம்பர்’ என்று அலறுகிறார் அந்தப் பெண்ணின் தந்தை. அவனைப் பேசச் சொன்னார்கள் போலீஸார். அந்தப் பெண், 'எங்கடா இருக்க? உன்னை நம்பி வீட்டை விட்டு வந்துட்டேன். நீ உடனே சென்னை கிளம்பி வந்துடுடா. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழலாம். எனக்கு வீட்டில் நிம்மதி  இல்லை’ என்று சொன்னாள். 'இப்போ நீ எங்கே இருக்க?’ என்று இவன் கேட்க, அதற்கு பதில் சொல்லாமல், 'நீ உடனே கிளம்பி சென்னை வா!’ என்று சொல்லிவிட்டு கட் செய்துவிட்டாள்.
அடுத்தடுத்து மற்ற இரண்டு பையன்களுக்கும் அந்தப் பெண்ணிடம் இருந்து போன் வர... போலீஸார் பேசச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமும் அதே வசனத்தை வார்த்தை மாறாமல் பேசியிருக்கிறாள் அந்தப் பெண். ஆனால் யாரிடமும், தான் இருக்கும் இடத்தைச் சொல்லவே இல்லை. இந்தப் பேச்சுக்களைக் கேட்ட அனைவரும் தலை கிறுகிறுத்துதான் போனார்கள். பிறகு, அந்தப் பெண் பேசிய செல்போன் டவரை கண்காணிப்பு செய்தபோது, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து அந்தப் பெண் பேசியது தெரிய வந்தது.
திருப்பூர் போலீஸாருக்கு அந்தப் பெண்ணின் புகைப்படத்தோடு தகவல் தரப்பட்டது. அடுத்த 10 நிமிடங்களில் அந்தப் பெண்ணை அலேக்காக தூக்கிவிட்டனர். தேனிக்கு கொண்டுவந்த பிறகு அந்தப் பெண்ணிடம், ''ஏன்மா ஒரே நேரத்துல மூணு பேர லவ் பண்ணிருக்க. அதுவும் ஒரே நேரத்துல வரச் சொல்லியிருக்க?'' என்று போலீஸார் கேட்க... ''லவ் ஃபெயிலியர்னா என்னால தாங்கிக்க முடியாது. ஒருத்தன் விட்டா இன்னொருத்தன் இருப்பான்ல. எப்படியும் மூணு பேரும் ஒழுங்கா வர மாட்டாங்க. அப்படியே வந்தாலும், யார் முதல்ல வர்றாங்களோ அவனோட கிளம்பியிருப்பேன்'' என்று கூலாக பதில் சொல்லியிருக்கிறாள். அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய பெற்றோருக்கும் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தது போலீஸ்.
எனக்கு 19... உனக்கு 22...
'கல்லூரியில் படிக்கும் என் மகளை கடந்த 10 நாட்களாகக் காணவில்லை!’ என்ற புகாரோடு வந்தார் 
ஒரு தந்தை. அந்தப் பெண்ணின் செல்போன் இன்கம்மிங் - அவுட்கோயிங் விவரங்களை அலசியதில், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குப் பேசியது தெரிய வந்தது. அந்த எண்ணுக்கு உரிய பையனோடு அந்தப் பெண் ஓடிவிட்டதும் தெரியவந்தது. லேட்டஸ்டாக அவர்கள் செல்போனில் தொடர்புகொண்ட ஆட்களை விசாரிக்க, கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு என்ற இடத்தில் ஒரு டீ எஸ்டேட்டில் அவர்கள் இருப்பது தெரிய வந்தது.  அவர்களைத் தூக்கி வந்து போலீஸார் விசாரித்தபோது மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.

''அந்தப் பெண்ணுக்கு 22 வயசு. அந்தப் பையனுக்கு 19 வயசு. அவன் முதலாம் ஆண்டு படிக்கும்போது, இந்தப் பெண் மூன்றாம் ஆண்டு. இருவரும் வேறு வேறு கல்லூரி. ஒரு வருடத்துக்கு முன் செல்போனில் ஆரம்பித்த காதல் ஃபேஸ்புக் மூலம் தொடர... இருவரும் ஊரைவிட்டு ஓடியிருக்கின்றனர். கோயிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். 'சினிமாக்களில் வருவதுபோல முதலிரவு வேண்டும்’ என்று அந்தப் பெண் ஆசையாகச் சொல்ல... கட்டிலில் பூ தூவி அலங்காரம் செய்து, பழம், பால் என்று நண்பர்களின் ஏற்பாட்டில் கொண்டாடி உள்ளனர். இப்படியே ஒரு வாரம் சந்தோஷமாகக் கழிந்தது'' என்று சொல்லியிருக்கின்றனர்.
போலீஸ் ஸ்டேஷன் வந்த பிறகு, 'எங்கள் பெண் வந்தால் போதும்’ என்று பெண் வீட்டில் சொல்ல, 'பிரச்னை வராமல் என்ன செய்தாலும் ஓகே’ என்று பையன் வீட்டில் சொல்ல... குறுக்கே புகுந்திருக்கிறார் அந்தப் பெண். ''எனக்கு இவன் வேண்டாம். நான் என் அம்மா அப்பாவோட போறேன். என் செலவுக்குத் தேவையான பணத்தை இவனால சம்பாதிக்க முடியல. எல்லாத்தையும் நண்பர்கள்கிட்ட எதிர்பார்க்குறான். ஆனா, காதலிக்கும்போது அப்படி இல்ல. சினிமா, ஹோட்டல்னு நல்லா செலவு செய்வான்'' என்று சொல்லிவிட்டு, பெற்றோருடன் புறப்படத் தயாராகி இருக்கிறாள். அந்தப் பையன் போலீஸ் ஸ்டேஷனிலேயே, கீழே படுத்து உருண்டு புரண்டு அழ... 'விடுடா தம்பி’ எண்று அந்தப் பையனைத் தேற்றி ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர் போலீஸார்.
இவள் வேற மாதிரி!
'9-ம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவியைக் காணவில்லை’ என்று அந்தப் பள்ளி நிர்வாகமே புகார் கொடுக்க... செல்போன் டவர் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கியது போலீஸ். திருப்பூர், கோவை 
ஏரியாக்களில் இருப்பதாக டவர் காட்டிக்கொடுக்க... அந்தப் பெண்ணையும் அவருடன் இருந்த நபரையும் போலீஸார் தூக்கிக்கொண்டு வந்தனர். விசாரணையில்தான், அந்தப் பெண்ணோடு இருந்தது அவரது ஆசிரியர் என்று தெரிய வந்தது.

அவரை நையப் புடைத்து விசாரித்தபோது, ''அந்த மாணவிதான் என்னை மிரட்டி செக்ஸ் வைத்துக்கொள்கிறார். அவர் அழைக்கும்போது போகவில்லை என்றால், போலீஸில் புகார் செய்வேன் என்று மிரட்டுகிறார்'' என்று பரிதாபமாகச் சொல்ல... ஆடிப்போய்விட்டனர் போலீஸார். இதுபற்றி விசாரணையில் இறங்க... அந்தப் பெண் செல்போன் மூலம் 30-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பேசிவருவது தெரிய வந்துள்ளது. இவருக்கும் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்துள்ளனர் போலீஸார்.
இந்தச் சம்பவங்களை எல்லாம் உற்று கவனிக்கும் சமூக ஆர்வலர்களோ, ''குழந்தை வளர்ப்பில் குறைபாடு உள்ளதுதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். என்ன செய்கிறோம் என்று தெரியாத இரண்டாங்கெட்ட வயசு பதின்ம வயது. அப்போது பெற்றோர் கண்காணிப்பில் குழந்தைகள் இல்லாவிட்டால், இதுபோன்று வழிதவறி போய்விட வாய்ப்பு உள்ளது. படிக்கும்போது பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும்போது, நல்ல விஷயங்களைவிட கெட்ட விஷயங்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். இப்போது நடைபெற்ற அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் செல்போன் இருப்பதைப் பார்த்தாலே இது புரியும்'' என்கிறார்கள்.
பாசத்தோடு கண்டிப்பும் தேவை!

25 June, 2014

நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!


மேலாடை நழுவ சங்கடத்தில் ராகினி த்விவேதி!



டான்ஸ் நிகழ்ச்சியின்போது கன்னட நடிகை ராகினி திவிவேதியின் ஜாக்கெட் கழன்று போய் விட அவரது மேலங்கம் பளிச்சென தெரிந்து அவருக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டது. கடந்த வருடம் துபாயில் நடந்த சிமா விருது விழாவின் போது நிறைய பிரபலங்கள் மேடையில் நடனம் ஆடினார்கள். அப்போது ராகினி த்விவேதியும் நடனம் ஆடினார். அப்படி அவர் மேடையில் மிகவும் உற்சாகத்துடன் நடனம் ஆடும் போது, அவரது மேலாடையானது கழன்றுவிட்டது. ஆனால் அதை ராகினி உணரவில்லை. ஆடை அவிழ்ந்து போனது கூட தெரியாமல் அவர் ஆடிக் கொண்டிருந்தார். ராகினி த்விவேதி சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட் அணிந்து, அதற்கு மேலே கருப்பு நிற ஷீர் டாப்ஸ் அணிந்திருந்தார். இது கழன்று போனதால் மேலங்கம் தெரிந்தது. ராகினி இதைப் பார்க்காமல் போனாலும், மேடையின் கீழிருந்த நடிகை லட்சுமி மஞ்சு பார்த்து பதறிப் போய், உடனடியாக மேடையில் உள்ள லைட்டுகளை அணைக்கச் சொல்லிவிட்டார். அதன் பிறகுதான் ராகினிக்கு விஷயமே தெரிந்து அதிர்ந்து போய் விட்டார்.



23 June, 2014

தனியார் கையில்?

தனியார் செய்ய வேண்டிய சாராய வியாபாரம் முதல் இட்லி வியாபாரம் வரை இன்று அதிமுக அம்மா அரசின் கையில். ஆனால் அரசாங்கம் கொடுக்க வேண்டிய அத்தியாவசிய கல்வியோ இன்று தனியார் கையில்.

கூடிய விரைவில் பிசாசு முனையும், கச்சத்தீவும் இணைந்துவிடும்!

சமீப காலங்களில், நாடுகளுக்கு உள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும், வளர்ந்து வரும் எல்லைப் பங்கீடுகள், மிகப்பெரிய பிரச்னைகளாக உருவெடுத்து வருகின்றன. இந்தியா - இலங்கை இடையே, வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள கச்சத்தீவும், இரு நாடுகளுக்கும் இடையே, மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது. சரித்திர மற்றும் ஆவணங்களின் ஆதாரப்படி, கச்சத்தீவு பண்டைய காலத்தில், ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது. 1974ல், மத்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததால், இந்திய மீனவர்கள், தங்கள் மீன்பிடி படகு களை ஓய்விற்கு நிறுத்த முடியாமலும், வலைகளை உலர வைக்க முடியாமலும், ஏன் அதன் துாரத்து சுற்று வட்டாரங்களில் மீன் பிடிக்க இயலாமலும், பலவகையான உயிர் மற்றும் வாழ்வாதாரப் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.எந்த அடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், பூமியின் அமைப்பையும், நடைபெறும் புவியியல் மாறுதல்களையும் படம் எடுக்கும் செயற்கைக்கோள் படங்களையும், புவியின் தரைமட்டம் மற்றும் கடல் கீழ் தரைமட்டம் ஆகியவற்றையும் காண்பிக்கக் கூடிய வான் வெளிசார், 'ஈ டோப்போ' படங்களையும் ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது, கச்சத்தீவு இந்தியாவுடன் இணைந்த, ஒரு நிலப்பரப்பு என்பது தெரிகிறது. 

கிட்டத்தட்ட, 7,000 கி.மீ.,க்களுக்கு மேலான நீளமுடைய, இந்திய கடலோரப் பகுதி, ஒரு நேர்கோடு போல் இல்லாமல், குவியமாகவும், குழியாகவும் மாறி மாறி அமைந்து வளைந்தும், நெளிந்தும், சில இடங்களில் முக்கோண வடிவமாகவும், கடலுக்குள் நீட்டியபடியும் அமைந்துள்ளது. இவ்வமைப்பு, இந்திய கிழக்கு கடற்கரைப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியக் கடற்கரையின், இதுபோன்ற அமைப்பிற்கு, இந்தியத் தட்டில் ஏற்பட்டபடி இருக்கும் வளைவுகள் மற்றும் வெடிப்புகளே காரணம்.




மேலும், கடற்கரை ஓரமாக இருக்கும் நீரோட்டங்களும், கடலோரப் பகுதிகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்திய கிழக்கு கடற்கரை ஓரத்தைப் பொருத்தவரை, இந்நீரோட்டமானது, பிப்ரவரி முதல் அக்டோபர் வரை, (ஒன்பது மாதங்களில்), தெற்கே கன்னியாகுமரியில் இருந்து இலங்கையைச் சுற்றி, வடக்காக கடற்கரை ஓரமாக ஓடி, மேற்கு வங்கத்தில் இருந்து தெற்காக, கடிகாரம் சுற்றுவது போல் திரும்பி, அந்தமான் வரை செல்கிறது.நவம்பர் முதல் ஜனவரி வரை (மூன்று மாதங்கள்) உள்ள வடகிழக்கு பருவமழை காலங்களில், அந்தமானில் இருந்து திரும்பி, இந்நீரோட்டம் கடிகார சுற்றிற்கு, எதிர்மறையாகச் சுற்றி வங்கதேசக் கடற்கரை ஒடிசா மற்றும் ஆந்திரா கடற்கரை வழியாக, தெற்காக ஓடி, தமிழக கடற்கரையை அடைகிறது.இதுபோன்று, ஒரு வருடப் பருவத்தில், இரு திசைகளிலும் சுற்றும் கடலோர நீரோட்டம், அலைகள் கொண்டு வரும் கடல் கீழ் மணலோடு, வங்கக் கடலில் கலக்கும் இந்திய நதிகளின் மணலையும் தன்பால் இழுத்துக் கொண்டு சுற்றும் போது, குவியான மற்றும் முக்கோண கடற்கரை ஓரங்களை அரித்தும், குழிவடிவக் கடலோரப் பகுதிகளில் மணல் துகள்களை கொட்டவும் செய்கிறது.




இவ்வாறு, இந்நீரோட்டத்தால் கொட்டப்பட்ட மணலே திருநெல்வேலி, ராமநாதபுரம் கடலோரப் பகுதியில் முயல்தீவு, உப்புத் தண்ணீர் தீவு, நல்லத் தண்ணீர் தீவு என்று பல தீவுகளாகவும், நதிகளின் முகத் துவாரங்களில் மணல் மேடுகளாகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் கடற்கரை மணல் மேடுகளாகவும் தென்படுகின்றன.இவ்வாறு தெற்காக, மூன்று மாதங்களில் ஓடும் கடல் நீரோட்டம், தமிழகத்தில் வேதாரண்யத்திற்கும், யாழ்ப்பாணப் பகுதிக்கும் இடையே நுழைந்து, கடிகாரச் சுற்றிற்கு எதிர்மறையாகச் சுற்றுகிறது.இவ்வாறு, கடல் நீரோட்டம் கடிகாரச் சுற்றிற்கு எதிர் சுற்றாக வடக்கிலும், கடிகாரம் சுற்றும் திசையில் தெற்கிலும், ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் சுற்றுவதால், நீரோட்டச் சலனமற்ற, இவ்விரு நீரோட்டங்களுக்கும் இடைபட்ட ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம், ராமேஸ்வரம், பிசாசு முனை வரையிலும் நீரோட்டம் கொண்டு வந்த மணல் கொட்டப்பட்டு, நீளமான நிலப்பகுதியாக உருவாகி உள்ளது.இவை, ETOPO படத்தில் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலும் நன்கு தெரிகிறது. பிசாசு முனையில் இருந்து, வடக்கிழக்கே திரும்பும் இதே நீரோட்டம் ராமேஸ்வரம், பிசாசு முனையில் மணலைக் கொட்டிய பின், எஞ்சிய மணலை பிசாசு முனைக்கு வடகிழக்கே கொட்டி, கச்சத்தீவாக உருவாக்கி உள்ளது.ராமேஸ்வரம், பிசாசு முனையில் இருந்து கச்சத்தீவு வரை, இவ்விரு நிலப்பகுதிகளுக்கும் இடையேயுள்ள தொடர்ச்சி, கடல் மட்டத்திற்கு கொஞ்சம் கீழே மஞ்சள் நிறத்தில், ETOPO படத்தில் நன்கு தெரிகிறது. கடல் நீரோட்டம், இதே திசையில் சுற்றினால், கூடிய விரைவில் ராமேஸ்வரத்தில் உள்ள பிசாசு முனையும், கச்சத்தீவும் இணைந்துவிடும் என்றும் தெரிகிறது.



மேற்கே ராமநாதபுரத்தில் இருந்து, கிழக்கே மண்டபம் வரை காணப்படும் மணல் மேடுகள், 3,500 ஆண்டுகள் வயது கொண்டவையாக, கார்பன் வயதுக் கணிப்பு கள் காண்பிப்பதால், ராமேஸ்வரம், பிசாசு முனை, கச்சத்தீவும், 3,500 மற்றும் 3,000 ஆண்டுகள் வயது கொண்டவையாக இருக்கும் என்று தெரிகிறது.ஆனால், யாழ்ப்பாணம் தீபகற்பத்தைச் சுற்றியுள்ள இந்தியாவை நோக்கி, வளைந்து காணப்படும் டேல்ப் தீவு உள்ளிட்ட தீவுகள், 4,000 ஆண்டுகளுக்கு மேல் வயது கொண்ட களிமண், மணல், மணற்பாறைகள் கொண்ட படுகைப் பாறைகளாகும். ஆகவே, இவ்வுண்மைகள் எல்லாம், கச்சத்தீவு நிலவியல் ரீதியாக, இந்தியாவின் ஒரு பாகமே என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...