ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
08 February, 2013
பள்ளிகளில் கூடுதல் கட்டணம் திரும்ப பெரும் அதிகாரம்!
தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கூடுதலாக வசூலித்த பள்ளி கட்டணத்தை திரும்ப பெரும் அதிகாரம் மற்றும் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வி கட்டண நிர்ணய கமிட்டிக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் கமிட்டி வைக்கப்பட்டது. இந்த கமிட்டியானது தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு மாணவர்களிடம் இருந்து எவ்வளவு கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டுமென்பது குறித்து நிர்ணயம் செய்தது.
இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள லியோ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் இருந்து கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகத்திற்கு கல்வி கட்டண கமிட்டி உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரக ஆய்வாளர் மேற்கண்ட பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்து உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அப்பள்ளியில் உள்ள 731 மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 29 லட்சத்து 36 ஆயிரத்து 530 ரூபாய் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி கொடுக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு கட்டண கமிட்டி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து லியோ மெட்ரிக்குலேசன் பள்ளி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கல்வி கட்டணக் கமிட்டிக்கு கட்டணம் நிர்ணியிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கமிட்டிக்கு அதிகாரம் இல்லை என்று தனது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் கே.கே.சசீதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து, பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் மட்டுமின்றி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்வி கட்டண கமிட்டிக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பள்ளி நிர்வாகத்தின் மனுவை தள்ளிபடி செய்து உத்தரவிட்டார்.
மதுரை என்ற பெயர் வந்தது எப்படி?
சிவபக்தனான குலசேகர பாண்டிய மன்னனிடம் சில பொருட்களை விற்க, தனஞ்ஜெயன் என்னும் வணிகர் வந்தார். வியாபாரத்தை முடித்துவிட்டு கடம்பமரங்கள் அடர்ந்த காட்டில் தங்கினார். அன்று இரவில், அங்கிருந்த சிவலிங்கத்திற்கு. வானிலிருந்து இறங்கி வந்த தேவர்கள் வழிபாடு நடத்தியதைக் கண்டார். ஆச்சரியமடைந்த அவர், மன்னனிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார். மன்னன் இதைக்கேட்டு ஆச்சரியமடைந்தான். வணிகர் குறிப்பிட்ட இடத்தில் கோயில் எழுப்பி, சுற்றிலும் வீதிகளை உண்டாக்கி, ஒரு நகரத்தை அமைத்தான். அப்போது அந்நகரின் மீது சிவனின் நெற்றியில் இருந்த சந்திரனில் இருந்து அமிர்தம் தெளிக்கப்பட்டது. அதனால், அந்த நகருக்கு மதுரை என்ற பெயர் ஏற்பட்டது. (அமிர்தத்தை மது என்றும் சொல்வர்) மாண்புமிகு மதுரை பிறந்தநாள் தெரியுமா? இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, மதுரை.
உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் கூடல் என்றும், கலித்தொகையில் நான்மாடக்கூடல் என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் மதுரை என்றும் அழைக்கப் படுகிறது.
சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர், சோழர், பிற்கால பாண்டியர், இஸ்லாமியர், நாயக்கர் அரச வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசம் சென்றாலும், மதுரையின் கலைகள் அழியவில்லை. ஒவ்வொரு வம்சத்தினரின் ஆட்சி காலத்திலும் கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரத்தில் மதுரை சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பதியெழுவறியா பழங்குடி மூதூர் என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? தற்போதைய பழமொழியில் கூறப்படும் மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன. மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா? மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சதுர வடிவில் மிக மிக நேர்த்தியாக, திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமை பெற்றது,
நமது மதுரை. கோயிலைச் சுற்றி சதுர வடிவில் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தெருக்களிலும் குறிப்பிட்ட தொழில் செய்வோர், ஒரு சமூகமாகவே வாழ்ந்துள்ளனர், எனஅக்கால பரிபாடல் கூறுகிறது. அதுமட்டுமா...மதுரை மக்கள், அறவோர் ஓதும் மறையொலி கேட்டு துயில் எழுவர், என இறைமைத் தன்மையின் மேன்மையைப் போற்றுகிறது. நச் நகரமைப்பு: இந்தக் கால மதுரையை மறந்துவிட்டு, இந்த செய்தியை படியுங்கள், நகரமைப்பு (டவுன் பிளானிங்) என்ற துறை வளராத காலத்திலேயே, உலகுக்கே அதைக் கற்றுக்கொடுத்தது, பழைய மதுரையின் அமைப்பு. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியே மதுரை நகர் அமைக்கப்பட்டது. கோயிலைச் சுற்றிலும் சதுர வடிவில் தெருக்கள் அமைக்கப்பட்டன. மதுரையை ஆண்ட நாயக்கர்களில் முதல் மன்னர் கி.பி 1159 முதல் 64 வரை ஆண்ட விஸ்வநாத நாயக்கர். இவர் ஷில்பா சாஸ்திர கட்டடக் கலை அடிப்படையில், மதுரை நகரை மீண்டும் வடிவமைத்தார்.
இவர் சதுர வடிவில் அமைத்த தெருக்களை, ஆடி, சித்திரை, ஆவணி, மாசி என தமிழ் மாதங்களின் அடிப்படையில் பெயரிட்டார். அப்போதுதான், தமிழ் மாத பெயர்களின் அடிப்படையில் விழாக்களும் துவங்கின. கோயில் பிரகாரத்தை சுற்றிலும் உள்ள தெருக்கள் விசாலமாக, திருவிழாக்கள் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டன. இத்தெருக்களில் கோயில் தேர்கள், சுவாமி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது. பண்டைய தமிழ் இலக்கியங்களில், மதுரை நகரின் மத்தி மற்றும் தெருக்களில் தாமரை பூக்கள் வளர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு நோக்கி, கோயிலும், நகரமும் உருவாக்கப்பட்டது. கோயிலின் நான்கு பாகங்களிலும் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. கோயிலின் முன் தெருக்களில், சமுகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தவர்க்கும், கடைசி தெருக்களில் சாதாரண மக்களும் குடியமர்த்தப்பட்டனர். 19 நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, காலனித்துவ அரசியல் மற்றும் தொழில்களின் தலைமையிடமாக மதுரை மாறியது.
மதுரை நகரைச் சுற்றி வானளாவிய கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பகைவர்கள் எளிதில் உள்ளே வராத வகையில், பாண்டிய மன்னனின் கொடிகள் காற்றில் அசைந்து பறந்தன. மதிலின் புறப்பகுதியில் பகைவர்களை சூழ்ந்து அழிக்க, வீரர்கள் இருக்கவில்லை. அதற்கு பதிலாக மதில்களில் இருந்து, பகைவர்களை நேரடியாக தாக்கும் வகையில், நெருப்பை, மணலை வீசுவது, வெந்நீர் ஊற்றுவது போல தானியங்கி ஏற்பாடுகள் இருந்தன. கோட்டையைச் சுற்றி ஆழமான, நீர் நிறைந்த அகழி இருந்தது. அதில் குவளையும், ஆம்பலும் மலர்ந்து செழிந்திருந்தன. இதனால் பகைவர், அதில் முதலை இருக்கும் என்று பயந்தனராம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோட்டையும், அகழியும் ஆங்கிலேயர் காலத்தில் அகற்றப்பட்டன. 1790ல் மதுரையின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார். 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கினார். கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை வெளியுலகுடன் இணைத்தார். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்தபடியே, ஆங்கிலேயர் காலத்திலும் குறிப்பிட்ட ஜாதியினர் ஒரே பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டன. கடைவீதிகள், அங்காடி வீதிகள் எனப்பட்டன. காலையில் கூடும் வீதிகள் நாளங்காடி எனவும், மாலையில் கூடும் வீதிகள், அல்லங்காடி எனப்பட்டன. மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் அமைந்திருந்ததாக மதுரைக் காஞ்சி கூறுகிறது.
நியூஜெர்சி, ப்ரூடென்ஷியல் மையத்தில் இளையராஜா இசை!
இளையராஜா பிப்ரவரி 23ம் தேதி அமெரிக்காவில் முதல் முறையாக நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐட்ரீம்ஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. நியூஜெர்சி, ப்ரூடென்ஷியல் மையத்தில் இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கவுள்ளது. ரிஹானா போன்ற பெரிய பெரிய ஆட்களின் இசை நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் இது. இங்குதான் இசை ராஜாங்கம் நடத்த உள்ளார் இளையராஜாவின் நிகழ்ச்சி குறித்து ஐட்ரீம்ஸ் நிறுவன இணை நிறுவனர் ராஜ்குமார் கூறுகையில், இளையராஜாவின் இசை யாருடனும் ஒப்பிட முடியாதது. மகத்தான இசை மேதை அவர். அவருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய நிகழ்ச்சியை அதிலும் அமெரிக்காவில் அவரது முதல் நேரடி நிகழ்ச்சியை நடத்துவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
அவரும் இதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் என்றார். மேலும் அவர் கூறுகையில், அவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல நூறு பாடல்களைப் படைத்துள்ளார். அதிலிருந்து எதைத் தேர்வு செய்வது என்றே தெரியவில்லை. காரணம் அத்தனையுமே முத்துக்கள். இதில் எதை விடுவது... நேரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் நான்கு மணி நேரம் நடைபெறப் போகும் அந்த ஷோவில், இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து அதை இடம்பெறச் செய்யவுள்ளோம் என்றார் அவர். இளையராஜாவின் இந்த இசை நிகழ்ச்சிக்கு 100 டாலர் முதல் 500 டாலர் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், சித்ரா, மனோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சியைக் காண 18000 ரசிகர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிழைப்பு தமிழனிடம் பறப்பது இலங்கை தேசிய கொடி!
சென்னை தியாகராயர் நகரில் தி ரெசிடன்சி டவர்ஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. அங்கு இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த இயக்கத்தினர் நட்சத்திர ஹோட்டலை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர். பின்னர் ஹோட்டல் நிர்வாகிகளிடம் இலங்கை தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் இருந்து சிங்கள தேசியக் கொடி அகற்றப்பட்டது. முன்னதாக மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகராயர் நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் நடத்தினர்.இந்த இயக்கத்தினர் நட்சத்திர ஹோட்டலை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர். பின்னர் ஹோட்டல் நிர்வாகிகளிடம் இலங்கை தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் இருந்து சிங்கள தேசியக் கொடி அகற்றப்பட்டது. முன்னதாக மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகராயர் நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் நடத்தினர்.
திருமணம் காரணமாக ஒருவர் தனது ஜாதியை மாற்றுமாறு கோர முடியாது!
மதம் மாறி திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் தமது கணவரின் ஜாதிக்குரிய தகுதியை தமக்கும் வழங்க கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஏ. பாத்திமா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், செங்குந்தர் ஜாதியை சேர்ந்த தாம் இஸ்லாம் மதத்துக்கு மாறி அந்த மதத்தைச் சேர்ந்த ஆசாத் என்பவரை 2006-ம் ஆண்டு திருமணம் செய்தேன். பிரேமாவதி என்ற பெயரையும் பாத்திமா என மாற்றினேன். இதனால் எனது கணவரின் 'லப்பை' ஜாதி சான்றிதழை எனக்கும் வழங்கக் கோரினேன். காஞ்சிபுரம் துணை வட்டாட்சியரும் இதற்கான சான்றிதழை அளித்திருக்கிறார். ஆனால் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர் பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நான் கலந்து கொண்டேன். ஆனால் பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) பிரிவில் என்னை சேர்க்காமல், பெண்கள் - இதரர் என்ற பிரிவில் டி.என்.பி.எஸ்.சி. சேர்த்துள்ளது. இதனால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். , பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) என்ற பிரிவில் என்னை சேர்த்து, எனக்கு பணி வாய்ப்பு வழங்க உத்தரவிடவேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி கே. சந்துரு அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். திருமணம் காரணமாக ஒருவர் தனது ஜாதியை மாற்றுமாறு கோர முடியாது. உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மனுதாரருக்கு லப்பை என்று அளிக்கப்பட்ட ஜாதி சான்றிதழ் செல்லாது என்றும் நீதிபதி தமது தீர்ப்பில்.
தமிழ் கல்வி அவல நிலை!
ஒருவிடுமுறை நாள். தேவியும், ராமுவும் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தனர். மரத்தடியிலிருந்து ஒரு அணில்குட்டி தொப்பென்று கீழே விழுந்தது. இருவரும் அணில்குட்டியை எடுத்து அப்பாவிடம் கொடுத்தனர். அப்பா அதற்கு பஞ்சால் பாலூட்டினார். ஒரு அட்டைப்பெட்டியில் வைத்தார். சிறிது நேரம் கழித்து அணில்குட்டி அங்கும் இங்கும் ஓடியது. தேவியும், ராமுவும் அணில்குட்டியை வளர்க்க விரும்பினர். ஆனால், அப்பா அணில்குட்டியை அதே மரத்தடியில் விட்டுவிட்டார். இந்த இரண்டாம் வகுப்புக்குரிய கதையை, தமிழகக் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 70.1 சதவிகிதத்தினரால் திக்கித் திணறிக்கூட வாசிக்க முடியாத நிலை இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? - இந்தக் கல்வி அவல நிலையை நம்பித்தான் ஆகவேண்டும். இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மாவட்டங்களில் 2005-ல் இருந்து ஆண்டுதோறும் பள்ளிக் கல்வி ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள், அசர் (ASER) - கல்விநிலையின் ஆண்டறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டு வருகிறது.
'பிரதம்' என்ற தன்னார்வ கல்வி அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த ஆய்வின்போது, குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனரா? கிராமப்புற பள்ளிகளின் அடைப்படை வசதிகள் இருக்கின்றனவா என்பன பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, 5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களின் அடிப்படைக் கற்றல் திறன் ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் முடிவில் கிடைத்தத் தகவல்களில் பெரும்பாலானவை அதிர்ச்சி தரும் வகையிலேயே உள்ளன. அந்த ஆய்வு முடிவுகளின்முக்கிய அம்சங்கள் இவை...
* தமிழகக் கிராமப்பகுதிகளில் 6 முதல் 14 வயதுள்ள 99.4 சதவிகித குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர்.
* 11 முதல் 14 வயதுள்ள பெண்குழந்தைகளில் 99.1 சதவிகிதம் பேர் பள்ளிக்குச் செல்கின்றனர்.
இவ்விரண்டு அம்சங்களிலும் இந்திய அளவில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியது.
தமிழ் வாசிப்பின் அவல நிலை! * ஒன்றாம் வகுப்புப் படிக்கும் 43.4 சதவிகித குழந்தைகளால் மட்டுமே எழுத்துகளை அடையாளம் காண முடிகிறது.
* இரண்டாம் வகுப்புப் படிக்கும் 43.6 சதவிகித குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது.
* ஐந்தாம் வகுப்புப் படிக்கும் 29.9 சதவிகித குழந்தைகளால் மட்டுமே இரண்டாம் வகுப்பு கதையை வாசிக்க முடிகிறது. இது, இந்திய அளவில் 46.8 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கணக்கு பிணக்கு ஆமணக்கு! * ஒன்றாம் வகுப்பில் 53.9 சதவிகித குழந்தைகளால் மட்டுமே ஓரிலக்க எண்ணை (1 முதல் 9 வரை) அடையாளம் காணமுடிகிறது.
* இரண்டாம் வகுப்பில் 54.2 சதவிகித குழந்தைகளால் மட்டுமே ஈரிலக்க எண்களை (11 முதல் 99 வரை) அடையாளம் காண முடிகிறது.
* ஐந்தாம் வகுப்பில் 13 சதவிகித குழந்தைகளால் மட்டுமே எளிய வகுத்தல் கணக்கைப் போடமுடிகிறது.
ஸ்ரீனிவாச ராமானுஜனின் 125-வது பிறந்த ஆண்டையொட்டி, தேசிய கணித ஆண்டு கொண்டாடப்பட்ட வேளையில் தமிழக அளவில் மட்டும் அல்ல... இந்திய அளவிலும் கிராமப்புறக் குழந்தைகளுக்கு கணக்குப் பாடத்தில் நல்ல கற்றல் நிலையை எட்ட முடியவில்லை என்பது துயரத்துக்குரிய முரண்.
ஆங்கிலம் நன்றாக ... * தமிழகத்தில் ஆங்கிலத்தில் எளிய வார்த்தயை வாசிக்க முடிந்த குழந்தைகளின் சதவிகிதம், இந்தியாவின் சராசரியை விட அதிகமாகக் காணப்படுகிறது.
* ஐந்தாம் வகுப்பில் படிக்கும் 57.1 சதவிகித தமிழகக் குழந்தைகளால் ஆங்கிலத்தில் எளிய வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. இது, இந்திய அளவில் 48 சதவிகிதமாகவே உள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள், தமிழகக் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகிறது என்பதையும் அசர் ஆய்வு முடிவுகள் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள்:
* 49.3 சதவிகித பள்ளிகளில் மட்டுமே ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம், கல்வி உரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு உள்ளது.
* 81.7 சதவிகித பள்ளிகளில் ஆசிரியர் - வகுப்பறை விகிதாச்சாரம், கல்வி உரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு உள்ளது.
* 80.8 சதவிகித பள்ளிகளில் குடிநீர் வசதி உள்ளது.
* 66.1 சதவிகித பள்ளிகளில் முழுமையான சுற்றுச்சுவர் உள்ளது.
* 68.9 சதவிகித பள்ளிகள் மட்டுமே கழிவறைகள் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.
07 February, 2013
இந்தப்படத்துல அப்படி என்ன?
இந்தப்படத்துல அப்படி என்னதான் இருக்குன்னு தெரியல USA ல NO 1 பாக்ஸ் ஆபீஸ் HIT பிணமா இருந்து பிணத்தை தின்னும் மனிதன் கொஞ்சம், கொஞ்சமாய் மனிதனாய் மாறும் கதை அதுவும் காதலோடு!
பணத்தை பார்த்தால் பிணமும் வாய் பிளக்கும் ( தமிழ் பழமொழி )
பெண்ணை பார்த்தால் பிணமும் காதல் வயப்படும் (ஹாலிவுட் புதுமொழி)
பெண்ணை பார்த்தால் பிணமும் காதல் வயப்படும் (ஹாலிவுட் புதுமொழி)
பவர்ஸ்டார் சில உண்மைகள்!
பவர்ஸ்டார் சில உண்மைகள்! பவர்ஸ்டார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்சல் செய்யப்பட்டது.
பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்.
பவர்ஸ்டாரின் மெயில் ஐ.டி.gmail@powerstar. com
ஒரு நாள் பவர்ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.
And, the powerstar award goes to oscar....
பவர்ஸ்டார் ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் -ப்ளூடூத் வழியாக.
பவர்ஸ்டார் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி பவர்ஸ்டார் மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.
பவர்ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டா ர். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.
கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோதே ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர்ஸ்டாரிடமிருந்து இருந்து போய்யிருந்தன..
பவர்ஸ்டார் தனது தோட்டத்தின் மூன்று மூலைகளிலும் நான்குகிணறுகள் வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக!
நோக்கியா விளம்பரத்தில் கைகுலுக்கிக்கொள்ளும் இரண்டு கரங்கள் யாருடையவை என்பது பவர்ஸ்டாருக்கு மட்டுமே தெரியும்.
ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோத அதை முதன்முதலில் பவர்ஸ்டாரிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக பவர்ஸ்டார் குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிகாப்டரில்.
ரொனால்டினோ: என் காலால் ஒருமுறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்... பவர்ஸ்டார்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா?
கடவுள் பவர்ஸ்டார் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், 'ஓ மை பவர்ஸ்டார்.
பவர்ஸ்டார் ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு’ என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.
ஒருமுறை பவர்ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக்கும்போது தவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது . சுவிஸ் பேங்க் உருவானது.
பவர்ஸ்டார் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்குப் பிற்காலத்தில் 'கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்’ என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர்ஸ்டாரின் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.
பவர்ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறைதினமான கதை இதுதான்.
பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்.
பவர்ஸ்டாரின் மெயில் ஐ.டி.gmail@powerstar. com
ஒரு நாள் பவர்ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.
And, the powerstar award goes to oscar....
பவர்ஸ்டார் ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் -ப்ளூடூத் வழியாக.
பவர்ஸ்டார் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி பவர்ஸ்டார் மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.
பவர்ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டா ர். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.
கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோதே ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர்ஸ்டாரிடமிருந்து இருந்து போய்யிருந்தன..
பவர்ஸ்டார் தனது தோட்டத்தின் மூன்று மூலைகளிலும் நான்குகிணறுகள் வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக!
நோக்கியா விளம்பரத்தில் கைகுலுக்கிக்கொள்ளும் இரண்டு கரங்கள் யாருடையவை என்பது பவர்ஸ்டாருக்கு மட்டுமே தெரியும்.
ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோத அதை முதன்முதலில் பவர்ஸ்டாரிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக பவர்ஸ்டார் குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிகாப்டரில்.
ரொனால்டினோ: என் காலால் ஒருமுறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்... பவர்ஸ்டார்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா?
கடவுள் பவர்ஸ்டார் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், 'ஓ மை பவர்ஸ்டார்.
பவர்ஸ்டார் ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு’ என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.
ஒருமுறை பவர்ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக்கும்போது தவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது . சுவிஸ் பேங்க் உருவானது.
பவர்ஸ்டார் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்குப் பிற்காலத்தில் 'கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்’ என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர்ஸ்டாரின் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.
பவர்ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறைதினமான கதை இதுதான்.
போதிக்கும் திறன் ஆசிரியர்களுக்கு இல்லை?
நாட்டில், ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி
செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில் உள்ள, முக்கிய பிரச்னைகளுக்கு,
உடனடியாக தீர்வு காண வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங். பள்ளி படிப்பை, பாதியிலேயே கைவிடுவோரின் எண்ணிக்கையை குறைக்க, பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளி படிப்பை, பாதியில்
கைவிடுவோரின் எண்ணிக்கை, அதிகமாகவே உள்ளது. இது, மிகப் பெரிய பிரச்னையாக
உள்ளது.நாட்டின் குடிமகன்கள், தரமான கல்வி கற்றால் மட்டுமே, நாடு,
வளர்ச்சிப் பாதையில் செல்லும். சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ளவர்களும், தரமான கல்வி கற்க வேண்டும். தரமான
கல்வி கற்பதற்கு, அவர்களுக்கு, போதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன், எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில், இது போன்ற பல்வேறு
பிரச்னைகள் உள்ளன. இதற்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும். தரமான கல்வியை
அளிப்பதில், கேந்திரிய வித்யாலயா சிறப்பாக செயல்படுகிறது. இந்த பள்ளிகளில்,
தங்களுக்கு அருகில் உள்ள, மற்ற பள்ளிகளுக்கு, முன் மாதிரியாக செயல்பட
வேண்டும்.இவ்வாறு, மன்மோகன் சிங்.
கையாலாகாத முதல்வர்!
ஒன்பதாம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்டு, கொடூர தாக்குதலுக்கு
உள்ளானதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு "பெண்கள் பாதுகாப்புக்கு,
உத்தரவாதம் இல்லாத நகரமாக, டில்லி மாறி வருகிறது' என, முதல்வர் ஷீலா
தீட்ஷித் தெரிவித்துள்ளார். அவர், "பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என,
பாரதிய ஜனதா வலியுறுத்தி உள்ளது. மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, டில்லியில் போராட்டங்கள் நடந்தன.
அதன் விளைவாக, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக, கடுமையான தண்டனை அளிக்கும்,
அவசர சட்டம், சில நாட்களுக்கு முன், பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில்,
டில்லியில் மீண்டும் பயங்கர கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லஜ்பத்நகரில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளதுடன்,
தொண்டையில் இரும்பு கம்பியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில்
சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து, முதல்வர், ஷீலா
தீட்ஷித்திடம், நிருபர்கள் கேள்வி?
அதற்கு பதிலளித்த ஷீலா,""தலைநகர் டில்லியில், பெண்களுக்கு
பாதுகாப்பு இல்லை. பெண்களின் பாதுகாப்புக்கு, உத்தரவாதம் இல்லாத நகரமாக,
டில்லி மாறி வருகிறது. பாதுகாப்பு அளிக்க போலீசார் உள்ளனர். எனினும்,
அவர்கள், பெண்கள் பாதுகாப்பை, உறுதிபடுத்த தவறி வருகின்றனர்,'' என்றார்.டில்லி
முதல்வரின் பதில், தலைநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு, பல
தரப்பில் இருந்தும், எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியுள்ளன.
தமிழனை காப்பாற்றாதவன் தமிழனா?
அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு கூப்பிடு தூரத்தில் உள்ள இலங்கையில்
தமிழர்களின் உயிர்களை காப்பாற்றத் தவறியவர்கள் தமிழர்களா? என்று
வைகைச்செல்வன் கேட்டார். ஆளுநர் உரையின் மீது நடந்த விவாதத்தில் கலந்து
கொண்டு அவர் பேசியதாவது:-
நாட்டில் முதல் முறையாக காவல் துறையினருக்காக மூன்று
சலுகைகள்அங்காடிகள் தந்திருக்கிற ஒரே அரசாங்கம் முதல்வர் ஜெயலலிதாவின்
அரசாங்கம்தான். கூடுதலாக வீட்டு வசதிக்காக 472.50
கோடி ரூபாய்க்கு அனுமதி வழங்கி (மேசையைத் தட்டும் ஒலி) 36,000 காவலர்கள்,
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் சிறைத் துறைப் பணியாளர்களுக்காக
சொந்த வீடு கட்டித்தரும்பொருட்டு, உங்கள் சொந்த இல்லம் தந்திருக்கிற
ஒருமாதரசிதான் தமிழகத்தினுடைய வரலாற்றுச் சிறப்பு மிகுந்த முதலமைச்சர்
ஜெயலலிதா.எல்லோர் இல்லத்தையும் தங்கள் இல்லமாக்கிக் கொண்டவர்கள்தான் கடந்தகால
ஆட்சியிலே இருந்தவர்கள். 1 முதல் 12 குறுக்குத் தெருக்களையும்
வைத்துக்கொண்டு கோபாலபுரத்தில் வாழும் குடியிருப்போர் சங்கத்தை
வைத்திருந்தவர்தான் கடந்த ஆட்சியாளர்கள். ஆனால் காவலர்களுக்கு
மாத்திரமல்ல, அனைத்து மக்களுக்கும் நன்மை செய்கிற ஒரே ஒரு நல்லாட்சியாக,
சிறந்த ஆட்சியாக, மனிதாபிமானமிக்க ஆட்சியாக, மானிடப்பற்றுள்ள ஆட்சியாக,
கருணை மிக்க ஆட்சியாக, காருண்யம் மிக்க ஒரு ஆட்சியாக
செய்துகொண்டிருப்பவர்தான் வரலாற்று சிறப்பு மிகுந்த முதல்வர் ஜெயலலிதா
என்பதை இந்த நேரத்திலே நான் பணிவுடனும் அடக்கத்துடனும் சுட்டிக்காட்ட
விரும்புகிறேன்.
இந்த ஆளுநர் உரையிலே, சித்திரை தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் கொண்டு
வந்திருக்கிற தமிழகத்தினுடைய தன்னிகரில்லாத முதலமைச்சரை ஒட்டுமொத்த உலகத்
தமிழ் இனமே கொண்டாடி மகிழ்கிறது. கடந்த கால ஆட்சியாளர்கள், தமிழ்ப்
புத்தாண்டை தைத் திங்கள் என்று குறித்தார்கள். தமிழ்த் தாய்க்கு 12
குழந்தைகள். முதல் குழந்தை சித்திரை, 10வது குழந்தை தை. முதல் குழந்தை
சித்திரை இருக்க, 10வது குழந்தை தையைக் கொண்டுபோய் முதல் குழந்தைதான்
இனிமேல் சொல்ல வேண்டுமென்று சொன்னால் அதை யார் ஏற்றுக்கொள்வார்கள். உலகம்
முழுவதும் கேட்கப்படுகிற கருத்து. அண்ணன் இருக்க,
தம்பிக்கு மகுடம் சூட்டுவதற்கு நீங்கள் தயாரா என்று கேட்பதைப் போலத்தான். இந்தக் கேள்வி பிறக்கிறது. பாவம், அண்ணனுக்கும்
விஷயம் இல்லை, தம்பிக்கும் விஷயம் இல்லை. எட்டாவது
படித்துக்கொண்டிருக்கிறபோது ஆசிரியர் கணக்குப்பாட புத்தகத்தை வாங்கி வரச்
சொன்னாராம். கடைக்குப்போன அண்ணனோ எட்டாவது வகுப்பு பாடப் புத்தகம்,
கணக்குப் புத்தகம் இல்லை என்பதற்கான நான்காவது வகுப்பு 2 புத்தகம் வாங்கி
வந்ததாக சற்று முன்னர் கிடைத்த செய்திகள் சொல்கிறது. அப்படிப்பட்ட அறிவாளிகள் எல்லாம் கடந்த காலத்தில் செய்திருக்கிற
தவறுகளை மிகச் சரியாக திருத்தி, இந்த மானிட பற்றோடு தமிழ் சமுதாயத்திற்கு
ஒரு நன்மை கருதி செய்தவர்தான் தமிழகத்தினுடைய முதலமைச்சர் ஜெயலலிதா.
அவற்றோடு மாத்திரம் அல்ல, பல்வேறுபட்ட விருதுகள் தமிழ்த் தாய் விருது
என்றும், கபிலர் விருது என்றும், உ.வே.சா. விருது என்றும், ஒளவையார்
விருது என்றும் பல்வேறுபட்ட விருதுகளில் சரியானவர்களுக்கு,
தகுதியுள்ளவர்களுக்குத்தான் தர வேண்டும் என்பதற்காக பல்வேறு விருதுகளை
உருவாக்கி இருக்கிற தமிழ்த்தாயினுடைய மொத்த வடிவமாக இருப்பவர்தான்
புரட்சித் தலைவி அம்மா அவர்கள். ஒரு பாவேந்தனைப்போல, ஒரு பாரதியைப் போல, ஒரு தமிழ்த் தாயினுடைய
வடிவமாக திகழ்கிற முதல்வர் ஜெயலலிதாவுக்குத்தான் தமிழனுடைய உண்மையான நிலை
தெரியும். ஏதோ வசனம் எழுதுகிறவர்கள், ஏதோ
வயிற்றுப் பிழைப்புக்கு ஓட்டிக்கொண்டவர்கள் எல்லாம் தமிழுக்கு பிரதியை
எடுத்ததைப்போல சொல்லிக்கொண்டிருக்கின்றபோது ஆளங்கால் கண்டவர். தமிழில்
எந்த இடத்தில் போடவேண்டும், எந்த இடத்தில் வைக்க வேண்டும், எந்தச்
சொற்றொடரை எந்த நேரத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை மிக அழகாக
உணர்ந்தவர் தமிழக முதலமைச்சர் புரட்சித் முதலமைச்சர் ஜெயலலிதா.
விருதுகளையெல்லாம் கடந்த காலத்திலே, ஒன்று அவர்கள்
வைத்துக்கொள்வார்கள், இல்லையென்று சொன்னால் அவர்களுக்குத் துதி பாடுகின்ற
அடிவருடிகளையெல்லாம் வைத்துக்கொள்வார்கள். தகுதி இருக்கிறதா? தகுதி
இல்லையா? என்றெல்லாம் பார்ப்பதில்லை. தன்னைச் சுற்றி
நிற்கின்றவர்களுக்குத்தான் அந்த விருது போகவேண்டுமென்ற அடிப்படைக்
கோட்பாட்டு விதிகளை வைத்திருந்தவர்கள்தான் கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள். கர்னல் பென்னிகுவிக்கிற்கு சிலையுடன் கூடிய மண்மண்டபம்,
நன்றிக்குரியவர்கள் தமிழர்கள். சாதாரணமாக ஒரு தேநீர் வாங்கிக்
கொடுத்தால்கூட நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அப்படி நன்றிக்கு
இலக்கணமாக, நயத்தகு பண்பாடோடு விளங்குகின்ற முதலமைச்சர் ஜெயலலிதா
பென்னிகுவிக்கிற்கு சிலை வடித்ததோடு மாத்திரமல்லாமல், தஞ்சைப் பெருவளத்தான்
கரிகால் பெருவளத்தான் சோழனுக்கும் மணிமண்டபம் கட்ட
வேண்டுமென்ற ஒரு பிரகடனத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று சொன்னால்,
நன்றிக்குரியவர் அவர்கள்.
கடந்த காலத்தில், நான் தஞ்சையில் பிறந்தவன், தஞ்சைப் பெருவளத்தானுக்கு
சொந்தக்காரர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் காவிரிக்கு என்ன
செய்தார்கள்? வேருக்கு வென்னீரும், விவசாயிக்குக் கண்ணீரும் தந்ததுதான்
மிச்சம். கரிகாலனுக்கு சிலை வைப்பதைவிட தனக்குச் சிலை வைத்தால் எப்படி
நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்ப்பவர்கள் மத்தியிலே,
கரிகாலனுக்குச் சிலை வைக்கின்ற ஒரு ஆற்றலை, மதிநுட்பத்தைப் படைத்து ஒட்டுமொத்த உலகத் தமிழினத்திற்கு இப்படி ஒருவன்
வாழ்ந்திருக்கிறான் என்ற வரலாற்றை மீண்டும் புடம்போட வைத்திருக்கிற ஆற்றல்
படைத்த தலைவர்தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.
அதோடு மாத்திரம் அல்ல, உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு 100 கோடி ரூபாய்,
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு 11.84 கோடி ரூபாய், உலகத் தமிழ்
ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 3.23 கோடி, சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு 40 லட்சம்
ரூபாயாக இருந்ததை 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதை உலகளாவச் செய்ய
வேண்டுமென்கிற ஒரு பிரகடனத்தையும் இன்று ஆளுநர் உரையிலே
அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்து தமிழுக்குத் தொண்டு செய்யும்
தமிழ்த் தாயாக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒட்டுமொத்த உலகத் தமிழினம்
பார்க்கிறது. கடந்த காலத்திலே செம்மொழி மாநாடு என்று கொடீசியா மஹாலில்
கோயம்புத்தூரில் 500 கோடிகளை கட்டவிழ்த்துவிட்டு, கோடானு கோடிகளைக் கொட்டி
ஈழத்தின் படுகொலையை மறைக்கப் பார்த்த ஒரு நாடகத்தைத்தான்
அம்பலப்படுத்தினார்களே தவிர, தமிழுக்கு உண்மையான ஒரு சேவையை அவர்கள்
செய்யவில்லை. தாத்தாவிற்கு கவியரங்கம், பேரனுக்கு பேச்சரங்கம், பேத்திக்கு
வீணை அரங்கம், அண்ணனுக்கு கருத்தரங்கம், தம்பிக்கு
பவுடர் அரங்கம் (மேசையைத் தட்டும் ஒலி) தங்கைக்கு இன்னொரு அரங்கம், வாழ்க
செம்மொழி மாநாடு, வளர்க அவர்களின் தமிழ்த் தொண்டு என்றுதான் தமிழறிஞர்கள்
கோட்பாடிட்டார்கள். இலங்கையில் நடைபெற்றிருக்கக்கின்ற மனித உரிமை
மீறல்களுக்கு, அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அந்த மீறல்களைத் தடுத்தார்களா?
படுகொலை நிகழ்ந்தபோது அதைப்பற்றி ஏதாவது பேசினார்களா? கடிதம் எழுதினார்.
காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்டதுதான் உண்ணாவிரதம் என்று
சொல்கிற ஒரு கோட்பாட்டை கண்டறிந்தவர்கள் அவர்கள். அவற்றோடு
மாத்திரமல்லாமல் மகேந்தா ராஜபக்சே டெல்லிக்கு வருகிறபோது கருப்புச் சட்டையை
அணிவோம் என்று தற்போது கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாருக்குத் தேவை
இந்த நாடகம். இந்த நாடகம் என்பதைத்தான் ஒட்டுமொத்த உலகத் தமிழகமும் உங்களை
ஒதுக்கி வைத்திருக்கிறது என்பதை இந்த நேரத்திலே நான் பதிவு செய்ய
ஆசைப்படுகிறேன். 2011 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 8 ஆம் நாள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமென்று இந்த
வரலாற்றுச் சிறப்புமிகுந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றித் தந்தவர்தான்
தமிழகத்தினுடைய தன்னிகரில்லாத முதலமைச்சர்
ஜெயலலிதா. இங்கே நீங்கள் 5 ஆண்டுகாலம் முதலமைச்சராக கடந்த முறை
பணியாற்றினீர்கள். மத்திய அரசின் செல்வாக்கை ங்கள் பெற்றிருந்தீர்கள்.
ஆனை, சேனை, ஆள் என்று கோட்டை கொத்தளம் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டிலே
இருந்தது. எல்லா அதிகாரமும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறபோது,
கூப்பிடு தூரத்தில் இருக்கிற தமிழனுடைய உயிரைக் காப்பாற்றத் தவறிய நீங்களா
தமிழன் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். வெட்கமாக இல்லையா? வேதனையாக இல்லையா? இப்பொழுதெல்லாம் நீங்கள் நாடகம் நடத்திக்
கொண்டிருப்பதுதானே டெசோவைப் புலப்படுத்திக் காட்டுகிறது.
அவற்றோடு மாத்திரமல்ல, இத்தகைய ஆற்றலும், திறமையும் பெற்றிருக்கிற
முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்கு செல்கிறார். டெல்லிக்கு சென்றால்
ஜனநாயகத்தினுடைய முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிற முதல்வர்கள் அத்தனை
பேரும் மாநாட்டில் அமர்ந்திருக்கிறார்கள். 10 நிமிடங்கள்தான் உங்களுக்கு
ஒதுக்குவோம் என்று சொல்லி 10 நிமிடத்தில் மணியடித்து உட்கார
வைக்கிறார்களே, கோவாவிற்கு 10 நிமிடம், தமிழ்நாட்டிற்கு 10 நிமிடம் என்று
பாரபட்சம் பார்க்கவில்லை என்று சொல்கிறார்களே, கோவாவிற்கு 10 நிமிடம்,
தமிழ்நாட்டிற்கு 10 நிமிடம். இது ஏற்றுக்கொள்கிற கருத்தா? அஸ்ஸாமுக்கு 10
நிமிடம், தமிழ்நாட்டிற்கும் 10 நிமிடம் என்பது ஏற்றுக்கொள்கிற கருத்தா?
திரிபுராவும், தமிழ்நாடும் ஒன்றா? அஸ்ஸாமும், தமிழ்நாடும் ஒன்றா?
பரப்பளவில் விரிந்து பரந்து கிடக்கிற தமிழ்நாட்டினுடைய எல்லைப் பகுதிகளில்
40 நாடாளுமன்றத் தொகுதிகளை தீர்மானித்து, இந்தியாவின் தலையெழுத்தை
நிர்மாணிக்கிற சக்தி படைத்தவராக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கின்றபோது யாருக்கு நீங்கள் மணி அடிக்கிறீர்கள் என்பதை இன்று
நாடே உங்களைப் பார்த்து வெகுவிரைவிலே உங்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு
தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசு கேபிள் டி.வியை டிஜிட்டல் மையப்படுத்த வேண்டுமென்று தமிழக
முதலமைச்சர், தலைமை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். இதுவரை பதில் இல்லை
என்கிற நிலைமையில் இருக்கிறபோது இப்படிப்பட்ட தொடர் துரோக செயலுக்கு தமிழக
மக்கள் மாத்திரமல்ல இந்திய மக்களே பதில் அளிக்கிற காலம் வெகு விரைவில்
இருக்கிறது. இன்றைய யுத்தப் போராட்டம்காவிரி ஆணையத்தின் இறுதி ஆணையை அரசிதழில்
வெளியிடவேண்டும் என்பதற்காக யுத்தப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவிலேயே யாரும் துணிய முடியாத போராட்டம் ஒன்றை நடத்துகிற ஆற்றல்
படைத்தவராக முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்திய மக்கள் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டின் வரைபடமாக இருக்கிறவர், நாளை இந்தியாவின் வரைபடமாக
மாறப்போகிறார் என்பதுதான் சத்தியத்தின் சாட்சியாக இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே பச்சரிசியையும், சர்க்கரையையும், 100
ரூபாயையையும் கொடுக்கின்றபோது அந்த ஏழையெளிய மக்கள் எத்தனை
ஆனந்தமடைகிறார்கள், மகிழ்ச்சியடைகிறார்கள், சந்தோஷப்படுகிறார்கள்
என்பதுதான் முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மனிதநேயத்திற்கு சாட்சி. இன்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனைஉயர்
நீதிமன்றம் சென்றார்கள். உயர் நீதிமன்றம் நமக்கு சரியான தீர்ப்பைத்
தந்தது. மருத்துவமனை இன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இன்று மக்கள்
அத்தனைபேரும் பாராட்டுகிறார்கள்.
இவ்வாறு வைகைச்செல்வன்
06 February, 2013
பிரபாகரன் வாழ்க்கை சினிமா!
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இப்படத்தை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது:-
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். விடுதலைப்புலிகள் தரப்பில் இந்த படத்தை எடுப்பதற்காக ஆட்சேபனை இருக்காது என்று கருதுகிறேன்.
இதற்கான நிறைய தகவல்களை அவர்கள் எனக்கு கொடுத்து உள்ளனர். வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் படமாக எடுத்துள்ளேன். பதினோரு வருடங்கள் வீரப்பன் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வீரப்பனிடம் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர்களிடம் விசாரித்து இந்த படத்தை எடுத்துள்ளேன். உண்மையான கேரக்டர்களே இதில் உள்ளன. யாரையும் புண்படுத்தும் சீன்கள் படத்தில் இல்லை.
இப்படத்துக்கு எதிராக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி சில சீன்கள் நீக்கப்பட்டு உள்ளன. பிப்ரவரி 14-ல் படம் ரிசீலாகிறது. வேந்தர் மூவிஸ் மதன் படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தில் அர்ஜுன், கிஷோர், லட்சுமிராய், விஜயலட்சுமி, சுலக்ஷனா, ஜெயபாலன், அருள்மணி, சம்பத்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எப்படி கும்பிடனும்!
வீட்டில் பூஜை செய்யும் போது கைகளைக் குவித்து வழிபடுவோம். ஆனால், கோயில் வழிபாட்டில் கைகளைத் தலைக்கு மேலே குவித்து வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம். கோயில் மூலவருக்கு இந்த முறை பொருந்தும். சிலருக்கு பிரதான சிவனை விட தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்றவர்கள் இஷ்டதெய்வமாக இருக்கும். இஷ்ட தெய்வத்தின் சந்நிதியில் கைகளை உச்சிக்கு நேராக நன்கு உயர்த்தி தலையில் படாமல் கும்பிட வேண்டும். குருநாதரை வணங்க புருவத்திற்கு நடுவிலும், தந்தையை வணங்க வாய்க்கு நேராகவும், தாயாரை வணங்க வயிற்றுக்கு நேராகவும், மற்றவர்களை மார்புக்கு நேராகவும் கைகுவித்து வணங்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)

















