|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 December, 2011

வயிறு கோளாறுகளை தீர்க்கும் மெருகன் கிழங்கு...


இன்றைய உணவுப்பழக்கத்தினால் எண்ணற்றோர் இதயநோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற வற்றினாலும், வயிறு தொடர்புடைய நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையே எண்ணற்ற மருந்துகளை உற்பத்தி செய்து அளிக்கிறது. காட்டுப்பகுதிகளில் செழித்து வளர்ந்திருக்கும் மெருகன் கிழங்கு சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல என்றாலும் சித்தமருத்துவதில் அதிக அளவு பயன்படுகிறது. இது உடல்சூடு, வயிற்றுவலி, மூலம் உள்ளிட்ட எண்ணற்ற நோய்களை போக்க வல்லது. இதனை சூரணமாகவோ, லேகியமாகவோ, தயாரித்து சாப்பிடலாம். இதற்கு உலக்கை, முசலம், கந்த புட்வி, என்ற பெயர்களும் உண்டு. இதனை வெருகன் கிழங்கு என்று அழைப்பர்.

உடல்சூடு தணிக்கும் வெருகன் கிழங்கை சுத்தம் செய்து துண்டுகளாக்கி, நன்கு காயவைத்து இடித்து பொடியாக்கிச் சலித்து சூரணமாகத் தயாரிக்கலாம். அதிகமாக உடல் சூடு உள்ளவர்கள் இந்த தூளை பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டையும் சேர்த்து சாப்பிடலாம்.

மூலநோய்க்கு மருந்து வெருகன் கிழங்கு தூளை சிறிதளவு வாயில் போட்டு வெந்நீர் அருந்த வேண்டும். இதுஅனைத்து வகை மூல நோய்களையும் குணமாக்க வல்லது. இது மூலநோய் மட்டுமின்றி மேக நோய்களையும் குணமாக்கும். இருமல் போக்கும் ஈளை இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் இஞ்சிச் சாற்றுடன் இந்த சூரணத்தைக் கலந்து சாப்பிட்டால் தொல்லை நீங்கும்.

வயிறு நோய்கள் தீரும் வயிற்றுவலி, வயிற்று உப்பிசம், பொறுமல்,அசீரணம்,வயிற்றுப்போக்கு, போன்ற நோய்களுக்கு இந்தச் சூரணத்துடன் சுக்குத்தூள் மற்றும் சர்க்கரைக் கலந்து சாப்பிட வயிறு தொடர்புடைய நோய்கள் தீரும்.

இதயநோய் தீரும் மெருகன் கிழங்கில் உள்ள சோடியம் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க வல்லது. ஹைபர் டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோயை குணமாக்கும். இதில் உயிர்ச்சத்துக்கள் சி,ஈ, ஆகியவை காணப்படுகின்றன. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். இது இதயநோயை தடுக்கும். இதனை சூரணமாக மட்டுமின்றி லேகியமாகவும் சாப்பிடலாம். இம்மருந்து சாப்பிடும்போது அதிக காரம், புளி சேர்க்கக் கூடாது. மிளகு எலுமிச்சைச் சேர்க்கலாம். எண்ணெயும் சேர்க்கக் கூடாது. நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...