பாகிஸ்தான் சிறையில் கடந்த 27 ஆண்டுகளாக இருக்கும் இந்தியரான கோபால் தாஸ் என்பவருக்கு மன்னிப்பு அளித்து பாக்.,அதிபர் ஆசிப் அலி சர்தாரி உத்தரவிட்டுள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையே மொகாலியில் நடக்கவுள்ள கிரிக்கெட் போட்டியை காண யூசுப் ராசா கிலானி இந்தியா வரவுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் கோபால் தாசுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக, அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கோபால் தாசை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் பாகிஸ்தான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
President Asif Ali Zardari today remitted the remaining jail term of Indian convict Gopal Das, who has been imprisoned in Pakistan for 27 years, days ahead of a visit to India by Prime Minister Yousuf Raza Gilani to watch the cricket World Cup semi-final featuring the teams of the two countries.
No comments:
Post a Comment