சென்னை அருகே உள்ள மாங்காடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 42) லாரி டிரைவர். இவரது மனைவி மீனாட்சி (36). இவர்களுக்கு அப்பு (13), என்ற மகனும் அம்மு (12), என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ராயப்பனும், மீனாட்சியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 1 1/2 ஆண்டுக்கு முன்னர் ராயப்பன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். நேற்று மாலையில் ராயப்பன், திருவேற்காட்டில் வசித்து வரும் மீனாட்சியின் அக்காள் விஜயாவின் வீட்டுக்கு இரவு 7.30 மணியளவில் சென்று ராயப்பன் அங்கு படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் பார்த்த போது ராயப்பன் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்படடு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், 6 பேர் கொண்ட கும்பல் ராயப்பனை கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக கூறினார். இதனை நம்பாத போலீசார் விஜயாவையும் ராயப்பனின் மனைவி மீனாட்சியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும் கள்ளக்காதலன் லட்சுமணன், அக்காள் விஜயா ஆகியோருடன் சேர்ந்த ராயப்பனை மீனாட்சியே தீர்த்துக் கட்டியிருப்பது தெரிய வந்தது.ராயப்பன் அக்காள் வீட்டுக்கு வந்த தகவல் கிடைத்ததும் மீனாட்சி, லட்சமணனுடன் அங்கு சென்று, ராயப்பனை கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். இதையடுத்து மீனாட்சி, விஜயா, லட்சமணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மீனாட்சி போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்கு மூலம் வருமாறு:
நானும் ராயப்பனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, எங்களது குடும்ப வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. 1 1/2 ஆண்டுகளுக்கு முன்னர் எனது கணவர் என்னையும், மகன்களையும் தவிக்க விட்டு விட்டு எங்கோ சென்று விட்டார். இதன் பிறகே எனது வாழ்க்கை திசைமாறியது.கோயம்பேட்டை சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரது சொந்த ஊர் திண்டுக்கல். எப்போதாவது ஊருக்கு செல்லும் அவர் இங்கு அடிக்கடி வந்து செல்ல தொடங்கினார். 4 மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்த எனது கணவர், லட்சுமணனுடனான தொடர்பை துண்டிக்குமாறு என்னிடம் கூறினார். லட்சுமணனுடன் ஏற்பட்ட தொடர்பை துண்டிக்க முடியாத நான் எனது கணவர் ராயப்பனை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
நேற்று இரவு எனது அக்காள் விஜயா எனக்கு போன் செய்து கணவர் ராயப்பன் வந்திருப்பதாக கூறினார். நான் லட்சுமணனுடன் அங்கு சென்றேன். போகும் போது புதிதாக கத்தி ஒன்றை வாங்கினேன். விஜயாவின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராயப்பனை 3 பேரும் சேர்ந்து முதலில் உருட்டுக்கட்டையால் தாக்கினோம். பின்னர் ராயப்பனின் கழுத்தை அறுத்து நான் கொலை செய்தேன். கொலை பழியில் இருந்து தப்பிப்பதற்காக 3 பேரும் சேர்ந்து மர்ம கும்பல் கொன்று விட்டதாக நாடகம் ஆடினோம். இவ்வாறு மீனாட்சி வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார்
No comments:
Post a Comment