ஃபுகுஷிமா அணு உலையை இயக்கி வரும் டோக்கியோ மின் உற்பத்தி நிறுவனம் இந்த உலையில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சை கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வருகிறது. சுனாமி தாக்கியதால் ஃபுகுஷிமாவிலிருந்த அணு உலைகள் வெடித்தன. இந்நிலையில் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் 2-வது உலையில் இருந்து இந்த கதிர் வீச்சு வெளிப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 3-வது உலையில் வழக்கத்தை விட 10 ஆயிரம் மடங்கு கதிர் வீச்சு அதிகம் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் 4 உலைகளில் இருந்தும் கதிரியக்க நீரை அகற்றுவதிலும் அணு உலைகளை குளிர்வித்து கதிர் வீச்சை கட்டுப்படுத்துவதற்காகவும் அணு உலைகளில் சுத்தமான நீரை செலுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வியன்னாவில் உள்ள சர்வதேச அணு சக்தி முகமை, ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணுக் கதிர் வீச்சு அபாயம் அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது. இதனிடையே கடந்த மார்ச் 11-ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட சுனாமி அலைகளால், 10 ஆயிரத்து 489 பேர் உயிர் இழந்திருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், 16 ஆயிரத்து 660 பேர் காணாமல் போயிருப்பதாகவும் போலீஸôர் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment