|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 June, 2011

இதே நாள்

  • பூட்டானில் முதல் முறையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது(1999)

  •  மார்க்கோனி, வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்(1896)

  •  டென்மார்க் மக்கள், மாஸ்ட்ரிக்ட் உடன்பாட்டுக்கு எதிர்த்து வாக்களித்தனர்(1992)

  •  அமெரிக்க பழங்குடிகளுக்கும் அமெரிக்க குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை கால்வின் கூலிட்ஜ் அறிமுகப்படுத்தினார்(1924)

  •  ஆஸ்திரேலிய கிரிக்கெட் சகோதரர்கள் ஸ்டீவ் வாஹ் மற்றும் மார்க் வாஹ் பிறந்த தினம்(1965)

  • 10 Tips to prevent diabetes

    Exercise: Get physically active and strengthen your body's machinery for handling blood glucose- the key to diabetes prevention. Moreover, exercising regularly helps you lose weight, which further reduces your risk of developing diabetes

    Lose weight:Excess weight makes it harder for the body to use insulin to control blood sugar. So, maintain a healthy weight by eating right and exercising regularly.

    Avoid trans fats: Hydrogenated vegetable oils and other trans fats have been shown to contribute to heart disease and may also contribute to diabetes type 2.

    Avoid sugary foods and refined carbohydrates: Avoid eating foods such as white rice and dry cereals as they are high on refined carbohydrates. Processed and fried foods are also unhealthy and the fats and carbohydrates found in them undermine your health.

    Have lots of fibre: Have a diet rich in fibre. With high-fibre carbohydrates, glucose is released slowly, preventing the typical blood sugar spike that leads to diabetes.

    Say no to smoking: Smoking is not only associated with the development of diabetes but it also contributes to heart disease and causes lung cancer.

    Eat more fruits and vegetables: Add lots of fruits and vegetables to your diet to prevent diabetes. Fresh fruits and vegetables have fibre content. If you eat canned or frozen fruits, avoid ones with sugar or other additives. If eating canned or frozen vegetables, try to use low-salt or no-salt varieties.

    Avoid having excess tea and coffee: Studies have shown that drinking too much tea and coffee (more than 4 cups a day) multiplies your risk of developing diabetes. It is advisable to keep your coffee and tea cups under check.

    Eat small but frequent meals: Eating small meals regularly throughout the day is important for regulating your blood sugar and avoiding sudden blood sugar hikes that make your pancreas to produce insulin.

    Take care of your heart: If you have prediabetes, it becomes all the more important to make sure other aspects of your cardiovascular health are under control. High blood pressure, also known as hypertension, is associated with a higher risk of diabetes. Consult your doctor to make sure your blood pressure is within the normal range i.e. under 120/80 mmHg for those aged under 65 years.

    மத்திய மந்திரி தயாநிதி மீது விரைவில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை

    Central Bureau of Investigation (CBI) will question former Telecom Minister Dayanidhi Maran over his alleged role in the 2G spectrum allocation scam. The CBI is also likely to question C Sivasankaran, one of the former owners of Aircel and  Malaysian businessman T Ananda Krishnan, the current owner, about the grant of spectrum.

    The allegation against Dayanidhi Maran is that Aircel, previously denied a telecom licence for over two years, was finally given one only when its owners changed hands to Malaysia-based Maxis. The charge is that Maran cleared the decks only after a sister company of Maxis invested Rs. 675 crore in the Maran-owned Sun TV, which the BJP calls a conflict of interest.

    In a statement issued today, Mr Maran said, "I own no shares or any interest in Sun Direct TV or Astro. I was not even a minister when Astro invested in Sun Direct TV." Mr Maran met Telecom Minister Kapil Sibal before he issued the statement.




    ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் புதிதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ., விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாநிதி மாறன் மீது, சி.பி.ஐ., விசாரணை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை, பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்துள்ளார்
    காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில், கடந்த 2004-07ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அந்த காலத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    குற்றச்சாட்டு என்ன : தயாநிதி மாறன், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதில் தயாநிதி மாறன், காலதாமதம் ஏற்படுத்தினார். ஆனால், ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு கைமாறியபோது, ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழங்கப்பட்டது. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், சன் டைரக்ட் கம்பெனியில், 599.01 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, டெகல்கா ஆங்கில வார இதழ் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புகார் வெளிவந்ததும், தயாநிதி மாறன் இதை மறுத்தார். இது தொடர்பாக, "மானநஷ்ட வழக்கு தொடர, வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாகவும்' தெரிவித்தார்

    தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்திவந்த, சிவா குழும சேர்மன் சி.சிவசங்கரன், கடந்த மாதம் மத்தியில், சி.பி.ஐ., வசம் அளித்த புகாரில், "தான் நடத்தி வந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை, விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு தயாநிதி மாறன் தான் காரணம்' என, குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தனது நிறுவனத்திற்கு ஒதுக்கீடு வழங்க தாமதம் செய்து வந்த தயாநிதி மாறன், வெளிநாட்டு கம்பெனிக்கு விற்றதும், அந்த நிறுவனத்திற்கு ஒதுக்கீடு அளித்தார் என குற்றம்சாட்டியுள்ளார். சிவசங்கரனின் புகார் குறித்து முழுமையான வாக்குமூலத்தை பெற, அடுத்த வாரம் அவரிடம் சி.பி.ஐ., நேரடியாக விசாரிக்க இருக்கிறது. அதன் அடிப்படையில், தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு செய்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என தெரிகிறது.

    பொது நல மனு: இந்நிலையில், தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ., விசாரிக்கக் கோரி, பொது நல மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை பிரபல வக்கீலும், லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் இடம்பெற்றுள்ளவருமான பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு சாதகமாக தயாநிதி மாறன் செயல்பட்டுள்ளார் என்பதற்கு போதுமான ஆதார, ஆவணங்கள் உள்ளன. சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரன் நடத்தி வந்த ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. தயாநிதி மாறன், ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தினார். லைசென்ஸ் கோரி தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 14 மனுக்கள், 2006ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்தன. அதே ஆண்டு, மே மாதம், மலேசியாவின் மேக்சிஸ் கம்பெனி, ஏர்செல்லின் 74 சதவீத பங்குகளை வாங்குவதற்கு, மத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு கைமாறியபோது, ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழங்கப்பட்டது. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், "சன் டைரக்ட்' கம்பெனியில், ரூ.599.01 கோடி முதலீடு செய்தது.இந்த, "சன் டைரக்ட்' நிறுவனம், வீடுகளுக்கு நேரடி, "டிவி' ஒளிபரப்பு செய்யும், "டி டி எச்' நிறுவனம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும், "சன் டிவி' குழுமத்தின் ஒரு அங்கம்.இது குறித்து வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


    மறுப்பு: இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. உண்மையல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.

    செல்போன்களால் கேன்சர் அபாயம் உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

    A World Health Organization panel has concluded that cell phones are "possibly carcinogenic,'' putting the popular devices in the same category as certain dry cleaning chemicals and pesticides, as a potential threat to human health.

    A panel representative also noted that using a hands-free during a conversation or communicating via text message would be options for lowering radio frequency exposure.
    Here are some tips to reduce exposure to mobile radiations:

    • Use a wired headset to minimise the waves hitting you
    • Talk on a speakerphone whenever possible
    • Don't wear Bluetooth continuously
    • Avoid using phone in enclosed areas
    • Hold phone little away while talking
    • Send text messages
    செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
    இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் செல்போன்கள் பயன்பாட்டால் கேன்சர் ( புற்றுநோய்) நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.

    பூச்சிக்‌கொல்லி மருந்துக்கு நிகர் : செல்போன்கள் கேன்சர் நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

    கதிர்வீச்சு அபாயம் : செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் செல்போனை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு செல்போன்களை வாங்கினால், கேன்சர் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

    சாய்பாபா அறையில் என்ன தான் இருக்கிறது? நீடிக்கும் ரகசியம்

    சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் உள்ள அவரது தனி அறையான யஜூர் மந்திரில் என்ன இருக்கிறது என்பது மர்மமாக உள்ளது.

    சத்ய சாய்பாபா கடந்த மார்ச் 28-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது தனி அறையான யஜூர் மந்திர் பூட்டப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி சாய்பாபா இறந்தார். இந்நாள் வரை சாய்பாபாவின் அறை திறக்கப்படவில்லை. அதன் சாவி தற்போது சாய் அறக்கட்டளை செயலர் சக்ரவர்த்தியிடம் உள்ளது.

    இதற்கிடையே யஜூர் மந்திரில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த விலை மதிக்கமுடியாத பொருட்கள், கணக்கிலடங்கா பணம் மற்றும் நகைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

    சாய்பாபாவுக்கு நினைவிடம் கட்டுவதற்காக பிரசாந்தி நிலையத்தை 6 வார காலம் மூடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எப்பொழுது மந்திரைத் திறப்பது, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை அனுமதிப்பது தொடர்பாக நேற்று அறக்கட்டளை உறுப்பினர் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் வராததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    யஜூர் மந்திரில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலாய் உள்ளனர். அதனால் யஜூர் மந்திரைத் திறக்குமாறு உள்ளூர் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    சாய்பாபாவின் தனி அறையை முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் திறக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நாகி ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

    ரோட்டில் அனாதையாக்கப்படும் சொகுசு கார்கள்

    திருட்டு கார்கள் இறக்குமதி தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கோடிக்கணக்கான மதிப்புடைய இரண்டு சொகுசு கார்கள் டெல்லியில் அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து போலி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்து திருட்டு கார்களை இறக்குமதி செய்து விற்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துத்துள்ளது. இந்த நூதன மோசடியில் மூளையாக செயல்பட்டு தலைமறைவான சுமித் வாலியா என்பவனை சமீபத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை(டி.பி.ஐ.)அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவனிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த கார்களை வரி ஏய்ப்பு செய்வதற்கு இந்தியாவுக்கான வியட்நாம் மற்றும் வடகொரிய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகளும், பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளான்.

    பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ள இந்த விவகாரம் தொடர்பாக டி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், குறைந்த விலைக்கு ஆசைப்பட்டு சுமி்த் வாலியாவிடம் சொகுசு கார்களை வாங்கிய தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் தற்போது நடுக்கத்தில் உள்ளனர்.

    சுமித் வாலியா எங்கே நமது பெயரையும் கூறியிருப்பானோ என்ற அச்சத்தில் உள்ள பிரபலங்கள் தற்போது தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போகட்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதனால், உஷாரான சிலர் கோடிக்கணக்கான மதிப்புடைய கார்களை ரோட்டில் அனாதையாக நிறுத்திவிட்டு ஓடும் சம்பவங்கள் அரங்கேற துவங்கியுள்ளன.

    டெல்லியில் உள்ள பரபரப்பு மிகுந்த சாலையின் ஓரத்தில் பல கோடி மதிப்புடைய அஸ்டன் மார்ட்டின் மற்றும் பென்ட்லீ கார்களை அதன் உரிமையாளர்கள் அனாதையாக நிறுத்திவிட்டு ஓடிவிட்டனர். இந்த கார்களை சமீபத்தில் டி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    இந்த கார்கள் சுமித் வாலியாவிடமிருந்து வாங்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. டி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தீவிரமடைந்துள்ளதால், இறக்குமதி வரி கட்டாமல் சொகுசு கார்களை வாங்கிய பல கோடீஸ்வரர்கள் தங்களது கார்களை இதேபோன்று அனாதையாக நிறுத்திவிட்டு தப்பிஓடும் சம்பவங்கள் வரிசையாக அரங்கேறும் என கூறப்படுகிறது.

    இப்படியும் ஒரு போட்டி- ஜிம்பாப்வேயின் மிஸ்டர் அவலட்சண ஆணழகனாக ஆஸ்டின் பேவே

     

    Zimbabwe’s Austin Mbewe bagged the country’s ugliest man award at a fun filled event in the Pagomo Heights Leisure Centre in Beitbridge. He beat eight other men in a nationwide contest for the Mr Ugly title after all women judges crowned him the most ugliest.


    30-year-old Mbewe hails from Zimbabwe’s second largest city of Bulawayo. He also received a blanket and a cash prize of 1,200 Zimbabwean dollar. Hundreds of people, some of whom came from as far as Bulawayo and Harare, attended the special event.


    Harare-based dance group Girls La Musica added colour to the event. The venue was filled with long winding queues of cars along the road to Pagomo Heights, reported a website.  Initially, 15 men were expected to battle it out, but six of them later backed out. The event, held for the third consecutive year, was organised in collaboration with the National Arts Council and the Zimbabwe Tourism Authority. 


    ஜிம்பாப்வேயைச் சேர்ந்த ஆஸ்டின் பேவே, அந்த நாட்டின் அவலட்சண ஆணழகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னுடன் போட்டி போட்ட 8 'அழகர்களைத்' தோற்கடித்து மிஸ்டர் அவலட்சண ஆணழகன் பட்டத்தை வென்றார்.

    கடந்த சனிக்கிழமை வேடிக்கை வினோதம் நிறைந்த மிஸ்டர் அவலட்சண ஆணழகன் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள பெய்ட்பிரிட்ஜில் நடந்தது. இதில் முதலில் 15 பேர் கலந்து கொள்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் 6 பேர் பி்ன்வாங்கியதால் இறுதியில் 9 பேர் கலந்து கொண்டனர்.

    அந்நாட்டின் கலைபண்பாட்டு கவுன்சில் மற்றும் சுற்றுலா துறையும் இணைந்து இந்த போட்டியை நடத்தின. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடந்த இந்த போட்டியைக் காண நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். நாட்டின் தொலைதூர நகரங்களான புலாவாயோ, ஹராரேவில் இருந்தும் கூட மக்கள் வந்திருந்தனர். இந்த போட்டியின் நடுவர்கள் அனைவரும் பெண்கள்.

    இந்த போட்டியில் கலந்து கொண்ட 30 வயது இளைஞர் ஆஸ்டின் பேவே மிஸ்டர் அவலட்சண ஆணழகன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு சால்வையும், ரூ. 8 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

    பெய்ட்பிரிட்ஜைச் சேர்ந்த குதக்வாஷே சிரம்பா(45) இரண்டாவது இடத்தையும், மாஸ்விங்கோவைச் சேர்ந்த சிடோவா செழிரா(39) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கும் சால்வையும் ரூ. 4 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

    16 வருட போராட்டத்திற்குப் பின் பிளஸ்டூ பாஸ் செய்த ஒரிஸா அமைச்சர்

    16 வருடத்திற்கு முன்பு பிளஸ்டூவில் பெயிலான ஒரிசா அமைச்சர் ஒருவர் கடும் போராட்டத்திற்குப் பின்னர் தற்போது பாஸாகி பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். மேல் படிப்பு' தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஒரிசா மாநில பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரமேஷ் சந்திர மாஜி வெற்றிகரமாக பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

    ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளார் ரமேஷ் சந்திர மாஜி. அவர் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதினார். அதில் 600-க்கு 376 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் பூங்கொத்துகள் மற்றும் இனிப்பு கொடுத்து அமைச்சரை வாழ்த்தினர்.

    31 May, 2011

    இதே நாள்

  • சர்வதேச குழந்தைகள் தினம்

  •  துனீசியா, அரசியல் நிர்ணய தினம்(1959)

  •  தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1971)

  •  மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்திற்கான காப்புரிமத்தை தாமஸ் எடிசன் பெற்றார்(1869)

  •  சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது(1980

  • மாருதி பரிசுப் போட்டியில் ஜெய்ப்பூர் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் பரிசு

    மாருதி சுஸுகி நடத்திய 'வேகன்-ஆர் திங் பிக் சேலஞ்ச்-2' பரிசு போட்டியில் ஜெய்ப்பூரை சேர்ந்த இளம்பெண் முதலிடத்தை பிடித்து வேகன்-ஆர் காருடன் ரூ.10 லட்சம் பரிசை வென்றுள்ளார்.

    சந்தையை போட்டியை சமாளித்து கார் விற்பனையை அதிகரிப்பது எப்படி? என்பது குறித்து புதுமையான யோசனைகளை தரும் வகையில் பரிசுப்போட்டி ஒன்றை மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.

    இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்ட இந்த புதுமையான போட்டியில் சூப்பர் ஐடியா கொடுத்து வெற்றி பெறுபவருக்கு வேகன்-ஆர் காருடன் ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என மாருதி நிறுவனம் கூறியது.

    இதற்காக நாடு முழுவதும் உள்ள 19 நகரங்களில் போட்டியாளர்களுக்கான பதிவு நடந்தது. ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் இந்த போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது புதுமையான விற்பனை யுக்தி யோசனைகளை தெரிவித்தனர்.

    எழுத்துத் தேர்வு உள்பட பல கட்டங்களாக நடந்த இந்த பரிசுப்போட்டியில்,'கிரின் அன்ட் குட் ஸ்டோர்' என்ற தலைப்பில் ஆன் லைன் கார் விற்பனை குறித்து சிறந்த யோசனையை தெரிவித்த ஜெய்ப்பூரை சேர்ந்த அபர்ணா பட்னகர் என்ற இளம்பெண் முதலிடம் பிடித்து வேகன்-ஆர் திங் பிக் சேலஞ்ச்-2 வென்றார்.

    பட்டத்தை வென்ற அபர்ணாவுக்கு, மாருதி வேகன்-ஆர் காருடன் ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. மாருதி வேகன்-ஆர் காரின் விளம்பர தூதரான நடிகர் மாதவன், வேகன்-ஆர் காரையும், ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசையும் அபர்ணாவுக்கு வழங்கினார்.

    செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!

    Saudi government to limit work permits for certain firms
    Saudi Arabia's plans to limit work permits for foreigners will only apply to firms that fail to meet the kingdom's quotas on employing Saudis, the state news agency SPA reported on Tuesday quoting the labor ministry. Labor minister Adil Fakieh said on Monday the government would not renew work permits for foreign workers who have spent six years in the country as part of the Organization of Petroleum Exporting Countries (OPEC) member's plan to create jobs for nationals, but did not give details. "Plans not to renew work permits for foreign workers, who have spent six years in the kingdom, apply to the companies that fall under the yellow category in the Netaqat program," ministry spokesman Hattab Al-Anzy was quoted as saying by SPA. Netaqat, meaning categories in Arabic, launched earlier in May classifies firms by green, yellow and red colors by how they fulfill 'Saudisation' rules and sets penalties for non compliance. "Companies that fall under the red category will not have work permits renewed for its foreign workers regardless of the time the workers have spent in the country," Anzy said. In 1994, the government began a 'Saudisation' plan, setting quotas for the number of nationals private firms must hire. The program failed to achieve a significant increase in the participation of nationals in the private sector, where Saudis still account for only 10 percent of employees as companies found number of ways how to circumvent the rules. Unemployment among nationals in the kingdom, which sits on more than a fifth of global oil reserves and is the world's biggest oil exporter, is currently 10.5 percent, according to latest figures announced by the minister, 28 percent of the unemployed are women and 40 percent high school graduates. Some eight million foreign workers, who remit 27 billion US dollars per year, live in the kingdom with majority working in the private sector of the biggest Arab economy. Saudi Arabia does not regularly publish data on unemployment, a sensitive issue since it highlights fissures in wealth distribution in the absolute monarchy with no elected parliament, where newspapers tend to carry the official line. King Abdullah offered $93 billion in handouts in March to stave off unrest rocking the Arab world, including neighbouring Bahrain, Oman and Yemen. This followed a $37 billion package announced in February, an initial move to ease social tensions. Despite its wealth, unemployment in the Gulf Arab state has risen as an outdated school system focused on religion and the Arabic language produces graduates who have difficulty finding jobs with private firms. Companies favor workers from Asia, prepared to work long hours for low salaries, or well-paid foreign experts.

    செளதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

    கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார். இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் செளதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஒரே மாதத்தில் 2 சூரிய கிரகணங்கள்-ஒரு சந்திர கிரகணம்!


    வரும் ஜூன் 2ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதிக்குள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள் ஏற்படவுள்ளன. இதில் இரண்டு சூரிய கிரகணங்களாகும், ஒன்று சந்திர கிரகணமாகும்.

    இதில் இரண்டு சூரிய கிரகணங்களும் இந்தியாவில் தெரியாது. சந்திர கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் பார்க்க முடியும். ஜூன் 2ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.55 மணி முதல் அதிகாலை 4.37 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. இதை சீனா, சைபீரியா, கிழக்கு ஆசிய நாடுகளில் காண முடியும்.

    ஜூன் 15ம் தேதி இரவு 11.52 மணி முதல் அதிகாலை 3.33 மணி வரை சந்திக கிரகணம் ஏற்படும். இதை இந்தியாவிலும், ஆசியா, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் காண முடியும்.

    ஜூலை 1ம் தேதி மாலை 6.15 மணி முதல் இரவு 9.48 மணி வரை அடுத்த சூரிய கிரகணம் ஏற்படும். இதை இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், அண்டார்டிகா பகுதியிலும், மடகாஸ்கரிலும் காணலாம். ஆனால், இந்தியாவில் இது தெரியாது. இந்த மூன்று கிரகணங்களுமே வட அமெரிக்காவில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்போர்ட் கார் வடிவமைப்பின் முன்னணி நிறுவனமான Farrari இன் புதிய மாடல்


    வருங்கால ஏர்போர்ட் எப்படி இருக்கும் ?


    கிரிக்கெட் வீரருக்கான "பாலி உம்ரிகர்' விருது, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு வழங்கப்பட்டது.

    கடந்த 2009-10ம் ஆண்டில் பங்கேற்ற 10 டெஸ்ட் போட்டிகளில், ஒரு இரட்டை சதம், ஐந்து சதம் உட்பட மொத்தம் 1064 ரன்கள், 12 நாள் போட்டிகளில் ஒரு இரட்டைசதம் உட்பட 695 ரன்கள் எடுத்து அசத்திய இந்திய வீரர் சச்சினுக்கு, சிறந்த கிரிக்கெட் வீரருக்கான "பாலி உம்ரிகர்' விருது வழங்கப்பட்டது. இதற்கான கோப்பையுடன், ஐந்து லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
    ஜி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது முன்னாள் "ஆல் ரவுண்டர்' சலிம் துரானிக்கு வழங்கப்பட்டது. இவருக்கு கோப்பையுடன், ரூ. 15 லட்சம் கிடைத்தது. இதுதவிர, ரஞ்சித் தொடரில் அதிக ரன்கள் எடுத்த மனிஷ் பாண்டே, அதிக விக்கெட் வீழ்த்திய அபிமன்யு மிதுனுக்கு மாதவராவ் சிந்தியா விருதுகள் வழங்கப்பட்டது. 

    இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததற்கு ஆதாரமான, ஐந்து நிமிட வீடியோ காட்சிகளை ஐ.நா., வல்லுனர்கள் குழு வெளியிட்டது.


    இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போர், 2009, மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்த போர் முடிந்து மூன்று மாதங்கள் கழித்து, லண்டனைச் சேர்ந்த, "சேனல்-4' என்ற செய்தி நிறுவனம் வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டது.இதில் இலங்கை ராணுவம், ஈவு இரக்கமின்றி கண்மூடித்தனமாக தமிழ் பெண்களையும், ஆண்களையும் நிர்வாணமாக நிற்க வைத்து கொடூரமாக சுட்டுத்தள்ளிய காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஐந்து நிமிடம் ஒளிபரப்பாகக் கூடிய இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை இலங்கை அரசு மறுத்திருந்தது.

    இதையடுத்து, ஐ.நா., வல்லுனர்கள் குழு, இந்த வீடியோ ஆதாரம் உண்மையானதே என்பதை நிரூபிக்கும் வகையில், ஐந்து நிமிட வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில், ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில், சீருடை அணிந்த இலங்கை ராணுவ வீரர்கள் சுட்டுத்தள்ளிய காட்சிகள் பதிவாகி உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட ஆண், பெண் உடல்களை இலங்கை ராணுவ வீரர்கள் குப்பை லாரியில் அள்ளி வீசுவதும் பதிவாகியுள்ளது.இந்த ஐந்து நிமிட வீடியோவானது, இலங்கை போர்க்குற்றம் புரிந்தது என்பதற்கு போதிய முகாந்திரம் உள்ளது என்பதற்கு ஆதாரமாக, ஐ.நா., மனித உரிமைகள் விசாரணையாளரும், தென்ஆப்ரிக்க சட்ட பேராசிரியருமான கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், "வீடியோ காட்சியில் பதிவானவை அனைத்தும் உண்மை. அந்த வீடியோ, தொழில்நுட்ப மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆதாரமாக எடுத்து கொள்ளப்படும்' என்றார்.

    வீடியோ காட்சிகள் போலியானவை என்று இலங்கை அரசு மறுத்ததற்கு, உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.நா., மனித உரிமைகள் குழுவே அதிகாரப்பூர்வமாக வீடியோவை வெளியிட்டுள்ளதால், சர்வதேச நாடுகளில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    UN Commissioner's call for war-crimes probe jolts Colombo

    Sri Lanka's effort to whitewash the charges of war-crimes during the final stages of war received a set back at the UN Human Rights Council (UNHRC) annual session as Navaneetham Pillai, UN High Commissioner for Human Rights, said she supported special UN panel's recommendations in the war-crimes report made public on 14th April. Meanwhile, despite the theatrics orchestrated by Colombo in questioning the authenticity of the incriminating "Channel-4" video of extra-judicial executions, UN human rights expert, Christof Heyns, said that the shocking footage showed "definitive war crimes," and "[w]hat is reflected in the extended video are crimes of the highest order – definitive war crimes," Associated Press said quoting Heyns.

    Special Investigator on Extrajudicial, Summary or Arbitrary Executions Christof Heyns
    Special Investigator on Extrajudicial, Summary or Arbitrary Executions Christof Heyns
     Navi Pillay
    United Nations High Commissioner for Human Rights, Navi Pillay
    "The overall conclusion reached by the experts is that the video is authentic and the events reflected in the video footage occurred as depicted,” Heyns told UN Human Rights Council.

    The High Commissioner, Navi Pillai, referred to the report of the Secretary-General’s Panel of Experts on accountability in Sri Lanka, which concluded that there were credible allegations of a wide range of serious violations of international law committed by both the Sri Lankan Government forces and Tamil Tigers in the final stages of the conflict.

    Addressing the 17th session of the Council, UN Human Rights chief, N Pillai said she supported the UN panel's recommendation "to establish an international mechanism to monitor national investigations and undertake its own as necessary. It would be important for the Human Rights Council to reflect on the new information contained in this important report, in light of its previous consideration of Sri Lanka and efforts to combat impunity worldwide.”

    Predictably, Sri Lanka's External Affairs Ministry, resorted to its routine reponse in accusing the High Commissioner for "ignoring relevant rules of procedure of the UNHRC by attempting to legitimize" the UN war-crimes report and of continuing to demonstrate "lack of objectivity and impropriety."

    A statement released by the Ministry Sunday evening, quoted Kshenuka Seneviratne, Permanent Representative of Sri Lanka to the UN in Geneva, as telling the UN Human Rights Council today that Sri Lanka is perplexed to note that the High Commissioner has thought fit to refer to the panel report in her report to the 17th Session of the UNHCR.

    “The High Commissioner continues with a seeming preoccupation of calling for the establishment of an international monitoring mechanism, which also has been recommended in the report based on unverified information, and if adhered to will call into question, the professionalism and independence of the Council,” the External Affairs Ministry quoted Seneviratne as saying.

    Pakistan, China, Russia and some Islamic members of the Human Rights Council moved to stop the debate on Sri Lanka's conduct at the end of the war, saying "[t]he international community must support national efforts to win the peace in Sri Lanka."

    European Union reiterated its view that "an independent process to address extremely serious allegations should contribute to strengthening the process of reconciliation and ensuring lasing peace and security in Sri Lanka. The European Union was committed to upholding the human rights of migrants. It was taking the migratory consequences of recent developments in their southern neighbourhood seriously."

    France supported the report of the Secretary-General on Sri Lanka, emphasized its legitimacy and called for justice in relation to violations of human rights there. France noted the human rights violations in Syria and called for perpetrators to be brought to justice. Switzerland added that "[i]t was crucial that appropriate follow-up be given to the recommendations of the report of the panel of experts on Sri Lanka."

    While U.S. Asst. Secretary of State, Robert Blake, whose knowledge of "war crimes" in the Northeast was highlighted by US cables released by wikileaks, was advising Tamil expatriates to work "with Colombo on development," U.S. representative, Eileen Chamberlain, said at the UN session that "United States was deeply concerned by the findings of the panel of experts on the violations of international law and international humanitarian law in Sri Lanka and insisted that reconciliation in this country [Sri Lanka] must be built on accountability. It was a responsibility of the Government of Sri Lanka to respond to the findings of the panel and to ensure the future for the people of Sri Lanka."

    Belgium noted that fighting against impunity was at the core of the report on Sri Lanka. Belgium noted that the recommendation to establish an independent commission of inquiry on Sri Lanka should be taken seriously.   

    முதல் சந்திப்பிலேயே மயக்குவது எப்படி ?



    தெகல்காவுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்

    தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக தெகல்கா வார இதழுக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    2006ம் ஆண்டில் இவர் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது சில தொலைபேசி நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக தெகல்கா செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ள மாறன், புலனாய்வு செய்தி என்ற பெயரில் தெகல்கா பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார். அப்பட்டமான பொய் தகவல்களைக் கொண்டு ஒரு செய்தியைப் போட்டு தனது பெயரைக் கெடுக்க முயற்சி நடந்துள்ளதாக அவர் தனது நோட்டீசி்ல் குற்றம் சாட்டியுள்ளார்.

    தங்கள் கைக்கு இன்னும் அந்த நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று தெகல்கா கூறியுள்ளது.

    ரூ.214 கோடி லஞ்சத்தை கடன் போல காட்ட கலைஞர் டிவி முயற்சி-சிபிஐ


    டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து குசேகாவ்ன், சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி பணப் பரிமாற்றம் நடந்தது உண்மை. இது லஞ்சப் பணம்தான். ஆனால், அதை கடன் போல காட்ட முயற்சி நடக்கிறது என்று நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.

    2ஜி ஸ்பெக்ரம் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான விவாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

    இவர்கள் சார்பில் வழக்கறிஞர் அல்தாப் அகமது ஆஜரானார். அவர் கூறுகையில், கனிமொழியும் சரத்குமாரும் விசாரணையின்போது முழு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார்கள். கலைஞர் டி.விக்கு கடனாகத்தான் ரூ. 214 கோடி பெறப்பட்டது. அதற்கான ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இருவரும் தவறு ஏதும் செய்யவில்லை. அது சட்டப்பூர்வமான கடன் தான். இதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

    இது தொடர்பான எல்லா ஆவணங்களும் சிபிஐ வசம் தான் உள்ளன. இதனால் கனிமொழியும் சரத்குமாரும் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

    அப்போது நீதிபதி அஜித் பரிகோகே குறுக்கிட்டு, பணப் பரிமாற்றத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளீர்கள். ஆனால் அவை அனைத்தும் ஜெராக்ஸ் பிரதிகளாக உள்ளன. அசல் ஆவணங்கள் எங்கே? என்று கேட்டார்.

    அதற்கு பதிலளித்த அல்தாப் அகமது, அசல் ஆவணங்களை சரிபார்த்து வருகிறோம் என்றும் விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உள்ளோம் என்றார்.

    இதையடுத்து வாதாடிய சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித், டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து குசேகாவ்ன், சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி பணப் பரிமாற்றம் நடந்தது உண்மை. இதற்கு ஷாகித் பல்வாவும், வினோத் கோயங்காவும் உதவியாக இருந்திருக்கின்றனர். கைமாறிய பணம் லஞ்சப் பணம்தான். ஆனால், அதை கடன் போல காட்ட முயற்சி நடக்கிறது.

    இந்தப் பணம் கொடுக்கப்பட்டபோது, அதற்கான ஆவணங்கள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இதிலிருந்தே அது லஞ்சப் பணம் தான் என்பது உறுதியாகிறது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட பிறகுதான், இந்தத் தொகையை திரும்பத் தரத் தொடங்கியது கலைஞர் டிவி.

    இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்த பிறகுதான் பணத்தை கடன் போல காட்டவும், அதைத் திருப்பித் தருவது போல காட்டவும் கலைஞர் டிவி சார்பில் அவசர அவசரமாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தொகையை கடனாகப் பெற்றதாகவும் அதைத் திரும்ப செலுத்தியதாகவும் ஆவணங்களை அவர்கள் தயாரித்திருக்கின்றனர்.

    கலைஞர் டி.வி.யில் கனிமொழியும், சரத்குமாரும் தலா 20 சதவீதப் பங்குகளை கைவசம் வைத்துள்ளனர். இந்த பணப் பரிமாற்றத்தில் இருவருக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அவர்களின் கட்டுப்பாட்டில்தான் கலைஞர் டி.வி. இயங்கி வருகிறது. அவர்களது ஜாமீன் மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது. எனவே அந்த உத்தரவை உறுதி செய்து, அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்.

    இதையடுத்து கனிமொழியும் சரத்குமாரும் உடனடியாக மீண்டும் திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்பிக்களை கொண்டு வர மத்திய அரசு எதிர்ப்பு!

    ஊழல் செய்யும் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்களையும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், இந்த லோக்பால் சட்டம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

    லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் 5வது கூட்டம் அதன் தலைவரும் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் குழுவில் பொது மக்கள் சார்பில் இடம் பெற்றுள்ள பிரதிநிதிகளான சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, கர்நாடக லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே, சட்ட வல்லுனர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், தகவல் அறியும் சட்ட ஆர்வலர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் மத்திய அரசின் சார்பில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் கபில் சிபல், வீரப்ப மொய்லி, ப.சிதம்பரம், சல்மால் குர்ஷித் ஆகியோர் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவதற்கு அக்குழுவில் பொது மக்கள் சார்பில் இடம் பெற்றுள்ள பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இதை மத்திய அரசு சார்பில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் எதிர்த்தனர்.

    இந்த விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே கடைசி வரை ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை. இதையடுத்து வரும் ஜூன் 6ம் தேதி மீண்டும் கூடி ஆலோசிப்பதென முடிவெடுக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அண்ணா ஹசாரே, பிரசாந்த் பூஷண், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    மத்திய அரசு ஏற்கெனவே வடிவமைத்த லோக்பால் மசோதாவைவிட இந்த மசோதாவை மோசமானதாக மாற்ற முயற்சிக்கிறது என்று கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இதற்கிடையே லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவது குறித்து அனைத்து மாநில அரசுகள், அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் லோக்பால் மசோதா உருவாக்குவதை மேலும் இழுத்தடிக்க மத்திய அரசு முயல்வதாகத் தெரிகிறது.

    அதே நேரத்தில் ஊழல் விவகாரத்தில் சிக்கும் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்குவது, பறிமுதல் செய்வது ஆகிய விஷயங்களில் லோக்பால் குழுவினருக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒருமனதான கருத்து நிலவுகிறது. மேலும் அவர்களது சொத்துக்களை ஏலம் விட்டு, ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழபபை ஈடுகட்டுவது என்ற லோக்பால் குழுவின் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

    ஆனால், லோக்பால் சட்டத்தை ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு தயங்கி வருகிறது. இதில் இழுத்தடிப்பு செய்தால் ஆகஸ்ட் 16ம் தேதி மீண்டும் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பேன் என்று ஹசாரா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    What is LOKPAL BILL? Why it is Important? 

    The Jan Lokpal Bill (Citizen's ombudsman Bill) is a draft anti-corruption bill drawn up by prominent civil society activists seeking the appointment of a Jan Lokpal, an independent body that would investigate corruption cases, complete the investigation within a year and envisages trial in the case getting over in the next one year. Drafted by Justice Santosh Hegde (former Supreme Court Judge and present Lokayukta of Karnataka), Prashant Bhushan (Supreme Court Lawyer) and Arvind Kejriwal (RTI activist), the draft Bill envisages a system where a corrupt person found guilty would go to jail within two years of the complaint being made and his ill-gotten wealth being confiscated. It also seeks power to the Jan Lokpal to prosecute politicians and bureaucrats without government permission. Retired IPS officer Kiran Bedi and other known people like Swami Agnivesh, Sri Sri Ravi Shankar, Anna Hazare and Mallika Sarabhai are also part of the movement, called India Against Corruption. Its website describes the movement as "an expression of collective anger of people of India against corruption. We have all come together to force/request/persuade/pressurize the Government to enact the Jan Lokpal Bill. We feel that if this Bill were enacted it would create an effective deterrence against corruption." Anna Hazare, anti-corruption crusader, began a fast-unto-death today, demanding that this bill, drafted by the civil society, be adopted. The website of the India Against Corruption movement calls the Lokpal Bill of the government an "eyewash" and has on it a critique of that government Bill. It also lists the difference between the Bills drafted by the government and civil society. A look at the salient features of Jan Lokpal Bill: 1. An institution called LOKPAL at the centre and LOKAYUKTA in each state will be set up 2. Like Supreme Court and Election Commission, they will be completely independent of the governments. No minister or bureaucrat will be able to influence their investigations. 3. Cases against corrupt people will not linger on for years anymore: Investigations in any case will have to be completed in one year. Trial should be completed in next one year so that the corrupt politician, officer or judge is sent to jail within two years. 4. The loss that a corrupt person caused to the government will be recovered at the time of conviction. 5. How will it help a common citizen: If any work of any citizen is not done in prescribed time in any government office, Lokpal will impose financial penalty on guilty officers, which will be given as compensation to the complainant. 6. So, you could approach Lokpal if your ration card or passport or voter card is not being made or if police is not registering your case or any other work is not being done in prescribed time. Lokpal will have to get it done in a month's time. You could also report any case of corruption to Lokpal like ration being siphoned off, poor quality roads been constructed or panchayat funds being siphoned off. Lokpal will have to complete its investigations in a year, trial will be over in next one year and the guilty will go to jail within two years. 7. But won't the government appoint corrupt and weak people as Lokpal members? That won't be possible because its members will be selected by judges, citizens and constitutional authorities and not by politicians, through a completely transparent and participatory process. 8. What if some officer in Lokpal becomes corrupt? The entire functioning of Lokpal/ Lokayukta will be completely transparent. Any complaint against any officer of Lokpal shall be investigated and the officer dismissed within two months. 9. What will happen to existing anti-corruption agencies? CVC, departmental vigilance and anti-corruption branch of CBI will be merged into Lokpal. Lokpal will have complete powers and machinery to independently investigate and prosecute any officer, judge or politician. 10. It will be the duty of the Lokpal to provide protection to those who are being victimized for raising their voice against corruption.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...