|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 June, 2014

Vadacurry Movie Kashayam with Bosskey


நிர்வாண” சன்பாத் .


இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள். பலர் அந்த காட்சியை படம் எடுத்தும் சென்றனர்.

17 June, 2014

தொப்பை குறைய யோக முத்திரா!

India is poorest in South Asia after Afghanistan!


பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடந்திய உலக நாடுகளின் வறுமை கணிப்பு ஆய்வில் இந்தியாவிற்கு 2வது இடம் கிடைத்துள்ளது, இதில் சில திடுக்கிடும் உண்மைகளும் கிடைத்துள்ளது. இந்தியா வளரும் நாடுகளில் முதன்மையான ஒன்று என்பது நாம் அனைவரும் தெரியும். இந்நிலையில் ஏழை நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென் ஆசிய பகுதியில் இருக்கும் ஏழை நாடுகளை பற்றி நடத்திய ஆய்வில் இந்தியா 340 மில்லியன் ஆதரவற்ற மக்களை கொண்டு இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது, இதில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தை படித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில் கிடைத்த தகவலின் படி உலகின் 49 நாடுகளின் மொத்த ஏழை மக்கள்தொகையில் 40 சதவீத மக்கள் இந்தியாவில் உள்ளதாக ஆக்ஸ்போர்டின் பல பரிமாண வறுமை குறீயிடு (MPI) 2014 தெரிவிக்கிறது. தென் ஆசிய பகுதியில் ஆப்கானிஸ்தானில் 38 சதவீத ஆதரவற்ற மக்களும், இந்தியாவில் 28.5 சதவீதம் ஆதரவற்ற மக்கள் உள்ளதாக இந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அதேபோல் இந்தியாவின் அண்டை நாடான பாங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானில், 17.2 சதவீதம் மற்றும் 20.7 சதவீதம் ஆதரவற்ற மக்கள் உள்ளனர் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்பட்டியலில் டாப் 5 இடங்களை பிடித்த நாடுகளை இப்போது பார்போம். இதில் முதல் இடத்தை பிடித்தது ஆப்கானிஸ்தான், தனது மொத்த மக்கள் தொகையில் 66 சதவீத மக்கள் MPI கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 54 சதவீத மக்கள் MPI கோட்டிற்கு கீழ் உள்ளனர். இது இந்தியாவின் மோசமான பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையை காட்டுகிறது. இந்தியாவின் அண்டை நாடான வங்காளம் இதில் முன்றாவது இடத்திலும், பாக்கிஸ்தான் நான்காவது இடத்திலும் உள்ளது. இவைகளை தொடந்து நேபால், பூட்டான், இலங்கை, மால்தீவுகள் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கிறது. ஆய்வு நடத்தப்பட்ட 49 நாடுகளில் இந்தியாவின் பீகார் மாநிலம் மிகவும் வறுமையான பகுதியாக கருதப்படுகிறது

16 June, 2014

வீட்டிலே இருக்கிறார் வைத்தியர்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து வந்து வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டிவருபவர் சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ். நெல்லை, பாபநாசத்தில் பல ஏக்கர் நிலத்தில் வீரமாமுனிவர் மூலிகைப் பண்ணையை நடத்திவருகிறார். இந்தப் பண்ணையிலிருந்து மூலிகைச் செடிகளை ஒரு லட்சம் பேருக்கும் மேல் கொடுத்து வளர்க்கச் செய்கிறார். பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன வளாகங்களில் இவரே மூலிகைச் செடிகளை நடவு செய்வதுடன் அதன் மருத்துவக் குணங்களை விளக்கி, அதனை அங்குள்ள ஊழியர்கள் பராமரிக்கும் சூழலை உருவாக்குகிறார்.  
'உடல் ஆரோக்கியத்துக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஒரு மூலிகைச் செடி கட்டாயம் வளர்க்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி விழிப்புஉணர்வு பிரசாரம் செய்து வருபவரிடம், 'வீட்டுத் தொட்டிகளில் எந்த வகையான மூலிகைகளை வளர்க்கலாம்? அந்த மூலிகைகளின் மருத்துவப் பயன் என்ன?’ எனக் கேட்டோம்.  
'அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும்  மூலிகைகள் இருக்கும். தற்போது, பெருநகரங்களில் குடியிருப்பதற்கே சிறிய வீடுதான். இடப்பற்றாக்குறை காரணமாக மூலிகை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால், மக்கள் நினைப்பது போலச் செடிகளை வளர்ப்பதற்கு வீட்டின் முன்பாகவோ அல்லது பின்புறத்திலோ நிறைய இடவசதி தேவை இல்லை. சாதாரணப் பூந்தொட்டிகளில்கூடச் சில முக்கியமான மூலிகைகளை வளர்க்க முடியும். காய்ச்சல், தலைவலி, சிறிய காயம் போன்ற சின்னச் சின்ன உபாதைகளுக்கு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டிய அவசியம் இருக்காது. அதனால் வீட்டுக்கு ஒரு மூலிகையாவது இருந்தால் நோய்களில் இருந்து தப்ப முடியும். அதனை வலியுறுத்தியே எனது பயணம் தொடர்கிறது. இப்போது மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருவதைப் பார்க்கையில், சீக்கிரத்தில் என் லட்சியத்தை எட்ட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார் உற்சாகமாக.
மஞ்சள் கரிசலாங்கண்ணி
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த மூலிகை இது. மஞ்சள்காமாலைக்கு மிகச் சிறந்த மருந்து. வாரத்துக்கு இரண்டு நாள் இந்தக் கீரையில் சட்னி அல்லது துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும். சிறந்த கிருமிநாசினியும்கூட. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். கல்லீரலைப் பலப்படுத்தும். குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல், சளித்தொல்லை, ஆஸ்துமா போன்றவற்றையும் போக்கக்கூடியது.  கீரையை நன்றாகக் கழுவி, உலரவைத்து பொடி செய்து சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் பொன்நிறமாக மாறும். இலையைக் காய்ச்சி சாறு எடுத்துத் தலையில் தடவி வந்தால், இளநரை மறையும்.

வல்லாரைக் கீரை

வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் இதில் அதிகம். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயலைச் செய்யும் சக்தி இந்தக் கீரைக்கு இருப்பதால், ஞாபக சக்திக்கு முக்கியப் பங்காற்றுகிறது. உடல் புண்களைக் குணமாக்குவதுடன், மூளை சோர்வைப் போக்கும். நரம்புத் தளர்ச்சிக்கும், இதயத்தைப் பலப்படுத்தவும், தாது விருத்திக்கும் நல்லது. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால், குடல் புண், குடல் நோய், வாய்ப்புண்கள், வாய் நாற்றம் போன்றவை நீங்கும். கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக் கூடாது.
பிரம்மி
கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. இதன் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. நரம்பு மண்டலத்தைத் தூண்டி சோர்வை நீக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். சாஃப்ட்வேர் தொழிலில் பணிபுரிபவர்கள் இந்த மூலிகையை நிச்சயம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனைச் சாறு எடுத்து நெய் சேர்த்து சாப்பிட்டுவந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். இலைகளைக் கசாயம் செய்து குடித்தால், மலச் சிக்கல் தீரும். இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டுவந்தால், குரல் வளம் பெருகும். வேரை அரைத்துக் கொதிக்கவைத்து நெஞ்சில் பூசினால், நாள்பட்ட சளி சரியாகும்.

நிலவேம்பு

சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலை சரிப்படுத்துவதிலும் மூலிகை முதல் பங்கு வகித்தது. கொடி போல் படரக்கூடிய மூலிகை. மூலிகையைப் பொடித்து, கசாயம் செய்து குடித்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு. பசியைத் தூண்டும். சாதாரண வைரஸ் காய்ச்சல் உள்பட அனைத்துக் காய்ச்சல்களையும் குணமாக்ககூடியது. வருமுன் தடுக்கவும் செய்யும்.
பிரண்டை
தொட்டியில் வளர்த்தால் அழகாகப் படர்ந்து நிற்கும். தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரண்டையின் தண்டை துவையல் அரைத்துச் சாப்பிடலாம். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், வாரத்துக்கு இரண்டு நாட்கள் சாபிட்டு வந்தால், எலும்புகளும், பற்களும் வலிமை பெறும். மூட்டுவலிக்கு மிகவும் நல்லது. தீராத வயிற்றுப்புண், வயிற்று வலியைப் போக்கும். செரியாமை நோயைக் குணப்படுத்தும். உதடு, நாவில் ஏற்படும் புண்ணை விரைவாகக் குணப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, உடல் வலியை சுகப்படுத்தும்.

திப்பிலிக்கொடி
திப்பிலி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம்
எடுத்து தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவந்தால், இருமல், தொண்டைக் கமறல், பசியின்மை, தாது இழப்பு ஆகியவை குணமாகும். இரைப்பை, கல்லீரல் வலுப்பெறும். தேமல் நோய் மறையும். திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடியை சம அளவில் கலந்து இலந்தைப்பழ அளவுக்கு இரண்டு வேளையாக மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இளைப்பு நோய் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும்.

ஓமவல்லி
கற்பூரவள்ளி என்றும் அழைக்கப்படும். வீட்டுத் தொட்டியில் வளர்க்க எட்டு மாதங்கள் ஆகும். இலை கசப்பு சுவையும் காரத்தன்மையும் கொண்டது. இதன் இலை மற்றும் தண்டுப்பகுதி இருமல், சளி, ஜலதோஷத்துக்கு முக்கியமான மருந்து. இதன் இலையைச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சீதள இருமல் நோய் தீரும். இலைச் சாறை நெற்றியில் பத்து போட்டால், தலைவலி நீங்கும். குழந்தைகளின் அஜீரண வாந்தி நீக்கும். கண் அழற்சிக்கும் உகந்தது. மனக் கோளாறை சரிசெய்யும் மருந்திலும் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இலையைக்கொண்டு பஜ்ஜி சுட்டுச் சாப்பிடலாம்.

துளசி
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளில் துளசி முக்கியமானது. இதன் இலைகளில் இரண்டை
 நாள் தோறும் சாப்பிட்டுவந்தால், குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது. கிருமிநாசினி.

துளசி இலையைப் போட்டு ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால், சர்க்கரை நோய் நம்மை நெருங்காது. குளிக்கும் நீரில் முந்தைய நாளே போட்டுக் குளித்தால், உடலில் வியர்வை நாற்றம் ஏற்படாது. மன இறுக்கம், ஞாபக சக்தி இன்மை, நரம்புக் கோளாறு, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி துளசிக்கு உண்டு.
தூதுவளை
இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவக் குணம்கொண்டது. தூதுவளை இலையைப் பறித்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வலுவை கூட்டும். இருமல், சளி நீங்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும்.

வாதப் பித்தத்தைச் சரிப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி பலப்படும். தூதுவளையை நன்றாக அரைத்துத் தோசை மாவுடன் கலந்து அடை போலச் செய்து சாப்பிட்டால், ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். காது மந்தம், நமைச்சல், வயிறு மந்தம் போன்ற பிரச்னைகளுக்குச் சிறந்த மருந்து.
நொச்சி
கொசுக்கள் அருகில் வராது என்பதால், தமிழக அரசும் இதனை வீடுகளில் வளர்க்கும்படி
 பரிந்துரைக்கிறது. இலையைச் சூடான நீரில் போட்டு ஆவி பிடித்தால், தலைவலி, காய்ச்சல், சளித்தொல்லை, கை கால் வலி நீங்கும். இரவில் தலையில் வைத்துப் படுத்தால், தலைவலி, தலை நீர், தலை பாரம், நரம்பு வலி, கழுத்து வீக்கம், மூக்கடைப்பு போன்றவை குணமாகும். இதன் சாறை உடலில் இருக்கும் கட்டிகளின் மீது இரவு நேரத்தில் பற்று போட்டுவந்தால், கட்டிகள் மறைந்துவிடும். நொச்சி சாறைத் தேய்த்தால் நரம்பு பிடிப்பு, இடுப்பு வலி நீங்கும். இலைகளை அரைத்து மூட்டுகளில் கட்டினால், நாள்பட்ட மூட்டுவலி தொல்லையில்  இருந்து விடுபடலாம்.

எனது தந்தை 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்


எனது தந்தை கருணாநிதி தனது 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் -டெல்லி மேல்சபையில் கனிமொழி எம்.பி. பேச்சு  கருணாநிதி பிறந்தது ஜூன் 3, 1924. அவருக்கு 14 வயது என்றால் 1938. அப்போது இந்தியா சுதந்திர நாடே அல்ல. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது 1965ல்.... அப்போது கருணாநிதியின் வயது 36..

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்!

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக

தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in

12 June, 2014

நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!


கிடைத்துவிடுமா?

24மணி நேரமும் கோவில் வாசலிலே அமர்ந்து பிச்சை எடுப்பவனுக்கு

கிடைக்காத "நிம்மதியும், செல்வமும்"ஒரு நிமிடம் நீங்கள் வேண்டுவதால்

கிடைத்துவிடுமா?

தியாகத்துக்கு இவ்வளவுதான் மரியாதையா?



செங்கோட்டையில் உள்ள எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் சங்கரன் ஆனால் வாஞ்சிநாதன் என்ற பெயருடன் வளர்ந்தார். செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு திருவனந்தபுரத்தில் மூலம் திருநாள் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்து விட்டு பின் பரோடாவில் மேல்படிப்பு படித்தவருக்கு புனலூர் வனத்துறையில் அரசாங்க வேலை கிடைத்தது. வேலை கிடைக்கும் முன்பாக பொன்னம்மாள் என்பவருடன் திருமணமானது. அந்த நேரம் சுதந்திர தாகம் நாடு முழுவதும் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. கப்பலோட்டிய தமிழரான வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பேச்சால் வாஞ்சியும் ஈர்க்கப்பட்டார். இதன் காரணமாக ஆங்கிலய அரசு வழங்கிய வேலையை பார்க்க மனது விரும்பாததால் தூக்கி எறிந்து விட்டார்.




பின்னர் பாரத மாதா சங்கத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். வ.வே.சு அய்யர், பாரதியார் உள்ளிட்ட பல தேச தலைவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. சுதந்திர தாகம் முன்னிலும் அதிகப்பட்டது.இந்த நிலையில் திருநெல்வேலி கலெக்டராக பதவி ஏற்ற ஆஷ் துரை வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தார். சிறையில் செக்கிழுக்க வைத்து வ.உ.சியை பெரிதும் சிரமப்படுத்தினார்.தான் தெய்வமாக கருதும் தலைவர்களை கொடுமைப் படுத்தும் ஆஷ் துரையின் மீது வாஞ்சிக்கு கோபம் ஏற்பட்டது. வ.உ.சி மற்றும் சிவாவை விடுதலை செய்யச் சொல்லி நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆஷ் துரை நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல வாஞ்சியை இன்னும் சூடேற்றியது.


மரணத்தின் வலி என்ன என்பதை ஆஷ் துரைக்கு உணர்த்த வேண்டும் என்று உறுதி பூண்டார், இதற்காகவே காத்திருந்து மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.பின்னர் தன்னை பிடிக்க வந்த ஆங்கிலேயே அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பி ஓடியவர், ரயில் நிலைய கழிப்பறைக்குள் புகுந்து கொண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து கூட நிறையவில்லை.



செய்தி தொடர்பு சாதனம் வளர்ந்திராத அந்த கால கட்டத்திலும் இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது. தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆங்கிலேயே அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது என்பதால் பிரிட்டிஷ் அரசாங்கம் அலறியது. பயந்து நடுங்கியது. இனி இந்தியாவில் இருக்க முடியாது என்று மிரண்டு ஒடியது. அதுவரை அடிமைகளாக பார்த்த தமிழர்களை அச்சத்துடன் பார்த்தது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை உணர்ந்தது. 
வட்டமேஜை மாநாடு,வேண்டுகோள், தீர்மானம், கடிதம் என்றெல்லாம் கெஞ்சிக் கேட்டவர்கள் தேவைப்பட்டால் துப்பாக்கி ஏந்தவும் தயங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து உதிரம் உறைந்து போனார்கள், உறக்கம் கலைந்து போனார்கள்.


இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 102 வருடமாகிறது. நாளை காலை உனக்கான மரணதண்டனை நிகழப்போகிறது ஏதாவது ஆசை உண்டா? என பஞ்சாப் சிங்கம் பகத்சிங்கிடம் சிறை அதிகாரி கேட்டபோது, கையில் இருந்த கனமான புத்தகத்தை காட்டி 'ஆசை என்று இல்லை விருப்பம் என்று ஒன்று உள்ளது, அது இந்த புத்தகத்தை விடிவதற்குள் அதாவது என் கதை முடிவதற்குள் படித்து முடித்து விட வேண்டும் என்பதுதான். பார்ப்போம் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டொரு பக்கங்களை முடித்துவிடுவேன் ஆகவே 'எனக்கான' வேலைகள் உங்களுக்கு நிறைய இருக்கும் அதை பாருங்கள் நான் என் வேலையை பார்க்கிறேன்' என உயிரை துச்சமாக மதித்த பகத்சிங் போல, தென்நாட்டின் சிங்கம் வாஞ்சிநாதன் இன்னும் சில நிமிடத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறோம் என்பது தெரிந்தும் எந்தவித பதட்டமும், பயமும் இல்லாமல் நாட்டிற்காக, தலைவர்களுக்காக தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் திடமனதுடன் இருந்த தீரர்.



இப்படிப்பட்ட சம்பவம் நடந்த மணியாச்சி ரயில் நிலையம் என்பது எவ்வளவு முக்கியமான இடம். இந்த தலைமுறைக்கு மட்டும் இல்லை இனி வரும் தலைமுறைகளுக்கும் சுதந்திர வரலாறை சொல்லும் இடமல்லவா அது.நினைத்த போதே மயிர்க்கால்களில் சுதந்திர வேட்கையையும், தோளில் தினவையும், மூச்சில் உஷ்ணத்தையும், நாடி நரம்புகளில் வீரத்தையும் ஏற்படுத்தும் நினைவாலயம் அல்லவா அது.


ஆனால் நிஜத்தில் மணியாச்சி ரயில் நிலையம் பெயரில் மட்டுமே வாஞ்சியை கொண்டுள்ளதே தவிர மற்றபடி வாஞ்சியை நினைவுகூறும் எந்த தடயமும் அங்கு இல்லை. டிக்கெட் எடுத்தால் கூட மணியாச்சி என்றுதான் டிக்கெட் கொடுக்கிறார்களே தவிர வாஞ்சி மணியாச்சி என்று டிக்கெட் வருவது இல்லை.வாஞ்சிநாதன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த கழிப்பறை கூட தரைமட்டமாக இடித்து தள்ளப்பட்டுவிட்டது.ஆனாலும் வீரன் வாஞ்சிநாதனின் தியாகத்தை போற்றி பாராட்டும் விதத்தில் தியாகிகளும், தேசபக்தர்களும், வாஞ்சியின் அபிமானிகளும் அவரது நினைவு நாளான ஜூன் 17ம்தேதி அவர் இறந்த வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஒன்று கூடி வீரவணக்கம் செலுத்துவார்கள்.

அதற்காக கடந்த வருடம் ரயில் நிலையத்தில் கூடியபோது அங்கு இருந்த ரயில்வே அதிகாரி அதற்கெல்லாம் ரயில் நிலையத்தில் இடம் இல்லை எனக்கு அதிகாரமும் இல்லை, வேண்டுமானால் நீங்கள் அனைவரும் பிளாட்பராம் டிக்கெட் வாங்கிக் கொண்டு போய் கழிப்பறை இருந்த இடத்தில் ஒரு நிமிடம் நின்றுவிட்டு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
கடைசியில் கடந்த வருடம் அப்படித்தான் நடந்தது.



சுதந்திரபோராட்ட நாயகனுக்கு,பகத்சிங் போன்ற வடமாநில தியாக செல்வங்களுக்கு நிகரானவருக்கு, தமிழர்களின் மானம்காத்த மாவீரன் வாஞ்சிநாதனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதானா? நாம் செலுத்தும் வீரவணக்கம் என்பது இதுதானா? 
இதோ இந்த வருடமாவது வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஒரு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் எஞ்சியிருக்கும் தியாகிகளும், தேசத்தின் மீதும் வாஞ்சிநாதனின் மீதும் பாசம் கொண்டவர்களும் வருகின்ற 17ம் தேதி செவ்வாய்கிழமை வாஞ்சிநாதனுக்கு 103வது நினைவு தினத்தில் வீரவணக்கம் செலுத்த கூடவிருக்கிறார்கள், இனியாவது ஏதாவது நடக்கும் என்று நம்பிக்கையுடன்..

கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்
6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்…
7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.
9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்

மரத்தை நேசிக்கனும்ன்னு சொன்னதை தப்பா புரிசுகிட்டாங்க போல!


Snake Bites and Dies itself


நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!


07 June, 2014

ஏமாற்றம்!


அலெக்ஸாண்டரின் கடைசி ஆசை!

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர். ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,"என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார். அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர். முதல் விருப்பமாக,

"என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."
 
இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."
 
மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்." வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.

என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள். அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால்எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது. மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்..! மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர், சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக.. ஆம்.  நாமும் அப்படித்தான் நம்ம வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றோம். நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான். சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம். நம் கண்ணதாசன் அவர்களின் ஒருதிரைப்பாடல்.
அதை மறைந்த டி.எம்.எஸ்.அவர்கள் உயிரோட்டமாக பாடிஇருப்பார். "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ, என்று..உண்மைதானே.?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...